அடுக்கு மாடி வீடுகள்

ஈரோடு பாஸஞ்சரில் வரும் அண்ணனுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது, எதிர்பாராத விதமாக  நண்பனும் அதே ரெயிலிலிருந்து இறங்கினான். ஒரு வருடத்திற்கும் மேலே அவனை ஊரில் பார்க்க முடியவில்லை. டீச்சர் வேலை கிடைத்து எங்கோ பணிபுரிந்து கொண்டிருக்கிறான் என்று மட்டும் தெரியும். பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ள பேசிக்கொண்டு இருக்கும் போது அண்ணனும் வந்து விட்டிருந்தான்.

“அண்ணா...இது என்னோட நண்பன்...ஈரோட்டுலத்தான் டீச்சரா இருக்கான்.”

“அப்படியா...ஈரோட்டுல நீங்க எங்க இருக்குறீங்க...”

“ஈரோட்டில் மேட்டுப்பாளையம் ரோடு போகுதுல்ல...”

“அங்க...?”

“பால்பண்ணை இருக்குல்ல...”

“அங்க?”

“ஹவுசிங் போர்டு குவார்ட்டஸ் இருக்குல்ல...”

“ ஆமா... அங்க...”

“ பீ குவார்ட்டஸ்ல...”

“அங்க...”

“முதல் தளத்தில்... கதவு எண் நான்கு..”

“அப்படியா... நான் இரண்டாவது தளத்தில்... கதவு எண் ஆறு!”

(இது ஒரு மீள்பதிவு)

 

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆனால் IDHILUM ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
    என் தனி மனித சுதந்திரத்தில் என் குடும்ப சுதந்திரத்தில் அடுத்த வீட்டு காரரோ, தெரு என்ன சொல்லுமோ என்ற கவலை இல்லா சுகம் அது.

    பதிலளிநீக்கு
  2. சுடும் உண்மை.... நகரத்துல இருக்குறவங்க பலபேருக்கு பக்கத்துவூட்டுக்காரன் யாருன்னே தெரியாது...இன்னும்சொல்லப்போனாஎன் வீட்டுக்கு பக்கத்தூட்டுக்காரன் நெருங்கின சொந்தக்காரனாகூட இருக்கலாம்....எனக்கே தெரியாம....

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவ் ,
    அடுக்கு மாடி வீடுகள் அல்ல ...
    அடுக்கு மாடி மனிதர்கள் ...
    வீட்டுகள் எப்போதும் தங்களுக்குள் பேசிக்கொண்டு தாம் இருக்கின்றன ...
    தங்கள் உரிமையாளர்களின் அல்பத்தனங்களை...

    பதிலளிநீக்கு
  4. சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . ஒரே வீட்டில் வசித்துக்கொண்டு ஆக்கம் பக்கத்தில் கூட யார் வசிக்கிறார்கள் என்று தெரியாத நிலையிலல் வாழ்க்கை நகர்ந்துகொண்டு இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  5. எனது '' அன்னியம் ''
    கவிதை வரிகளை ஞாபகப்படுத்தியது .

    பதிலளிநீக்கு
  6. அருமை மாது! :-)

    மீள் பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. எப்படி இந்த ஆளு தினமும் இரண்டு இடுகை போடுகிறார் என்று வியந்ததுண்டு மாதவ். அப்பாடா! ஒரு மீள் பதிவு. முன்பே படிச்சிருக்கேன். மும்பையில் இன்னமும் மோசம் :(

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!