-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் 16 : கருணாநிதியின் மௌனம்

வம்பரங்கம் 16 : கருணாநிதியின் மௌனம்

karu-xcv3

 

தங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது ஆளுக்கு முதலில் அதை மறுத்து அறிக்கை விடுத்தார் கருணாநிதி. தி.மு.கவுக்கு எதிராக சதி என்று கேடயத்தைத் தூக்கிப் பார்த்தார்.

 

அடுத்து தனது மகள்  கனிமொழி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த போது  தன் குடும்பத்துக்கு எதிரான சதி என்று பொங்கி எழுந்தார். உயர்நிலைக்குழுவை அவசரமாகக் கூட்டி வியூகம் வகுத்தார்.

 

இதோ... தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சன் டிவியின் தகிடுதத்தங்களும் ஊரெல்லாம் பேசப்படுகிறது.

 

மாறன் மத்திய அமைச்சர் மட்டுமல்ல. பேரனும் கூட.  ஆனால்  இப்போது மட்டும் கருணாநிதி  ஏன் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்?

Related Posts with Thumbnails

12 comments:

 1. தவறான ஒரு தகவல்.மாறன் பிரதர்ஸ் கருணாநிதியின் மகள் வயிற்று பேரன்கள் அல்ல.கருணாநிதியின் மகள் திருமணம் செய்திருப்பது முரசொலி மாறன் தம்பி முரசொலி செல்வம்.இவர்கள் இருவரும் கருனாநிதியின் சகோதரியின் மகன்கள்.

  ReplyDelete
 2. உலக சினிமா ரசிகன், நன்றி.

  ReplyDelete
 3. கருணாநிதியின் சொந்த அக்காவின் பேரன்கள்.

  ReplyDelete
 4. வாய் திறந்ததாய் நினைவு. மாறனை பதவு விலகச்சொல்ல ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை என்பதாக இருந்தது அந்த அறிக்கை.

  ReplyDelete
 5. இனிமேல் என்ன பேசமுடியும், கான்கிரஸோ வெளியோ போ என்று கழுத்தைப் பிடித்து தள்ளிவிட நேரம் பார்க்கிறது. திருடும் போது யாருமே யோசிப்பதில்லை, ஒரு நாள் பிடிபடுவோம் என்று.

  கனிமொழிக்காக ஜாமீன் வாங்க ராம்ஜெத்மலானியை பிடித்த கலைஞர் ராசாவுக்காக ஒன்றுமே செய்யவில்லையே?

  இப்போது மாறன் அடுத்து முந்திஅய அரசின் பிஜேபி அமைச்சர்கள் பொறியில் வருவார்கள்.

  ReplyDelete
 6. பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா என்று சோனியா அம்மா சொன்ன போதும் பொங்கி எழாமல் விம்மி கொண்டிருக்கும் கலைஞர் யாருக்காகவும் வக்காலத்து வாங்கினால் நடக்க போவது ஓன்றுமில்லை.

  ReplyDelete
 7. மீண்டும் மீண்டும் கலைஞரை பற்றி பதிவுகள் எழுதி சிலாகிப்பதை விட, இந்த ஆட்சியில் நிகழப்போகும் கொடுமைகளையும் எதிர்வர காத்திருக்கும் அபாயங்களையும் கொஞ்சம் எழுதினால் ஆறுதலாக இருக்கும்.

  ஆளூநர் உரையை கொஞ்சம் பேசுங்களேன்.

  ReplyDelete
 8. ராசா ஒரு தலித் அவர் முன்னேறுவதை பலர் விரும்பவில்லை என்றார் கருணா நிதி முதலில். ராசா இப்போது இருப்பதோ திகார் சிறையில். டெல்லி சென்று அவரைப்பார்க்கக்கூட போகவில்லை தலித்துகளின் சம்பந்தியாக இருந்தும்.
  உயர்குழுக்கூட்டத்தில் (தேவைப்பட்டால் மட்டுமே இது கூட்டப்படுகிறது) கட்சியைக்காப்பதும் கனிமொழியைக்காப்பதும் வேறல்ல என்றார். மாறனுக்கு திமுக துணை நிற்கும் என்ற அளவில் இன்றைய நாள் போய்க்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 9. செத்த பாம்பை அடிப்பதில் என்ன லாபம் என்கிறாரா செய்யது அண்ணன் அல்லது ஒரே குட்டையில் ஊறுகிற இன்னொரு மட்டையையும் விமர்சியுங்கள் என்கிறாரா?எல்லாம் நடக்கும் அண்ணே,கவலையை விடும்.

