-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள்

வம்பரங்கம் 14: கருணாநிதிக்குச் சில கேள்விகள்ஃபேஸ்புக்கில் இதைப் படித்தபோது, பொது வாழ்வு, நேர்மை, அரசியல் நாகரீகம் குறித்த சில முக்கிய விஷயங்களை இந்தக் கேள்விகள் எழுப்பியதாகப் பட்டது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ எழுதிய கருணாநிதி இதற்கு பதில் சொல்லாமல், பகலவனுக்கு எதிரான பகையாளியின் சதி என்று எதாவது தத்து பித்தாக உளறிக் கொட்டுவார். அது நமக்குத் தேவையில்லை.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமானது.

கேள்விகள்:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்குப் பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூஜைக்குச் செல்வதாகச் செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள். நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராகச் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்பப் பிரச்னையில் மூன்று பேரைத் தீயிட்டுக் கொளுத்தியதை நினைக்கும்போதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசுக்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படித் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, அதற்குப் பதில் ஏற்கெனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன்? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? இது விஷயத்தில் என்னைப் பின்பற்ற வேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தைத் தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்தப் பணம் என்னவாயிற்று? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள்? ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள்? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்கிறேன். ஓர் அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசுகூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வோர் இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு?

13. மின் வெட்டைத் தடுக்க ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்குச் சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்னையை எப்படிக் கையாண்டிருப்பீர்கள்?

15. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து நீக்கியது ஏன்?

16. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவிகளை வாரிசுகளுக்கு வாங்குவதற்குத் தவிர நீங்கள் தில்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

17. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றுக்கு ஓடோடிச் செல்லும் நீங்கள், எத்தனை முறை இறந்துபோன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்?

18. பல வருடங்களாகக் கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களைவிட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி?

19. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, திரைப்படத் துறை முழுமையான ஆக்கிரமிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்று உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

20. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?

(இந்தக் கேள்விகள் கல்கியில் ஞானி அவர்கள் எழுப்பிய கேள்விகளாம். பதிவு வெளியிட்ட பிறகு பேஸ்புக்கில் நண்பர் சொன்னார்.)
Related Posts with Thumbnails

18 comments:

 1. "உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

  இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

  இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

  மேலும் படிக்க...
  ஒரு தரம்... ரெண்டு தரம்...!
  http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

  ReplyDelete
 2. மாதவ்ராஜ்,

  சாத்தூரில் அதிமுக வெற்றி பெறுமா?

  ReplyDelete
 3. அவர்தான் தலையில கைய வச்சிகிட்டிருக்காரே:)

  ReplyDelete
 4. அருமையான கேள்விகள். கலைஞரை மட்டுமல்ல அநியாய முறையில் சுருட்டும் அத்தனை பேரையும் கேட்க வேண்டிய கேள்விகள். இன்னும் நல்லா கேளுங்க மக்கா!

  ReplyDelete
 5. அத்தனையும் சத்தியமான கேள்விகள்
  ம்ம் அவரு எங்க பதில் சொல்ல போறாரு .....

  ReplyDelete
 6. அத்தனையும் சத்தியமான கேள்விகள்
  ம்ம் அவரு எங்க பதில் சொல்ல போறாரு .....

  ReplyDelete
 7. Jaya Rule - Government official ill treated.. no infrastructure development.
  traffic jam for 2 hours.. when jaya start from poes garden, entire chennai gets jam in traffic.
  remove of kannagi statue..
  the investor from singapore ran out of chennai hearing the bribe amoutn for sasikala..kanja casess, attack on t n seshan, cabare dance fro subramanyan swami, acid attack on chandralekha..

  dmk - nice bridges, flyover, excellent anna centenary library in chennai, excellent socio - eco friendly parks.. lot of other parks,. nice highway roads... siddha university in tambaran.. anna universit in tiruvarur.. many colleges.. water desalination plant.. quick and efficient actions during rainy season..
  IT PARKS, TIDEL PARK chennai and covai.. IT highway.. Hyundai, ford, saint gobain , many companies.. job opportunities

  SO this time for DMK

  ReplyDelete
 8. என்ன ஸார் நீங்க ஒரு பக்கா திருடன் கிட்ட ஏண்டா திருடின.. ஏண்டா திருடின னு.. கேட்டுகிட்டே இருக்கீங்க...? ஒரு சாதரண மனிதனிடம் ஏன் பண்ணீங்கனு கேட்டா குறைந்தபட்சம் அவமானத்தில் தலைகுனிவார்கள்..இவர் என்ன சாதாரண மனிதரா...எத்தனை பிணத்து மேல அரசியல் பண்ணி இருப்பாரு...? எத்தனை குடும்பத்த ஒழிச்சி இருப்பாரு...? ஒரு சமூகமே இன்னிக்கு பிச்சைகார சமூகமா மாற்றிய ஒரே தலைவரல்லவா இவர்.

