-->

முன்பக்கம் , , , , � அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

attack on techers2

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. பெறுவதற்கு ஏராளமான பட்டதாரிகள் வந்திருக்கின்றனர். ஆனால் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனைத் தட்டிக்கேட்ட கணவன் மனைவி இருவரையும் ஒரு டிஎஸ்பி நடு ரோட்டில் வைத்து தாக்கியிருகிறான். இது நேற்றைய செய்தி.

 

நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இது.  நடுரோட்டில் ஒரு டிஎஸ்பி அதை செய்திருக்கிறான். அவனுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவன் எவன்?  யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்கிற தைரியமும், தெனாவெட்டும் அவனுக்கு எப்படி வந்தது? இப்படிப்பட்ட வெறிநாய்களுக்கு காவல்துறை உடையை யார் வழங்கியது?

 

இந்த தேசத்தின் பிரஜைகளுக்கு அதிகார வர்க்கமும், அமைப்பும் கொடுக்கிற பதிலாக இதுதான் இருக்குமென்றால், அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கிற  இந்த அரசுகளை யார் தூக்கில் போடுவது?

 

படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத எம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த ஏவல் நாய்கள் என்ன பாடுபடுத்தும்?

 

இந்தக் கேள்விகளுக்கு பதிலும் ஒரு கேள்விதான். அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

 

அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் நாம் விசாரிப்போம்.

Related Posts with Thumbnails

41 comments:

 1. நடுத்தெருவுக்கு இழுத்துவந்து அடிக்கவேண்டும தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்துவிட்டேன் அவன் அந்த அம்மையாரை அடித்தவுடன் அந்த அம்மையார் கீழேவிழுந்து விட்டார்கள் அட காவல் வெறிநாயே .....
  அந்த டிஎஸ் ரியை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய் என்று அரசைக்கோருகிறோம்

  ReplyDelete
 2. கட்டாயமாக அடிக்கலாம் சார். அதுவும் சேற்றில் ஊற வைத்த நைந்து போன பழைய செருப்பால் நைய புடையலாம் சார். பொது மக்களின் வரிப் பணத்தில் வயிற்றை கழுவும் இது போன்ற நன்றி கெட்ட போலீஸ் மிருகங்களை இப்படித்தான் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 3. வேண்டாம் நண்பரே!
  நாய்கடித்தால் திருப்பியா கடிக்க முடியும்..?
  இதுவரை அரசின் நடவடிக்கை என்ன?
  என் வலையில் அன்றே ஒருகவிதை எழுதியுள்ளேன்
  நேரமிருப்பின் படிக்க வேண்டுகிறேன்.

  சா இராமாநுசம்

  ReplyDelete
 4. இது ஒரு கோடி ரூபாய் கேள்வி. பதில் சொல்வது கடினம். அந்த டிஎஸபியை செருப்பால் அடித்தால் இனி இந்த மாதிரி நடக்காது என்று நினைத்தால் அது சரியல்ல.

  ReplyDelete
 5. அவரை அடிக்க வேண்டாம். அடித்தால் நமக்கும் அந்த DSP மட மிருகத்திற்கும் வித்தாயசம் குறைந்துவிடும். அவரை டிஸ்மிஸ் செய்து சிறையில் சில வருடம் தள்ளினால் அவர் திருந்தலாம். இதுபோன்டற மற்ற போலீஸ் ஓநாய்களுக்கும் தக்க பாடமாக இருக்கும்

  ReplyDelete
 6. மாதவ் ஜி அவர்களே! ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள்,தலித் தலைவர்கள்,வாயில் கொழுக்கொட்டையை வைத்திருக்கிறார்களா? பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?---காஸ்யபன்

  ReplyDelete
 7. வணக்கம் தோழர் தங்களின் ஆவேசம் புரிகிறது அப்படி ஒருமுறை நடந்தால் நன்றாகவே இருக்கும் ஆனாலும் தோழர் காஸ்யபன்...சொன்னது போல இதோ ஓட்டபிடாரம் தாசில்தார் தாக்கப்பட்ட உடன் புறக்கணிப்பு செய்த வருவாய்துறை போல ஏன் ஆசிரிய சங்கங்கள் மௌனிகின்றன...ஒரு வேலை அவர் சங்க உறுப்பினர்..இல்லையோ சந்தா தாரதவர்களுக்கு போராட மாட்டார்களோ....நிறைய யோசிக்க வேண்டிஉள்ளது ..தோழர்..என்ன செய்ய இந்த தேசத்தை ....?

