மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு)

ண்பதுகளில் ஜோல்னாப்பைக்குள் புத்தகங்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் தெரியாமல் அலைந்து திரிந்த தருணங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ரோட்டோர நியான் விளக்குகளிலிருந்து அவை இப்போதும் நினைவுகளாக கசிந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு பட்டாளமே அப்படி இருந்தது.  கோவில்பட்டியில் இருந்தது. சாத்தூரில் இருந்தது. மதுரையில், சென்னையில், திருவண்ணாமலையில் என்று அங்கங்கே பரவியிருந்தது. சிங்கிஸ் ஐத்மாத்தாவையும், காண்டேகரையும், ஜே.ஜே.சில குறிப்புகளையும் பற்றி பேசித் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது கதையும் எழுதிக்கொண்டு, வாழ்வை மிக நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் துவங்கிய வசீகரமான காலம். இரவெல்லாம் டீ குடித்துக் கொண்டு, செகாவிலும், தஸ்தாவஸ்கியிலும் மூழ்கிப் போவோம். மசூதியின் பாங்கிச் சத்தத்தோடு காகங்கள் கரையும் வேளையில், மீண்டும் ஒரு டீ குடித்துவிட்டு குளிப்பதற்கு ஆற்றுக்குச் செல்வோம். ஆறு இப்போது  வறண்டு கிடக்கிறது.

இப்போது அப்படியொரு சூழல் இருக்கிறதா, நம் இளைஞர்களுக்குள் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற கேள்விகள் அவ்வப்போது வந்து செல்லும். வலைப்பூக்கள் இந்தக் கவலையை பெருமளவில் குறைத்திருக்கின்றன. தேடிக்கொண்டிருந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். மிக சீரியஸாக அவர்களும் இரவெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம். டில்லியில் இருப்பவரும், அமெரிக்காவில் இருப்பவரும், ஈரோட்டில் இருப்பவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக்கோண்டு இருக்கிறார்கள். இலக்கியம், சினிமா, தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், கனவுகள், சமூகம் என நீளும் உரையாடல்கள் இலக்கியத் தொனியும் கொண்டிருப்பது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

லக்கியமும், சமூகம் குறித்த பார்வைகளும் கொட்டிக்கிடக்கும் பெருவெளிதான் இது.  இந்த உலகத்திற்குள் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே, விரல்நுனியால் நுழைந்திட முடியும். இணையமும், வலை உலகமும் இன்று உரையாடல்கள் நடக்கும் பெருவெளியாக பரிணாமம் கொண்டிருக்கின்றன. பத்திரிக்கைகள், புத்தகங்களைத் தாண்டி எழுத்துக்களை பதிவு செய்கிற இன்னொரு தளமாக இன்று இணையதளம் பரிணமித்திருக்கிறது. இங்கே யாரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயிருக்கத் தேவையில்லை. கருத்துக்களும், சிந்தனைகளுமே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிதாக எழுத வருகிறவர்கள், பத்திரிக்கையில் பிரசுரமாகாதா என ஏங்குபவர்கள், பெண்கள்,  கணணித்துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மிக அதிகமாக இந்த வலைப்பக்கங்களை  பயன்படுத்தி வருகின்றனர்.

ந்த வலைப்பக்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரப்பாச்சி பொம்மையாகி இருக்கின்றன. குழந்தைகள் தங்கள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.

இங்கே மனிதர்கள் குழந்தைகளைப்போல திளைக்கின்றனர்.....

உள்ளடக்கம்:

1. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்
சென்ஷி

2. கூனயன்
ஏக்நாத் (ஆடுமாடு)

3.நத்தை
அ.மு.செய்யது

4.உளவு
அமிர்தவர்ஷிணி அம்மா

5.சாமியார் செத்துப் போனார்
அய்யனார்

6.ஆலம்
நிலா ரசிகன்

7.ஆள் மாறாட்டம்
ஜ்யோவ்ராம்சுந்தர்

8.காலத்தின் வாசனை
பா.ராஜாராம்

9.இ.பி.கோ 307 அல்லது கொலை முயற்சி
கென்

10.நட்சத்திரங்களுக்கிடையில் ஒரு கதைசொல்லி
தமிழ்நதி

11.பட்டாம்பூச்சி பார்த்தல்
முரளிகுமார் பத்மநாபன்

12.மூன்றாம் கை
நந்தா

13.அய்யனார் கம்மா
நர்சிம்

14.முற்றுப்புள்ளி
ரிஷான் ஷெரிப்

15.பதுங்குகுழி
செல்வேந்திரன்

16.சிறுபிள்ளைகள் என்னருகே வர தடைசெய்யாதிருங்கள்
காமராஜ்

17.இன்று வந்தவள்
மாதவராஜ்

தங்கள் பதிவுகளை வெளியிட அனுமதித்த பதிவர்களுக்கும், இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், வம்சி புக்ஸுக்கும் எனது நன்றிகள்.

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகளும் நன்றியும் :)

    எப்போது சென்னை வருகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கதைகளை புத்தகத்தில் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் முயற்சிக்கும்...

    பதிலளிநீக்கு
  3. நண்பர் மாதவராஜுக்கும், தொகுப்பு வெளியிட உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
    சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி ஐயா,

    சென்ஷி, ஏக்நாத் (ஆடுமாடு) , அ.மு.செய்யது, அமிர்தவர்ஷிணி அம்மா, அய்யனார் , நிலா ரசிகன், ஜ்யோவ்ராம்சுந்தர், பா.ராஜாராம், கென், தமிழ்நதி, நந்தா , நர்சிம் , ரிஷான் ஷெரிப் , செல்வேந்திரன் , காமராஜ் மற்றும் உங்களுக்கும் என் மனதார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வளவு பெரிய ஜாம்பவன்களுக்கு மத்தியில் என்னையும் இடம்பெறச் செய்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

    :-)

    பதிலளிநீக்கு
  6. மகிழ்வாய் உணர்கிறேன்.. நன்றிகள் மற்றும் சக பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  7. கனவுகள் பலிக்கத்தொடங்கிய இத்தருணம் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் சார்!.

    தங்களுக்கு நன்றிகளும், சக நண்பர்களுக்கு வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  8. \\தங்கள் கதைகளை புத்தகத்தில் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் முயற்சிக்கும்...//
    :)

    பதிலளிநீக்கு
  9. பெருஞ்சிரமத்திற்கிடையில் இத்தொகுப்பை வெளிவர உழைத்திருக்கிறீர்கள்.

    நன்றிங்க..உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறது.

    வம்சி பதிப்பகம்,பவா செல்லதுரை அவர்களுக்கும் என் நன்றிகள்.சக பதிவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நண்பர் மாதவராஜ்,

    உங்கள் கடுமையான பணிகளுக்கிடையிலும் இந்த முயற்சியை வெற்றி பெற வைத்ததற்கு, என் நன்றிகளும் பாராட்டுகளும்

    பதிலளிநீக்கு
  11. நண்பர்கள் அனைவருக்கும், உங்களின் முயற்சிக்கும், தொகுப்புக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வலப்பதிவர்களின் மனத்தை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும். புத்தகம் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்களேன்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!