எந்திரன் அறிவியல் படமாம்! இராவணன் சரித்திரப் படமாம்!!

 

நமது பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளில் இருந்த சுவராசியங்கள் போய் காலங்கள் ஆகிவிட்டன. இப்போது படித்தால் எரிச்சல்தான் வருகிறது. மிக மோசமான கிசு கிசு, எதிர்பார்ப்புகளைக் கூட்டுகிறோம் என அசட்டுத்தனங்கள், இரண்டு நடிகர்களுக்கு இடையே செயற்கையாக உருவாக்கப்படும் போட்டி என விவஸ்தையில்லாத சங்கதிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக சில முன்னணி நடிக நடிகையரின் பேட்டிகள் இருக்கிறதே.... ‘மனசே ரிலாக்ஸ்’ என சொல்லி அமைதிப்படுத்தத்தான்  வேண்டும். அண்மையில் வேறு வழியில்லாமல் படித்த சில செய்திகள் அதிர்ச்சியையும், நகைச்சுவையையும், கோபத்தையும், ஆச்சரியத்தையும்,  தரக்கூடியவைகளாக இருந்தன.

அதிர்ச்சி:

“ஒவ்வொரு படத்தைக் கிளிக் செய்யும் போதும் அதற்கு முந்தைய வினாடியைத் தவற விட்டுட்டோமோன்னு நினைக்கத் தோணும். எனக்கு இடங்கள், அபிநயங்கள் ஆகியவற்றை விட மனிதர்களை, அவங்களோட இயல்பான பொழுதுகளைப் படம் பிடிக்க ஆசையா இருக்கு”

ரேவின் ரேஞ்சுக்கு மிக நுட்பமான இந்த உணர்வைச் சொல்லி இருப்பவர் அஜித். பில்லா படத்தில் நடித்த பிறகுமா இப்படியெல்லாம்....!

கோபம்:

சல்மான்கான் மற்றும் அசின் நடித்து வெளிவந்துள்ள லண்டன் டிரிம்ஸ் திரைப்படத்திற்கு எதிரான வன்முறையில் வழக்கம்போல் பஜ்ரங்தளத்தினர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்துமதத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்கிறதென்று வழக்கம்போல் பழிசுமத்தி இருக்கின்றனர். மும்பையின் பல திரையரங்குக்குள் புகுந்து வழக்கம்போல் இரும்புக்கம்பிகளால் தாக்கி இருக்கின்றனர். இந்த வழக்கத்திற்கு எதிரான கோபம்தான் மகாராஷ்டிராவில்  சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது என்பதை அதற்குள் மறந்துவிட்டனர் போலும்! குப்பை படங்களையும் இவர்களது அதிரடி விளம்பரங்களால் ஓடவைத்து விடுவார்கள் .

நகைச்சுவை: 

“நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பது கிடையாது. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி உழைக்கிறேன். எந்திரன் அறிவியல் படம். ராவணன் சரித்திரக் கதை. இரண்டிலும் வித்தியாசமான வேடம். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன்”

இப்படிச் சொல்லி இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யாராய். அறிவுதான் அழகு என்றால் இந்த அம்மாவை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?

ஆச்சரியம்: 

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது பற்றி ஐ.நாவின் பெண்கள் மேம்பாட்டுக்கான நிதியமைப்பு பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆய்வின் ஒரு பகுதியாக திரைப்படங்கள் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்றும் ஆய்வு செய்யப்பட்டது. தனது நடிப்புக்காக ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ள ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் அவர்கள் இந்த ஆய்வுக்குழு முன் தோன்றி “ஹாலிவுட் படங்களில் பலவீனமாக பெண்களைக் காட்டுகிறார்கள். உண்மை வாழ்க்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு இத்தகைய படங்கள் சொல்லும் செய்தியும் காரணமாக இருக்கலாம்” என சொல்லி இருக்கிறார். மேலும் “அத்தகைய பலவீனமான பெண் பாத்திரத்தை ஒருபோதும் தான் ஏற்றுக் கொள்வதில்லை” எனவும் சொல்லி இருக்கிறார்.

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்புள்ள மாதவ் அண்ணா..

