முட்டையாபிஷேகம்!

throw

அழுகிப்போன ஒருவன் மீது வீசப்பட்டதால்
அழகிய முட்டை அழுகிய முட்டையானது!

சில நேரங்களில் காலையில் கேட்கும்  பாட்டு ஒருநாள் முழுவதும்  மனசில் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதென்ன சம்பந்தமில்லாமல் என நினைக்கத் தோன்றும். அதுபோலத்தான் இதுவும் எனக்கு நேருகிறது. எதாவது மனதிற்குள் ஒடினால் இப்படி எதாவது கிடைத்த தாள்களில் எழுதிக்கொண்டே இருப்பேன். நேற்று காலையில் எழுதியது இது.

________________________________________________________________

சாமிக்கு
இப்போது முட்டையாபிஷேகம்!
கோழிகள் ஒன்றும்
சும்மா அடைகாக்கவில்லை.

மதியம் சாப்பிடும்போது, வங்கியில், பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் டிபன் பாக்ஸில் முட்டையைப் பார்த்ததும் இப்படித் தோன்றியது. உணவருந்திய பிறகு இப்படி எழுதி வைத்தேன்.

________________________________________________________________

அங்கே அவன் மீது செருப்பு
இங்கே இவன் மீது முட்டை
மனம் எரிந்த  காட்சிகளை அடுத்து
மக்கள் எறியும் காட்சிகள் இப்போது

சுய உதவிக்குழுக்களின் பெண்கள் சிலர் வங்கிக்குள் நுழையும்போது வெளியே செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வருவார்கள். “சும்மா செருப்பை மாட்டிக் கொண்டு உள்ளே வாங்க..” என்றேன். தயக்கத்துடன், கால் கூச செருப்பணிந்து உள்ளே நுழைந்தார்கள். அப்போது பேனாவை எடுத்து எழுதியவை இவை.

________________________________________________________________

ஏழு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தவனை “என்னங்க.. ஒரே ஜாலி மூடில் இருக்குற மாதிரி இருக்கீங்க... டீ.வி பாத்திங்களா” என்றாள் மனைவி.
பார்த்தேன்.

முதலில் எறிவதும்
பிறகு எரிந்ததும் வந்தன.
காட்சிகள் மாறி இருந்தன.

இப்படி எழுதியதோடு
நேற்று முடிவுக்கு வந்தது.

 

*

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நேத்திக்கு சாயங்காலத்தில இருந்து டிவிக்கள்ல இதுதான் இப்போ ஹாட் நியூஸ்.



    முட்டை வீச்சு வாங்கினவர் இன்னும் வாய் திறக்கலை.... ஆனால் இது பெரிய பிரச்சனையை உண்டு பண்ணும்னு நினைக்கிறேன்.



    அது இருக்கட்டும்!!!



    முட்டைக்கெல்லாம் எப்படிங்க கவிதை எழுதறீங்க!!!! என்னவோ போங்க!!!!!

    பதிலளிநீக்கு
  2. அழுகிப்போன ஒருவன் மீது வீசப்பட்டதால்
    அழகிய முட்டை அழுகிய முட்டையானது!


    உண்மைதாங்க,....

    பதிலளிநீக்கு
  3. நம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள்தான் கவிதைகள் எழுத தூண்டுகோலாக இருக்கின்றன.... அதை விவரித்தும் நீங்கள் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
  4. எனக்கென்னவோ அழுகிய முட்டை அழகான மாதிரி தெரிஞ்சுது :)

    அழுகிப் போனவர்கள்மீது எறிய அழுகிய முட்டையே சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  5. இந்த ஆளு மேல வீசுவதற்கா நான் சிரமப் பட்டு முட்டையிட்டேன் எனக் கோழி புலம்புவது கேக்கலையா?

    பதிலளிநீக்கு
  6. \\அழுகிப் போனவர்கள்மீது எறிய அழுகிய முட்டையே சாலச் சிறந்தது.
    \\

    \\இந்த ஆளு மேல வீசுவதற்கா நான் சிரமப் பட்டு முட்டையிட்டேன் எனக் கோழி புலம்புவது கேக்கலையா?

    \\

    :-))))))))))))))

    பதிலளிநீக்கு
  7. முட்டைக்கு வந்த சோதனை!!!!!

    கோழிகள் தீக்குளிக்கும்!!!!!!!!

    அருமையனா பதிவு.

    பதிலளிநீக்கு
  8. முட்டைக்கு வந்த சோதனை!!!!!

    கோழிகள் தீக்குளிக்கும்!!!!!!!!

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  9. வித்யாசமான அரசியல் கட்டுரை!!

    சாமி எஸ்கேப் ஆயிட்டார். உடைபட்டது சில முட்டைகளும் பல மண்டைகளும்தான். :(

    பதிலளிநீக்கு
  10. //அங்கே அவன் மீது செருப்பு
    இங்கே இவன் மீது முட்டை
    மனம் எரிந்த காட்சிகளை அடுத்து
    மக்கள் எறியும் காட்சிகள்//

    அன்று அவன் எறிந்த தடைகள் கண்டு மனம் நொந்த நாங்கள்,இன்று இவர்கள் எறிந்ததை கண்டு மனம் மகிழ்ந்தோம்

    பதிலளிநீக்கு
  11. ஆதவா!

