‘பிங்க் ஜட்டி’ - ஒரு கலகக் குரல்!

pink chaddi

 

இந்த காதலர் தினம் ராம் சேனா தலைவர் முதாலிக்கு மறக்க முடியாததாய் இருக்கப் போகிறது. தேச எல்லைகளைக் கடந்து அவருக்கு பரிசுகள் வந்து குவிய இருக்கின்றன. அந்தப் பரிசு என்னவென்று அவருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும். பி.பி.சி வரை செய்திகள் வாசிக்கப்படுகின்றன. காதலர் தினம் என்பது valentine day  அல்ல, violent dayவாக அனுஷ்டிக்கப் போகிறோம் என்கின்றன இந்துத்துவ அமைப்புகள். எப்படியோ, இந்த தேசத்தில் கொண்டாடப்படும் விழா நாட்களையெல்லாம் பதற்றம் நிறைந்ததாக மாற்றிய பெருமை காவிக்கேச் சேரும்.

மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கிய ராம்சேனாவின் நடவடிக்கையை கண்டித்து, எதிர்நடவடிக்கையை சில பெண்கள் அமைப்புகள் தொடங்கியிருக்கின்றன. “இந்த பிங்க் நிற ஜட்டியை நீங்கள் அனுப்புவது என்பது ஒரேமாதிரியான, ஒரு சிறிய எதிர்ப்புக்கு நீங்கள் தயாராகிறீர்கள்”  என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த முகவரிக்கு ஜட்டிகள் அனுப்ப வேண்டும் என்றும், எந்தெந்த இடங்களில் அவை சேகரிக்கப்படும் என்பதையெல்லாம் http://thepinkchaddicampaign.blogspot.com/ விரிவாகச் சொல்கிறது. ஆங்கில வலைப்பக்கங்களில் இந்த ‘பிங்க் ஜட்டி இயக்கம்’ குறித்து பெரும் உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. “கலாச்சார சீரழிவுக்கு வக்காலத்தா..”, “அந்நியநாடுகளின் திட்டமிட்ட கலாச்சார ஊடுருவல்”, “இந்துத்துவாவின் கலாச்சார அடாவடித்தனத்திற்கு தக்க பதிலடி”, “பெண்கள் விழிப்பு பெறுகின்றனர், எதிர்க்க முனைகின்றனர்” என்றெல்லாம் வாதிப் பிரதிவாதங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன.

பப் என்பது இந்த தேசத்தில் சமீப காலங்களில், குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகு மிக வேகமாக பரவிய நகர்ப்புற, மேல்தட்டு கலாச்சார வியாதி. அதை பெண்ணின் சுதந்திரமாகவோ, நாகரீகத்தின் வளர்ச்சியாகவோ புரிந்துகொள்ள முடியாது. சதா நேரமும் இனக்கவர்ச்சி உறுப்புக்கள் மீது காமிராக்கள்  மேய்ந்து மேய்ந்து, ஆணின் சுவைக்கும், ரசனைக்கும் உரியவள் மட்டுமே பெண் என்று நிலைநாட்டப்பட்டிருக்கிற, பிம்பங்களின் சுவீகரிப்பாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். மீறலாகவும் இருக்காது. சுதந்திரமாகவும் இருக்காது. அதுதான் நமது ஊடகங்கள் இந்த பிங்க் ஜட்டி விவகாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்குகின்றனர். வாச்சாத்தி கொடுமைகள் நடந்த போது இந்த சிகாமணிகள் எங்கே போயிருந்தனர். கயர்லாஞ்சியை யார் வெளிக்கொண்டு வந்தது?

இந்துத்துவா சக்திகள் பெண்களின் ஒழுக்கம், கலாச்சாரம், கடந்தகால மகிமை என்று வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டு இந்த பப்களை எதிர்க்கின்றன. காதலர் தினக் கொண்டாட்டங்களை மூர்க்கத்தனத்தோடு தடுக்கின்றன. கலாச்சாரம் என்பது இன்று சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும், அதிகாரத்தை எதிர்க்கும் தளமாகவும் இருக்கிறது. மேலாதிக்கத்தை செலுத்தும் கருவியாகவும், எதிர்க்கும் கருவியாகவும் இருக்கிறது. இந்துத்துவா அமைப்புகள் மேலாதிக்கத்தை செலுத்த விழைகின்றன. அவர்கள் கடந்தகால இருட்டை எதிர்காலத்திலும் நிரப்பத் துடிப்பவர்கள். பெண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குரல்.

