மாதவராஜ் பக்கங்கள் - 29

catதிவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கெல்லாம் உன்னால் செல்ல முடிகிறது. நம் தொழிற்சங்கத் தோழர்கள் வீட்டு விசேஷத்துக்கு வரமுடிவதில்லை’ என எங்கள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆதங்கத்தோடு சில நாட்களுக்கு முன்பு சொன்னார். இரண்டு சம்பவங்கள் அதுபோல் ஆகிவிட்டன. நான் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறேன். அவர் சொல்வதில் நியாயம் இருப்பதை நான் புரிந்துகொண்டாலும், எனது நியாயத்தை புரிந்துகொள்ள அவர் தயாராக இல்லை. அவருக்கு தொழிற்சங்கம் தான் சிந்தனை, செயல் எல்லாமே. சங்க செயற்குழு உறுப்பினர்களிலும் பலருக்கு வலையுலகம் குறித்து தெரியாது. கூட்டங்களுக்குச் செல்ல நேரமானால் கூட, என்னையும் காமராஜையும் எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கிடையில்தான் கணினியில் எழுதுவதும் வாசிப்பதுமாய் நகருகிறது.

ரோடு பதிவர்கள் சங்கமத்திற்குச் செல்ல கடும் ஆசையோடும், எதிர்பார்ப்போடும் இருந்தேன். நண்பர்கள் கதிர், பாலாசி, வெயிலான, சீனு எல்லோரும் பேசியிருந்தார்கள். கலந்துரையாடலில் என்ன பேசுவது என்றெல்லாம் கூட கொஞ்சம் உரையாடல்கள் நடத்தியிருந்தோம். உடல்நலமின்மை, தொழிற்சங்க வேலைகள் வழிமறித்துவிட்டன. மிகுந்த வருத்தமாயிருந்தது. எல்லோரையும் பார்ப்பது, எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது எனபது எவ்வளவு சந்தோஷமானது. என்னையே சபித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த அனுபவங்களைப் பதிவுகளில் படிக்கும்போதும், போட்டோக்களில் பார்க்கும்போதும் இழப்பை அதிகமாக உணர்கிறேன். வராவிட்டாலும், ஈரோடு வலைப்பதிவாளர்கள் அனைவரோடும் இந்த பதிவின் மூலம் கைகுலுக்கிக்கொள்கிறேன். பெரும் காரியம் செய்திருக்கிறீர்கள். சாதித்து இருக்கிறீர்கள்.

 

தொலைக்காட்சியில் இயக்குனர்கள் சங்க 40வது ஆண்டு விழா நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்தேன். சரண்யாவின் இயல்பான பேச்சு பரவாயில்லை. என்னைக் கவர்ந்தது  இளையராஜா- பாரதிராஜாவின் உரையாடல்கள்தாம். ஒருவரையொருவர் கலாய்த்த வார்த்தைகளிலிருந்து பால்யம், கனவுகள், கிராமத்து மண்ணின் வாழ்க்கை எல்லாம் சிந்திக்கொண்டிருந்தன. உயரங்களிலிருந்து இறங்கி இருவரும் மிக அருகில் நின்றுகொண்டு இருந்தார்கள். வாழ்க்கைதான், தேடுதல்தான் மனிதர்களை வார்க்கிறது என்பதை இருவரும் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரஜினியும் அப்போது ஒரு பஸ் கண்டக்டராக அதை ரசித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இயல்பாய் இருப்பது எவ்வளவு அழகாய் இருக்கிறது. சரி, ரஜினி பக்கத்தில் விஜய் மட்டும் ஏன் அப்படி நிலைகொள்ளாமல் இருந்தார்?

 

சென்னையிலிருந்து மகள் லீவில் வந்திருக்கிறாள். கணினி முன்னால் உட்கார்ந்தால் மகளும் கிண்டல் செய்கிறாள். “வாங்கப்பா இங்க உக்காருங்கப்பா”, “பேசுவோம்பா” என்று அழைக்கிறாள். வீடு இப்போது ஒரே அரட்டையாய் இருக்கிறது. மைனா, அய்யனார், ஈசன் படங்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. அங்கங்கே மைனாவை ரசிக்க முடிந்தாலும், மூன்றும் ஒரே ரத்தக்களம். மொழி போல ஒரு படம் பார்த்து மூளையின் சூட்டைக் குறைக்க வேண்டும்.

