இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?



“அப்பா, இதென்ன உங்க கையில கருப்பா மை இருக்கு?”
“ஓட்டு போட்டேன்”
“ஓட்டுன்னா என்னப்பா?”
“இதோ டிவில காண்பிக்கிறாங்க... பாரு!”
“கருணாநிதி ஓட்டு போடுறாரா?”
“ஆமா”
“இப்ப... ஜெயலலிதா ஓட்டுப் போடுறாரா?”
“ஆமா”
“அப்பா... விஜய்காந்த்தும் ஓட்டுப் போடுறார்!”
“ஆமா”
“எதுக்குப்பா ஓட்டுப் போடுறாங்க?”
“நிறைய ஓட்டுக் கெடைச்சவங்க ஜெயிப்பாங்க”
“கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த்துல்லாம் ஜெயிச்சுருவாங்களா?”
“யாராவது ஒருத்தர்தான் ஜெய்ப்பாங்க”
“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
“................”.

டி.வியில் மக்கள் வரிசையில் நின்று ஒட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்கள் அப்போது.

(இது ஒரு மீள் பதிவு. அதுவும் மே,13 2009ல் எழுதியது.)

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அரசியல்வாதிகள் ஜெயிப்பார்கள்.
    வாக்காளர்கள் தோற்ப்பார்கள்.
    அதுதான் தேர்தல். --மக்கள்
    என்றுமே "மா"க்கள்தான்.
    மனிதர் இல்லை அவர்களின்
    பார்வையில்.இலவசத்திற்க்காக
    திருவோடேந்தும் பிட்சைக்காரர்கள் நாம்.
    ஆயிரம் தேர்தல்கள் வரும்,ஆயிரம்
    அரசியல் வாதிகள் ஜெயிப்பார்கள்.--அனால்
    ஜெயித்ததில்லை என்றும் ஜனநாயகம்.விரலில்
    வைப்பது மை அல்ல.நம் இந்திய ஜனநாயகத்தின்
    அழியா கறை.




    அ.சந்தர் சிங்

    பதிலளிநீக்கு
  2. கால் கடுக்க வெயிலில் நின்னு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிற நம்மல்லாம் என்னிக்கு உண்மை நிலைவரத்த புரிஞ்சுகிட்டு சரியான ஒருத்தர தேர்ந்தேடுக்குரோமோ அன்னிக்கு நாம டிவி ல வராட்டியும் ஜெயிசுட்டோம்னு அர்த்தம். இத நல்ல புரிஞ்சுகிட்டு ஒட்டு போடுங்க நண்பர்களே,.

    பதிலளிநீக்கு
  3. நாம காலத்துக்கும் வரிசையிலேயே நின்னுருவோம்னு நெனச்சுகிட்டு இருக்கிறவங்களோட முக்குடைகிரவர நம் போராடவேண்டியது அவசியம்

    பதிலளிநீக்கு
  4. ஆமாத்தா, அவுங்க‌ மூனு போரு ம‌ட்டுமில்ல, ராம‌தாசு,ம்..சித‌ம்ப‌ர‌ம்,இந்த‌ திருமா எல்லாம் கெழிச்சுப்புட்டாங்க‌ளாம். ஆத்தும‌ண்ணு, புற‌ம்போக்கு, ரோடு, குள‌ம் கான்ட்ராக்ட், த‌ண்ட‌லுன்னு
    அவுக‌ ஆளுக‌தானே அள்ளித் திண்கிறாங்க. ந‌ம்ம‌தான் வெயிலுல‌ வ‌ந்து ஓட்டைப் போட்டுட்டு, போய் பொழ‌ப்ப‌ பாத்துப்புட்டு, குடிச்சுட்டு வற்ர‌ மக‌ராச‌னுக்கு இருக்கிர‌த‌ ஆக்கிப்போட்டுட்டு வ‌ழ்க்க‌மா அடிவாங்கிட்டி தூங்கி எந்திரிச்சு ம‌று பொழுது பாக்க‌ வேண்டிய‌து தான்...

    பதிலளிநீக்கு
  5. 1.இன்றையத் தலைவர்களையும், அவர்களின் செயல்களையும் கண்டு வெதும்பத்தான் முடியும்!

    2.மக்களின் மனநிலையின் படியே, அவர்களின் தலைவர்களும்!

    3.பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை- சான்றோர் வாக்கு!
    பொருளில்லை எனில் அரசியல் இல்லை - இதுவே இன்று திரு வாக்கு!

    பதிலளிநீக்கு
  6. Shame on congress, now they are not only corrupt, but they are ready to kill the competition all together. Pathetic.
    http://www.indianexpress.com/news/off-with-his-head/764845/0

    பதிலளிநீக்கு
  7. //“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
    //
    I feet that this line is a dam cliche.

    Also lately i started feeling that you are more concentrating writing cliche's rather share your true heart. Sorry man.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொன்ன மூவர் வெல்லும் வரை மக்கள் வெல்ல மாட்டார்கள் என்பது உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  9. நாம ஒன்னும் நடிகர்கள் இல்லையே, வெறும் ஒட்டு போடும் ஏமாளிகள் தானே!!! இலவசங்களுக்காக ஏமாறும் கோமாளிகள்தானே. நாம் ஜெயிப்பது எப்போது? எப்படி?

    பதிலளிநீக்கு
  10. அன்றொரு காலத்தில் அடிமைகளை (மக்களில் ) தேர்ந்தெடுக்க மன்னர்கள் கொண்டுவந்தது குடவோலை முறை (ஓட்டு போடுவது ). இன்று மன்னர்களை (அரசியல்வாதிகளை ) தேர்ந்தெடுக்க அடிமைகள் போடுவது இந்தக்கால தேர்தல் (election). கொடுமையிலும் கொடுமை. எப்படி இவர்கள் ஜெயிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  11. அட போங்க பாஸ், மக்கள் மந்தையா இருக்கற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாது

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!