சிலர் பி.ஜே.பிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். ஆனால் கர்நாடாகாவில் பி.ஜே.பி அரசு அமைந்த பிறகே இது போன்ற கலாச்சாரக் குண்டர்களின் அத்துமீறல்களும், ஆக்கிரமிப்பும் அதிகமாயிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அக்கட்சியின் பெண்கள் அமைப்பான மகிள் மோர்ச்சா இப்படித்தான் சொல்கிறது:

“மதிப்பீடுகளில் அடிப்படை மாற்றங்கள் தேவையில்லை. வீட்டுக்குள்ளும், சமூகத்திலும் இந்தியப் பெண்களுக்கு எப்போதும் கவுரவமான இடம் இருந்து வந்திருக்கிறது. அதை மறு உறுதி செய்து, மறுபடி நிறுவினால் போதுமானது”

பெண்கள் கட்டுப்பெட்டியாய், அடங்கி, வெளியுலகம் அறியாத கிணற்றுத் தவளையாய் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் உள்ளார்ந்த பொருள். “பெண்கள் வெளியே வேலைக்குச் செல்லத் தேவையில்லை.... குங்குமம் மடிப்பது, அப்பளம் சுடுவது போன்ற காரியங்களை செய்யலாம்” என்று நமது காஞ்சிச் சங்கராச்சாரியார் சொல்லவில்லையா? அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் குஷ்பு கற்பு குறித்து சொன்ன கருத்துக்காக பொங்கி எழுந்ததையும் தமிழகம் பார்த்தது.

பல மட்டங்களில், பல வடிவங்களில் இந்தக் கணம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதற்கு உடன்பட்டும் அல்லது எதிர்ப்பற்றும் நம் சாமானிய, எளிய பெண்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவை குக்கரின் விசில் சத்தங்களாய் சமையலறையிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்களால் ஒன்று திரளவும், பேசிடவும் முடியவில்லை. ஆனால் பப் போன்ற விஷயங்களுக்கு அதிவேகமாக எதிர்வினைகள் ஆற்றப்படுவது கவனிக்கத் தக்கது.

“டெல்லியில் இருக்கும் சில பெண்கள் ராம்சேனாவுக்கு பதிலடி கொடுக்க எடுத்திருக்கும் முடிவு இது” என்றும் இதன் அறைகூவலில் தனக்கு கருத்து முரண்பாடுகள் இருப்பதைச் சொல்கிறார்  சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.  மதப் பழமை வாதத்தையும், பாசிசத்தையும் கடுமையாகச் சாடுகிற அவர், ஜட்டிதான் பெண்களின் எதிர்ப்பின் அடையாளமா என்றும் அந்த மடையர்கள் தூக்கில் தொங்க கயிறு அனுப்பலாமே என்றும் சொல்கிறார். “பெண்களே யோசியுங்கள்.... உங்கள் அழகான, மதிப்புமிக்க ஜட்டிகளுக்கு எந்தவிதத்தில் அவர்கள் ஈடாவார்கள்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.

பப் போன்ற கலாச்சாரத்தை ஆதரிக்காத போதும், அதை எதிர்த்து ராம்சேனா நடத்திய, பெண்கள் மீதான வன்செயல்களை கடுமையாக பலரும் கண்டித்து இருக்கின்றனர். இங்கே, தீபா தனது வலைப்பக்கத்தில் மிகச் சுருக்கமான, அழுத்தமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த பிங்க் ஜட்டி, பப் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது என்ற கவலையும் ஒருபுறம் இருக்கிறது.

ஆனால், சமூகத்தில் ராம்சேனைக்கு எதிர்வினைகள் உரக்க எழும்பி இருக்கின்றன. அது கலாச்சாரம் குறித்த கேள்விகளையும் உள்ளடக்கிய உரையாடல்களாய் வெளிவருகின்றன.

அந்த அளவில் ‘பிங்க் ஜட்டி’  ஒரு கலகக்குரலே!