    உங்கள் கருத்துக்களை சொல்லிய விதம் நன்று. ஆனால் அஜீத் போட்டோகிராஃபி பற்றிப் பேசுவதில் என்ன தவறு. அதில் உங்களுக்கு ஏன் அதிர்ச்சி. பில்லா படத்தையும் அஜீத்தின் தனிப்பட்ட புகைப்பட ரசனையையும் ஏன் ஒரே கோணத்தில் பார்க்கிறீர்கள்.
    ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. //அறிவுதான் அழகு என்றால் இந்த அம்மாவை எங்கே கொண்டு போய் நிறுத்துவது? //

    அதுனாலதான் இந்தியாவில் நடந்த போட்டியில் சுஸ்மீம்மா முதல் இடத்தையும் ஐஸ்ஸம்மா இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள்

    பதிலளிநீக்கு
  3. ****
    நமது பத்திரிகைகளில் வரும் சினிமாச் செய்திகளில் இருந்த சுவராசியங்கள் போய் காலங்கள் ஆகிவிட்டன.
    ****

    உங்களுக்கு வயசாயிடுச்சு. :)-

    ****
    “நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பது கிடையாது. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி உழைக்கிறேன். எந்திரன் அறிவியல் படம். ராவணன் சரித்திரக் கதை. இரண்டிலும் வித்தியாசமான வேடம். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன்”

    இப்படிச் சொல்லி இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யாராய். அறிவுதான் அழகு என்றால் இந்த அம்மாவை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?
    *****

    மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்த அறிவு :)- இது ஏன் உங்களுக்கு புரியலை !

    பதிலளிநீக்கு
  4. சரவணக்குமார்!
    போட்டோகிராபியோ, சினிமாவோ அவர் சொன்ன ரசனையை கண்டு நான் வியக்கிறேன். பில்லா படித்தில் நடித்தவரா என அதிர்ச்சியடைகிறேன். அவ்வளவுதான் அன்புத்தம்பி.

    சுரேஷ்!
    பகிர்வுக்கு நன்றி.


    மணிகண்டன்!
    இதுபோன்ற சங்கதிகளில் சுவராசியம் குறைவதால் வயதாகிவிட்டது என்றால் சந்தோஷமே!:-))))

    ஆமாம். அவர் பல பன்னாட்டுக் கம்பெனி பொருட்களுக்கு மார்க்கெட்டிங் ஏஜண்ட்தான்!!!


    லேகா!
    வருகைக்கு நன்றி.
    நானும் சிரித்ததால்தான் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன தல ஒரே சினிமா மேட்டரா இருக்கு!

    உங்களுக்கும் வாய்ப்பு வந்துருச்சா!?

    பதிலளிநீக்கு
  6. வால் பையன்!
    வேற யாருக்கெல்லாம் வாய்ப்பு வந்துருக்குங்க?

    பதிலளிநீக்கு
  7. //வேற யாருக்கெல்லாம் வாய்ப்பு வந்துருக்குங்க? //

    கேரளா புகழ் பிரபல எழுத்தாளருக்கு வந்துருச்சாமே!

    பதிலளிநீக்கு
  8. வால் பையன்!
    அவருக்கு என்ன வேடம்?

    பதிலளிநீக்கு
  9. //
    வால் பையன்!
    அவருக்கு என்ன வேடம்? //

    அங்கேயும் எழுதி தான் கொல்லுவாரு!
    வேடத்துகெல்லாம் இன்னும் கொஞ்சம் நாளாகும்!(அவர் எதிர்பார்க்கிறது கிடைக்க)

    பதிலளிநீக்கு
  10. முதல் பத்தியை ரசித்தேன் ... ஆனால் உங்களின் அதிர்ச்சி மற்றும் நகைச்சுவையுடன் என்னால் உடன்பட முடியவில்லை :)

    பதிலளிநீக்கு
  11. வால்பையன்!
    அவர் பங்குக்கு அவர் கொல்லட்டும்....!

    நந்தா!
    நன்றி. உடன்பட வேண்டும் என அவசியமா என்ன?

    பதிலளிநீக்கு
  12. அஜீத் புகைப்படங்களைப் பற்றி பேசுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமிருக்கிறதல்லவா.

