நாற்காலியைச் சுமந்தபடி
போகிறார்கள்
போகுமிடமெங்கும்
இறங்கி வைப்பதில்லை
உறங்கும் வேளையிலும்
கனவிலும் கூட
வேர் பாய்ச்சி விடுகிறது நாற்காலி
அவர்கள் தலையில்
அவர்களுக்குத் தெரியாமலே
நாற்காலி
அவர்களை விட்டுவிடும் ஒரு நாளில்
அவர்கள்
நாற்காலியை விட்டுவிட இயலுமா
அதன் வேர் கலைந்து முற்றிலுமாய்..?
என கவலைப்பட்டு இந்தக் கவிதையை இருப்பவர் கவிஞர் கள்ளழகர்.
இன்றைக்கு இதைப் படிக்கும் போது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.
*
எனக்கும் சிரிப்பு தான் வருகிறது!
பதிலளிநீக்குரொம்பவும் யோசிக்க வைக்கிறது இக்கவிதை... மிக அழகான கற்பனை..
பதிலளிநீக்குசரியான நேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள். இக்கவிதை ஒருவருக்கான கவிதையல்ல.. நூறுகோடிக்கான கவிதை.. எனக்கு சிரிப்பதைக் காட்டிலும் கோபமே வருகிறது..
ஆதவா said...
பதிலளிநீக்குஇக்கவிதை ஒருவருக்கான கவிதையல்ல.. நூறுகோடிக்கான கவிதை..
இதுதான் எனக்கும் தோன்றுகின்றது.
ம்ம்ம்..... நீங்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதியைதானே சொல்கின்றீர்கள்..
பதிலளிநீக்குநல்லா இருக்கு நண்பரே
ஹ்ம்ம்..:-))
பதிலளிநீக்குஅவர்களால் விட்டுவிட முடியாததால் தான் இத்தனைக் கூத்துகள் என்று நினைக்கும் போது எரிச்சல்தான் மிஞ்சுகிறது!!
தோழர் மாதவராஜ்,
பதிலளிநீக்குநல்ல கவிதை.
ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
இது கருணாநிதிக்கு மட்டுமோ, அரசியல்வாதிகளுக்கு மட்டுமோ அல்ல.
அதிகாரம், புகழ் என்ற போதைக்காக எதையும் செய்யத்துணியும் அனைவருக்கும்தான்.
நாற்காலி என்பது ஒரு குறியீடு மட்டுமே.
இப்போதைக்கு அது அரசியல் என்ற பொருள் படுகிறது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
You Are Posting Really Great Articles... Keep It Up...
பதிலளிநீக்குWe recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல...
- நம் குரல்
நல்லதொரு கவிதையை பகிர்ந்திருக்கிறீர்கள் சரியான தருணத்தில்.
பதிலளிநீக்குவால் பையன்!
பதிலளிநீக்குதங்கள் சிரிப்புக்கு நன்றி.
ஆதவா!
தங்கள் கோபத்துக்கும் நன்றி.
ஆ.முத்துராமலிங்கம்!
உண்மைதான். எல்லோருக்குமான கவிதைதான்.ஆனால் இந்த நேரத்தில் யாருக்கு என்று சொல்லாமலே எல்லோருக்கும் புரிகிறமாதிரி நிகழ்வுகள் இருக்கின்றதல்லவா?
ஆ.ஞானசேகரன்!
சொல்லாமலே புரிகிறது. அவர் அப்படி இருக்கிறார்.
சந்தனமுல்லை!
விடாது கருப்புத்தான்!!!!!
அகநாழிகை!
நான் கலைஞருக்கு மட்டும் என்று சொல்லவில்லை. என்ன செய்ய... அவரைச் சட்டென்று நினைவுக்கு வருகிற மாதிரி அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன.
கிருபா!
நன்றி. விரைவில இனைகிறேன்.
யாத்ரா!
நன்றி.