கலகம் பிறக்கட்டும். நியாயம் பிறக்கும்.

 

*

கருத்துகள்

47 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்னிடம் பிங்க் ஜட்டி இல்லை. ஆனால் நாளைக்குள் வாங்கி, நாளை மறுநாள் போட்டு 14ம்தேதி அனுப்ப விழைகிறேன்.

    கலாச்சாரக் காவலர்கள் என்று இவர்களின் கூத்து தாங்க முடியவில்லை ஸ்வாமி!

    பதிலளிநீக்கு
  2. கேட்க மறந்துட்டேன். பெண்கள் மட்டும்தான் அனுப்பணுமா?

    (என்னங்க இந்தப் பதிவு ரெண்டு தபா தெரியுது?)

    பதிலளிநீக்கு
  3. ஏற்கனவே பார்த்த தலைப்பா இருக்கே

    மீண்டும் போட்டியளோ

    பதிலளிநீக்கு
  4. நண்பர்களே!

    மன்னிக்கவும் windows live writerlல் பிரச்சினை. இரண்டு தடவை பதிவு செய்து விட்டேன். இப்போது ஒன்றை எடுத்துவிட்டேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  5. //
    மன்னிக்கவும் windows live writerlல் பிரச்சினை. இரண்டு தடவை பதிவு செய்து விட்டேன். இப்போது ஒன்றை எடுத்துவிட்டேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.//


    நீங்கள் தமிழிஷில் இணைத்ததை எடுத்திருக்கிறீர்கள். அதிலிருந்து வந்தால் த பேஜ் டஸ் நாட் எக்ஸிஸ்ட் என்று வருகிறது, மறுபடி இதை தமிழிஷில் இணைக்கவும்!

    பதிலளிநீக்கு
  6. கொழுப்பில் Pub ல் குடித்து விட்டு கண்டவனுடனுடன் படுத்து எழுந்து பெற்றோருக்கு துரோகம் செய்யும் இது போன்ற நவ நாகரிகம் என்ற போர்வையில் உலவும் நங்கைகளை நம் அக்கா தங்கை என்றால் பொறுப்போமா. யோசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  7. எதிர்பில் புதுமையான வழி..

    நம்மளும் ராஜேபக்சேக்கு அல்லாது இங்குள்ள இலங்கை தூதருக்கு வாய்கரிசி அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  8. இது பெண்கள் மட்டும் எதிர்ப்பு காட்ட வேண்டிய விஷயமல்ல. ஆண்களும் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இப்போது குரல் எழுப்பாவிட்டால் அடுத்து பெண்கள் ஜீன்ஸ்,மிடி போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்று சொல்வார்கள். பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை கெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  9. முற்போக்காளர் என்ற முகமூடி மாட்டிக்கொண்டு புரட்சிகர கருத்துக்களை அள்ளிவிடும் அன்பர்கள் தன் அக்கா மற்றும் தங்கைகளை Pub ல் சென்று குடித்துவிட்டு அப்படியே டிஸ்கோதே சென்று ஆடிவிட்டு காதலர் தினத்தன்று பார்க்கில் தன் காதலனுடன் கடலை (கை) போட அனுப்பிவிட்டு அப்புறம் அவர்களை விட்டு இந்த பிங்க் ஜட்டியை ஸ்ரீ ராம் சேனா தலைவருக்கு அனுப்ப சொல்வாரா.

    இதற்க்கு எத்தனை பேர் ரெடி.

    பதிலளிநீக்கு
  10. பப் கலாச்சாரத்தை எதிர்ப்பது என்றால், ஆண் பெண் வித்தியாசம் எதற்கு? இவர்களது குறிக்கோள் பெண்களை அடக்கி வைப்பதே. அதற்கு துணையாயிருக்கும் பட்சத்தில் நாம் இதை ஆதரிக்க வேண்டியதே.

    இங்கேயும் பாருங்கள் பாமக போன்ற கட்சிகள் காதலர் தினத்தன்று செய்யப் போகும் அக்கிரமங்களை!

