ஒட்டு இருந்தால்தான் கடவுளுக்கும் மரியாதை மற்றும் இன்ன பிற (தீராத பக்கங்கள்-4)

கிருஷ்ணன் கோவில் முன்பு அந்தப் பிச்சைக்காரர் காலையிலிருந்து தரையிலே கிடக்கிறார். உடலில் லேசாய் அசைவுகள் இருப்பதைக் கவனிக்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரமாவது அங்கு நிற்க வேண்டும். “பேரன்புக்கும் , மரியாதைக்கும் உரிய வாக்காளப் பெருமக்களே...!” இப்படி மைக்செட்டில் அலறியபடி கட்சிகளும், சின்னங்களுமாய் தொண்ணூற்று ஒன்பது முறை அவரை கடந்து மொத்தம் மொத்தமாய் ஆட்கள் போய்க் கொண்டு இருக்கிறார்கள். பாவ்ம் அந்தப் பிச்சைக்காரரிடம் ஓட்டு இல்லை. ஆமாம், இன்றைய தேதிக்கு ஓட்டு இருந்தால்தான் கடவுளுக்கும் மரியாதை.

0000

காகம் தாகத்தோடு பறந்து அலைந்ததும், ஒரு குடுவையின் கீழ் பாகத்தில் தண்ணீர் இருந்ததையும், கற்களை உள்ளே போட்டு போட்டு தண்ணீரை மேலே கொண்டு வந்ததையும்  சின்ன வயதில் கதைகளில் படித்திருப்போம். தேர்தலுக்குப் பிறகு நமது அரசியல் கட்சிகளின் நிலைமையை விளக்குவதற்காகவே சொல்லப்பட்ட கதையாகத் தெரிகிறது இப்போது. முடிவுகள் தெரியும் முன்பே ‘புத்திசாலி காக்கைகள்’ கற்களைத் தேட ஆரம்பித்து விட்டன. ஆனால் ஜனநாயகத்தில் கற்களும் காக்கைகளாக பரிணாமம் பெற்று பறக்க ஆரம்பிக்கின்றன. அவைகளுக்கும் தாகம் எடுக்கிறது.

0000

சூரியன் உதிக்கும்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்ததாம். “இன்று ஒரு ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்டு விட வேண்டியதுதான்” என்று நினைத்துக் கொண்டதாம். மெல்ல மெல்ல சூரியன் உச்சிக்கு வந்ததாம். நல்ல வெயிலில் களைத்துப் போன நரி இப்போது தன் நிழலைப் பார்த்ததாம். “ஒரு முயல் கிடைத்தால் கூட பரவாயில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டதாம்.

இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, பல அரசியல் கட்சிகளுக்கு இப்போது புரியும்.

 

*

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தீப்பொறித் தெறிப்புகளாக இருக்கின்றனது உங்கள் குறிப்பு புத்தகம் ... ரசித்தேன் ...

    பதிலளிநீக்கு
  2. //ஜனநாயகத்தில் கற்களும் காக்கைகளாக பரிணாமம் பெற்று பறக்க ஆரம்பிக்கின்றன. அவைகளுக்கும் தாகம் எடுக்கிறது//

    சிந்திக்க வைக்கும் சிறப்பான வாக்கியம்..

    பதிலளிநீக்கு
  3. முகமது பாருக்12 மே, 2009 அன்று PM 8:15

    அனைத்து வரிகளும்
    பள்ளிக்கூட பாடத்தில் இருக்க வேண்டிய வரிகள்...அப்பதான் மாணவ பருவத்திலேயே மனிதம் கொண்ட மனிதனாக நல்ல சிந்தனையுடன் வெளிவருவார்கள்.




    தோழமையுடன் தம்பி

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  4. கடைசிக் கதை நச்சுன்னு இருக்கு.
    அனைத்துமே யோசிக்க வைக்கும் பத்திகளாக பதிவிட்டுருக்கீங்க தீ.ப.-4!

    பதிலளிநீக்கு
  5. நந்தா!
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    தீப்பெட்டி!
    நான் மிக கவனமாக எழுதிய வரிகள் அவை.
    புரிதலுக்கு நன்றி.

    தம்பி முகமது பாருக்!
    உண்மைதான். நன்றி.

    ஆ.முத்துராமலிங்கம்!
    மிக்க நன்றி.

    சந்தனமுல்லை!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் மாதவராஜ்

    அருமை அருமை - சிந்தனை அருமை

    தேர்தல் நேரத்தில் கவனம் ஓட்டுள்ளவர்கள் மீத் தான் இருக்கும். அதுதான் யதார்த்த நிலை.

    கற்கள் தாகமெடுத்து காகமாக ஆக வேண்டும். நிச்சயம் ஆகும். கற்களின் உதவியினால் நீரருந்தும் காகங்கள், கற்களே காகங்களாக மாறினால் என்ன ஆகும் ? ஒன்றும் ஆகாது - காகங்களாக மாறிய கற்களுக்கும் கற்கள் கிடைக்கும் அல்லது உருவாக்கப்படும்.

    நரியின் கதை அற்புதம் - இன்றைய தினம் தங்களின் பலம் மற்றும் பலவீனத்தினை உணர ஆரம்பித்து விட்டனர்.

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!