ஒரு வாக்காளனின் வாக்கு மூலம்!



தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவுக்கு அ.தி.மு.கவும் வரக்கூடாது என்பதும் எனக்கு நியாயமாகப் படுகிறது.

சென்றமுறை நடந்த சட்டசபை தேர்தலின் போதுதான்  ‘இரவுகள் உடையும்’ ஆவணப்படத்தை நான் இயக்கி முடித்திருந்தேன். அ.தி.மு.க ஆட்சியின் கோர முகத்தை அம்பலப்படுத்திய காட்சிகள் படம் முழுக்க இருந்தன.  ஒரே காகிதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் வாழ்வைச் சொல்லும் கதை அது. அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான படமாக  தினமலரிலும், தினகரனிலும், ரிப்போர்ட்டரிலும்  செய்திகள் பெரிதாய் வெளியாயின. உளவுத்துறையின் கண்காணிப்புக்குள்ளானோம். படத்தை  வெளியாக விடாமல் முயற்சிகள் நடந்தன. சி.ஐ.டி.யூவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் படம் வெளியானது. தேர்தல் சமயத்தில் பல ஊர்களின் லோக்கல் கேபிள்களில் விடாமல் ‘இரவுகள் உடையும்’ ஓடியது. அந்தப் படம் எடுத்த அனுபவங்கள் எனக்குள் இன்னும் வெப்பமாக இருக்கின்றன. தந்தையை இழந்த குழந்தைகள் செல்லும் பாதையில் பரிதவிப்பு அடங்காமல் இருக்கிறது. “நாங்க என்ன சார் செஞ்சோம், எங்களுக்கு ஏன் சார் இந்தக் கொடுமை” என தீப்பெட்டி அடுக்கிக்கொண்டே கணவனையிழந்த பெண் கேட்ட கேள்வி நெஞ்சை அறுக்கிறது.  பைத்தியம் பிடித்து ரோட்டில் அலைந்தவர்கள் முகங்களை இன்னும் மறக்க முடியவில்லை.

அவர்களுக்கும், நான் எடுத்த படத்திற்கும்   துரோகம் செய்ய விரும்பாததால், இந்த முறை வாக்களிக்கவில்லை.  30 வருடங்களுக்குப் பிறகு, இந்த தடவைதான் தமிழகத்தில்  80 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது என பெருமிதம் கொள்கின்றனர்.  30 வருடங்களில், இந்த தடவைதான் முதன்முறையாக நானும் வாக்களிக்கவில்லை. எனக்கொன்றும் வருத்தம் இல்லை. எதோ ஒருவகையில் மன நிறைவாகவே இருக்கிறது.

நான் மதிப்பும், மரியாதையும் , நம்பிக்கையும் வைத்திருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆட்சிமாற்றம் அவசியம் என்ற புரிதலுடன், இந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன்  தொகுதி உடன்பாடு வைத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சி மேலும் நீடிப்பது என்பது, ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றாகிவிடும் என்னும் கட்சியின்  நிலைபாடு சரியானதுதான். விலைவாசி உயர்வுக்கும்,  மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்களே  ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்றாகி விடும்  என்னும் கட்சியின் அரசியல் பார்வையும் தெளிவானதுதான்.

ஆனால், இந்தத் தேர்தல் முறை குறித்தும், இதில் இருக்கும் ஜனநாயகம் குறித்தும் எனக்குள் நிறையவே முரண்பாடுகள் வளர்ந்துகொண்டு இருக்கின்றன. அரசியல் என்பது மிக உயர்ந்த மேடை.  மனித சமுகத்தின்  பரிணாமங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. வரலாற்றின் சிக்கலான கேள்விகளுக்கு விடையறியும் சமூக விஞ்ஞானம் அது. மனிதர்கள் தங்கள் சக்தியை உணர்கிற, பிரயோகப்படுத்துகிற கருவி அது.  இப்படித்தான் அரசியலை முன்வைக்கிறது மார்க்சீயம்.  ஆனால், இங்கு அரசியலென அறியப்படுவது நாற்காலிக்கானச் சண்டைகளும், கூத்துக்களும்தான். அதற்கான சதிகளும், சூழ்ச்சிகளும்தான்.  உட்காரும் வெறிகொண்டு தார்மீக நெறிகள் அனைத்தையும் மீறுகிற பொறுக்கித்தனங்கள்தான்.  மக்களை எப்படி ஏமாற்றுவது, பிரச்சினைகளிலிருந்து எப்படி திசை திருப்புவது என்பதே அரசியல் சாணக்கியத்தனம் என பீற்றிக்கொள்ளப்படுகிறது. கேவலம்.