    பதிலளிநீக்கு
  11. \\இது பெண்கள் மட்டும் எதிர்ப்பு காட்ட வேண்டிய விஷயமல்ல. ஆண்களும் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இப்போது குரல் எழுப்பாவிட்டால் அடுத்து பெண்கள் ஜீன்ஸ்,மிடி போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்று சொல்வார்கள். பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை கெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.//

    இது போன்று வெளியில் கருத்து தெரிவித்து நானும் முற்போக்காளர் என்று காமிச்சிக்கலாம். ஆனால் அவரவர் வீட்டு பெண்களை இப்படி ஜீஅன்ஸ் மற்றும் மிடி போன்ற அரைகுறை ஆடையுடன் பொது இடத்தில் உலவ அனுமதிப்போமா.

    பதிலளிநீக்கு
  12. பரிசல்காரன்!
    //ஆனால் நாளைக்குள் வாங்கி, நாளை மறுநாள் போட்டு 14ம்தேதி அனுப்ப விழைகிறேன்//

    படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது....

    பதிலளிநீக்கு
  13. நட்புடன் ஜமால்!

    மேட்டரு புரிஞ்சுட்டா?

    பதிலளிநீக்கு
  14. ananymous!

    கொஞ்சம் நிதானமாகப் பேசலாமே! முதலில் பப் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கவில்லை.
    இரண்டாவது கலாச்சாரம் என்பது தனிமனிதர்களால் உருவாக்கப்படுவதில்லைம; அழிக்கப்படுவதுமில்லை.

    சமூகச்சூழல்கள் இதில் முக்கியமானவை.

    அமைப்பும், ஊடகங்களும் பெரும்பணியாற்றுகின்றன.

    வெளிநாட்டுக் கம்பெனிகளும், அந்தப் பணித் த்ன்மைகளும் இங்கு பெரும் மயக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

    இவையெல்லாவற்றுக்கும் எதிரான கருத்துப் பிரச்சாரம் நடத்த வேண்டும். அதை விட்டு விட்டு
    வன்செயல்களில் ஈடுபடுவது பாசிசம். கலாச்சாரத்தை யாரும் காவல் இருந்து காப்பாற்ற முடியாது...

    அது யாராயிருந்தாலும்....

    பதிலளிநீக்கு
  15. //நம்மளும் ராஜேபக்சேக்கு அல்லாது இங்குள்ள இலங்கை தூதருக்கு வாய்கரிசி அனுப்பலாம்.//

    ம்... பிங்க் ஜட்டி யோசிக்க வைத்திருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  16. முரளிக்கண்ணன்!

    ஆம்... இது அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  17. விவேக்!

    .... தங்கள் அக்கா, தங்கை என்றால் . ஆடைகளைக் களைந்து ராம் சேனை குண்டர்கள் தாக்கியிருப்பார்களா?

    பதிலளிநீக்கு
  18. ஆண்களுக்கு என்று வழங்கப்படும் எல்லா சுதந்திரமும் பெண்களுக்கு வழங்கப்படவேண்டும்
    பெண்களுக்கு என்று வழங்கப்படும் எல்லா ஒழுக்கவிதிகளும் ஆண்களுக்கு வழங்கப்படவேண்டும்.

    ராம்சேனைக்கு இந்திய காலாச்சார பாலியில் வக்கிர வால்மிகி ராமாயணத்தை அனுப்பினாலே போதும்

    பதிலளிநீக்கு
  19. பிரமோத் முத்தளிக்கு,

    வெறும் ஜட்டி மாத்திரம் அனுப்ப வேண்டாம் , கொஞ்சம் ஜாம்முடன் ! சேர்த்து அனுப்பிவையுங்கள்,

    அப்பொழுதாவது திருந்துமா ? இந்த "கொரங்கு சேனா" ?

    பதிலளிநீக்கு
  20. \\ராம்சேனைக்கு இந்திய காலாச்சார பாலியில் வக்கிர வால்மிகி ராமாயணத்தை அனுப்பினாலே போதும்//

    இந்த அற்புத சிபாரிசை செய்த விடுதலைக்கு உளுத்துப்போன செத்த பிணமாகிய கம்மிநிச மார்க்சிச Dass Kapital மற்றும் மாவோ சிந்தனைகள் அடங்கிய புத்தகம் அன்பளிப்பாக அளிக்க சிபாரிசு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. It is not Ram sena.It is Vakra sena.

