அழகும், அர்த்தமும் கொண்ட சில தருணங்கள்

சென்ற வாரம் வரை நானும் நண்பர்களுடன் இந்த பிப்ரவரி 16ம் தேதி இராஜஸ்தான் செல்வதாகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். வீட்டில் அம்மு சம்மதித்து இருந்தாள். டிக்கெட்டும் ரிசர்வ் செய்தாகிவிட்டது. பிளஸ் டூ படிக்கும் என் மகள் பிரீத்து ‘நீங்க போக வேண்டாம்ப்பா” என்று கேட்டுக்கொண்டாள். அவளுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தேர்வு ஆரம்பிக்கிறது. இராஜஸ்தான் சென்றால், நான் பிப்ரவரி 27ம் தேதிதான் திரும்ப முடியும். எங்கள் அகில இந்திய சங்க மாநாடு மூன்று நாட்கள் சிகாரில் நடைபெறுகிறது. ஜெய்ப்பூர் போன்ற முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் என திட்டமிடப்பட்டு இருந்தது.

நானும் வீட்டில் இருக்க வேண்டும் என மகளுக்குத் தோன்றியது ஏன் என இப்போதும் பிடிபடாமல் இருக்கிறது. அவளிடம் கேட்கவுமில்லை. அவளது படிப்பில் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொண்டவனாக என்னைச் சொல்ல முடியாது. படிப்பதும், அதிக மதிப்பெண் எடுப்பதும் முக்கியமென எப்போதாவது அவளிடம் பேசுவேன். அவ்வளவுதான். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது நான் சிலநாட்கள் வெளியூர் சென்று வந்தால், உடனே என்னிடம் வரமாட்டாள். முகம் திருப்பிக்கொள்வாள். வாரி அணைத்துக்கொண்டால், கண்கலங்குவாள். ஆச்சரியமாயிருக்கும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவளது பிரியங்களை, செல்லங்களை, வம்புகளையெல்லாம் அம்மாவிடம்தான் மொத்தமாய்க் காட்டுகிறாள். எதற்கும் என்னைத் தேடுகிறவளாக இருப்பதில்லை. அவளுக்குள் எங்கோ அந்த கைக்குழந்தை இன்னும் இருப்பதாக புரிந்து சந்தோஷம் கொள்கிறேன். அவள் பேச்சைத் தட்டாமல் இருப்பதே அவளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இந்த தேர்வு முடிந்ததும் உயர் படிப்பு, வேலை, திருமணம் எனவாகி, இனி அவள் இந்த வீட்டில் இருக்கும் நாட்களையெல்லாம் எதிர்பார்த்து எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். எனவே மறுப்பேதும் சொல்லாமல் பயணத்தை ரத்து செய்துவிட்டேன். இதையெல்லாம் தோழன் காமராஜ் புரிந்துகொண்டாலும் அவனுக்குள் வருத்தமிருப்பதை உணர்கிறேன். நானில்லாமல் இப்படி அகில இந்திய மாநாடுகளுக்கு அவன் சென்றதில்லை.

டெல்லி, கல்கத்தா பலமுறை சென்றிருக்கிறேன். ஆனாலும் நண்பர்கள் பலரோடு ரெயில் பயணம் செய்வது அலாதியானது. காற்று முகத்தில் அடிக்கும் சுகமானது. உரையாடல்களின் வெளி நெருக்கமானதாகவும், அந்நியோன்யமானதாகவும் இருக்கும். வயது, லௌகீக வாழ்வின் இறுக்கம் எல்லாம் விலகி சிறகுகள் முளைக்கும். எதோ ஒரு பிளாட்பாரத்தில் இறங்கி, முகம் தெரியாத மனிதர்களுடன் கலந்து சென்று, வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டு, நம் பெட்டி பார்த்து ஏறுவது போன்ற கணங்கள் இப்படியான பிரயாணங்களின் பிரத்யேக அடையாளங்கள்.

 

முதன் முதலாக இதுபோன்ற பிப்ரவரி மாதத்தில் 1986ம் ஆண்டு ஒரு அகில இந்திய மாநாட்டிற்கு கட்டாக் சென்ற ரெயில் இன்னமும் எனக்குள் நிற்காமல் ஒடிக்கொண்டு இருக்கிறது.

