சார்லி சாப்ளினும், ‘நெஞ்சம் மறப்பதில்லை‘ நம்பியார்களும்!

chaplin

 

கர்நாடாகாவில் இந்துத்துவா சக்திகளின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியிருகிறது.

திரைப்பட இயக்குனர்  ஹேமந்த் ஹெக்டே தனது ‘ஹவுஸ்‘ புல் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு சார்லி சாப்ளின் சிலை இருப்பது நன்றக இருக்கும் என நினைத்திருகிறார். முதலில் சிலை வைக்க திட்டமிட்ட இடம் உடுப்பியின் வனப்பகுதி. அங்கு சிலை நிறுவ அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. கடற்கரைப்பகுதியில் சோமசுந்தரேஸ்வரர் கோவிலிலிருந்து முன்னூறு அடிகள் தள்ளி ஒரு இடத்தில் சிலையை நிறுவ படக்குழுவினர் ஆயத்தமாகி இருக்கின்றனர். அப்போது சில இளைஞர்கள் வந்து சார்லி சாப்ளின் சிலையை அங்கு நிறுவக் கூடாது என தடுத்திருகின்றனர். உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்றிருப்பதாக இயக்குனர் ஹெக்டே தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும், சாப்ளின் சிலையை அழித்துவிட வேண்டும் என அந்த இளைஞர்கள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். ‘சார்லி சாப்ளின் உலகப் புகழ்பெற்ற கலைஞர்‘  எனச் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. ‘நாளைக்கு ஏசுவின் சிலையைக் கூட நிறுவ வருவார்கள், கோவிலுக்கு வருகிறவர்கள் இந்த முகத்தைப் பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை‘ என வெறுப்புடன் கத்தியிருக்கின்றனர்.

சார்லி சாப்ளின் என்னும் மகத்தானக் கலைஞனுக்கு மதச்சாயம் பூசி குருரத் திருப்தி அடைந்திருக்கிறார்கள். உலகமே போற்றுகின்ற அற்புதமானக் கலைஞனை அவமானப்படுத்த நினைத்திருக்கிறார்கள். அவர்களின் இந்த செயல் எனக்கொன்றும் ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை. வரலாற்றையும், சார்லி சாப்ளின் வாழ்வையும் புரிந்து கொண்டால், இதெல்லாம் நிகழத்தான் செய்யும் என்றுதான் தோன்றுகிறது.

மனித சமுகம் மீது சாப்ளின் என்னும் கலைஞருக்குள் இருந்த அளப்பரிய காதலை அவருடைய படங்களில பார்க்க முடியும். அறிவுஜிவியாக இருந்து கொண்டு குழந்தைகள் முதல் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது என்பது சாதாரண காரியமல்ல. பேசாமலேயே, சினிமா என்னும் மொழியின் முலம் பேசிட முடிந்தது அவரால். காலங்களைத் தாண்டி, இன்றைய தலைமுறைக்கும் செய்திகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார் அந்த கலைஞர்.

காலச்சக்கரத்தை முன்னுக்கு நகர்த்துகிற யாரையும் மனிதகுல விரோதிகளுக்கு பிடிப்பதில்லை. அதுதான் ஹிட்லரின் ‘கொலை செய்யப்பட வேண்டியவர்களின்‘ பட்டியலில் சாப்ளின் பெயர் இருந்தது. அவர்கள் சாப்ளினை ‘யூதன்‘ என்று அறிவித்தார்கள் அப்போது. இங்கே இந்துத்துவா சக்திகள் சாப்ளினை கிறிஸ்துவர் என்கின்றனர் இப்போது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் பாத்திரம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. காலங்களைத் தாண்டி, தலைமுறைகளைத் தாண்டி வெறுப்புடன் காத்திருக்கும் அந்த உருவத்துக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

ஹிட்லரின் ஆவிகள் விழித்துக் கொண்டிருக்கின்றன.....