    பதிலளிநீக்கு
  22. விவேக்
    //கம்மிநிச மார்க்சிச Dass Kapital மற்றும் மாவோ சிந்தனைகள் அடங்கிய புத்தகம் அன்பளிப்பாக அளிக்க சிபாரிசு செய்கிறேன்.//

    நல்லது அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அந்த தத்துவங்கள்தான் உங்கள் கடவுள்களுக்கு சாமாதி செய்துகொண்டுயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. முதலில் இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது, கலாச்சாரக் காவலர்களாக. இதை யார் அறுதியி்டுவது. தடியெடுத்தவன் தண்டல் காரன் கதையாகிவிட்டது. இவர்களெல்லாம் மும்பைத் துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில தங்கள் தாய் மடியில் படுத்து பாலருந்திக் கொண்டிருந்தனரா?

    வெள்ளைக்காரன் தந்த பேண்டும் சட்டையும் அணிந்து கலாச்சாரத்தை காக்கும் இவரகளிடமிருந்துதான் உண்மையில் கலாச்சாரத்தை நாம் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

    தமிழ்குடி ராமதாசுவும் இதற்குச் சற்றும் குறைந்தவரல்லர்.

    பதிலளிநீக்கு
  24. சூப்பர். இவர்களின் நோக்கம், 'பெண்கள் பப்புக்கு போகக் கூடாது, பெண்கள் காதலிக்கக் கூடாது, பெண்கள் பூங்காவிற்குப் போகக் கூடாது'.

    இப்பொழுது புதிதாக, பெண்கள் எந்தப் படத்திற்குப் போகலாம், போகக் கூடாதுன்னெல்லாம் எக்கச்சக்க ஆலோசனைகள்.

    //மதப் பழமை வாதத்தையும், பாசிசத்தையும் கடுமையாகச் சாடுகிற அவர், ஜட்டிதான் பெண்களின் எதிர்ப்பின் அடையாளமா என்றும் அந்த மடையர்கள் தூக்கில் தொங்க கயிறு அனுப்பலாமே என்றும் சொல்கிறார். “பெண்களே யோசியுங்கள்.... உங்கள் அழகான, மதிப்புமிக்க ஜட்டிகளுக்கு எந்தவிதத்தில் அவர்கள் ஈடாவார்கள்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.//

    சூப்பர்.

    பதிலளிநீக்கு
  25. \\நல்லது அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அந்த தத்துவங்கள்தான் உங்கள் கடவுள்களுக்கு சாமாதி செய்துகொண்டுயிருக்கிறது.//

    அந்த கடவுள்கள் தான் உங்கள் செல்லரித்து புழுத்துப்போன உங்கள் கம்மிநிச பிணத்தை அதன் பிறப்பிடதிலேயே (ரஷ்ய) புதைகுழிக்கு அனுப்பி ரஷ்யாவை விடுவித்தனர்.

    முதலில் தற்காலத்துக்கு தகுந்த மாதிரி அரசியல் பொருளாதார கொள்கைகளை வகுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு போகுமிடமெல்லாம் நந்திகிராமம் தான்.

    மேலும் இதில் காமெடி என்னெவென்றால் வழக்கொழிந்த மன்னாகிவிட்ட உங்கள் புடலங்காய் தத்துவத்தை பல கோஷ்டிகள் (ம க இ க, பு.ஜா, ) வேற்று உடான்ஸ் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. விடுதலை!

    இந்த சேனைகள் படுத்தும் பாடு... தாங்க முடியவில்லைதான். கலாச்சாரத்திற்கு தாங்கள்தான் authority என்று அட்டகாசம் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  27. வடகரைவேலன்!