    பதிலளிநீக்கு
  13. பின்னோக்கி!
    அவரிடம் தவறு என்று சொல்லவே இல்லையே.
    இப்படிப்பட்ட ரசனை கொண்டவரை நான் தவறாக புரிந்து கொண்ட அதிர்ச்சிதான். போதுமா?

    பதிலளிநீக்கு
  14. ஐஸ்வர்யாராய் சொன்னதில் எந்தத் தவறுமில்லை..

    கதைக்கருவைக் கொண்டு அவர் சொல்லியிருக்கிறார். அது உண்மைதானே..

    இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது பிரதர்..?

    பதிலளிநீக்கு
  15. //"Better paper, best design,great ink quality,superior printing … this is a fake" //

    இன்றைய பலகை செம நக்கல் :-))

    பதிலளிநீக்கு
  16. நியாமான கோபம்,அதிர்ச்சி,ஆச்சரியம் நயமான நகைச்சுவை

    பதிலளிநீக்கு
  17. //“ஒவ்வொரு படத்தைக் கிளிக் செய்யும் போதும் அதற்கு முந்தைய வினாடியைத் தவற விட்டுட்டோமோன்னு நினைக்கத் தோணும். எனக்கு இடங்கள், அபிநயங்கள் ஆகியவற்றை விட மனிதர்களை, அவங்களோட இயல்பான பொழுதுகளைப் படம் பிடிக்க ஆசையா இருக்கு” //

    இதை அஜீத்தான் சொல்லி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடிகர்கள் அரைகுறையாக ஏதும் சொல்வதை திறமையான நிருபர்கள் தங்களது தனித்துவத்தை பேட்டிகளின் கருத்துக்களில் கவித்துவமாய் ஏற்றி விடுவது வழக்கமானதுதான் என்று கேள்விப்பட்டதுண்டு. காரணம் அந்த பேட்டியைப் படித்து மற்றவர் பாராட்டும்போது அந்த நிருபரை நினைவில் வைத்து அடுத்த ஸ்டார் பேட்டிக்கு மறுப்பு சொல்லப் போவது இல்லை.

    கஷ்டமெல்லாம் ரசிகக் குஞ்சுகளுக்குத்தான். நம்ம தலைக்கு எம்புட்டு மேட்டர் தெரிஞ்சுருக்குன்னு புல்லரிக்க இன்னொரு சான்ஸ்..

    வெல்டன் மாதவ்ஜி!

    பதிலளிநீக்கு
  18. // மாதவராஜ் said...

    பின்னோக்கி!
    அவரிடம் தவறு என்று சொல்லவே இல்லையே.
    இப்படிப்பட்ட ரசனை கொண்டவரை நான் தவறாக புரிந்து கொண்ட அதிர்ச்சிதான். போதுமா?//

    ஹாஹாஹா.. எனக்கு இதுதான் செம்ம நக்கலா படுது :)))

    பதிலளிநீக்கு
  19. உண்மைத்தமிழன்!
    முட்டை பொரிக்கட்டும். கதைக் கருவைப் பார்ப்போம்!!! அறிவியல், வரலாறு என்பதற்கான அர்த்தங்களை இப்போதே குறித்துவைத்துக் கொள்வோம்.


    ஆரூரன்!
    மிக்க நன்றி.


    சென்ஷி!
    மிக்க நன்றி... புரிதலுக்க்கும், பகிர்வுக்கும்.

    பதிலளிநீக்கு
  20. ரோஸ்விக்!
    கார்ட்டூன்களை விட்ஜெட்டின் இல்லாமல் பதிவுகளுக்குள்ளேயே, தனிப் பகுதியாக கொண்டு வரலாமா என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. //“நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பது கிடையாது. எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி உழைக்கிறேன். எந்திரன் அறிவியல் படம். ராவணன் சரித்திரக் கதை. இரண்டிலும் வித்தியாசமான வேடம். ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன்”

    இப்படிச் சொல்லி இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யாராய். அறிவுதான் அழகு என்றால் இந்த அம்மாவை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?//

    ஆர்வக்கோளாரு! இல்லையாண்ணே!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!