‘அக்கினிக்குஞ்சு’ என்று வெளிவந்த எங்கள் சங்கப் பத்திரிகையில் தொட்டிலில் இருக்கும் குழந்தையின் பிஞ்சுக்கரங்களில் ஸ்பேனர் ஒன்றிருப்பதாக வரைந்து 'Baba black sheep, Have you any tool?, Yes sir Yes sir, To make you a fool'  என்று குழந்தைத் தொழிலாளருக்கு எதிராக ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தேன்.  அதைப் பார்த்துப் பாராட்டிய எங்கள் சங்கப் பொதுச்செயலாளர் தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் (இப்போது ‘ராமையாவின் குடிசை’ மற்றும் ‘என்று தணியும்’ போன்ற ஆவணப்படங்களை இயக்கியவர்)அகில இந்திய மாநாட்டு அரங்கில் வைக்க, தமிழ்நாட்டிலிருந்து இதுபோல கார்ட்டூன்கள் வரைந்து கொண்டு சென்றால் என்ன என்றார். உற்சாகமாய் தலையசைத்தேன். அன்று சாயங்காலமே மதுரைக்கு அழைத்துச் சென்று போர்டுகள், பிரஷ், பெயிண்ட் என நான் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்தார். அவருடைய அறையில் தங்கி வரைய ஆரம்பித்தேன்.

அருகில் உட்கார்ந்து என்ன கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை கிருஷ்ணகுமார் விவரிப்பார். அமெரிக்காவின் அத்துமீறல்களைச் சொல்வார். அப்போது லிபியாவைப்பார்த்து ஏகாதிபத்தியம் உறுமிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பெண் பிரதமர் தாட்சர் அதற்கு உடந்தையென்பார். உமர்முக்தாரைப்பற்றிச் சொல்வார். ராஜீவ்காந்தியின் நவோதயாப்பள்ளி பற்றி பேசுவார். இரவுகளில் பஜாருக்குச் சென்று வாழைப்பழங்களும், டீயும், சிகரெட்டும் வாங்கி வந்து தருவார். நான் வரைந்து கொண்டேயிருப்பேன். அருகில் காமராஜ் அவன் பங்குக்கு வர்ணம் தீட்டுவான். வரைந்த படங்களுக்கு எழுத்துக்கள் சேர்ப்பான். கம்ப்யூட்டரின் கால்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் மனிதர்களை வரைந்து 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்று தலைப்பிட்டு ஒரு கார்ட்டூன், உடல் முழுவதும் நீலம்பாரித்த தாயிடம் பால் குடிக்கும் குழந்தையும் தூரத்து கருப்பு இருட்டில் போபாலின் விஷவாய் கசியும் யூனியன் கார்பைட்டுமாய் ஒரு படம், பீரங்கியின் வாயிலிருந்து புறாக்கள் பறந்து செல்ல சிகப்பு எழுத்துக்களில் ‘we war for peace' என்னும் லெனின் வாசகம் கொண்ட படம் என  நிறைந்தன. தகித்துக் கொண்டிருந்த சாத்தூரின் வெப்பம் அந்த இரவுகளில் எங்கள் மீது படிந்துகொண்டு இருந்தது. இரண்டு நாட்களில் மேலும் இரண்டு தோழர்கள் படம் வரைய சேர்ந்து கொண்டார்கள். கிருஷ்ணகுமாரின் அறை எங்கள் வண்ணங்களால் குழைந்து போனது. தரையெல்லாம் சிகப்பு, பச்சை, மஞ்சள் வண்ணச் சிதறல்கள். ஐந்து நாட்களில் நாற்பது படங்களுக்கு மேல் வரைந்து முடித்திருந்தோம். அவைகளை கவனமாக சேர்த்து பெரிய பாலிதீன் பைகளில்  மடிக்காமல் வைத்து கட்டி, அதை கட்டாக் வரை பாதுகாப்பாக கொண்டு வர ஒரு தோழரையும் கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் வல்லபாயிடம் சென்று பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்படும் மருந்துகளை வாங்கி வந்தார்.