இந்த நாற்காலிச் சண்டைகளை ரசிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் மக்கள் பெரு விருப்பம் கொள்கிறார்கள். பிரச்சினைகளை,  கொள்கைகளைப் பேசிய இடதுசாரித் தலைவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வடிவேலு என்ன பேசுகிறார் என்பதுதான் முக்கியம்.  விலைவாசி உயர்வை விட,  மின்சார வெட்டை விட  தேவையான விஷயங்களை அவர் பேசுவார் என வேகாத வெயிலில் காத்திருக்கிறார்கள்.  யார் பணம் தந்தாலும் தயக்கமில்லாமல் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த முதலாளித்துவ அமைப்பு, தங்கள் அரசியலுக்கு ஏற்ப மக்களை எப்படிப் பதப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை இந்த தேர்தல்கள் தெளிவு படுத்துகின்றன. உறுதி செய்கின்றன. 

இந்தத் தேர்தலில் மக்கள் எதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தீராதபக்கங்களில், நடத்திய கருத்துக்கணிப்புக்கு மொத்தம் 839 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி.  கொள்கைகளுக்கு குறைந்த பட்சமாக  8%  என்பதும், பணத்திற்கு அதிக பட்சமாக 32% என்பதும்  இந்தத் தேர்தல் முறையின் பலவீனங்களைச் சொல்கின்றன. பிரச்சினைகளுக்கு 32% என்பது ஒரு ஆறுதல். பார்ப்போம், தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று. 

”ஒரு மாசம் காத்திருக்கணுமா” என்று நேற்று ஓட்டுப் போட்ட ஒருவர் சொல்கிறார். “பரீட்சை ரிசல்ட்டுக்கு காத்திருக்குற மாதிரி இருக்கு” என்று அடக்கமாட்டாமல்  இன்னொருவர் சொல்கிறார். பரீட்சை என்றதும் சந்தேகம் வருகிறது. மக்களுக்கு ஆட்சியாளர்கள் வைக்கிற பரீட்சையா அல்லது ஆட்சியாளர்களுக்கு மக்கள் வைக்கிற பரீட்சையா என்று எப்படித் தீர்மானிப்பது. இங்கு யார் எழுதியது, யார் மதிப்பெண் போடுவது? மக்கள்தான் மதிப்பெண் போடுகிறவர்கள் என்று ஜனநாயகம் சொல்கிறது. அப்படியென்றால், இங்கு ஃபெயில் ஆகிறவர்கள் எப்போதும் மக்களாகவே ஏன் இருக்கிறார்கள்? குழப்பம்தான்.

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Few Questions

    1. Why you did not vote even though you agree with your party's reasoning for alliance? or you are not going to vote anymore?

    2. If Vijayakanth can make your party leaders to rush to his office within few years of his party's existence, why your party is unable to do this inspite of being in the fray for several years?

    3. Do you really think that the state government is responsible for inflation or prices of essential commodities? Are you sure prices are costly in Tamilnadu compared with other states?

    பதிலளிநீக்கு
  2. Thiru.. Muthu Thamizhini.
    your questions are more reasonable and straight, but you will not get any right answers here in this Tamil blog people. Most of the bloggers are hypocrites, they won't accept any real thing in day to day life. All are a hypes. What these guys are expecting through their writing is simply making others to accept it. If your are asking any reasons for their stand, they will curse you badly.

    Have a nice day dude!

    பதிலளிநீக்கு
  3. I Salute to Madavaraj for weighing DMK and ADMK equally. Yes I was also there in the meeting in VNR where the movie was screened and released. I was impressed by the speech of all personnel including soundartajan and Leena.

    CPM has failed to play a vital role in this election. They should have contested alone. Apart from defiating DMK, i don't see any common aims between CPM and ADMK.
    So many issues are raised by CPM in streets like Nuclear Deal, Price raise, Untouchability atrocities, Unemployement...But did they achieve any thing for these problems in the alliance to support their struggles. JJ was ready to support Congress who are the main culprits for Nuclear deal, price raise.....What's her stand on Globalisation, Liberalisation, Privatation,Sethu Project....
    There is a considerable number of population of TN who dislike DMK and ADMK, looking for an alternative. CPM keep failing on consolidating this mass.
    What about JJ's corruption? If ADMK goes alliance with BJP in the next election, do CPM support DMK by forgetting 2G like they forgot ADMK corruption

    பதிலளிநீக்கு
  4. CPM which opposed DMK's forumula to harness the votes by paying money, why not opposing ADMK
    FYI...ADMK also paid money to the voters in this election in some places. I would like to recall byelections of Saidapet, Kumidipoondi, Kanchi in ADMK period. quit, when DMK paid money for vote.

    When CPM was in DMK, they kept

    பதிலளிநீக்கு
  5. kakku-manickam! yes! bloggers are hypes! You are also! Narayanan also ! you praise the caders of C.P.I.M You redicule the party. this the hight of hype. In1971 they stood alone. P.Ramamoorthy lost deposit. Out of sixty and odd candidates all lost their deposits except com A.Balasubramaniam of Dindigul..If u expect the polit beaureu of C.P.I.M to consult the t amil bloggers and commentaters well even Karl Marx cannot save them Individuals have a right not to vote. their it ends. To preach .... well... I refrain...Kashyapan

    பதிலளிநீக்கு
  6. கருணாநிதி பற்றிய பதிவு ஏப்பிரல் 11 (தேர்தலுக்கு முன்) அன்று வெளியாகியிருக்கிறது. ஆனால் நடுநிலையான பதிவு ஏப்பிரல் 14 (தேர்தலுக்குப் பின்) வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பதிவை நீங்கள் தேர்தலுக்கு முன்னரே வெளியிட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு இடதுசாரியாளருக்கும் இருக்கிற சிந்தனை ஊழலை தேசியமயமாக்கிய திமுகவின் குடும்ப ஆட்சியை தூக்கி எறியவேண்டும். அதே நேரத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்துவிடக்கூடாது.

    அரசு ஊழியர்கள் குறிப்பாக இடதுசாரி தொழிர்சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவை விட திமுக நல்லது என்பது தான். இந்த இரண்டு கட்சிகளும் ‘பொருளாதார அடியாள்’ வேலை தான் செய்கிறது.

    2004ம் ஆண்டு மத்தியில் இடதுசாரிகள் என்ன பங்கு வகித்தார்களோ அந்த நிலை இங்கு வந்தால் சாமான்ய மக்களுக்கு நல்லது நடக்கும். இப்ப இருக்கி9ற பயமெல்லாம் மிருக பலத்துடன் ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதெ என்பது தான்.

    பதிலளிநீக்கு
  8. "இரவுகள் உடையும்' வெளியிட்ட நேரத்தில் நான் வாக்களிக்கவில்லை; அதன்பிறகு வந்த பாராளுமன்றத்தேர்தலில் யானை(BSP)க்கு வாக்களித்தேன். இம்முறையும் அதே போலத்தான் ஜெயிக்காத கட்சிக்கே எனது வாக்கு என்று முடிவு. எரிகிற கொள்ளியில் என்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்பதை விட்டு சாமானியர்களுக்கு வாக்களிக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. I wish left to contest alone. Definitely if not in near future, in ten years time, Left will emerge.
    By alligning with DMK or ADMK, winning few seats, did it really develop the Left in these constituencises???They why?

    Do you think having 10 MLAs itself achieve all the grievances of common man? No. Only the people struggle will force the Govts to the end.

    Do you agree only having MLAs keep the party live, not even the Marxism? All other political parties faces setback and gets erroded, if they kept out of govt for one or terms continuously. I don't see left would be sailing in the same boat.

    பதிலளிநீக்கு
  10. Hariharan,

    I am surprised to see your comments that Left doestn't want ADMK to come with individual majority. If so, how did they allow ADMK to contest in 160 seats, accepted a seat less, accepted 4 seats where they don't have strong organisation...
    How come they stop ADMK to come with individual majority? If they are really bothered about this, Left should have convinced ADMK to get MDMK in. But when they had discussions with ADMK, they just focus on their own seats not the alliance.

    If left contest with out alligning with DMK or ADMK, definitely in 10 years, they will be influential party in TN politics.

    பதிலளிநீக்கு
  11. மிக நேர்மையான நியாயமான பதிவு மாதவராஜ்.

    வாக்களிப்பதை முடிவு செய்வது நீங்கள்தானன்றி அரசில்லை.நானும் வாக்களிக்கவில்லை.

    தேர்வு முறையில் மாற்றம் வராத வரை வாக்களிக்கப் போவதுமில்லை.

    பதிலளிநீக்கு
  12. அய்யா,

    அந்த முதல் காமெண்ட் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை தெரிந்துக்கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன். உங்கள் மற்ற பதிவுகளையும் எழுத்துக்களையும் படிக்கும்போது இதற்கு நீங்கள் நல்ல பொருத்தமான நியாயமான பதில்களை தருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அண்ணா சுந்தர்ஜி குறிப்பிட்டதைப் போல் மிக நேர்மையான பதிவை செய்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள்!

    இங்கு உங்களிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு எனக்கு தோன்றும் சில பதில்கள்.....

    1.வாக்களிப்பது ஜனநாயக கடமைதான் அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால் அது ஒரு ஜனநாயக தேசத்துக்குத் தானே பொருந்தும்.
    தெளிந்த அரசியல் பார்வை கொண்ட எவரும் இந்தியாவை ஜனநாயக தேசமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இது ஒரு முதலாளித்துவ தேசம். இங்கு ஆட்சிக்கட்டிலில் யார் அமர வேண்டும் என இங்குள்ள பெருமுதலாளிகளே தீர்மானிப்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்களது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற ஊடகங்கள் துணைப் போகிறது.ஆட்சியாளர்களும்,அதிகார வர்க்கமும் அவர்களுக்கான விசுவாசமான அடியாட்கள் அவ்வளவே....இதில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்...?

    சி.பி.எம் ஏன் தேமுதிக அளவுக்கு வளரவில்லை என்றால் எங்களுக்கு சித்தாந்தங்கள் தெரிந்த அளவிற்கு ஓட்டுப் பொருக்கும் கலையில் ஞானம் இல்லை என்பதே மிக யதார்த்தமான உண்மை.

    ஒடுக்கப்பட்ட....பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடத் தெரிந்த அளவிற்கு அதனை விளம்பரப் படுத்தி பெயர் வாங்கத் தெரியாததும் ஒரு காரணம்.

    3.நம் தேசத்தை பொருத்தவரை பணவீக்கத்திற்கும் ,விலைவாசி உயர்வுக்கும் முக்கிய காரணிகளாய் சொல்லப்படுவது இரண்டு விஷயங்கள்....
    முதலாவது பெட்ரோலிய பொருட்களின் மிதான விலையேற்றம்.
    மற்றொன்று வர்த்தக பொருட்களின் மீதான சூதாட்டம்.(trading on multi-commodities)
    பெட்ரோலிய பொருட்களின் மீதான விலையை அமெரிக்காவின் ஆணைக்கிணங்க உயர்த்தும் அதிகாரம் நம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது.ஆனால் மத்திய அரசிடமிருந்து வாங்கும் விலையை விட மாநில அரசுகள் மானிய ஒதுக்கீட்டின் மூலம் அதனை குறைத்துக் கொடுக்கலாம்.ஆனால் நமது ஆட்சியாளர்கள் அதை செய்வதில்லை.நமது மாநில அரசுக்கோ வரும் மாநில வருவாயை தன் ஓட்டுப் பொருக்கும் வெறிக்கு இரையாக்கவும்....அதனை உறிஞ்சிக் கொழிக்கவுமே பற்றாமல் போய்விடுகிறது பின்பு இதிலே எங்கே பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் ஒதுக்க முடியும்?

    வர்த்தக சூதாட்டத்திற்கு எதிராகவும் இவர்கள் சிறு துரும்பை கூட அசைக்கமாட்டார்கள் ஏனென்றால் வேலியே எங்காவது பயிரை மேயுமா?

    last but not least.... in a unethical and selfish world being a hypocrite is the only possible way to do make something happen.if so....i am proud to be a hypocrite.

    பதிலளிநீக்கு
  14. அய்யா,

    உங்கள் தம்பி சுற்றி வளைத்து ஏதோ சொல்லி இருக்கிறார்.அதுதான் என் பதிலும் என்று கூறி அதிர்ச்சி தர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. முத்து தமிழினி!

    வருகைக்கும், கேள்விகளுக்கும் நன்றி.

    1. கட்சி என்பது அமைப்பு. மாநிலக்குழு, மாநிலச் செயற்குழு என அடுக்குகளில் விவாதித்துத்தான் முடிவெடுத்திருக்கிறது. அதற்கான விரிந்து பரந்த பொதுவான பார்வையும், அவசியமும் முடிவுகளில் இருக்கும். ஆனால், வாக்களிக்காமல் போனது என்னளவில் எடுத்த முடிவு. அது என் தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்டது. என் மனசாட்சி சம்பந்தப்பட்டது. அது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். இனி, வாக்களிப்பதென்றால் விகிதாச்சார தேர்தல் முறையில் வாக்களிக்கலாம். இல்லையென்றால், எங்கள் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்களிப்பேன்.


    2.விஜயகாந்த் கட்சி, ஒரு முதலாளித்துவக் கட்சியே. ஊடகங்களும், இந்த அமைப்பும் அவரையும் ஒரு மாற்றாக முன்னிறுத்தும். கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னிறுத்தாது. திடுமென ஒருநாளில் முளைத்து, ஒரு நாளில் தழைக்கும் அதிசயமல்ல இடதுசாரி இயக்கம்.அது மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகளுக்காக போராடி, மெல்ல மெல்ல வேர்பிடித்து வரும். அரசியலில், இடதுசாரிகள் தீர்மானிக்கும் சக்தியாக உருவாவதை இந்த அமைப்பு விரும்பாது. அதன் வளர்ச்சியை குலைப்பதற்கு, மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்கு இந்த அமைப்பு தொடர்ந்து முயற்சிக்கும்.இதுதான் நடக்கிறது. இதில், இடதுசாரிகள் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் உறுதியாக நிற்க, நிற்க, நிச்சயம் மக்களின் ஆதரவு அவர்கள் பக்கம் திரும்பும்.

    3.இந்த தி.மு.க அரசும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சிதானே.எனவே விலைவாசி, பணவீக்கம் ஆகியவற்றுக்கான பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இந்த மாநில அரசு என்ன எதிர்க்குரல் எழுப்பியிருக்கிறது? ஒத்து ஊதத்தானே செய்கிறது.