  ReplyDelete
 10. கலாநிதி, தயாநிதி துரோகம் : கலைஞர் காரசார அறிக்கை  மாறன் சகோதரர்கள் தொடர்ந்து திமுக மீதும் திமுக ஆட்சி மீதும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது குறித்து முதல்வர் கருணாநிதி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இருவரும் திமுக மீதும் திமுக ஆட்சி மீதும் பழி சுமத்தி வருகிறார்கள். தாத்தா, பேரன் என்கிற முறையில் நான் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் நான் தலைமை வகித்து நடத்திடும் திமுக கட்சி மீதும் திமுக ஆட்சி மீதும் பழி சுமத்துவதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  தினகரன் நாளிதழின் கருத்துக்கணிப்பு, அதனால் நிகழ்ந்த தினகரன் அலுவலக தாக்குதல் சம்பவம், அண்ணா அறிவாலயத்திலிருந்து சன் தொலைக்காட்சி அகற்றப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்  மாறிவிட்டார்கள் மாறனின் பிள்ளைகள்


  ''இன்னும் வாழவேண்டிய வயது இருப்பினும் என்னை மீளா சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்து விட்ட மாறன்; அவர் பெற்ற பையன்கள் கலாநிதி, தயாநிதி எனும் புகழ், அன்பு என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த இருவரும் அவரின் வழித்தோன்றல்களாக என்னிரு கரம் பிடித்து துளிர்த்து தழைத்த காட்சியை அனைவரும் அறிவீர்கள்.  ஆனால் வயது வந்த பிறகு மாறன் எனும் பாசமிகு மதிற்சுவர் தாண்டி இருவரும் எனக்கெதிராக கிளம்பிடுவர் என்றோ; பகை பாராட்டுவர் என்றோ நான் கனவிலும் கருதவில்லை. அவர்தம் போக்கும் நோக்கும், அவர்கள்’’பூமாலை’’ எனும் கேசட் நடத்தியபோது இருந்ததை விட அதன் வளர்ச்சி சுமங்கலி கேபிள் விசன் ஆக், சன் டிவியாக, சன் நெட் வொர்க்காக வளர்ந்து மாறியதும் மாறனின் பிள்ளைகளும் மாறிவிட்டார்கள்.  சன் டிவியில் பங்குதொகை ஏன் பிரிக்கப்பட்டது


  முறசொலி மாறனும் முரசொலி அலுவலக முகப்பில் சிலையாக நின்றுவிட்டார். அதன் பிறகுதான் சன் டிவி பஙுத்தொகை பிரிக்கப்பட்டு எனது பங்காக வந்த நூறு கோடியை துணைவியர்க்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்குமாக பங்கிட்டுக்கொண்டோம்.  சன் தொலைக்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதனை பிரிக்க வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது. எதற்காக அவ்வளவு அவசர அவசரமாக பிரிக்க முடிவெடுத்தார்கள். சன் தொலைக்காட்சியின் லாபம் எவ்வளவு? அதன் கணக்கு எவ்வளவு? என்று எந்த விவரத்தையும் நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை

  ReplyDelete
 11. கருத்துகணிப்பு  தினகரன் நாளிதழில் கருத்துக் கணிப்பு ஒன்று வரப்போகிறது என்று என் கவனத்திறகு வந்த போது தேர்தல் இல்லாத நேரத்தில் எதற்காக இந்த கருத்துக்கணிப்பு, மெகா சர்வே என்றெல்லாம் தேவையில்லாத பிரச்சனையை எல்லாம் எழுப்பவேண்டும். அது தேவையில்லை. அதனை வெளியிட வேண்டாமென்று இரண்டு மூன்று முறை நான் நேரிலேயே தெரிவித்தேன்.  என் யோசனையை ஏற்றுக்கொள்ளாமல்2007 ம் ஆண்டு தினகரன் நாளேட்டில் அந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. தனிழகத்தைச்சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுவது யார்? என்ற தலைபிலேயே அந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில் தயாநிதிமாறனுக்கு 67 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு 27 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் டி.ஆர்.பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் டாக்டர் அன்புமணிக்கு 1 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்றும் தினகரன் நாளிதழ் வெளியிட்டது.


