-->

முன்பக்கம் , , , , , � பதிவுலகம்: கொண்டாடுவோம் வாருங்கள்!

பதிவுலகம்: கொண்டாடுவோம் வாருங்கள்!

wbd-logo

மனித வாழ்வின் மகத்துவமான அடையாளங்களில் ஒன்று புத்தகம். நாளை உலக புத்தக தினம். பாரதி புத்தகாலயம், இதனைக் கொண்டாடும் விதமாக ‘உலகப் புத்தக தினம்’ என ஒரு வலைப்பக்கம் ஆரம்பித்து இருக்கிறது.

இரண்டே நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பதிவுகளில், புத்தகங்களின் பட்டியலைத் தந்திருக்கிறது. சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையிலான ஐயாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களின் பட்டியல், பதிப்பகம், விலை என தொகுத்திருக்கிறது.

அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளு‍ரைப்போம். பிறந்தநாள் பரிசாகவும், திருமணநாள் அடையாளமாகவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்!


Related Posts with Thumbnails

5 comments:

 1. ஒரு நல்ல வலைப்பக்கத்தை
  அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 2. அறிமுகத்திற்கு நன்றி. கொண்டாடி மகிழ்வோம்..

  ReplyDelete
 3. புத்தகங்களை பரிசாக வழங்குவது நன்று.

  ReplyDelete
 4. //அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளு‍ரைப்போம். பிறந்தநாள் பரிசாகவும், திருமணநாள் அடையாளமாகவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்!//

  அற்புதம் மாது அண்ணா. உண்மையில் நாம் கொண்டாடி மகிழவேண்டியது புத்தகங்களையும் புத்தகங்களுக்கென்றே உருவான இந்த நாளையும் தான். கொண்டாடலாம். நன்றி.

  ReplyDelete
 5. அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளு‍ரைப்போம்./

  அறிவைக் கொண்டாடும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

  ReplyDelete