  ReplyDelete
 9. ஒருபோதும் பதிலளிக்க முடியாத அடிப்படையான கேள்விகள்.

  இதற்கு பதிலளிப்பது இருக்கட்டும் இதுபோல எத்தனை கேள்விகளைத் தன் வாழ்வில் தாண்டி வந்திருக்கிறோம் என்பதும் தெரியும்.

  நாம் பதில்களற்று வாழ்கிறோம். அவர்கள் கேள்விகளோடு வாழ்கிறார்கள்.

  ReplyDelete
 10. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 2011 ம் ஆண்டு தேர்தல் வேட்புமனு சமர்பிக்கும் முன் தனது விவரத்தை அப்பிடவிட் மூலம் சமர்பித்த நகல் உங்களுக்காக .

  Karunanithi Comedy about his property listing to election commission..............

  Click this Link......
  https://picasaweb.google.com/106993342552433693950/April112011#

  ReplyDelete
 11. ஒருபோதும் பதிலளிக்க முடியாத அடிப்படையான கேள்விகள்.

  ReplyDelete
 12. எல்லாரும்,எல்லாரிடமும் கேள்வி கேட்கலாம்!! யாரும் உத்தமர் இல்லை! நீங்கள் உட்பட (உங்கள் கட்சி).
  தமிழ் நாட்டில் இரண்டு திருடர்கள். ஒன்று அ.தி.மு.க இரண்டு தி.மு.க. நீங்கள் ஒரு திருடரின் கூட்டாளி(அ.தி.மு.க விடம்) தங்களுக்கு கேள்விகள் கேட்க என்ன தகுதி இருக்கு??
  எல்லாருடைய கண்களிலும் தூசி உண்டு, முதலில் நம் கண்களில் உள்ள தூசியை எடுப்போம். பிறகு அடுத்தவனின் கண்ணில் உள்ள தூசியை எடுப்போம் (கேள்விகள் கேட்போம்...)

  ஆனால் உங்கள் அனைத்து கேள்விகளும் மிக அருமை!!!!

  ReplyDelete
 13. சரியான நேரத்தில் வந்துள்ள பதிவு! இதே போல் இப்போதே 'செயலலிதாவிற்குச் சில கேள்விகள்' எனப் பதிவு வெளியிட்டால் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறப் பேருதவியாக இருக்கும்...

  ReplyDelete
 14. சில கேள்விகள் தவிர எல்லா கேள்விகளும் நியாயமானது...

  தவறான கேள்வி 1. கருணாநிதி மனைவி கோயிலுக்கு போவதற்கும், கருணாநிதி நாத்திகராக இருப்பதற்கும் சம்மந்தமில்லை. மனைவின் மத உரிமையில் தலையிடாமல் இருப்பதுதான் மார்சியம்...

  தவறான கேள்வி 2. தயாநிதி மாறன் மற்றும் அழகிரி ஆகியோர் மக்கள் மன்றத்தில் நின்று ஜனநாயக முறையில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள்.... அவர்கள் வெற்றி செல்லாது என்றால் மற்ற தமிழகத்தைசார்ந்த 37 எம்பி வெற்றிபெற்றதும் செல்லாதவை ஆகிவிடும்...

  ReplyDelete
 15. அனைவரும் ஒன்றே!

  பார்பனர்கள்/சூத்திரர்கள்
  படித்தவன்/படிக்காதவன்
  ஆண்டான்/அடிமை
  ஆண்/பெண்
  உள்ளவன்/இல்லாதவன்
  ஆத்திகன்/நாத்திகன்
  இடது/வலது
  பரிவாரம்/திராவிடம்
  பாரம்பரியம்/காளான்
  ...
  ..
  .
  அரசியல் என்று வந்துவிட்டால்
  அனைவரும் ஒன்றே!
  இங்கு
  யாருக்கும் வெட்கமில்லை!

  ReplyDelete
 16. To Chennai Tamilan,
  1- Let MK allow the Sai Baba to his house and also value his wife`s religious right to pray at Thiru Nallaru. Why should he criticize the millions of other Hindus and question RAMA?

  2-Is there NOBODY in the 60 Years old Party to contest for MP seat other than his OWN g
  Grandson Dhaya and HIS PRODIGAL son Alagiri?

  ReplyDelete
 17. to vasan...

  உங்கள் கேள்விகளில் தவறில்லை...

  ReplyDelete