  இரண்டு மூன்று கட்சிகளின் சார்பில் மத்தியில் கூட்டணியில் மந்திரிகள் இருகும்போது அந்த கட்சியை சேர்ந்தவருகெல்லாம் இல்லாத ஆதரவு தயாநிதி மாறனுக்கு இருப்பதை போலக்குறிப்பிடும் இந்த கருத்துக்கணிப்பு தேவைதானா? தோழமை கட்சியிலே இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாசுக்கு ஒரு சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்று வெளியிடுவது சரிதானா? இதனால் அந்த கட்சியிலே உள்ளவர்கள் திமுகவின் மீது எந்த அளவிற்கு கோபம் கொள்ளக்கூடும். அதே நேரத்தில் அகில இந்திய அளவில் பாராட்டு பெற்று நீண்ட அனுபவம் பெற்றுள்ள நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு 27 சதவிகிதத்தினர்தான் ஆதரவு என்றும் திமுகவை சேர்ந்த தயாநிதிமாறனுக்கு மட்டும் 64 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் வெளியிட்டால் காங்கிரஸ் கட்சியிலே உள்ள தோழர்கள் அதனை வரவேற்பார்களா? எதற்காக வீண் வம்பை வளர்க்க வேண்டும்.


  திமுக சார்பிலே அமைச்சராக உள்ள டி.ஆர்.பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்று எழுதுவதில் என்ன லாபம்? இந்த கருத்துக்கணிப்பினை வெளியிட்டே இருக்கக்கூடாது என்பது என் கருத்தாக மட்டுமல்ல, அப்போது தமிழகத்திலெ உள்ள மூத்த அரசியல்வாதிகள் அனைவராலும் அந்த கருத்துக்கணிப்பு தவறாக கருதப்பட்டது.


  அரசியல் வாரிசு யார்? குடும்பத்தில் குழப்பம்!


  கலாநிதி, தயாநிதி இருவரையும் அழைத்து தினகரன் வெளியிட்ட கருத்துகணிப்பை கண்டித்தேன். இதுமாதிரி வெளியிடுவதி நிறுத்துங்கள் என்று கோபப்பட்டேன். என்னுடைய கோபம் அலட்சியப்படுத்தப்பட்டது.


  9.5.2007 அன்று தினகரன் இதழில் முதல் பக்கத்தில் தலைப்பிலே கட்டம் கட்டி ஒரு செய்தி. ‘’கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? 11 ம் பக்கம் பார்க்க’’ என்று தலைப்பிட்டு மீண்டும் ஒரு கருத்துகணிப்பு வெளியிடப்பட்டது.  இதில் தமிழக அளவில் மு.க.ஸ்டாலின் தான் அரசியல் வாரிசாக வரவேண்டும் என்று 70 சதவிகிதம் பேரும் மு.க.அழகிரிக்கு 2 சதவிகிதத்தினரும் கனிமொழிக்கு ஆதரவாக 2 சதவிகிதத்தினரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிட்டார்கள்.


  முதல் கருத்துக்கணிப்பு தோழமை கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கானது என்றால், இந்த கருத்துக் கணிப்பு குடும்பத்தாருக்கு மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.


  மு.க.அழகிரி ஆனாலும் கனிமொழி ஆனாலும் எனக்கு அரசியல் வாரிசாக வருவதற்கான முயற்சியோ அறிவிப்போ எதிலும் ஈடுபடாத நிலையில் தேவையே இல்லாமல் வீன் வம்பினை விலை கொடுத்து வாங்குவதைப்போல அவர்களுக்கு தமிழகத்திலெ சதவிகிதம்தான் ஆதரவு என்று செய்தி வெளியிட்டார்கள்.

  வன்முறை ஏன்?


  மு.க.அழகிரிக்கு இரண்டு சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்ற செய்தியால் அழகிரி வேண்டுமானால் பொறுமையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா. அழகிரிக்கே தெரியாமல் அந்த கருத்துகணிப்பை வெளியிடட் தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அநத வன்முறை செயலில் கொஞ்சம் கூட அழகிரிக்கு ஈடுபாடு கிடையாது என்ற போதிலும் அந்த வன்முறை சம்பவத்தால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகும் நிலைமை ஏற்பட்டது.  கருத்து கணிப்பு வெளியிட வேண்டாமென்று நான் எத்தனை முறை சொன்னேன்? என் வார்த்தை கேட்கப்பட்டதா? அதன் பலன் என்னவாயிற்று? எதற்காக ஸ்டாலினை உயர்த்தி வைத்து அழகிரியையும் கனிமொழியையும் மட்டம் தட்ட நினைக்க வேண்டும். ஒரே குடும்பத்திற்குள் இப்படிப்பட பிரித்தாளும் சூழ்ச்சி நல்லதுதானா? மு.க.அழகிரியை அத்துடனாவது விட்டார்களா? 10.5.2007 தேதிய தினகரனில் ‘’ கருத்து கணிப்பை சகிக்க முடியாமல் மு.க.அழகிரி வெறியாட்டம்..ரவுடிகளை ஏவி தாக்குதல்’’ என்ற தலைப்பிலே செய்தி வெளியியிட்டார்கள்.