சாத்தூரிலிருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இரவு ரெயில் பெட்டிகளின் மங்கலான வெளிச்சத்தில் அசைந்தபடி இருந்தது. மதுரையில் மேலும் தோழர்கள் சேர்ந்துகொள்ள ரெயில் பாட ஆரம்பித்தது. ஆட்டமும், கைதட்டல்களுமாய் சென்னையின் காலை வந்தது. கிருஷ்ணகுமாரிடமும் காமராஜிடமும் சொல்லிவிட்டு ஹிக்கின்பாதம்ஸில் காத்திருந்தேன். காயிதே மில்லத்திலிருந்து கொஞ்சநேரம் கழித்து அம்மு வந்தாள். சந்தடியும், சத்தமும் மிக்க மவுண்ட் ரோட்டில் பேசித்திரிந்தோம். வள்ளுவர் கோட்டம் போய் அவளது டிபன்பாக்ஸில் இருந்து மதிய உணவை பகிர்ந்துகொண்டோம். சாயங்காலம் அவளிடம் விடைபெற்று தோழர்களோடு வந்து சேர்ந்து கொண்டேன். டி.ஆர்.இ.யூ தோழர்கள் மூலம் ஒரு காரேஜ் பிடித்து அதில் பேனர்களை கட்டியிருந்தார்கள். சங்கரலிங்கம் "என்ன மாப்பிள்ள...மவுண்ட் ரோட்டுல ஒரு பொண்ணோட உன்னப் பாத்தேனே" என்றார். "வேற யாரையாவது பாத்திருப்பீங்க "என்று சொல்லிவிட்டு ரெயில் புறப்படும் முன்னாலேயே மேல் பர்த்தில் போய் படுத்துக்கொண்டேன். யாரும் கலைக்காத தனிமை அப்போது வேண்டியிருந்தது. முந்தைய நாளின் உற்சாகமில்லை. எதையோ இழந்தது போலிருந்தது.

காலை விடிந்தபிறகும் எல்லோரோடும் முழுமையாக கலந்துகொள்ள முடியாமல் ஒரு அவஸ்தையிருந்தது. வயல்வெளிகளும், கிராமங்களும், மலைகளும், நதிகளும், கட்டிடங்களால் நிறைந்த நகரங்களெல்லாம் இரண்டு பக்கமும் பின்னோக்கிச் செல்ல நாங்கள் ஒருநாள் முழுக்க பயணமாகிக்கொண்டு இருந்தோம். பைத்ரானி நதியின் மீது சென்ற அடுத்தநாள் விடியாத காலையில் தோழர்கள் இறங்கத் தயாரனார்கள். கட்டாக் ஸ்டேஷன் நெருங்கிய போது குளிரெல்லாம் விறைத்துப் போக "AIRRBEA  ஜிந்தாபாத்” என்று கோஷம் உஷ்ணத்தோடு எழும்பியது. வரவேற்க நின்றிருந்த ஒரிசா தோழர்களும் கோஷங்கள் எழுப்ப குரல்களின் சங்கமிப்பில் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றோம்.

பர்பாத்தி ஸ்டேடியத்தில்தான் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் தங்கினோம். முன்பின் தெரியாத, வேறு வேறு மாநிலத்திலிருந்து வந்த தோழர்கள் நேருக்கு நேர் சந்திக்கிற போதெல்லாம் "AIRRBEA  ஜிந்தாபாத்” என்று சொல்லிக்கொண்டார்கள். வரிசையாக வைக்கப்பட்டு இருந்த கார்ட்டூன்களைப் பார்த்தபடி தோழர்கள் நின்ற காட்சியில் பெரும் சந்தோஷமும், திருப்தியும் இருந்தது. பிரதிநிதிகள் மாநாட்டில் பெரும்பாலும் இந்தியிலேயே பேசினார்கள். எல்லோரும் "வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை பெற்றே தீருவது" என்று ஆவேசமாகப் பேசினார்கள். கடுகு எண்ணெயில் தயாரித்திருந்த உணவு வகைகள், பரிமாறியவர்கள் காட்டிய புன்சிரிப்பில்தான் உள்ளுக்குள் இறங்கின. அன்று இரவு அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகுமார் மேடையருகே சென்று எதோ சொன்னார். ஒரு அறிவிப்பாளர் “தோழர் மாதவராஜ் மேடைக்கு வந்து ஆடுமாறு அழைக்கிறோம்” என ஆங்கிலத்தில் சொல்ல, எங்களோடு வந்திருந்தவர்கள் ஆரவாரித்தனர். நடுக்கமாயிருந்தது. காமராஜ் தள்ளிவிட்டான். ஒரு தோழர் குளிருக்கு காதை மறைத்து கட்டியிருந்த மப்ளரை உருவி, இடுப்பில் கட்டிக்கொண்டு மேடையில் ஆட ஆரம்பித்தேன். கைதட்டல்களும், விசில்களும் பறந்தன. பஞ்சாபில் இருந்து வந்திருந்த சீக்கியத் தோழர்களில் இருவர் கையைத் தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்துகொள்ள களை கட்டியது.

அடுத்தநாள் அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் அசிஸ்சென் பேசினார். லேசாய் கரகரத்த அந்த குரல் மாநாட்டு அரங்கம் முழுவதையும் பற்றிக் கொண்டது.

