முகப்புத்தகத்தின் சில பக்கங்கள் - 3

 


2013, ஜனவரி 16  

பெண்களின் உடை அணியும் விதமே ஆண்களைத் தூண்டுகின்றன என்பதாய் எவ்வளவு எவ்வளவு தமிழ் சினிமாக்களின் காட்சிகள் குவிந்து கிடக்கின்றன. மாபெரும் சூப்பர் ஸ்டார்களிலிருந்து லிட்டில் ஸ்டார்கள் வரை வெள்ளித் திரை, சின்னத் திரையெல்லாம்  கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன்னால் கூட , தொலைக்காட்சியில், ஒரு படத்தில் சுந்தர்.சி, இடுப்பில் பாம்பு கடித்த பெண்ணைப் பார்த்து, ‘இப்படி டிரஸ் போட்டு நல்ல பாம்பையும் கெட்ட பாம்பாக்கி விட்டாயே’ என வசனம் பேசினார். 


சகட்டு மேனிக்கு நம் பொதுப் புத்தியில் குப்பைகளைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.

 

2013, ஜனவரி 16 

உத்தப்புரத்தில் இருந்தது ‘தீண்டாமைச் சுவர் அல்ல’ என்று பகிரங்கமாகச் சொன்ன சி.பி.ஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்திருப்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன். 


‘அம்பேத்கர் விருது’ எதற்கு கொடுக்கிறார்கள் என்பதைத்தான் அறிய முடியவில்லை.

 

2013, பிப்ரவரி 15  

திரிபுரா முதலமைச்சராக இருக்கும் மாணிக் சர்க்கார், வருகிற சட்டசபை தேர்தலுக்காக தன்பூர் தொகுதியில் நேற்று சி.பி.எம் சார்பில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.1080/-ம், வங்கிக்கணக்கில் ரூ.9720/-ம் காட்டப்பட்டு இருக்கிறது. பரம்பரைச் சொத்தாக அவரது தாய் அஞ்சலி சர்க்காரிடமிருந்து பெற்ற 432 சதுர அடியில் இருக்கும் வீட்டின் மதிப்பாக ரூ.2,20,000 காட்டப்பட்டு இருக்கிறது. இரண்டுமுறை முதலமைச்சராக இருந்த பிறகும், அவரது சொத்து மதிப்பு இவ்வளவுதான். முதலமைச்சருக்குரிய ஊதியத்தைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி தரும் அலவன்சாக ரூ.5000/- மாதாமாதம் பெற்றுக் கொள்கிறார். 


இதை வெளியிட்டு இருப்பது Financial express பத்திரிகை.

You can comment here

Previous Post Next Post