மறுக்கப்பட்ட பெண்மை

பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். மனித சமூகத்தின் வரலாறு நெடுக அவர்களின் வலியும், வேதனையும் படர்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம். வாரிஸ் டேரியின் கதை எல்லாவற்றையும் விட கொடுமையானதாய் இருக்கிறது. நாகரீக சமூகத்தில், விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெட்கங்கெட்டு இன்னும் சொல்லித் திரிய வேண்டுமா என்றே தோன்றுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில், 13 கோடி வாரிஸ் டேரிகள் மரக்கட்டைகளாய் இருக்கிறார்கள் என்பதையறியும் போது நம் அத்தனை இயல்பு மனநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. பத்து வயதில் அவர்களுக்கு கந்து அகற்றல் (Cut off part of the Clitoris or female circumsicion) நடத்தப்பட்டு, வெறும் பிள்ளை பெறுகிற ஜடமாக வாழ்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. பெண்ணின் உடல் மீது, காலம் காலமாய் தொடுக்கப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட காயங்கள், பூமியின் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து மனிதர்களை பிடித்து உலுக்கிக் கொண்டே இருக்கும்.

இந்த மாத உயிர்மை பத்திரிக்கையில், இரா.சோமசுந்தரம் என்பவர் Desert flower என்னும் வாரிஸ் டேரியின் சரிதைப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எழுத்துக்கள் வாரிஸ் டேரியை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. வாரிஸ் டேரி தனக்கு நேர்ந்ததை, நேர்வதை மெல்ல மெல்லச் சொல்லத் தொடங்குகிறாள். கேட்க முடியாமல் ஐயோ என முகத்திலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. அழுவீர்கள்.

மறுக்கப்பட்ட பெண்மை (படிக்கலாம்)

இனி சிறுநீர் கழிக்கும் போது கூட உங்கள் இதயம் வலிக்கும்.

முன்பக்கம்

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நாம் நாகரிக, விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோமென்பதே ஒரு கட்டுக்கதைதான். தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமா முன்னேற்றம்...? நல்லவேளை அந்தக் கட்டுரையை வாசிக்காமலே போயிருப்பேன். (பிடித்த பெயர்களைத் தொடர்வதே எனது வாசிப்பு முறை) நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கட்டுரையை உயிர்மை இதழில் வாசிக்கும் போதே மிக வேதனையாய் இருந்தது. அரைமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே குய்யோ முறையோ என்று அலறுகிறோம். ஆனால் உலகெங்கிலுமுள்ள மக்களின் அடிப்படை உரிமை கூட அவர்களின் அறியாமையுடன் மறுக்கப்படுவதைக் கண்டு மனம் பதறுகிறது.

    பதிலளிநீக்கு
  3. மாதவராஜ்!

    நீங்கள் சொல்லியிருக்கிற வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மைதான்.
    தாங்க முடியவில்லை. உங்களால்தான் படித்திருக்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்நதி!

    தங்கள் வருகைக்கு நன்றி.

    என்னால், உங்களைப் போன்றவர்கள் படிக்க முடிந்தது என்பது ஆறுதலாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. சுரேஷ் கண்ணன்!

    இந்த உணர்வுதான் முக்கியம் என நினைக்கிறேன்.
    இந்த வெளிச்சத்தை சகல இடங்களுக்கும் நாம் ஏந்திச் செல்ல வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. I have taken up the sad atrocity story to many of my friends circles to rise against such horribles.Let the humanism feel the hot of this attack.
    ---vimalavidya@gmail.com---Namakkal---9442634002

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!