-->

முன்பக்கம் , , , , � கனிமொழி: தந்தையின் சாயல்

கனிமொழி: தந்தையின் சாயல்

kanimozhi

 

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம்.  முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார்.  அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.  அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார்.  கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார். சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார்.   வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன்.  அருகில் நின்றிருந்தாலும்  மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார்.  முன்பெல்லாம் அவர்  எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.

 

ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது.  சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின்   எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு  சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான்  அவருடனான  உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.

 

சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார்.  தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.

 

முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள்  பொதுவாக இருந்தன.  ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை.  அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.

 

கைது செய்யப்படுவோம் என  எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார்.  சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...

Related Posts with Thumbnails

12 comments:

 1. அச்சு அசலாய் அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.True ..The rise and fall of Kani is too SPEED...We shall welcome the arrest..The culprits should not escape from the LAW.

  ReplyDelete
 2. கவிஞராக இருக்கும் வரையில் அனைவரும் நல்லவர்கள் தான்... ஆனால் அரசியல் சாக்கடையில் சென்றால் மீள்வது கடினம்.. பாவம் அதிகாரம் அழித்தது..

  ReplyDelete
 3. வீழ்ச்சி என்ற சொல்லுக்கு அரசியல் அகராதியில் இடமில்லை ஒரு சில நேரங்களில் மட்டும் தவிர்த்து.

  அவை:

  அரசியல்வாதி மிகவும் தள்ளாத வயதினை எய்தி விலக்கொள்வது (வாஜ்பேயி)
  மிகவும் உடல் நலக்குறைவு இதய நோய் போன்று (கே. ஏ. கிருஷ்ணசாமி)

  மற்றபடி எந்த அரசியல் வாதிக்கும் வீழ்ச்சி என்பதே கிடையாது. அதுவும் இளவயதினர் என்றால் கேட்க வேண்டாம் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு.

  கனிமொழி பெண். எனவே அவன் அவர் கணவரிடம் அழுதிருக்கலாம்.

  கவிதை எழுதினார். கட்டுரை வரைந்தார். இலக்கியக்கூட்டங்களில் உரையாற்றினார். இலக்கிய வாதிகளோடு பொழுதைக் கழித்தார். அப்போது நன்றாக இருந்தார். இப்போது நன்றாக இல்லை. அரசியல் என்னும் சாக்கடை கெடுத்துவிட்டது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  இலக்கியம் பேசி பொழுதைப் போக்கியது ஒரு பருவம்.
  அதிலிருந்து விலகி அரசியல் வாழ்வை ஏற்றது அடுத்த பருவம்.
  இஃதெல்லாம் ஒரு அரசியல்வாதியின் பரிணாம வளர்ச்சி.

  அரசியலில் தூய்மை என்றே கிடையாது. அதில் முட்டாத்தனம் இருக்கலாம்.
  அதாவது தன் பிம்பம் தொடர்ந்து வளர்ந்து மக்களை அவ்வலையில் சிக்க வைக்கவேண்டும். எம். ஜி.ஆர் செய்ததைப்போல.

  கனிமொழி அரசியல் முதிர்ச்சியில்லையாதலால் தன் பிம்பத்தை தாற்காலிகமாக ஓட்டை விழ வைத்து விட்டார்.

  சீர் செய்து விடலாம். அதற்கு அவருக்கு ஆண்டுகள் இருக்கின்றன.

  ReplyDelete
 4. இலக்கியவாதியும் சமூக ஆர்வலருமான கனிமொழிக்கு நிகழ்ந்தது வருத்தமாகவே இருக்கிறது.-கிரேக்க/ ஷேக்ஸ்பியர் நாடகங்களின் நாயகர்களுக்கு வந்த உயர்ச்சியும் வீழ்ச்சியும் போன்று!...ஏதோ ஒரு குறைபாடு/ பலவீனம் காரணமாக அந்த வீழ்ச்சி நேரும். -கனிமொழியின் பலவீனம் அடித்தட்டு மக்களிடமிருந்து ஒரேயடியாக விலகி விட்ட பரிதாபம்தான்!

  ReplyDelete
 5. Although I hated the politics of Karunanithi,I had a soft spot for Kanimozhi at the beginning,but then she got involved in politics and I didn't like what she was doing.Not that I don't encourage women going into politics,I am an ardent supporter of women getting involved in politics.It is just that Kanimozhi became just like an other greedy and corrupt politician.When I saw her grinning at Sri Lankan president Rajapaksa I was mortified.That showed us the transformation of poet Kanimozhi into a selfish greedy politician who is detached from ordinary people.

  Don't they say 'power corrupts'!!