  ReplyDelete
 8. இது தவறான அணுகுமுறை மாதவ்.லட்சக்கணக்கான அதிகாரிகள் பதவியில் அவர்களின் கடமையைச் செய்யும் போது பத்து, இருபது அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சகஜம்தான்.உணர்ச்சிவசப்பட்டு சிந்தும் வார்த்தையும் செயலும் எந்தப் பலனையும் தராது. அந்த அதிகாரியே தன் தவறை இந்நேரம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது உணர்ந்திருப்பார். அதுபோலவே இம்மாதிரியான அதிகாரிக்குள்ளும் இன்றைய சமூகத்தின் குணாதிசயம்தான் வெளிப்பட்டதாய்ச் சொல்லமுடியுமே தவிர வேறில்லை.

  அந்த அதிகாரியின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது-அது அந்த நிமிடத்தைக் கடக்க அவருக்குக் கிடைத்த மிக மோசமான ஆயுதம். அவ்வளவே.அதற்குப் பதிலாக சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் விளையும் விபரீதம் அறியாமல் அடிக்கு அடி, உதைக்கு உதைக்கு உதை என்று இறங்குவது நியாயமாகாது.

  உங்கள் இடுகையின் தலைப்பும் உங்களின் முதிர்ச்சிக்குப் பொறுத்தமானதல்ல.

  ReplyDelete
 9. டொமாக்ற...ச்சீ !

  ReplyDelete
 10. சில நண்பர்கள் தங்கள் ஆத்திரத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவற்றை பிரசுரிக்கவில்லை .

  ReplyDelete
 11. சுந்தர்ஜி!
  வருந்திவிட்டால் மன்னித்து விடலாமா? அப்புறம் இப்படி அடித்துவிட்டு அவர்கள் வருந்திக்கொண்டே இருப்பார்கள். நாமும் மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். மக்களுக்கும் தங்கள் மீது ஆத்திரமும் வெறுப்பும் வரும் என்பதை அவர்கள் உணரட்டும். அதற்காக நான் என் முதிர்ச்சி, பக்குவத்தை இழந்து போவது ஒன்றும் தப்பில்லை.

  ReplyDelete
 12. மாதவ்! நான் அவருக்குரிய தண்டனை குறித்து எதுவும் பேசவில்லை.அதை மக்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் நேரும் விபரீதங்களை மட்டுமே எழுதினேன்.

  இப்போதும் சொல்கிறேன்.உங்களின் பக்குவமும் வாசிப்பும் நிச்சயமாகத் துணை நிற்கும். தவறு செய்பவர்களை ஆயிரம் ஆயிரம் முறை மன்னியுங்கள் என்று சொன்ன வேரிலிருந்து துவங்குகிறது நமது பயணம்.

  ReplyDelete
 13. கண்டிப்பாக அடிச்சே ஆகணும்....

  ReplyDelete
 14. ஆனால்... யாரை அடித்தாரோ அவர்களது செருப்பால்... அவர்கள் அடி கொடுக்க வேண்டும்... அது போன்று மக்கள் மத்தியில்..

  ReplyDelete
 15. //டொமாக்ற...ச்சீ !// சர்வாதிகாரம் இதைவிட கொடுமையாக இருக்கும்.
  நமக்கெல்லாம் வெயிலில் நின்றால்தான் நிழலின் அருமை தெரியும்.