    பதிலளிநீக்கு
  16. கக்கு-மாணிக்கம்!
    ஏன் இவ்வளவு கோபம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. "எங்கள் தொகுதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்களிப்பேன்"

    பின்னூட்டத்திற்கான நண்பர் மாதவராஜின் பதிலப் பார்க்கும் போது, பேசாம நண்பர் மாதவராஜை மேற்கு வங்கத்துக்கு அல்லது கேரளத்துக்கோ pack up பண்ணிற வேண்டியதது தான்!

    பதிலளிநீக்கு
  18. அன்பின் தோழர்.,

    ஒரு எளிய சந்தேகம்.

    சாலை பணியாளர் பணி நீக்கத்திற்கு ஜெயலலிதாவும் அ.தி.மு.க வும் தான் காரணமா...?

    அது உலகமயத்தின் தாக்கம் என்றும் அதை மக்கள் போராட்டங்களே வெல்லும் என்பதல்லவா இரவுகள் உடையும் குறும்படம் தந்த செய்தி.

    ஜெயலலிதா உலகமயத்தின் கருவியாக மட்டுமே செயல்பட்டார்.

    ஜெயலலிதா செய்ததை நான் நியாயபடுத்தவில்லை. பெருந்திரளான போராட்டங்களுக்கு பிறகு, அவமானகரமான படு தோல்விக்கு பிறகு அதை அவரே வாபஸ் பெற்றார், கருணாநிதி அல்ல.

    நீங்கள் வாக்களிக்காதது ஜெயலலிதாவிற்கு எதிரானது மட்டுமல்ல. ஹுண்டாய் கம்பெனி இல் தொழிற்சங்கமே அமைந்து விட கூடாது என்று கங்கணம் கட்டி செயல் படும் கருணாநிதிக்கு ஆதரவானதும் கூட.

    முன்பெல்லாம் உங்களை பற்றி விவாதிக்கும் போதெல்லாம் உடன் வந்து உட்கார்ந்து கொள்ளும் ஒரு வித பெருமிதம்.

    சமீபத்திய உங்கள் பதிவுகள் பேரச்சத்தையே உண்டு பண்ணுகிறது தோழர்.

    உரிமையோடு சொல்கிறேன்.

    நீங்கள் வேண்டும் தோழர்

    பதிலளிநீக்கு
  19. ஓலை!

    :-)))))


    இலக்கியா!

    தேவையற்ற அச்சம் தோழரே!

    பதிலளிநீக்கு
  20. இரவுகள் உடையும் கண்களில் நீர் நிறைய வைத்து விட்டது, இத்தனை கல்நெஞ்சக்காரர்கள் ஆட்சியாளர்களாகத்தானா மக்களாட்சி...

    என்று தனியும் இந்த தாகம்?
    என்று தனியும் இந்த அடிமையும் மோகம்?

    பதிலளிநீக்கு
  21. சினிமாவில் நல்லவனாக நடித்ததாலேயே அவர் நல்லவராக இருப்பார் என மக்கள் நம்புவதாலும்,அ(தி.மு.க.)இரண்டிற்கும் மாற்றாக ஒரு தெரிந்த முகம் நல்லது செய்யும் நபர் யார் என்று தெரியாததே மக்களின் குழப்பத்திற்கு காரணம்.அகில இந்திய கட்சியான காங்கிரசிலேயே நேரு குடும்பத்தை விட்டால் இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களுக்கும் தெரிந்த முகம் இல்லாத காரணத்தினால்தான் அவர்களை கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.கம்யுனிச பாலிசியும் மக்களை சென்றடையவில்லை,தலைவர்களும்தான்.இதற்கு மக்களை குறை சொல்லுவது பேதமையே.

    பதிலளிநீக்கு
  22. நாலு கொலை செய்தவனை தோற்கடிக்க இரண்டு கொலை செய்தவனை ஆதரிப்பது என்பது எப்படி சரியாகும்.ஏதாவது ஒரு இசத்தின் பேரில் காமராஜ்,JP போன்ற மனித நேயர்களை பிற்போக்கு என்ற லேபலை குத்தி முடக்கிபோட்டதுதான் இத்தனைக்கால இடதுசாரிகளின் சாதனை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!