    //இவர்களெல்லாம் மும்பைத் துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில தங்கள் தாய் மடியில் படுத்து பாலருந்திக் கொண்டிருந்தனரா?//


    தங்கள் கோபம் உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பெண்கள் மீது இத்தனை வக்கிரத்தையும் வன்மத்தையும் காண்பித்து இருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  28. உலகமயத்தின் விளைவுதான் இது போன்ற காதலர் தினகொண்டாட்டமும்,உலக அழகி போட்டிகளும்.pub,டிஸ்கொத்தே கலாச்சாரம் ஐடி துறையினராலும் BPO க்கலாலும் கொண்டுவரப்பட்டவை.
    இதை நாட்டில் அனுமதிக்கலாமா கூடாதா என்பதை அரசு/பாராளுமன்றம் தீர்மானிக்கவேண்டும். இதனால் நமது கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதென்றால் ஜனனாயக ரீதியில் அதை எதிர்க்க வேண்டும்,ராமசேனாக்களுக்கு தடிகொண்டு தாக்க யாரும் அதிகாரம் அளிக்கவில்லை. நகரங்களில் செயல்படுகிற பெரிய ஹோட்டல்களில் செயல்படும் அந்த பார்களால் நமது கலாச்சாரம் பாதிக்கவில்லையா?
    காவிகளின் அடுத்த சோதனைகளமாக கர்னாடகம் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    பதிலளிநீக்கு
  29. rapp!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. சோமசுந்தரம்!

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். முன்கூட்டியே சுதாரித்துக் கொள்வது, பெரும் சேதங்களிலிருந்து தேசத்தைக் காப்பாற்றும்.

    பதிலளிநீக்கு
  31. காதலர்தினத்தை தடுப்பவர்களுக்கு காதல்பாடம் நடத்துவோம்


    காதலுக்கும், இந்திய, தமிழக காலாச்சாரத்திற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு காதலை, கொண்டாடுவதும், காதலர்களை வாழ்த்தி அவர்களுக்கு என்று பல விழாக்களை நடத்திய பண்பாடு கொண்ட நமது தமிழகத்தில் பார்ப்பணர்கள் பணடாரா பரதேசிகள், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னனி தெருநாய்கள் இங்கே குலைத்துக்கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது. இப்போதும் வெளிப்படையாக பேச முடியாத அளவிற்கு பாலியல் வக்கிர புத்தி கொண்ட கடவுள்களை கொண்டாடும் பண்டாரங்கள். தமிழகமக்கள் மீது தினித்த புரணாங்களை மீண்டும் ஒருமுறை படித்து விட்டு வரவேண்டும்.

    ஒவ்வொருஆண்டும் பிப்ரவரி 14 ஆம் நாள் வரும்போது, ஒரு விவாதம் வருகிறது. இப்போது அது மெல்ல மெல்ல முற்றி மிகபெரிய அரசியல் நடவடிக்கையாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

    காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள், இது பண்பாட்டுச் சீரழிவு என்றும், மேலைநாட்டு இறக்குமதி என்றும், வணிக உத்தி என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறுகின்றனர்.
    'வாலன்டைன் டே' என்னும் பெயர் வேண்டுமானால் இறக்குமதியாக இருக்கலாம்.
    காதல் இறக்குமதி அன்று. அது நம்பழந்தமிழ்ப் பண்பாடு.

    இந்துத்துவவாதிகள் அந்நாளை எதிர்ப்பதற்கு, மறைக்கப்பட்ட காரணம் ஒன்று
    உண்டு. காதல் எப்போதும் சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆதலால்,காதலை
    அனைவரும் ஏற்றுக் கொண்டால், சாதிய இறுக்கம் உடைந்து போகும். சாதிய
    இறுக்கம் இல்லையெனில், இந்துமதத்தின் வருணாசிரமத்தை எவராலும் காப்பாற்ற
    முடியாது ? இதுதான் உண்மையான காரணம். இதனை மறைத்துக் கொண்டு, பண்பாடு
    காப்பதாய் இங்கு ஒரு பாசாங்கு நடக்கிறது.

    சாதி மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
  32. //கொழுப்பில் Pub ல் குடித்து விட்டு "கண்டவனுடனுடன்" படுத்து எழுந்து பெற்றோருக்கு துரோகம் செய்யும் இது போன்ற நவ நாகரிகம் என்ற போர்வையில் உலவும் நங்கைகளை நம் அக்கா தங்கை என்றால் பொறுப்போமா. யோசிக்கவும்.//