    இந்த முட்டைக்கு எழுதாமல் எந்த முட்டைக்கு எழுத? பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஜ்யோவ்ராம் சுந்தர்!

    தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். அழகு. இப்படி யோசிக்காமல் போய்விட்டேனே! ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வடகரைவேலன்!

    ஆமாம்.கோழியின் புலம்பல் கேட்கிறது.
    நன்றி கவனிக்கச் சொன்னதற்கு.

    முரளிக்கண்ணன்!

    உங்களோடு நானும் :-))))))))))))))

    பதிலளிநீக்கு
  14. பொன்ராஜ்!

    கோழிகள் ஏன் தீக்குளிக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  15. Karthikeyan G !

    நீங்களும், நானும் ஒரு போலீஸ்காரரும் இல்லாமல் நாம் விரும்புகிற இடத்துக்கு போய் வர முடியும். இதுதான் விடுதலை!

    பதிலளிநீக்கு
  16. சொல்லரசன்!

    உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. HS!

    வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. Hallo Sir ! I know and agree that Dr.?.Subramania Swamy a is number one Political broker and agent of many abroad connections.i totally disagree with his all ways and speeches.He is receiving top level security from govt.
    but i disagree with the incidents of ''EGG ACTION''on that broker.The comparison of SHOE>>>BUSH AND SUBRAMANIA SWAMY>>> EGG is not correct.The world datha US's aggression on other countries are numerous.This fellow should be tackled politically.The people should isolate and ignore this fellow.At the place of court such incidents should not be held.
    It is wrong.Such unilateral actions will create actions and reactions.It will leads to unhealthy deeds..The available democracy shall be utilized to do propagate against his political agendas.Attacks on individuals will lead to anarchy.Such actions shall not be encouraged.The persons who lost hope and faith in his deeds will do such actions.He must be vociferously defeated politically and socially.But, the incidents will certainly have a impact on that "political broker".
    I am not happy with your poem sir ---selvapriyan

    பதிலளிநீக்கு
  19. அந்த முட்டைகள் தாங்கள் இவ்வளவு கேவலப்படுத்தப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டா:) அவற்றை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் மன முட்டை உடைத்த ஒரு நாளின் முழுமையான சிந்தனை.அருமை.

    பதிலளிநீக்கு
  21. விமலாவித்யா!

    எனக்குள் ஓடிய சிந்தனைகளை சொல்லியிருக்கிறேன். அவரையும், இவரையும் ஒரே தட்டில் நான் வைத்தெல்லாம் பார்க்கவில்லை. மனிதகுல விரோதியாய் இருந்தாலும், தரகனாய் இருந்தாலும் சரி, மக்களின் வெறுப்பு என்பது எதாவது வடிவத்தில் உடைகிறது. இந்தச் செய்கைகள் இவனை தனிமைப்படுத்தத்தான் செய்திருக்கின்றன். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்தான் தவறு. அடித்து விரட்டினால், தனிமைப்படுத்துவதுதானே! தீட்சிதப் புடலங்காய்கள் வேண்டுமானால் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொள்ளட்டும். அப்புறம்... சட்டம், ஒழுங்கு அதன் பின்விளைவுகள் குறித்தெல்லாம் எந்த புனிதமான மயக்கங்களும் எனக்கு இல்லை. எல்லாக் காலங்களிலும் வழமையாகிப் போன முறைகளிலேயே நமது கோபத்தை காண்பித்துக் கொண்டிருக்க முடியாது. மௌனமாய், மொண்ணையாய் இருப்பதைக் காட்டிலும், இப்படிக் கோபங்கள் வெளிப்படுவது சரியென்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. தமிழ்நதி!

    ஆமாம்... ஆமாம். முட்டைக்கு கேவலம்தான்.

    பதிலளிநீக்கு
  23. ஹேமா!

    மனதுக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. முட்டைக்கு கேவலம்!!!

    கோழிகள் புலம்புவது கேக்கலையா?

    அதனால்தான்...

    கோழிகள் தீக்குளிக்கும்!!!!!!!!

    தோழரே!!!!!!!!

    பதிலளிநீக்கு
  25. //அழுகிப்போன ஒருவன் மீது வீசப்பட்டதால்
    அழகிய முட்டை அழுகிய முட்டையானது! //

    அழகான,அருமையான, நிதர்சனமான வரிகள்..!

    பதிலளிநீக்கு
  26. இப்படித்தான் நானும் வரிகளை முன்ன பின்ன போட்டு 'கவுஜன்' ஆனேன். அப்பவே யாராவது கண்டிச்சிருந்தா கவிதையாவது பிழைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. பொன்ராஜ்!

    யார் தீக்குளிப்பதிலும் சம்மதமில்லை தோழரே!

    பதிலளிநீக்கு
  28. ரிஷான் ஷெரிப்!

    ஜ்யோவ்ராம்சுந்தர் சொன்னதையும் சேர்த்துப் படிக்கலாமே.

    பதிலளிநீக்கு
  29. செல்வேந்திரன்!

    முதலில் கவுஜன் என்றால் என்ன?
    அதைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  30. எனக்கும் இருக்கிறது இப்படியான தொரு பழக்கம்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!