  Simmakkal!

  I don't agree with your analysis.
  Are you saying it is OK to be a thief as far as that person doesn't get caught?

  -Vanathy

  ReplyDelete
 6. ||காத்திருக்கிறேன்
  என் முறை வருமென்று... ||

  தீர்க்க தரிசனத்துடன்தான் எழுதியிருக்கிறார்...வந்து விட்டதே !

  ReplyDelete
 7. கவிதை வரிகள் தனக்கே
  பொருந்திப்போகுமேன்று
  கனவிலும் நினைத்திருக்க மாட்டார்
  கலைஞரின் மகளாக மட்டுமே ஆகிப்போன
  கவிதாயினி கனிமொழி.

  ReplyDelete
 8. அரசியலில் முழுமையாக ஈடுபட்டு அதிகாரம் கையில் வந்தபிறகு இப்படி மாறிவிட்டார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்குள்ளேயிருந்த ஒரு குணம் பின்னாளில் வெளிப்பட்டது என்று சொல்லலாம்.

  ReplyDelete
 9. தந்தையும், தாயும் பெற்ற‌ இய‌ல்பின‌ளாம் இந்த‌க் க‌னி.
  முத‌ல் த‌மிழ்ச் ச‌ங‌க‌மத்தின் க‌ண‌க்கை வ‌லையில்
  போட்டிருக்கிறோம் என்ற‌ பாதிரியார் காஸ்ப‌ரின்
  கூட்டுக் க‌ய‌மையில். கார்த்திக் சித‌ம்ப‌ர‌த்துட‌னான
  "க‌ருத்து" வ‌லைம‌ணையில், அப்பாவுட‌னான சிறைவாச‌ல் காத்திருப்பு,
  ராஜ்ய‌ச‌பை உறுப்பின‌ர், வேலைவாய்ப்பு முகாம் மூல‌ம் வே(ஏ)று முக‌ம்.
  சேர்ந்த‌ இட‌ங்க‌ளும், சேர்த்த‌ இட‌ங்க‌ளும், இடைஞ்ச‌லாக இன்றோ இற‌ங்கு முக‌ம்.
  "பிழையில்" பிழைப்ப‌தெல்லாம் ஒரு பிழைப்பா?

  ReplyDelete
 10. ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி நாகபட்டினத்துக்கு வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் முத்துவேல், அஞ்சுகம் தம்பதிகளுக்கு நாகபட்டினத்தில் திருக்குவளை என்ற ஊரில் 1924 ஜூன் மூன்றாந் திகதி பிறந்த தட்ஷணாமூர்த்தி பின்னர் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டதை மறக்க முடியுமா?

  முதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?

  ராசாத்தி என்றழைக்கப்படும் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்கு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை...மகள்...என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.

  கருணாநிதிக்கான அரச வாடகைப் பணத்தில் ஒலிவர் தெருவில் உள்ள வீட்டில்தான் கனிமொழியும் தாயாரும் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் கோபாலபுரத்துக்கு அருகில் உள்ள C.I.T கொலனியில் தாயாரோடு வாழ்ந்தவர். கருணாநிதிக்கு தினமும் இரவுத் தூக்கம் C.I.T.கொலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு C.I.T.கொலனி. சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு C.I.T கொலனிக்கு போய்விடுவார்.

  எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

  கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.

  செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் மூன்று அப்பாவி ஊழியர்கள் தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?

  கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?

  சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?
  சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?
  காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?
  நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?
  ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?
  எம்ஜியாரை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா? எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா? எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
  வை கோவை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா?

  -நல்லையா தயாபரன்

  ReplyDelete
 11. கனிமொழி தனிப்பட்ட முறையில் பெண்களுக்காக,நண்பர்களுக்காக குரல் கொடுப்பவர்.முகச்சாயல் மட்டுமே தந்தை.ஒரு சாதாரண சென்னை வாசியாக இருந்து தெரிந்துகொண்டவர்.மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்.அரசியல் சாயம் பூசும் மனிதர்களுக்கு இதெல்லாம் புரியுமா?சாத்தியமில்லை!

  ReplyDelete
 12. கனிமொழி எழுதிய கவிதைகளை விடவும் மிகச் சிறந்த கவிதைகளை நிறையப் படித்திருக்கிறேன். ஆனால், கனிமொழிக்குக் கிடைத்த பாராட்டெல்லாம் அரசியல் அதிகாரத்தின் பெயரால் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டே அன்றி வேறில்லை.
  (கனிமொழி கணவரிடம் அழுதார் என செய்தி வந்தது. கணவர் பெயரைக் குறிப்பிடவில்லையே.)

  ReplyDelete