    Anonymous!
    பொறுக்க வேண்டாம் பொங்கி எழுங்கள்!
    அந்த‌ க‌ண்ட‌வ‌ன் நமது அண்ண‌னாக‌வோ த‌ம்பியாக‌வோ இருந்தால் கூட.
    பெண்க‌ளை ம‌ட்டும் க‌லாசார‌க் காவ‌ல‌ர்க‌ளாக்கி அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் காவ‌ல் இருந்த‌து போதும்.
    மேலை நாடுகளில் ப‌ப் க‌லாசாரமும் பார்ட்டிக் கலாசாரமும் இய‌ல்பான‌து. அங்கு ஒரு கூலித் தொழிலாளிப் பெண்கள் கூட‌ விரும்பினால் பாருக்குச் சென்று அமைதியாக‌ அல்ல‌து ஆட்ட‌ம் போட்டுக் கொண்டு குடிக்க‌லாம்.
    இங்கு ஆண்களுக்கு ம‌ட்டும் என்று இருந்து வ‌ந்த‌ சீர‌ழிவு, இப்போது அவ‌ர்க‌ளின் பொழுது போக்குக்காக, வியாபார நோக்கத்துக்காக பெண்க‌ளையும் இழுக்க‌த் தொட‌ங்கி உள்ள‌து.
    இதை எதிர்ப்ப‌தென்றால் மொத்த‌மாக‌ இதை ந‌ட‌த்தும் நிறுவ‌ன‌ங்க‌ளையும் அத‌ற்கு உரிம‌ம் வழ‌ங்கிய‌ அர‌சையும் எதிர்க்க‌ வேண்டும்.

    அதை எல்லாம் விட்டு விட்டுப் பெண்க‌ளிட‌ம் வீர‌த்தைக்காட்ட‌ வ‌ந்த‌ பேடிக‌ளுக்கு வ‌க்கால‌த்து யார் வாங்கினாலும் அவ‌ர்க‌ளும் கேடு கெட்ட‌ பேடிக‌ள் தாம்.

    பதிலளிநீக்கு
  33. விடுதலை!
    //'வாலன்டைன் டே' என்னும் பெயர் வேண்டுமானால் இறக்குமதியாக இருக்கலாம்.
    காதல் இறக்குமதி அன்று. அது நம்பழந்தமிழ்ப் பண்பாடு.//

    //சாதி மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடுவோம்.//

    பிரமாதம். கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
  34. தீபா!
    //மேலை நாடுகளில் ப‌ப் க‌லாசாரமும் பார்ட்டிக் கலாசாரமும் இய‌ல்பான‌து. அங்கு ஒரு கூலித் தொழிலாளிப் பெண்கள் கூட‌ விரும்பினால் பாருக்குச் சென்று அமைதியாக‌ அல்ல‌து ஆட்ட‌ம் போட்டுக் கொண்டு குடிக்க‌லாம்.
    இங்கு ஆண்களுக்கு ம‌ட்டும் என்று இருந்து வ‌ந்த‌ சீர‌ழிவு, இப்போது அவ‌ர்க‌ளின் பொழுது போக்குக்காக, வியாபார நோக்கத்துக்காக பெண்க‌ளையும் இழுக்க‌த் தொட‌ங்கி உள்ள‌து.
    இதை எதிர்ப்ப‌தென்றால் மொத்த‌மாக‌ இதை ந‌ட‌த்தும் நிறுவ‌ன‌ங்க‌ளையும் அத‌ற்கு உரிம‌ம் வழ‌ங்கிய‌ அர‌சையும் எதிர்க்க‌ வேண்டும். //

    கைதட்டி வரவேற்கிறேன்.
    ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்டு இருக்கின்றன வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  35. என்கிட்ட பிங் ஜட்டி இல்லை. அரத பழைய ப்ளூ ஜட்டி இருக்கு அதைத்தான் அனுப்ப போறேன்.

    @தீபா ஜெ
    அருமையான கமெண்ட்

    பதிலளிநீக்கு
  36. Uncle!

    என் ப‌திவை உங்க‌ள் ப‌க்க‌த்தில் சுட்டிக் காட்டிக் கௌர‌வித்த‌த‌ற்கு special ந‌ன்றி!

    பதிலளிநீக்கு
  37. மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் எங்களுக்கும் எத்தனையோ காததுரம்.அதைப்பற்றிக் கதைக்கவே வேண்டியதில்லை.
    நாகரீகம் என்ற பெயரில் அசிங்கச் சேறு அது.