  ReplyDelete
 16. கண்டிப்பாக அவனை அடிக்கவேண்டும். மக்களனைவரும் சேர்ந்து அடிக்கவேண்டும்.

  ரோபின்
  சர்வாதிகாரத்தின் முதல் வேர் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது

  ReplyDelete
 17. ச்சீ..காவல்துறையே....
  நீ எப்போது மனிதர்களை பணிக்கு அமர்த்துவாய்...?

  ReplyDelete
 18. The DSP Mr.Santhana pandiyan is a emotion type and character.In many occasions he behaving with all well.He worked at krishnagiri where he fired against mass...He escaped from punishment.He worked at Attur and salem .Now Dharmapuri..He is very close relative of AIDMK MINISTER NAINAR NAGENDRAN and ANOTHER MINISTER...His attack warrant severe punishment..no doubt

  ReplyDelete
 19. தங்கள் தளத்தின் ஆயிரமாவது உறுப்பினராக சேர்வதில் பெருமை கொள்கிறேன்....

  ReplyDelete
 20. democrazy... கண்ணுக்கு கண்... பல்லுக்கு பல்... பளார்க்கு பளார் பளார்...

  ReplyDelete
 21. Koodal Bala!

  இந்தத் தருணம் உண்மையில் சந்தோஷமானது. மிக்க நன்றி நண்பரே!

  தங்களோடு, 999 நண்பர்களுக்கும் எனது நன்றிய இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 22. /இப்படிப்பட்ட வெறிநாய்களுக்கு காவல்துறை உடையை யார் வழங்கியது?/ தோழர் மாதவ், என்ன இது? காவல்துறையே வெறிநாய்களின் துறைதான், அப்புறம் என்ன கேள்வி இது? ...இக்பால்

  ReplyDelete
 23. மாதவ் ஜி அவர்களே! ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள்,தலித் தலைவர்கள்,வாயில் கொழுக்கொட்டையை வைத்திருக்கிறார்களா? பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?---காஸ்யபன்
  வணக்கம் தோழர் தங்களின் ஆவேசம் புரிகிறது அப்படி ஒருமுறை நடந்தால் நன்றாகவே இருக்கும் ஆனாலும் தோழர் காஸ்யபன்...சொன்னது போல இதோ ஓட்டபிடாரம் தாசில்தார் தாக்கப்பட்ட உடன் புறக்கணிப்பு செய்த வருவாய்துறை போல ஏன் ஆசிரிய சங்கங்கள் மௌனிகின்றன...ஒரு வேலை அவர் சங்க உறுப்பினர்..இல்லையோ சந்தா தாரதவர்களுக்கு போராட மாட்டார்களோ....நிறைய யோசிக்க வேண்டிஉள்ளது ..தோழர்..என்ன செய்ய இந்த தேசத்தை ....?

  ReplyDelete
 24. அவரை அடிக்கும் படி தூண்டியது யார்? ஒரு பக்கமாக முடிவெடுக்காமல் DSP யின் கருத்தையும் சொல்லவும் சங்கர் நெல்லை

  ReplyDelete
 25. வரிப் பணத்தில் வயிற்றை கழுவும் இது போன்ற நன்றி கெட்ட போலீஸ் மிருகங்களை செருப்பால்அடி கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 26. அட புலவர் கவிதை எழுதியிருக்காராம்ல்ல யாரும் சீண்டாததை சீண்டச் செய்ய இப்பிடி ஒரு ஐடியாவா...சபாஷ் ராமானுஜம்.... தொடர்க உம் பணி.. ஹி..ஹீ

  ReplyDelete
 27. Dear All, Can you please sign and share this petition widely? Petition demands that DSP be suspended immediately.

  http://www.change.org/petitions/government-of-tamil-nadu-india-take-immediate-action-against-mr-santhana-pandian-dsp-tn-police

  ReplyDelete
 28. போலீஸ் என்பது அரசால் அங்கீரிக்கப்பட்ட ஒரு வன்முறை கருவிதானே.இதற்கு ஓரே தீர்வு இந்த கொடுமைகளுக்கு எதிராக பல அடையாளங்களாக பிரிந்திருக்கும் மக்கள் ஓன்றாக வீதியில் இறங்குவது தான். அது வலுபடும் போதுதான் இந்த அதிகாரவர்க்கம் பயப்படும். இ,ரகுக்குமார்,திருப்பூர்

  ReplyDelete
 29. போலீஸ் என்பது அரசால் அங்கீரிக்கப்பட்ட ஒரு வன்முறை கருவிதானே.

  இதற்கு ஓரே தீர்வு இந்த கொடுமைகளுக்கு எதிராக பல அடையாளங்களாக பிரிந்திருக்கும் மக்கள் ஓன்றாக வீதியில் இறங்குவது தான்.
  அது வலுபடும் போதுதான் இந்த அதிகாரவர்க்கம் பயப்படும்.

  மிகச் சரியாக சொன்னீர்கள் இரகுக்குமார் அவர்களே, பிரிந்திருக்கும் மக்கள்
  ஒன்றுபட வேண்டும், இந்தமாதிரி தொழிழ்நுட்ப வசதிகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

  தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்த்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நீதிக்கு நாம் நிச்சயம் போராடத்தான் வேண்டும்.

  ReplyDelete
 30. வரிப் பணத்தில் வயிற்றை கழுவும் இது போன்ற நன்றி கெட்ட போலீஸ் மிருகங்களை செருப்பால்அடி கொடுக்க வேண்டும்... செருப்பால்அடி கொடுக்க வேண்டும்...செருப்பால்அடி கொடுக்க வேண்டும்...செருப்பால்அடி கொடுக்க வேண்டும்..செருப்பால்அடி கொடுக்க வேண்டும்..செருப்பால்அடி கொடுக்க வேண்டும்..செருப்பால்அடி கொடுக்க வேண்டும்..செருப்பால்அடி கொடுக்க வேண்டும்..செருப்பால்அடி கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 31. அங்கே அப்போது கூடியிருந்த மக்கள் ஒன்று திரண்டிருக்க வேண்டும். அடுத்து ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பைக் காண்பித்திருக்க வேண்டும்.

  முன்பு அரசு ஊழியர்களின் போராட்டத்தில் போலீசார் ஆசிரியர்களை அடித்து துரத்தியும் நினைவுக்கு வருகிறது.

  //அதிகாரிகள் பதவியில் அவர்களின் கடமையைச் செய்யும் போது பத்து, இருபது அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சகஜம்தான்.//
  அடப் பாவமே! இப்படியும் சில 'நீதிமான்கள்'!

  ReplyDelete
 32. சற்று பெரிய நாயாக இருந்தாலும் அவரையும் போலீஸ் நாய்கள் பட்டியலில் சேர்த்து நாய் என்றும் குறிப்பிடலாம். பரமக்குடியில் தலித்துகளைக்கொன்ற கொடுமை; தாமிரபரணியில் தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்த கொடுமை; வெண்மணியில் தீக்கிரையாக்கிய போலீசாரின் கொடுமையை ஆதரித்த கண்டிக்க வேண்டிய நீதித்துறை என அனைவரின் வாயிலும் மண்ணைத்தான் அள்ளிக்கொட்ட வேண்டும். ஏனென்றால் அனைவரும் சாதீய அடிப்படையில் இயங்கினாரகள் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவனை செருப்பால் அடிப்பது கூட ஒரு விதமான துவேஷம்தான். ஏனென்றால் அந்த செருப்பு ஒரு தலித்தால் வடிவமைக்கப்பட்டது. வேதங்கள் ஓதுவதை விடவும் செருப்பு தைக்கும் தொழில் மதிப்பு வாய்ந்தது என்ற விவேகானந்தரின் வரிகள் வைரடக்கியம் மிகுந்தது...

  ReplyDelete
 33. என்று திருந்தும் இந்த ஜென்மங்கள்! காவல்துறை இப்போது ஆட்சியாளர்களின்கைப்பாவையாகி இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. கண்டிப்பாக இவர்களுக்கு தண்டணை தந்தே ஆகவேண்டும்!