 

சிதறிக்கிடந்த புத்தகங்கள், பத்திரிகைகளை எடுத்து அடுக்கி வைக்கும்போது, பழைய விசை இதழொன்றில் பார்த்த இந்தக் கவிதைகள் அசைபோட வைத்துக்கொண்டு இருந்தன.

 

சுற்றுமா இப்போதும்!

பனையோலைத் துண்டில்
பாதி வகுந்து
மையக் கீறலில் குறுக்கேச் செருகி
காக்கா முள் குத்தி
கம்பில் மாட்டி,
ஆட்டம்புழுக்கைக் குத்திய
ஓடினால்
விர்ரெனச் சுழலும்
பால்யக் காத்தாடி
சுற்றுமா இப்போதும்
அந்தக் காற்றுக்கும் காக்கா முள்ளுக்கும்.

-சேரன் சுப்பையா

 

கனவு பொம்மைகள்

தலையில்
பொம்மைகளோடும்
இடுப்பில் குழந்தையோடும்
வீதி வழியே
விற்றுக்கொண்டிருந்தாள்
வழிய வழிய
குழந்தைகளுக்கான கனவுகளை

டி.எல்.சிவக்குமார்

 

ரகசியம்

கைகளை இறுக மூடிக்கொண்டேன்
ஏதுமில்லை என்பதாய் ஒரு கூட்டம்
எதோ இருப்பதாய் ஒரு கூட்டம்
எப்போது திறப்பான் என்றொரு கூட்டம்
யாருக்குத் தெரியும்
யாரேனும் ஒருவர்
கைபிடித்துத் திறக்கவும் கூடும்.

சேது நாராயணன்

 

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பக்கங்களும், பகிர்வும், கவிதைகளும், (படமும் கூட) மிக பாந்தம் மாது.

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள், பகிர்வுகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுகள் எல்லாமே மிகவும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. எண்ணங்களும் கவிதைகளும் அருமை!! குறிப்பாக குழந்தைகளுக்கான கனவை விற்பவள் மிகவும் கவர்ந்தது!!

    பதிலளிநீக்கு
  5. //கணினி முன்னால் உட்கார்ந்தால் மகளும் கிண்டல் செய்கிறாள். “வாங்கப்பா இங்க உக்காருங்கப்பா”, “பேசுவோம்பா” என்று அழைக்கிறாள். //

    ஹா..ஹா.. மிக மிக ரசித்தேன் மாது அண்ணா. பாப்பா ஊருக்கு வந்திருக்கும்போதாவது நீங்கள் கணினி முன் அமராமல் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கினால்தான் என்ன?

    மன்மதன் அம்பு பார்க்கவில்லையா?

    மற்றபடி பேசி நீண்ட நாட்களாகிவிட்டது மாது அண்ணா. வீட்டில் அனைவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. கவிதைகள் அருமை!

    en veetirku varathathu varuthamaga ullathu.

    பதிலளிநீக்கு
  7. சனிக்கிழமை இரவு வரை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன் (:

    பதிலளிநீக்கு
  8. சினேகிதன் அக்பர் அவர்கள் பின்னூட்டம் publish ஆகவில்லை எனவே-
    “சிநேகிதன் அக்பர் has left a new comment on your post "மாதவராஜ் பக்கங்கள் - 29":

    கவிதைகள் அருமை.

    பா.ரா வீட்டு திருமணத்திலேயே உங்கள் சூழலை உணர்ந்தேன். பா.ரா வுக்காக வந்த உங்கள் அன்பையும் உணர்ந்தேன்.”

    பதிலளிநீக்கு
  9. பா.ரா!
    வாங்க மக்கா. நன்றி.

    அன்புடன் அருணா!
    நன்றிங்க.

    சே.குமார்!
    நன்றி, தம்பி.


    லஷ்மி!
    நன்றி.

    ஆதவா!
    வாங்க ஆதவா. மிக்க நன்றி.


    செ.சரவணக்குமார்!
    என்ன தம்பி, எப்படியிருக்கீங்க. உங்களால் எழுத்துக்களும், இயல்பாய் பேசுகின்றன.


    குமார்!
    இன்னொருமுறை அவசியம் வருகிறேன். குமார்.


    ஈரோடு கதிர்!
    வரமுடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது. உங்களைப் போன்றவர்களின் முயற்சிகள் வியக்க வைக்கின்றன. தொடருங்கள் கதிர்.


    சினேகிதன் அக்பர்!
    :-)))
    நல்லாயிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  10. கவிதைகள், பகிர்வு எல்லாமே அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!