"1930களில் இம்பீரியல் பேங்க்கில், அதாவது இப்போதைய ஸ்டேட் பேங்க்கில் சங்கம் உருவாக்குவதற்கான ரகசிய வேலைகள் நடைபெற்று வந்தன. அந்த காரியத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் டைப்பிஸ்ட் ஒருவர். நிர்வாகம் அவரை அழைத்து ஒரே சமயத்தில் இரண்டு உத்தரவுகளை கொடுத்து, அவருக்கு விருப்பமான ஒன்றை மட்டும் டைப் அடிக்கச் சொன்னது. ஒன்று அந்த டைப்பிஸ்ட்டின் பிரமோஷன் ஆர்டர். இன்னொன்று டிஸ்மிஸ் ஆர்டர். டைப்பிஸ்ட்டுக்கு புரிந்தது. சங்கம் ஆரம்பிப்பதை நிறுத்திவிட்டால் அவர் தனது பிரமோஷன் ஆர்டரை அடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்மிஸ் ஆர்டரை அடித்துக் கொள்ளலாம்.

அந்த டைப்பிஸ்ட் டைப் செய்தார்... அவரது டிஸ்மிஸ் ஆர்டரை! ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அந்த மனிதர் வாழ்க்கையில் பிற்பாடு மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளானார். துணிகள் தைத்து தெருத்தெருவாய் விற்றார். ஸ்வெட்டர் விற்றார். இப்படி எத்தனை எத்தனையோ.... சிறுவேலைகள், தொழில்கள் செய்து வாழ்க்கை முழுவதும் துயரங்கள் மட்டுமே சந்தித்தார். ஆனாலும் ஒருநாள்கூட தான் செய்தது தவறு என்று எண்ணி வருத்தப்படவில்லை. அந்த மனிதர்தான் எனது தந்தை என்பது இங்கே முக்கியமான விஷயமில்லை. அவரைப் போன்றவர்கள் கஷ்டப்பட்டதால்தான் இன்றுள்ளவர்கள் ஓரளவுக்காவது வளர்ந்திருக்கிறோம். தியாகங்களும் சோதனைகளும் நிறைந்த போராட்டமே நல்ல வாழ்க்கைக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. அதுபோல நாமும் பிரச்சினைகளை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்"

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த தோழர்கள் எழுந்து "ஜிந்தாபாத் ஜிந்தாபாத் ”AIRRBEA ஜிந்தாபாத்.... ஜிந்தாபாத் ஜிந்தாபாத் காம்ரேட் அசிஸ்சென் ஜிந்தாபாத்" என்று நரம்பெல்லாம் உஷ்ணமாக கோஷம் போட்டனர். அன்று இரவு உணவுக்குச் சென்ற போது, அந்த ஹாலின் முன்வரிசையில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த தோழரிடம் பேசிக்கொண்டே சப்பாத்தியை கடித்துக் கொண்டிருந்த தோழர் அசிஸ்சென்னை பார்த்தேன். சாதாரணமாக காட்சியளித்த அந்த மனிதருக்குள் ஒரு அசாதாரணமான உறுதி இருந்தது.

இரண்டு நாட்கள் மாநாடு நடந்து முடிந்த பிறகு, நந்தன்கானா, சூரியக்கடவுள் கோவில் என சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்தோம். அங்கும் கோஷங்கள் எழுப்பி ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ரெயிவே ஸ்டேஷனில் "தேரே மேரே பீச்சுமே ஹெய்ஸா ஹேயே பந்தன் " என்று காமராஜ் உருகிப் பாடிய போது அங்குள்ளவர்கள் சுற்றிநின்று ரசித்துக் கைதட்டினார்கள். அங்கும் "AIRRBEA  ஜிந்தாபாத்” என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாம்நாள் இரவில் திரும்பினோம். பர்பாத்தி ஸ்டேடியத்தை விட்டு வெளியே வரும் போது எதுவும் சொல்லத் தோன்றாமல், மனதெல்லாம் இளகிப் போயிருந்தது. இனி இந்த மனிதர்களை எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஏக்கமாய் வந்தது. பைத்ரானி நதியை கடக்கிறபோது உற்சாகமாகவும் இருந்தது. தவிப்பாகவும் இருந்தது. ஒரே இடத்தில் தங்கி, பழகி, சிரித்து, உரையாடிய தருணங்கள் மனதிற்குள் நிரம்பி ததும்புகின்றன. மொழி தெரியாத, முன்பின் தெரியாத இடமாயிருந்தாலும், மனிதர்களாயிருந்தாலும் எல்லோரோடும் சேர்ந்து இருக்கிற வாழ்க்கை, கொஞ்ச காலமாயிருந்தாலும் அர்த்தமுள்ளதாய் விடுகிறது.

