-->

முன்பக்கம் , , , � ‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்!

‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்!

police1

"ரவுடிகளின் நண்பனாக இருந்த காவல்துறை இப்போது பொதுமக்களின் நண்பனாக மாறிவிட்டது”


எல்லாம் தன்னால்தான் நிகழ்கிறது என்று திருவாய் மலரும் ஜெயலலிதா தற்போது உதிர்த்த  முத்துக்களில் ஒன்று இது.  தனது நான்கு மாத ஆட்சியின் மகிமையாக இதனை அம்மையார் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

 

கருணை மிக்க அம்மையாரின் ஆட்சியில் மனம் மாறிய  இந்த மைந்தர்கள்தான் பரமக்குடியில் ஆறு தலித்  மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள். இதே இவர்கள் ‘ரவுடிகளின் நண்பர்களாக’ இருந்தபோது  திருநேல்வேலியில், தாமிரபரணியாற்றங்கரையில் தலித் மக்களை கொன்று குவித்திருந்தார்கள்.

 

அப்போதும்  போராடும்  இளைஞர்களை அடித்தார்கள். இப்போதும் அடித்துவிட்டார்கள். இன்னும் தொழிலாளர்கள், மாணவர்கள், வக்கீல்கள் என அடிப்பதற்கு ஐந்தாண்டில் காலங்கள் இருக்கவே இருக்கின்றன.

 

காக்கிச்சட்டை மாறவில்லை. சல்யூட் மாறவில்லை. லத்தி மாறவில்லை. துப்பாக்கி மாறவில்லை.  ஆட்சியும் மாறவில்லை. பேயும், பிசாசும் மாறவில்லை. 

 

‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்!

Related Posts with Thumbnails

5 comments:

  1. உண்மையா பொய்யா என்று தெரியவில்லை நேற்று இரவு கூடங்குளத்தில் போராடிய மாற்று திறன் உடையவர்கள் ஆறு பேர் அடிக்கப் பட்டிருக்கிறார்கள்.. அதன் சுட்டி இதோ
    http://www.dnaindia.com/india/report_tamil-nadu-anti-nuclear-plant-protest-turns-violent-6-bashed-up_1598879

    ReplyDelete
  2. அதெல்லாம் சரிதான்! பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட பிறகும் தோழர்களால் எப்படி உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு மட்டும் போக முடிந்தது? பரமக்குடி கொடூரத்திற்கு நீதி விசாரணையே தேவையே இல்லை என்று சொன்ன ‘கேப்டன்’ வீட்டுக் கதவைப் பிறகு எப்படித் தட்ட முடிந்தது? போங்கய்யா!

    ReplyDelete
  3. சூர்யாஜீவா!

    போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும், இந்த காவல்துறையால் இரக்கமில்லாமல் தாக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  4. பகுத்தறிவு!

    தேர்தலில் கூட்டணியை கொள்கை ரீதியாக அமைக்க முடியாமல், ஒரு நடைமுறைத் தந்திரமாகவே இடதுசாரிகள் பார்க்கிறார்கள். அதனால் அவர்களின் தனிப்பட்ட இயக்கங்களும், நேர்மையும், சித்தாந்தங்களும் இங்கு மக்கள் மத்தியில் கேலி செய்யப்படுகின்றன; கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன இது குறித்து பரிசீலனைகள் தேவைப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. முதலில் மற்ற பிரச்சனைகளுக்கு போராடு வதை விட்டுவிட்டு
    இந்திய தண்டனை சட்டத்தை ( கிருமினல் ) திருத்த' மாற்றி அமைக்க போராடுங்கள் '

    இதுல பெரிய கலி கூத்து என்ன வென்றால் " அரசாங்க ஊழியகள் தங்களுக்காக சங்கம் வைத்து போரடகுடியவர்கள்
    சங்கமே இல்லாத அரசாங்க ஊழியர் (காவல் துறை ) இடம் அடி வாங்குகிறார்கள்"

    ReplyDelete