  ReplyDelete
 34. காவல்துறையினர் அணிந்துள்ள காக்கிச்சட்டைக்கு மக்கள் தரும் மரியாதையை அவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதனை அவர்கள் பயம் என்று எண்ணுகிறார்கள். இதே நபர் சாதாரண உடையில் இப்படி மக்கள் மத்தியில் எங்காவது தனி ஆளாக இதை செய்திருந்தால் அவரின் நிலை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் அந்த அநாகரீக மனிதர்.
  நானை உன் வீட்டு பெண்ணுக்கு இப்படி நடு ரோட்டில் அவமானம் நடந்தால் உன் மனம் எண்ணவாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
  கொள்ளை கொலை செய்யும் ரவுடிகளை என்கௌண்டர் செய்யும் போதெல்லாம் மனித உரிமைகள் அமைப்பு எனும் ஒன்று ஓவென அலறி ஆர்ப்பாட்டம் செய்யமே அவர்கள் இது போன்ற காரியங்களுக்கு முன் வருவதேயில்லை.

  ReplyDelete
 35. தெரு பொறுக்கி, எச்சகள்ள நாய், அப்படிதான் நடந்துக்கும்,
  எதாவது வண்டில அடிபட்டு சாகும் ........

  ReplyDelete
 36. அந்த நாயி அப்படி பண்ணுதுன்னா அதுக்கு வேலையை பற்றிய பயம் இல்ல.. பின் விளைவுகள் பற்றிய பயமும் இல்லை.. அவன் குடும்பம்
  நாசமா போகணும்.. ஆண்டவன் அதை செய்வான்..

  ReplyDelete
 37. மிகச் சரியாக - பொருத்தமான சொற்களில் அளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 38. அடித்து வளர்ப்பதை பெருமையாக எண்ணும் சமுதாயத்தில் இதுவும் சகஜமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எந்தக் குற்றவாளியை காவல் நிலையத்தில் அடிக்காமல் இருக்கிறார்கள் காவலர்கள்?

  ReplyDelete
 39. தண்ணீர் இல்லையென்று போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  சாலை சரியில்லையென்று போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  பஸ் சரிவர இயக்கவில்லையெல்லையென்று போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  பள்ளியில் அதிகமாக டொனெஷன் வாங்குகிறார்கள் என்று போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  மாநில அரசினை எதிர்த்து போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  மத்திய அரசினை எதிர்த்து போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,
  அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் போலிஸ் அடிதடி,

  எல்லாவற்றிற்கும் இவர்கள் என்ன மொத்த குத்தகையா?
  இவர்கள் மீதுள்ள குற்றத்திற்கு யார் அடிதடி நடத்துவது. நாம் தானே?
  சரியாக முடிவெடுப்போம். அத்தனை பெரிய கூட்டத்தில் சிறு அளவிலான போலிஸ் தாக்கும் போது பொது மக்களும் கிளர்ந்தெழும்போது தாக்குதல் நிறுத்தப் படும்.
  நக்ஸலைட்டுகளுக்கு பாதகம் என வரும்போது குதித்தெழும் அறிவு ஜீவி கும்பல் இப்போது எங்கே போனது. கூடங்குளத்தில் மீன் பிடிக்கிறார்களா? இல்லை ஹசாரேவுக்கு புழுக்கம் அதிகமேன காற்று வீசுகிறார்களா?