 

தோழர்கள் இராஜஸ்தான் சென்று திரும்பி வருவார்கள். அனுபவங்களை காமராஜிடம் கேட்க ஆவலாய் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் என் மகள் சொன்னாள்: “எனக்கு எக்ஸாம் முடிஞ்சப் பிறகு நாம எல்லாரும் ஜாலியா ஒரு டிரிப் போவோம்ப்பா” . உற்சாகமாய் தலையாட்டினேன் அதற்கும் .

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஏனோ கடைசியில் கண்களில் ஈரம் படர்ந்தது!

    ப்ரீத்துவுக்கு "All the best!" :-)

    பதிலளிநீக்கு
  2. பரிட்சை முடிந்து ஜாலி ட்ரிப் செல்ல வாழ்த்துகள் சார்.

    விவாரணை அருமை. ரெயில் பெட்டியில் நானும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  3. \எனக்கு எக்ஸாம் முடிஞ்சப் பிறகு நாம எல்லாரும் ஜாலியா ஒரு டிரிப் போவோம்ப்பா”//

    :)

    ஆனா பொதுவா வீட்டு ஆண்கள் கூட்டமாக நண்பர்களுடம் சுத்துவது என்பது எல்லாம் கடுப்பான விசயமாக்கும் பெண்களுக்கு.. உங்கள் மகள் அப்படி நினைத்து சொல்லவில்லை என்றாலும் குடும்பமாக ஒருமுறை தொலைதூரம் பயணித்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள மாதவ்

    பெண் குழந்தைகள் தந்தையிடம் அதிக நேசமாயிருப்பார்கள் என்று அறிஞர்கள் பலர் சொல்லிச் சென்றிருக்கின்றனர். நான் விவாதத்திற்குள் செல்லவிரும்பவில்லை. பொதுவாகக் குழந்தைகள் எல்லோருமே நிபந்தனையற்ற அன்பைப் பெரியவர்களிடம் கோருகின்றனர். பெற்றோரிடம் உரிமை பாராட்டி அதை எதிர்பார்க்கின்றனர். கண்ணீர் வர அவர்களை நாம் சிறுமை செய்துவிட்டுத் தூங்க முடியாத இரவொன்றில் நமது தலையணையை நம் பங்கிற்கு நனைத்துக் கொண்டு ஓய்ந்தாலும், அதன் சுவடே அற்ற அதிகாலைப் பொழுது அவர்களது கண்களில் விடிவதைப் பார்க்க முடியும்.

    தங்கள் படிப்புக்காகவோ, மதிப்பெண்களுக்காகவோ துணை நிற்கச் சொல்லும் டியூஷன் மாஸ்டராகக் குழந்தைகள் பெற்றோரைப் பார்ப்பதில்லை. வாஞ்சையான ஒரு மடி, ஆதுரமான ஒரு தோள், உச்சிதனை முகந்து கருவம் ஓங்கி வளரக் கொடுத்துவைத்த ஒரு ஜீவன்....இவையே அவர்கள் வேண்டுவது.

    தேர்வுக் காலத்தின் இன்றைய சமூகம் ஏற்படுத்தும் அதி தீவிர மன அழுத்தத்திற்கான ஒத்தடமாக உங்கள் பிஞ்சுக் குழந்தை உங்களுக்கான ரயில் போக முடியாதபடி கேட்டைத் திறந்து வைத்திருக்கிறாள். நீங்கள் இறங்கிவிட்டதால் இப்போது கேட் மூடப்பட்டு ரயிலுக்கு வழி விடப்பட்டிருக்கிறது. அவளுக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

    2 மறைந்த மேதை அžஸ் சென் சொன்ன இந்த மெய்சிலிர்க்கும் வரலாற்றுச் செய்தியை நான் முதன்முதல் கேட்டபோது அடைந்த அதே பரவசத்தை, பிறகு பலமுறை கேட்டபோதும், நானே பலரிடம் பகிர்ந்து கொண்டபோதும் பரவிய அதே சுகத்தை, இப்போது மீண்டும் உங்களிடமிருந்தே மறுமுறை வாசிக்க நேரும்போதும் அடைந்தேன். நன்றி உங்களது எழுத்துக்கு....

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  5. மாதண்ணா,

    \\அவளுக்குள் எங்கோ அந்த கைக்குழந்தை இன்னும் இருப்பதாக புரிந்து சந்தோஷம் கொள்கிறேன்.\\

    நானும்...


    \\என் மகள் சொன்னாள்: “எனக்கு எக்ஸாம் முடிஞ்சப் பிறகு நாம எல்லாரும் ஜாலியா ஒரு டிரிப் போவோம்ப்பா”.

