-->

முன்பக்கம் , , , � வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது

வெறிநாய்க்கு உரிமை வந்து வீட்டுக்காரனைக் கடிக்குது

mummy 001
1958ல் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  இத்தனை வருடம் கழித்தும் இந்தப் பாடல் அப்படியே வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறதே! ‘என்ன இருந்தாலும் மனுஷன் இப்படி ஆடக் கூடாது’ வரியில் மனுஷன் என்பதற்குப் பதிலாக அவரவர்க்குப் பிடித்த வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளலாம்!

ஒருவன்: மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிசவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழுகின்ற நாடு –இது

மற்றவன்: மூச்சு திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்கள் படும்பாடு – இது

ஒருவன்: நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை வளர்ந்து
நெருக்குது - அது
அருமையான பொறுமையைத்தான்
கெடுக்குது - ஊர் [நெலமை]

மற்றவன்: பாதை மாறி நடக்குது,
பாஞ்சு பாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது - நல்ல
பழக்கமெல்லாம் பஞ்சு பஞ்சாப்
பறக்குது - ஊர் [நெலமை]

ஒருவன்: என்ன இருந்தாலும் மனுஷன்
இப்படி ஆடக் கூடாது

மற்றவன்: ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக்காகாது

ஒருவன்: காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது - ஊர் [நெலமை]

ஒருவன்: அன்பு வளர்த்த கோட்டைக்குள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது

மற்றவன்: வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது

ஒருவன்: விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது

மற்றவன்: வெறிநாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனைக் கடிக்குது - ஊர் [நெலமை]

(பாடலை நினைவுபடுத்திய தோழர். அகத்தியலிங்கம் அவர்களுக்கு நன்றி.)
Related Posts with Thumbnails

3 comments:

  1. வரும் காலங்களில் ஓட்டு போடறவங்கள விட, ஓட்டு இவங்களுக்கு போடுங்க அப்படின்னு சொல்றவங்க யோசிக்க வேண்டிய காலம் வந்துடுச்சு

    ReplyDelete
  2. நாடி தளந்தவங்க, ஆடி நடப்பவங்க, நல்லவங்க, கெட்டவங்க, நம்பமுடியாதவங்க, பாடி கனத்தவங்க, தாடி வளர்த்தவங்க, பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க, படிப்பவங்க – வீடு புடிப்பவங்க, பொடிப்பசங்க – பெரும் போக்கிரிங்க இன்னும் எத்தனையோ பேர்களை இழுக்குறோம் வேகமா, எங்க வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா!
    -பட்டுக்கோட்டை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete