குபீரென்று சிரித்தான் என்று நமது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அடிக்கடி வரும். அதென்ன குபீர் சிரிப்பு என்று தோன்றும். எதிர்பாராமல் திடுமென வாய்விட்டு சிரிப்பு வருவதற்கு அப்படி ஒரு அர்த்தம் என்று தெளிவு ஏற்பட்டது. அந்த குபீர் சிரிப்பை இன்றைக்கு நானும் அனுபவித்தேன். கட்சியின் உயர்மட்டக்குழுவில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருக்கமானப் பேச்சைப் படித்த பிறகு வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்?
சமீப காலமாக தி.மு.க தலைவரின் பேச்சுக்கள் இப்படி சிரிப்பை வரவழைப்பதாக இருக்கின்றன. விரைவில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையும் மிஞ்சிவிடுவார். இரண்டு நாட்களுக்கு முன்பு, “கனிமொழியும், தயாளு அம்மாளும் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்கிறார்களே” என ஒரு நிருபர் கேட்டதற்கு. “இதயமற்றவர்களின் கேள்விகள் அவை” என்று தி.மு.க தலைவர் சொன்னபோதே சின்னதாய் ஒரு குபீர்ச் சிரிப்பு வந்தது. தேசத்தின் நிதியைச் சுருட்டியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும்தான் இங்கு இதயங்கள் இருக்கும் போலும். அதைச் சுட்டிக்காட்டுபவர்கள் இதயமற்றவர்கள் போலும். இதை நாம் கலைஞர் அகராதி என இனிக் கொள்வோமாக!
இப்போது தலைவர், ‘என் சோகக் கதையை கேளு உடன் பிறப்பே’ ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார். கனிமொழி அவர் மகள் என்பதால் வளர்ச்சி பெற்றதாய் யாரும் கருத முடியாதாம். கட்சியின் தொண்டராக சேவையாற்றித்தான் அவர் முன்னுக்கு வந்தாராம். கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதாம். கோபாலபுரத்திலேயே இருக்கிறாராம். மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே அவர் செல்லவில்லையாம். இவ்வளவு அதிமுக்கிய விஷயங்களை கட்சியின் உயர்மட்டக்குழுவில் பேசியதெல்லாம் கூட பரவாயில்லை. அதற்கெல்லாம் கூட எனக்கு குபீர் சிரிப்பு வரவில்லை. “என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கிற சூழ்ச்சிக்கு நான் என்றும் அடி பணிந்தவனல்ல” என்ற வரிகளைப் பார்த்ததும்தான் குபீர் சிரிப்பு வந்தது.
காட்டிக்கொடுத்தல் என்றால் துரோகம், உட்பகை என்ற அர்த்தங்கள் எல்லாம் உண்டு. குறளுக்கு உரை எழுதியவருக்கு அது தெரியாதா என்ன? அந்த அர்த்தம்தான் இங்கு அவரது திருவாயால் அனர்த்தமாகியிருக்கிறது. ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸை உலகம் பழிக்கிறது. கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனை வரலாறு தூற்றுகிறது. காட்டிக்கொடுத்தல் இழிவானது. எல்லாம் சரி. ஆனால் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தது ‘கொலையாளிகளிடம்’. கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிகொடுத்தது ‘ஆங்கிலேயரிடம்’. ஆனால் கருணாநிதியோ கட்சியைக் காட்டிக் கொடுக்க மறுப்பது ‘மக்களிடம்’. ஆஹா!
இதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள் போலும். ஆக, மக்களிடம் மறைக்க கோடி கோடியாய் வைத்து இருக்கிறார் தமிழனத்தலைவர் & தமிழக முதல்வர்.
“ஆர்டர்.... ஆர்டர்...”


பாவங்க. வயசானகாலத்தில ஏதோ சொல்றாருன்னு விட்டுட்டுப் போறத வுட்டுட்டு, எந்தப் பல் தங்கப் பல்லுன்னு தேடறீங்க!
ReplyDeleteஅவரோட நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு.
ReplyDeleteகனிமொழி காப்பாத்துறதும் கழகத்தை காப்பாத்துறதும் ஒன்னுதா!!
சிபிஐ ஏதோ சுப்ரீம் கோர்ட்டு சொல்லுர்தார கொஞ்ச நடவடிக்கையை எடுக்குது, இதுக்கு கலைஞர் இப்ப காங்கிரஸை மிரட்ட முடியுமா? நாட்ல விலைவாசி, பெட்ரோல்,டீசல் கூட்டும்போது வாயே தொறக்கல, இங்க தமிழ், தமிழர் பேரைச்சொல்லி அரசியலை நடத்தி ஆட்சிக்கு வந்துட்டு ஈழத்தமிழரை அழிக்க ஆயுதங்களை கூட்டணியிலிருந்து வழங்குனீங்க..
அதுக்கெல்லாம் மத்தியரசை மிரட்டாதவங்க சொந்த நலன்களுக்கு மிரட்டுரதை மக்கள் புரிஞ்சிட்டாங்க. இனிமே ஏமாத்தமுடியாது.
// கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனை // கட்டபொம்முவை ஆங்கிலேயர் கைது செய்தது புதுகோட்டை தொண்டைமான் அரண்மனையில்.
ReplyDeleteஎட்டப்பர் பாவம். எதுகை மோனையாக இருப்பதால் கட்டபொம்மு கூடவே எட்டப்பர் என்று சொல்லிவிடுகிறார்கள் போல. பாவம் :(
நல்ல பதிவு.
ReplyDeleteஇது ராசாவுக்கு மறைமுகமாக விடப்பட்ட எச்சரிக்கை என நினைக்கிறேன்.
ReplyDeletenandru
ReplyDeletegood post
ReplyDelete//"ஆர்டர்.... ஆர்டர்...” //
ReplyDeleteதீர்ப்பையும் நீங்களே கொடுத்திடுங்கணா,,,,,
ஹலோ.... சார்... திமுக ஒரு அப்பழுக்கற்ற கட்சி... ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யாத உன்னத தலைவர்கள் நிரம்பிய கட்சி. மக்களுக்காக்வே நாயாக உழைத்து ஓடாகத் தேய்ந்த ஒரே இந்தியக்கட்சியும் அதுதான்.. கனிமொழி மீதுள்ள பொறாமையில் சிபிஐ அவரை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துவிட்டால் அதற்கு திமுக என்ன செய்யும் பாவம்!!! கனிமொழியினால் வேலைவாய்ப்பு அடைந்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவரால்தான் எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, தம்பி, அக்கா, அக்காவின் கணவர், அவர்களின் குழந்தை என எல்லாருக்கும் வேலை கிடைத்தது. கனிமொழியோடு தொடர்பு கொண்ட காலத்தில் (தப்பா நினைக்காதீங்கப்பா) ராஜாவினால்தான் எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கும் செல்போன் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்
ReplyDeleteஇனிமேல் கலைஞ்சரைப் பற்றி தப்பாக எழுதினால் மன்னிக்கமாட்டேன்... அவரைப் போல ஒழுக்கக்க்கம் நிறைந்தவரை அகிலத்தில் பார்க்கவேமுடியாது!!
அப்பாடி!!
அவர் கோபாலபுரத்தில் இருந்தால் என்ன அல்லது அந்த வீட்டுக்குப்போனால்தான் என்ன? அது அவரது சொந்த விஷயம். இதை ஒரு மேட்டராக கட்சி உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் அவர் சொல்ல; அதை கேட்க குடும்ப உறுப்பினர்களோடு உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என்று கொஞ்சம்பேர் விரவி இருக்க... நல்ல தமாஷ்தான் இன்னும் இது போன்ற பேச்சுக்களை எல்லாம் தமிழக மக்கள் எவ்வளவு நாட்களுக்கு வேண்டியிருக்குமோ தெரியவில்லை குடும்ப விஷயத்தில் தலைவர் என்றைக்குமே கறார்தான். அன்றைக்கு ஸ்டாலினுக்கு எனது மகன் என்பதால் அவருக்கு மரியாதை என்பதல்ல; அவர் கட்சியில் உழைத்ததனால் உயர்வு அடைந்திருக்கிறார் என்று சொன்னது போலவே இன்றைக்கு கனிமொழிக்காகக்கரைந்திருக்கிறார்.
ReplyDeleteமகாபாரத காட்சி வேறு, தர்மர் பாஞ்சாலியை சபையில் தனித்து விட்டது போல் கட்சியை (மகளை) விட்டுவிட மாட்டேன்.சிஐடி காலணியில் ஊடக முற்றுகையில் சிக்கியிருந்த கனியை, நானே நேரில் சென்று பாதுகாப்பாய், மகளின் விருப்பத்தையும் மீறி பொதுக்குழுவுக்கு அழைத்து வந்தேன். கட்சிக்காரர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
ReplyDeleteநாட்டு நிகழ்வுகள் மீது வினைபுரிந்து கொண்டே இருப்பது நல்ல எழுத்தாளனின் இயல்பு. அதை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறீர்கள். நல்ல பதிவு.
ReplyDeleteஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பலரின் பெயர்கள் அடிபட்ட போதும், ராசாவை கைது செய்த போதும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த போதும் கூடாத தி.மு.க உயர்மட்டக்குழு கனிமொழி மீதான நடவடிக்கை பற்றிய பேச்சு எழுந்தவுடன் அவசரமாக கூடுகிறது. கலைஞரின் ”மக்கள்” பாசம் இப்போதுதான் தெளிவாகப் புரிகிறது.
மாதவ்ஜி! ஒரு மண்ணும் நடக்கப்போறதுஇல்ல. "சின்னப்பையனை ஜெயிக்க வச்சேன்ல" அப்புறம் என்ன வேணும்.? ங்காரு தாத்தா! குங்குமபொட்டு ஜோஷி படற பாட்டப் பாத்தியளா?" ப.சி யும் ராஜாவும் செர்ந்து முடிவு செஞ்சாங்க. நா எப்படி தலையிட முடியும்னு " மனமோகன சிங் சொல்லிட்டாரு. அதத்தான் ஜொஷி எழுதி புட்டாரு.. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் செர்ந்துட்டாங்க.---காஸ்யபன்
ReplyDelete