முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு!

ezhudhalar_arikkai

 

“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.  அவர் பதவிக்கு வந்த பின்னர், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலிருந்து  இதுபோன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.  இந்த மருத்துவமனைகளின் பின்னால் இருக்கிற நோயை தமிழகம் அறிந்தே வைத்திருக்கிறது.

 

ஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு  ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணமும், தமிழகத்தின் சில முக்கிய திட்டங்களும் இரையாகிக்கொண்டு இருக்கின்றன.  இப்படி ‘கருணாநிதி கட்டியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக மாற்றுவேன்” என மக்கள் முன்வைத்து தேதலில் வாக்கு பெறவில்லை, வெற்றி பெறவில்லை.

 

தேர்தல் வாக்குறுதிகளிலோ, அறிக்கையிலோ  சொல்லியதை நிறைவேற்றுவதை விட்டு விட்டு, சொல்லாதவற்றையெல்லாம்  ஜெயலலிதா ஒவ்வொன்றாகச் செய்து வருகிறார். வன்மமும், அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடுகிறது.

 

கருணாநிதியை மதிக்கிறார், மதிக்காமல் போகிறார். அதுபற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் அறிவு சார்ந்த ஒரு  நூலகத்தை மதிக்கவில்லை. நம்பி வாக்களித்த தமிழக மக்களையும் மதிக்கவில்லை. அதுபற்றி நமக்கு கவலை மட்டுமல்ல, ஆத்திரமும் உண்டு.

 

அரசின் இந்த முடிவுக்கு எதிராக  ‘புத்தகம் பேசுது’ இதழ் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் இன்று கூட்டாக அறிக்கை விடுத்திருக்கிறார்கள். நாமும் நமது எதிர்ப்பை தெரிவிப்போம் நண்பர்களே!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஒரு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது இங்கே:

 http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library

நண்பர்களே!, தாங்களும் இப்பெட்டிஷனில் கையெழுத்திட்டு, ஆதரவு திரட்டுங்களேன்


இவர்களையும் படியுங்கள்:

 

“ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா?”

- சு.பெ.அகத்தியலிங்கம்

“பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.”

- ச.தமிழ்ச்செல்வன்

“அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் புத்தகங்களை எட்டாத இடத்தில் வைத்துவிட்டு, இலவசமாய் ஆடுகளையும், மாடுகளையும் கொடுத்தால் என்ன அர்த்தம்..?”

-புதுவை ராம்ஜி

“உள்ளிருந்த ஒவ்வொரு நிமிடமும் இது நான் வாழும் இடத்தில், வாழும் காலத்தில் அமைந்திருக்கிறது, அறிவுசார் எதிர்காலம் அமைந்திட ஆட்சியாளர்களுக்கும் கூட அதிசயமாய் எண்ணம் தோன்றிவிடத்தான் செய்கிறது என்று எண்ணி பெருமிதம் கொண்டிருந்தேன். எந்த ஆட்சியில் அது கட்டப்பட்டிருந்தாலும் என் உணர்வு இதுவாகத்தான் இருந்திருக்கும்.”

-ஆதிமூலகிருஷ்ணன்

“தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட பல குடியிருப்புகள் இன்றைக்கோ, நாளைக்கோ என்று இடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் அதனைக் காலி செய்ய விரும்பாமல் அதில்தான் ஓட்டை, ஒடிசலுடன் குடியிருந்து வருகிறார்கள். இதனைச் சரிப்படுத்த கிஞ்சித்தும் முயலவில்லை.”

-உண்மைத்தமிழன்

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தோழர், ஓட்டு போடுறதுக்கு முன்னாடி அஞ்சு நிமிஷம் யோசிச்சிருந்தா இந்த பிரச்சினை வராதுங்க... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது..

    பதிலளிநீக்கு
  2. இவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் என்ற மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம் பந்தாடப்படுவது வன்மையாக கண்டிக்கதக்கது.நடு நிலையாளர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நிலத்தை இழப்பதா போராளிகளை இழப்பதா என்றால் நிலத்தை இழக்கலாம்/ போராளிகள் நிலத்தை மீட்டு எடுப்பார்கள் என்றார் மாவோ. அப்படி இல்லை இது. குழந்தை உலகமா வாசிப்பு உலகமா என்றால் இரண்டில் எதை இழந்தாலும் உலகத்தை இழந்துவிடுவோம். அதிகாரத்தின் அடிவாரம் இத்தனைக் குரூரமானதா? பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. அதற்குள் கோட்டை முதல் கோட்டூர்புரம் வரை எல்லாம் கோணல்தானா?
    வாசிக்க மறுக்கப்பட்டவர்களின் கோபம் வரலாறு நெடுகப் பார்க்கிறோம். மூடிய கண்கள் திறக்கட்டும் முதல் அமைச்சர் அவர்களே.....

    நா வே அருள்

    பதிலளிநீக்கு
  4. இனிமே துக்ளக் ஆட்சிதான்.... அந்தப் பேயை விரட்டுறதுக்கு இந்த பேய் தான் கிடைச்சது.. பரிகாரம் பண்ரதுக்கு இப்ப வாய்ப்பே இல்லை. 2014 வரை வெயிட் பண்ணவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  5. எரிந்த கொள்ளியுடன் திரிந்த குறங்கு ...
    என்ற பழ நெடுமாறனின் வரிகளுக்கு இப்போது பொருள் புரிகிறது.!
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  6. http://www.thaamiraa.com/2011/11/blog-post_03.html

    என் சிறிய எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்
    பார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்க!!!!!!!!சில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்
    பார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்க!!!!!!!!------ஆர்.எஸ்.மணி திண்டுக்கல்

    பதிலளிநீக்கு
  8. சில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மணிக்கணக்கில் அத்தனைத் தளங்களையும்
    பார்வையிட்டு அசந்து போனேன் சில தினங்கள் இந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே இருந்தேன். கோட்டூர் புர வாசிகள் வாசிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று பொறாமைப் பட்டபோது ----இன்னும் கூடுதல் பராமரிப்பு இருந்தால் மேலும் சிறந்து விளங்குமே எனப் பேராசையுடன் கூறிய போது அரசியல் காரணமாக இருக்கும் இடத்துக்கே ஆபத்து வராமல் போனால் ஆச்சர்யமே என என் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணா நாமம் வாழ்க!!!!!!!!------ஆர்.எஸ்.மணி திண்டுக்கல்

    பதிலளிநீக்கு
  9. Kudos for bringing out an excellent post.
    I have translated it in English and posted in my blog.
    You can view it here: http://luthfispace.blogspot.com/2011/11/jayas-move-to-change-library-into.html

    பதிலளிநீக்கு
  10. நூலகங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து வரும் வேளையில் அதை அதிகப்படுத்த அரசு எதாவது புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதைவிட்டு இருக்கிற ஒரு அற்புதமான நூலகத்தை மருத்துவமனையான மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு நூலகம் நூறு மருத்துவமனைகளுக்கு சமம்.ஏற்கனவே, புதிய சட்டமன்ற கட்டடத்தையும் மருத்துவமனையாக மாற்ற ஆணையிட்ட சூழலில் நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் இருந்து ஊராட்சிகளில் உள்ள சிறிய நூலகங்கள் வரை எல்லாவற்றையும் இன்னும் தரம் உயர்த்த அரசு ஆவண செய்ய வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. We have started a group in FB
    https://www.facebook.com/#!/groups/241516629236700/

    to discuss about the anna library shifting issue ..Requesting participation from progressive writers

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!