  ReplyDelete
 12. மோசமான விமர்சனங்கள்  குடும்பத்துக்குள்ளே சண்டையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் அன்று முதல் இன்று வரை தினகரன் நாளேட்டில் என்னுடைய தலைமையிலே உள்ள திமுக அரசையும் அரசின் காவல் துறையையும் மற்ற துறைகளையும் எந்த அளவிற்கு மோசமாக ..ஏன் எதிர்கட்சி ஏடுகளை விட மோசமாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.  மே 11ம்தேதி கொட்டை எழுத்துக்களில் ‘’அழகிரி அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்’’ என்றும் ‘’நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன் என்றும் கலாநிதிமாறன் கூறியதாக தினகரன் நாளிதழில் எழுதப்பட்டிருந்தது. அதே கருத்துக்கணிப்பின் தொடர்ச்சியாக ‘’எந்த அரசுத்துழ்றை அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்குகிறார்கள்?’’என்ற தலைப்பில் என் பொறுப்பிலே உள்ள காவல்துறையில்தான் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று முடிவு வெளியிட்டார்கள்.
  எதிர் கட்சிகள் கேள்வி  தினகரன் அலுவலகத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சி உறுப்பினர்கள் 10.5.2007 அன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்கள். அபோது நான் அளித்த பதிலின் இறுதிப்படிவம வருமாறு:  9.5.2007 அன்று காலை 9.30 மணிக்கு மதுரையில் சிலர் கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாடட்ம் செய்து தினகரன் இதழை தீயிட்டு கொளுத்திவிட்டு கலைந்து சென்றனர்.  இது சம்பந்தமாக தலைமைக்காவலர் ரகுநாத கலைமணி எனபவரின் புகாரின் பேரில் ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண் 224..2007 பிரிவு 147,148,285 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படு அதன் அடிப்படையில் கோபிநாதன, குமார், சேகர், பாண்டி, அருணாச்சலம் ஆகிய ஐந்து எதிரிகள கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் காலை 10மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் தினகர வளாக அலுவலகத்திற்குள்ளே அத்துமீறி நுழைந்து கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.  மூச்சு திணறி இறந்தனர்


  கல்வீசி தாக்கப்பட்டதை அடுத்து பிரேம்குமார், அழகுராஜா இருவர் கைதாகியுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து தினகரன் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காவல்துறையையும் மீறி சிலர் அலுவகத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார்கள். இதில் மூச்சுத்திணறி மூன்று பேர் இறந்துள்ளார்கள்.  விசாரணை


  இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மத்திய அரசுக்கும் தலைமைச்செயளாலர் மூலமாக கடிதம் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக்கொண்டேன்.


  இதன்பிறகு நாள்தோறும் அழகிரிக்கு சம்பந்தமே இல்லாத பிரச்சனைகளிலும் சம்பந்தப்படுத்தி அவர் மீது பழியைப்போட்டு செய்தி வெளியிட்டு வருகிறார்கள். மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, மேலும் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மீதும் மோசமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.


  தாத்தா பேரன் என்கிற முறையில் நான் பொறுத்துகொள்ளலாம். ஆனால் நான் தலைமை ஏற்று நடத்திடும் திமுக கட்சி மீதும் திமுக ஆட்சி மீதும் வேண்டுமென்றே தொடர்ந்து பழி சுமத்தி வந்தால் அதனை நான் தாங்கிக்கொள்ளமுடியுமா?


  நாசம் செய்தார்கள்  அண்ணா அறிவாலயத்திற்குள் இருந்து கொண்டே அந்த கழகத்தி பழித்து வந்தால் அதை பார்த்துகொண்டிருக்கமுடியுமா? அதனால்தான் அந்த வளாகத்தை விட்டு சன் டிவியை காலிசெய்யச்சொல்லப்பட்டது. போகும்போது அவர்கள் கட்டடத்தை நாசம் செய்துவிட்டு சென்றார்கள்.’’என்று குறிப்பிட்டுள்ளார்.

  நன்றி நக்கீரன்
  வெள்ளிக்கிழமை, 21, நவம்பர் 2008 (17:48 IST)

  ReplyDelete