    இந்த தடவை டான்ஸ் உண்டா???

    பயணக் கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  6. அருமை தோழர்...

    உடனிருந்த அனுபவங்களை அப்படியே தருவதாயிருக்கிறது உங்கள் எழுத்து.

    காலங்களுக்கு தக்க நாம் சில ஆசைகளையும் விட்டுத்தர வேண்டியதாகிறது...
    அதுவும் குழந்தைகளுக்காக எனும்போது இன்னமும் கூடுதல் மகிழ்வுதானே...

    காமராஜுக்கு எனது அன்புகள்..

    பதிலளிநீக்கு
  7. பாசம் வென்றது!!!!
    கடமை தானாக நடக்கும்....
    உங்கள் குடும்ப சுற்றுலாவிற்கு வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  8. dear maathav,
    com.svv has shared my thoughts and whatever i want to tell. fine.... when you visit jaipur, dont forget to visit the mighty Amber Fort. Even a full one day is not enough to see and come around that fort. I vistited jaipur and jodhpur last year february. throughout my stay in rajasthan, especially my visit to Amber fort and Meghrana Fort in Jodhpur, i just recollect 'rajasthaanaththu anthappurangal'written by respected Raghulji. one thing still lingering in my mind...in Meghrana fort, at the staircases, you can see two rajasthan folk musicians, with their traditional (shehnai like) pipe and drums, and in their full traditional attire. Whenever they see visitors climbing up the staircase, they would start playing their music instruments and you can feel the mesmerising desert-wind flowing through their pipe and start echoing the ferocious fort for several seconds. I come to the point: When i approach the two, they started palying as usual with all their modesty. I stunned at their performance. I gave them a ten rupee note. And to my utter shock, immediately they bowed their head... i feel terribly ashamed...i could not forget that moment. i could not digest till date that two great musicians are sitting on the staircase and bowed their heads to everybody who come across their way for little five rupees, ten rupees...! Later I purchased a CD of rajasthan folk songs played by a famous troupe..but whenever i play the CD, immediately i could see, in front of me, the mighty fort, the staircase and the two in their full colourful traditional attire...I wish you maathav, as soon as exams are over, get ready to be embraced by the chill musical-wind of rajasthan...they are waiting for you..
    iqbal

    பதிலளிநீக்கு
  9. Yes.your decision not to attend the conference is correct.we have to respect our children's feelings at least like this important time.See the attached Photo>>Com.Asis sen rare photo with his wife---vimalavidya

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு... உங்கள் குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான கார்ட்டூனையும் இணைத்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  11. தோழர்..சுவாரசியமாகவும் இருந்தது. மனது கனத்தும் போனது.

    பதிலளிநீக்கு
  12. உங்க மகளுக்கு 'ஆல் த பெஸ்ட்'.

    அவள் எதிர்பார்ப்பது ஒரு மாரல் சப்போர்ட் அவ்வளவே.

    பரீட்சை முடிந்ததும் ஒரு சுற்றுலா செல்வதை, நாங்கள் வழக்கமாக வைத்திருக்கிறோம். இது எங்கள் எல்லோருக்கும் ஒரு ரீஎனர்ஜி கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் மகளின் தேர்வுகளுக்கு வாழ்த்துகள்.

    அழு, சிரி, குதூகளி, என்னோடு வா ன்னு நீங்க சொல்றதைக் கேட்கிற பொம்மை மாதிரி மாறிடுறேனோன்னு தோணுது உங்க எழுத்தை வாசிக்கும் போது..

    பதிலளிநீக்கு
  14. அன்பு மாதவராஜ்,

    என்ன ஒரு சுகமான விஷயம் தன்னை வேண்டும் மகளைக்கொண்டிருப்பது. நேற்று நாம் பேசிக்கொண்டதை நானே எழுதவேண்டும் என்று நினைத்தேன் மாதவராஜ்!

    என்ன ஒரு இயல்பான அழகான, செறிவான நடை, எழுத்து உங்களுடையது. ”அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது நான் சிலநாட்கள் வெளியூர் சென்று வந்தால், உடனே என்னிடம் வரமாட்டாள். முகம் திருப்பிக்கொள்வாள். வாரி அணைத்துக்கொண்டால், கண்கலங்குவாள். ஆச்சரியமாயிருக்கும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அவளது பிரியங்களை, செல்லங்களை, வம்புகளையெல்லாம் அம்மாவிடம்தான் மொத்தமாய்க் காட்டுகிறாள். எதற்கும் என்னைத் தேடுகிறவளாக இருப்பதில்லை. அவளுக்குள் எங்கோ அந்த கைக்குழந்தை இன்னும் இருப்பதாக புரிந்து சந்தோஷம் கொள்கிறேன். ” அற்புதமான உறவு, உணர்வு மாதவராஜ் இது. பாக்கியவான்கள் மகளைக் கொண்டவர்கள்.

