-->

முன்பக்கம் , , , , , � எத்தனை அறிவு?

எத்தனை அறிவு?

ezham arivu

 

ஏழாம் அறிவு இருக்கட்டும்.

 

டெல்லி சென்று மன்மோகன்சிங்கையும், சோனியாவையும் சந்தித்து நாட்டு நிலவரங்களைப் பேசியதாக கருணாநிதி சொல்கிறார். ஆனால் கனிமொழியின் ஜாமீனுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லையென செய்திகள் வருகின்றன.

 

டெல்லியில் நடைபெறும்  தேசீய  வளர்ச்சி மன்றக் கூட்டத்துக்குச் செல்ல இருப்பதால் அக்டோபர் 22ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகமுடியாது என நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொல்கிறார்.  ஆனால்  அந்த தேதியில்,  அந்தக் கூட்டத்துக்கு  தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் செல்கிறார்.

 

மாற்றி மாற்றி தங்களுக்கே ஓட்டுப் போடும் தமிழர்களுக்கு எத்தனை அறிவு இருக்கும் என இந்த இரண்டு ‘யோக்கியசிகாமணிகளும்’ நினைத்துக்கொண்டு இருப்பார்கள்?

Related Posts with Thumbnails

5 comments:

 1. இந்த இரண்டு ‘யோக்கியசிகாமணிகளும்’ தங்கள் கால்களில் தண்டனிடும், தங்களுக்கு பல்லக்கு தூக்கும் இவர்களுக்கு அறிவு என்பது உள்ளது என்பதைப் பற்றிய எண்ணமே கிடையாதே பின் எப்படி எத்தனை அறிவு என்ற சிந்தனை வரும்.

  ReplyDelete
 2. சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குற மாதிரி இருக்கு

  ReplyDelete
 3. இவர்களை ஆதரிக்கும் சில கட்சிகளாலும் சிலர் ஓட்டுக்களை இந்த கட்சிகளுக்கு வாரி வழங்கி உள்ளனர்... அந்த வகையில் இந்த இருகட்சிகளையும் ஆதரிக்க சொன்ன கட்சிகளும் தான் குற்றம் செய்தவை

  ReplyDelete
 4. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னவருக்கு கிடைத்த பட்டங்கள்,அமெரிக்க எடுபிடி,ஏகாதிபத்தியத்தின் அடிமை,டாட்டா பிர்லாக்களின் கையாள்.சொன்னது துண்டர்கள் அல்ல,செங்கொடி தோழர்கள்.

  ReplyDelete
 5. வரிசையாய் நிற்கும் பனைகள்
  முண்டி அடிக்கும் மக்கள்
  ஓரறிவும் ஆறறிவும்
  -சித்திரவீதிக்காரன்.

  நம் மக்களை குறித்து என்ன சொல்வது? பாவம்.

  ReplyDelete