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல படைப்பு நண்பரே...
    உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  2. கர்நாடாகாவில் இந்துத்துவா சக்திகளின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியிருகிறது. //

    விட மாட்டானுங்க போல???

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் பாத்திரம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.//

    நெஞ்சம் மறப்பதில்லை பார்க்க வாய்ப்பு கிடைத்தது இல்லைங்க...
    பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
  4. http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_15.html

    வந்து பார்க்க...

    பதிலளிநீக்கு
  5. The fascist forces will not tolerate anything and will not hesitate to annihilate and oppose any democratic forces.Their recent attempt showed their inability and intolerance towards world loving artists like Chaplin---Selvapriyan-chalakudy

    பதிலளிநீக்கு
  6. Please read the news first before jumping into conclusions.Read The Hindu for more information.

    பதிலளிநீக்கு
  7. சார்லி சாப்ளின் என்னும் மகத்தானக் கலைஞனுக்கு மதச்சாயம் பூசி குருரத் திருப்தி அடைந்திருக்கிறார்கள்.

    ரொம்ப கொடுமை சார்...

    எல்லோரும் பிறக்கும் வழி ஒன்று..
    எல்லோரும் இறக்கும் வழி ஒன்று.

    இடையிடையே ஓடும் பயணங்கள்தான் வேறு!!!
    திருப்திகரமான பதிவு... (சின்னதா முடிச்சுட்டீங்க...)

    பதிலளிநீக்கு
  8. இந்த இந்துத்வா அமைப்பினரின் அட்டகாசங்கள் சகிக்க முடியாததாய்த் தான் இருக்கிறது, சமீபமாய் பப் விஷயம், சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்

    //ஹிட்லரின் ஆவிகள் விழித்துக் கொண்டிருக்கின்றன//

    யாருக்கும் புரியாது, புரிந்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் நம்மை கற்காலத்துக்கே இழுத்து செல்லும் மடையர்கள்.

    இவர்களெல்லாம் திருந்தினால் தான் இந்த நாடு முன்னேறும்.

    பதிலளிநீக்கு
  10. வேத்தியன்!
    விமலா வித்யா!
    முரளிக்கண்ணன்!
    ஆதவா!
    யாத்ரா!
    ஜோ!

    அனைவருமே இந்துத்துவா சக்திகளின் ஆபத்தான ஆட்டம் குறித்தும், கவலையும், ஆதங்கமும் தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனானி!

    பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், வலையுலகம் எல்லாவற்றையும் படித்துத்தான் எழுதினேன்.

    பதிலளிநீக்கு
  12. என்ன சார் நல்லபடியா ஊருக்கு போய் சேர்ந்து வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா..?

    பதிலளிநீக்கு
  13. கேபிள் சங்கர்!

    கொல்கத்தா வந்தாச்சு. பதிவும் போட்டாச்சு. உங்களியெல்லாம் அன்று சந்தித்தது ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  14. இரு தேசியக் கட்சிகளின் நிலையும் பயத்தை ஏற்படுத்துகின்றன...

    அடிப்படை உரிமைகள், சமுதாய முன்னேற்றம் இவற்றையெல்லாம் தாண்டி, மதம், இனம் என்று குறுகிய கண்ணோட்டத்திலேயே இந்த இளைஞர்களை சிந்திக்க வக்கிறார்கள். இவர்களின் சூழ்ச்சிக்கு, பெரும்பாலும், ஊர்களில் உள்ள ஓரளவு படிக்காத, வேலை அதிகம் செய்யாத இளைஞர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள்.

    ஒன்னும் சொல்றதுக்கில்லை, நாடு போற போக்கைப் பாத்தா...

    பதிலளிநீக்கு
  15. நரேஷ்!
    //இரு தேசியக் கட்சிகளின் நிலையும் பயத்தை ஏற்படுத்துகின்றன...//

    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!