    ”யாரும் கலைக்காத தனிமை அப்போது வேண்டியிருந்தது. முந்தைய நாளின் உற்சாகமில்லை. எதையோ இழந்தது போலிருந்தது. காலை விடிந்தபிறகும் எல்லோரோடும் முழுமையாக கலந்துகொள்ள முடியாமல் ஒரு அவஸ்தையிருந்தது.” உறவுகளில் எத்தனை சுகம், அவஸ்தை, வேதனை என்று எல்லா ஆரங்களும் சேர்ந்து அந்த வட்டத்தை முழுமையாக்குகிறது.

    கைய நீட்டுங்க மாதவராஜ்! அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி!ன்னு பாரதி மாதிரி பாடிட்டு திரியனும்னு தோனுது... பிரக்ஞையற்ற வாழ்க்கை என்பது என்ன என்று விளங்கவில்லை... நீங்கள் அதிகமான பிரக்ஞையுடனும், குற்ற உணர்வுடன் வலம் வருவது போல இருக்கிறது எனக்கு.
    உங்க அப்பாவைப் பற்றி சொல்லும் போது நான் பட்ட கஷ்டங்களும் ஞாபகம் வருகிறது. இப்போ இரண்டளவு சம்பாதிக்கிற ராகவன், அப்போ ஓட்டலில், மாவுமில்லில் நடு ரோட்டில் பொம்மை விற்ற கஷ்டங்கள் எல்லாம் அப்படியே வந்து போகும், மூன்று நாட்கள் சாப்பாடே இல்லாம, வெறும் சிறுவானி தண்ணீர் மட்டுமே குடித்து, நமக்கு சாப்பாடுக்கு சம்பாதிக்கக் கூட துப்பு இல்லையேன்னு ஒரு குற்ற உணர்ச்சி கொல்லும் கொலை வேலாய். கோயம்புத்தூர் காந்தி பார்க்கில், தோட்டக்காரரின் பீடிகளை திருடி புகைத்தது, யாரோ பாதி குடித்து விட்டுப்போயிருந்த சார்மினார், அல்லது வில்ஸ் நேவி கட் சிகரெட் பொறுக்கி பிடித்தது எல்லாம் இன்னும் மனசை சுரண்டி ரத்தம் வரவைக்கும். உங்க அப்பா பற்றி சொல்லும் போது எனக்கு ஞாபகம் வருது இந்த கதையெல்லாம்.

    ரொம்ப ரசித்தேன் இந்த பதிவை.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  15. //அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது நான் சிலநாட்கள் வெளியூர் சென்று வந்தால், உடனே என்னிடம் வரமாட்டாள். முகம் திருப்பிக்கொள்வாள். வாரி அணைத்துக்கொண்டால், கண்கலங்குவாள். //
    படிக்கும் போது எனக்கும்...

    //அவளுக்குள் எங்கோ அந்த கைக்குழந்தை இன்னும் இருப்பதாக புரிந்து சந்தோஷம் கொள்கிறேன். அவள் பேச்சைத் தட்டாமல் இருப்பதே அவளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். //
    ப்ரீதுவிடம் இப்போது பேசிய போது இது நன்றாகவே புரிந்தது. சரியான முடிவு. ம்ப சந்தோஷமாக இருக்கிறது அங்கிள்.

    பதிலளிநீக்கு
  16. ஓ...உங்கள் ராஜஸ்தான் பயணம் ரத்து வருத்தத்தை அளித்தாலும்.... மகளுக்காக எனும் போது ஆனந்தமாக இருக்கிறது. எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு அப்பா.
    இப்படித்தான் நம்மை அறியாமலேயே நம் அருகாமை கூட குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்து விடுகிறது.ஜெய்ப்பூர் எங்கே போய்விடப் போகிறது???குடும்பத்துடன் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. nice post.

    but leftist associations also should change, you should conduct web seminars, web based meetings, no point in going in lorrys, trains to attend meetings and conferences.

    பதிலளிநீக்கு
  18. அழகா சொல்லிருக்கீங்க!

    இந்தப் பதிவை வாசிப்பதே ரெயில் பயணம் செய்வது போல்தான் இருந்தது!

    பதிலளிநீக்கு
  19. கடமையை பாசம் வென்றதாக எண்ண தேவையில்லை.

    பாசமே முக்கியமான கடமைதான்.

    பதிலளிநீக்கு
  20. அழகான பதிவு... மகளின் பள்ளி இறுதி காலத்தின் கோரிக்கை நியாயமானதே/ பழைய அனுபவங்களை கூறும் போது அழகாக மென் காதல் உணர்வின் நிமிடங்களை பகிர்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்...

    தொழிற்சங்கம் உணர்வுபூர்வமாக தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் போது மொழி ஒரு தடையாக இருப்பதில்லை.. பல தலைவர்களின் தன்னலமற்ற தியாகம் தான் தொழிற்சங்கங்களின் அசைக்க முடியாத அஸ்திவாரம்.

    பதிலளிநீக்கு
  21. மண்குதிரை!
    நன்றி.


    சந்தனமுல்லை!
    பிரீத்துவிடம் உங்கள் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன்.

    அக்பர்!
    நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்!


    முத்துலெட்சுமி!
    கண்டிப்பாக செல்ல வேண்டும். பகிர்வுக்கு நன்றி.


    வேணுகோபாலன்!
    உங்கள் பின்னூட்டம் குழந்தைகள் மீது கொண்டு இருக்கும் வாஞ்சையை, அக்கறையை அழகாகச் சொல்கிறது. எப்போதுமே உங்கள் பின்னூட்டஙக்ள் என் அப்திவுக்கும் மேலும் அர்த்தங்களைத் தருவதாகவே இருக்கின்றன. பெருமைதான் எனக்கு.


    அம்பிகா!
    வா.... நாமெல்லாம் சேர்ந்தே போவோம். டான்ஸ் உண்டு. :-)))))

    பதிலளிநீக்கு
  22. கும்க்கி!

    நன்று. குழந்தைகளுக்காகத்தானே ந்நமெல்லாம்..


    பொன்ராஜ்!
    நன்று கண்ணா....



    இக்பால்!
    உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் ராஜஸ்தான் போகணும்னு வெறியே வருது. யப்பா....!
    காமராஜிடம் சொல்லி இருக்கிறேன் எல்லாவற்ரையும். மிக்க நன்றி நண்பரே!




    விமலவித்யா!
    சரிதான் நீங்கள் சொல்வது.

    பதிலளிநீக்கு
  23. ஸ்வர்ணரேகா!
    அந்தக் கார்ட்டூன் நினைவில்தான் இப்போது இருக்கிறது.


    தண்டோரா!
    நன்றி வருகைக்கும், பகிர்வுக்கும்.


    அமைதிச்சாரல்!
    உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ராகவன்!
    இந்தப் பின்னூட்டத்தை எத்தனை தடவை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. உங்களிடம் பேசிய பிறகுதான் எழுதணும்னு தொன்றியது. இன்னொருய் பதிவும் கூட எழுத நினைத்திருக்கிறேன். அடிக்கடி பேசுவோம்.

    அன்பில் நனைந்து நிற்கிறேன் ராகவன்.

    பதிலளிநீக்கு
  25. தீபா!
    நன்றி. நீ பிரீத்துவிடம் பேசியதைச் சொன்னாள்!


    அன்புடன் அருணா!
    நன்றி. காமராஜ் வருகிறான். நாமும் சந்திப்போம்.


    மதுரை சரவணன்!
    நன்றிங்க.


    குப்பன் யாஹூ!
    நன்றி.


    தென்றல்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. தஞ்சை ரமேஷ்!
    நன்றிங்க....


    விஜயராஜ்!
    உண்மைதான் அண்னா!


    பவித்ரா பாலு!
    உற்சாகமளித்து இருக்கிறீர்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நானும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை எனும் போது ஒரு கர்வம் மேலிடுகிறது. பணி நிமித்தமாக ஆனால் நான் டெல்லி வந்திருக்கிறேன். என் குழந்தை சாயங்காலம் அப்பா வந்துவிடுவார் என்று ஒவ்வொரு நாளும் காத்து கொண்டிருப்பாள்

    பதிலளிநீக்கு
  28. மாது,

    உருப்படியான காரியம் செய்தீர்கள்.

    ப்ரீத்து,

    உருப்படியான காரியம் செய்தாய்.விடாதே அப்பாவை.
    உனக்கப்புறம்தான் அப்பா ஊருக்கு.

    காமராஜ்,

    உருப்படியான வாய்ப்பு.ப்ரீத்துவை புரியும் உங்களுக்கு.மாதுவை விட.
    மாது இடத்தையும் சேர்த்து பார்க்கணும்.அவ்வளவுதானே?..
    முடியும் உங்களால்!

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!