-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்!

வம்பரங்கம் 15 : கறுப்புப் பணமும், கறுப்பு மனமும்!

indian black money

 

கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆட்சியாளர்களோ அவைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறார்கள். “கறுப்புப் பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க இயலாது” என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.

 

நமது வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால் கூட அவர்களது பெயர்கள் நாளேடுகளில் வருகின்றன. அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி, சேர்க்கப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனவான்களின் பெயர்களை வெளியிடுவது பாவம் என மன்மோகன்சிங் அரசு கருதுகிறது.

 

இந்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டது.  கறுப்புபணம் கைப்பற்றுதல் தொடர்பாக அமலாக்கப் பிரிவினர் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், சில பிரச்சினைகளில் உள்துறை அமைச்சகத்தையும், அயல்துறை அமைச்சகத்தையும் அணுக வேண்டியிருப்பதால், தாங்கள் கையறு நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தனர். இதன் அடிப்படையில், “நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்றுவது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT- Special Investigation Team) அமைத்திடலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

 

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தவுடன் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்தது. ஆனால் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைக்கச்  சொல்லியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கல்லாய் இருக்கிறது மத்திய அரசு.

Related Posts with Thumbnails

2 comments:

  1. இதற்கு யாரெனும் ஒரு தலைவர் போராட்டம் நடத்துவார் என நம்பிக்கையில் இந்திய மக்கள்!

    ReplyDelete
  2. வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

    ReplyDelete