  போராட்டமில்லாமல் யாராட்டமும் செல்லாது.
  முள் குத்திய காலுக்கு தான் வலி தெரியும்.
  குத்தாதவரை தத்துவம் தான். மனித நேயம் தான். மறக்கும், மன்னிக்கும் குணம் தான்.
  இல்லையென்றால் பிரி அட்வைஸ் தான்.
  சும்மாதானே காசா பணமா?
  தூக்கிப் பிடித்தால் கொடி, திருப்பிப் பிடித்தால் தடி யென ஒருகாலத்தில் ஊர்வலத்தில் கோஷம் எழுப்பிச் சென்றது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 40. இந்த சந்தனபாண்டியன் இப்போது மட்டுமல்ல, ஒசூரில் எஸ்.ஐயாக இருக்கும்போதிருந்தே ஒரு அகங்காரனாகத்தான் இருந்தான் என்பதற்காக முந்தைய தாக்குதல் ஒன்றைச் சொல்கிறேன்:

  மத்திய அரசின் பொருளாதாரக்கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம் ஒன்று நடக்கவிருந்தது. அதை முன்னிட்டு நடந்த பேரணியில் வந்தவர்களை சுட்டுத்தள்ளிவிடுவேன் என்று இந்த வீராதிவீரன் துப்பாக்கியைக்காட்டி மிரட்டவும், சிஐடியூ தோழர் வாசுதேவன் தைரியமிருந்தால் சுட்டுப்பார் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நேருக்குநேராக மறித்துநின்றுவிட்டார். பிறகென்ன, மூடிக்கொண்டு போய்விட்டான்.

  மறுநாள் சிஐடியூ சார்பில் அதே தோழர் வாசுவும் மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளர் என்ற முறையில் நானும் அதே காவல்நிலையத்திற்கு வேறொரு அலுவலகப் போயிருந்தோம். எங்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த சந்தனப்பாண்டியன் "இவன் ஒரு ரவுடி. இவனோட சேர்ந்து இங்கு எதுக்கு வந்தே?" என்று என்னிடம் கேட்டான். "ஒரு தொழிற்சங்கத் தலைவரை ரவுடி என்று சொல்வதை நிறுத்துங்க" என்றேன் நான். என்னாடா நீ எதுத்துப் பேசறே? என்று என் கன்னத்தில் அறைந்து என்னை நெட்டித்தள்ளி காவல்நிலையத்தின் பின்புறமிருந்த பகுதியில் அடைத்துவிட்டான் . இதைக்கண்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உடனடியாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டார்கள். நிலைமை சிக்கலாக மாறுவதை அறிந்ததும் என்னை விடுவித்து வெளியே போங்கள் என்றான். என்னை அடித்து அடைத்து வைத்ததற்கு நியாயம் கிடைக்காமல் வெளியே போகமுடியாது என்று மறுத்துவிட்டேன்.

  ஒசூரின் மற்ற அரசு அலுவலகங்களுக்கும் தொழிற்பேட்டைக்கும் செய்தி பரவி 1000 பேரூக்கு மேல் திரண்டுவிட்டார்கள். ஒசூர் சாராட்சியர் திரு.டி.கே.ராமச்சந்திரன் தலையிட்டு தனது அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். "காவல்நிலையத்திற்குள் நுழைந்து இவர் என்னை அடித்து விட்டார். தற்காப்புக்காக நானும் அடிக்கவேண்டியதாகிவிட்டது" என்று என்மீது பொய்ப்புகார் சொன்னான் ச.பா. எப்.ஐ.ஆர் ஒன்றையும் அவசரமாக தயாரித்துக் கொண்டுவந்திருந்தான். "என்னிடம் அடிவாங்கியதாக வெளியே திரண்டிருக்கிற கூட்டத்திடம் வந்து இந்த எஸ்.ஐ. சொல்லட்டும். நான் விட்டுவிடுகிறேன்" என்றேன் நான். கடைசியில் இவன் எழுதிக்கொடுத்த மன்னிப்புக்கடிதத்தில் தனது எப்.ஐ.ஆர் பொய்யானது என்றும் குறிப்பிட வேண்டியதாகிவிட்டது.

  ஆனால் அதற்குப்பிறகும் இவன் திருந்தவேயில்லை என்பதற்கு இவனது பணிக்காலத்தில் பல உதாரணங்கள் உண்டு. தருமபுரி தாக்குதல் அதிலொன்று.

  ReplyDelete