    பதிலளிநீக்கு
  38. இந்த அராஜகத்தை ஒரு ஹிந்து அமைப்பு செய்கிறது என்பதற்காகவே இது மிக அதிகமாக மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது. இப்படி ஒரு செய்தி சில மாதங்கள் முன்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. அதன் விவரங்களைப் பாருங்கள். இதைப் பற்றி யாரும் மூச்சுவிடவில்லை. எல்லா அராஜகங்களையும் ஒரே போல் கண்டிப்போம்.

    //

    http://www.hindu.com/2008/12/25/stories/2008122558910300.htm

    Restaurant vandalised

    Staff Reporter

    THIRUVANANTHAPURAM: An outlet of Cafe Coffee Day at Kowdiar in the
    city was on Wednesday allegedly vandalised by a group of DYFI
    activists at around 7 p.m.

    According to the restaurant management, the group attacked customers
    and caused damage to property.

    ஓAround 100 DYFI activists armed with sticks and stones attacked the
    restaurant. When some customers tried to escape, they also attacked
    them, including women,ஔ a restaurant employee said. Being Christmas
    Eve, the restaurant was crowded, mostly with families.
    ஑Immoralஒ activities

    A DYFI activist, however, told The Hindu that the DYFI Palayam area
    committee had taken out a march from Kowdiar Junction to the outlet to
    protest against the restaurantஒs promotion of ஓimmoralஔ activities
    among the youth, including bike and car racing, which recently led to
    an accident. ஓThis is also creating public nuisance,ஔ he said.

    He added that DYFI activists had only intended to conduct a peaceful
    march and dharna in front of the restaurant but restaurant staff
    provoked them by throwing stones.

    The incident happened in the presence of the police and the media.

    Restaurant staff added that a police case would be registered only
    after a formal correspondence with the head office at Bangalore.

    The Museum police, meanwhile, said that no arrests were made as there
    was no complaint.//

    பதிலளிநீக்கு
  39. //அதை பெண்ணின் சுதந்திரமாகவோ, நாகரீகத்தின் வளர்ச்சியாகவோ புரிந்துகொள்ள முடியாது.//

    நனறாக சொன்னீர்கள்.
    கலாச்சார சீரழிவு என்று தான் சொல்லவேண்டும்.இரு பாலருக்கும் இது பொருந்தும்

    பதிலளிநீக்கு
  40. மங்களூர் சிவா!

    அனுப்புறதுன்னு முடிவெடுத்துட்டீங்களா? odd man out! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. தீபா!

    அதுபோல் இன்னும் நிறைய பதிவுகள் எழுதணூம்.

    பதிலளிநீக்கு
  42. ஹேமா!

    நாகரீகம் என்ற பேரில் அசிங்கமும் வேண்டாம். ஒழுக்கம், கலாச்சாரம் என்ற பேரில் அராஜகங்களும் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  43. ஆனந்த்!

    நீங்கள் சொன்ன செய்திக்கும், இங்கே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஊர்வலம் சென்ற இடத்தில் தகராறு நடந்திருக்கிறது. அதிலும் இரண்டு version இருக்கின்றன. இங்கு பெண்கள் மீதான வன்முறை, அதுவும் கலாச்சாரம் என்ற பேரில். போதாக்குறைக்கு, அப்படித்தான் செய்வோம், இன்னும் செய்வோம் போன்ற அறிக்கைகள் வேறு. யோசித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  44. சொல்லரசன்.

    //இரு பாலருக்கும் இது பொருந்தும்//

    சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  45. ராம் சேனாவோ... பப் கலாச்சாரமோ. இரண்டுமே கேவலமானது தான்.

    பதிலளிநீக்கு
  46. வணக்கம்,
    பண்டைய தமிழகர்களின் கடவுள் என்பது காமம். அதை அவர்கள் ஒழுக்கமாகவும் வெளிபடுத்தினார்.
    ஆனால் இன்று காமம் உள்ளது, ஒழுக்கம் மட்டும் மாறிகொண்டிருகிறது. இதை அரசியலால் மட்டுமே எதிர்கொள்ளமுடியும்.

    முதலில் அரசியலை மாற்றுவோம்... அப்போது எல்லாம் மாறும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!