-->

முன்பக்கம் , , , � வம்பரங்கம் 13: அறுபதா? அறுபத்து மூன்றா?

வம்பரங்கம் 13: அறுபதா? அறுபத்து மூன்றா?“உன்னாலே நான் கெட்டேன்”

“உன்னாலே நான் கெட்டேன்”

“நீ என்னைக் காட்டிக் கொடுத்தாய்”

“நீ என்னைக் காலை வாரி விட்டாய்”

“நீ என் கழுத்தறுக்க வந்தாய்”

“நீ என் கருவறுக்க  துடித்தாய்”

“உன்னாலே நான் கெட்டேன்”

“உன்னாலே நான் கெட்டேன்”

“நீ என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது”

“நீ என்னைக் காலை வாரி விடக் கூடாது”

உள்ளே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது.  நாளைக்குள்   அறுபதா, அறுபத்து மூன்றா என்பது வெளியே தெரிந்துவிடுமாம்.
Related Posts with Thumbnails

13 comments:

 1. இவங்க உள்ள பேசுவது எல்லாம்
  சீட்டைப் பத்தியா இருக்கப் போகுது
  எல்லாம் மேற்படி மேற்படி விஷயமாகத்தான் இருக்கும்
  அது அடஞ்சா சீட்டுக்கணக்கு சரியாகிப்போகும்
  இல்லையானதான் நமக்குத்தான் தெரியுமே
  கொள்கை கோவணம்
  வேட்டி பதவி வசனம் எல்லாம்''

  ReplyDelete
 2. ஆட்டம் களை கட்டுதுண்ணே..

  எதிர்பார்க்காத ட்விஸ்ட்டெல்லாம் இனிமேதான் இருக்கு..

  ReplyDelete
 3. :) அது சரி.. நிற்கவே முடியாது போல ஒரு நிலையில்...

  ReplyDelete
 4. ஆவென்று இந்த அரசியல்வியாதிகளை வேடிக்கை பார்ப்பதிலேயே காலம் கரைகிறது.

  நாம் புதிய மாற்று குறித்து சிந்திக்கத் தொடங்குவோம் மாதவராஜ்.

  பாதகமானவர்கலின் செயல்களின் பின்னே நம் சக்தியையும் சிந்தனையையும் வீணாக்குவதை விட சாதகமான சிந்தனைகளுக்கும் மாற்றத்துக்கும் தடம் போடுவோம்.

  ReplyDelete
 5. எல்லாம் அரசியல் நாடகம் அண்ணா....
  கதை வசனம் எல்லாம் கருணாநிதிதான்...
  சோனியாவும் சிங்கும் சிறப்பாய் நடித்தாலும் பாவம் காமெடியன் தமிழக காங்கிரஸார்... நாளை மீண்டும் பல்லக்குத் தூக்கிகளாக பவனி வர வேண்டும்...

  ReplyDelete
 6. ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்களின் பணமான 1.76 லட்சம் கோடி கருணாநிதி சோனியா குடும்பத்தால் சூறையாடப்பட, அதை எதிர்க்கட்சிகள தேர்தல் களத்தில் முக்கியா ஆயுதமாக பிரயோகிக்கும் என்பதை ் கருணாநிதி சோனியா இரண்டு குடும்பங்களும் நன்கறியும். இதில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த சீட் ஒதுக்கல், அதில் தகராறு போன்ற கேவலமான நாடகங்கள். அச்சு, ஏலேக்ட்ரோனிக் ் ஊடகங்களும சொல்லி வைத்தது போல ரெண்டு நாட்கள் 2G ஊழலை ஓரம் கட்டி விட்டு இந்த இரண்டு திருட்டு குடும்பங்களும் நடத்திய கேவலமான நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன! இதில் தமிழக மக்கள்தான் இளிச்சவாயர்கள் ஆக்கப் பட்டார்கள். ஏதோ இந்த இரண்டு கட்சிகளுக்கும் சீட் வியாபாரம் படியவில்லை என்றால் தமிழகமே பெறும் பிரளயத்தில் மூழ்கி விடும் என்பது போல் பெறும் நாடகம் அரங்கேறியது. இந்தியாவின் நம்பர் ஒன் திருடர்களான காங்கிரஸ், தமிழகத்தின் நம்பர் ஒன் திருடர்களான திமுக இந்த இரண்டு திருடகளும் சேர்ந்துதான் 2G திருட்டை நடத்தினார்கள், அப்படியிருக்க இரண்டு திருடகளும் முக்கியமான தேர்தல் நேரத்தில் எப்படி பிரிந்து போவார்கள், எதை வைத்து பிரச்சாரம் செய்வார்கள்? திருடர்கள் பிரிய மாட்டார்கள், ஒருத்தனை ஒருத்தன் காட்டி கொடுக்க மாட்டார்கள். இதோ, இன்று மாலையே இந்த நாடகம் ஒரு முடிவுக்கு வரும். சீட் வியாபாரம் முடிவுக்கு வரும். கடந்த இரண்டு நாட்களும் தமிழக மக்களை மடையர்களாக நினைத்து நாடகம் ஆடிய கருணாநிதி ஸ்டாலின் அழகிரி கனிமொழி சோனியா ராகுல் காந்தி திருட்டு கும்பலை, நாடகத்துக்கு துணை போன ஊடகங்களை மிகக் கடுமையான வார்த்தைகளால் நாம் கண்டிக்க வேண்டும். இந்த திருட்டு கும்பலுக்கு வரும் தேர்தலில்தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
  இக்பால்

  ReplyDelete
 7. மூன்று(ஜெயிக்காத)தொகுதிக்காக‌
  ஆறு ம‌த்திய‌ ம‌ந்திரிக‌ளை இன்னும் நாலுவ‌ருஷம் இருக்கும் ப‌தவியை வில‌க‌ச் செய்யும‌ள‌விற்கு முக வின் அர‌சிய‌ல் சாணக்கிய‌ம் இன்னும் ச‌ரிய‌வில்லை. காரண‌ம் வேறு அது மார்ச் 15 - 17 விவ‌கார‌ம்!!

  ReplyDelete
 8. நம் தலைவிதியை மாற்ற முடியாது, மீண்டும் தி.மு.க. ஆட்சிதான்.

  ReplyDelete
 9. அவ்ர்களாவது ஏதோ பேசிக் கொண்டுள்ளனர்!

  அழைப்பு வரவில்லை என,செம்படையினர்,
  போயஸ் தோட்ட வாசலில்,
  பாடும் கானம் இதோ:

  கதவு எப்போ திறக்கும்?
  சுண்டல் எவ்வளவு கிடைக்கும்?

  ReplyDelete
 10. இது வாசனுக்கு.

  கருணாநிதி செய்வது சாணக்கியமில்லை வாசன். ப்ளாக் மெய்லிங். எப்போதும் அவர் பாணி செய்கை அதுதான்.

  ReplyDelete
 11. இது காங்கிரஸ்காரர்களுக்கு,
  வெறும் 3 சீட்களுக்காக தன் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொன்ன கலைஞரை நம்பாதீர்கள். பின் ஒற்றைக் கோவணம் கூட மிஞ்சாது.

  ReplyDelete
 12. இது சுந்த‌ர்ஜின் க‌ருத்துரைக்காக.
  தோழ‌ர் மாது பொருத்த‌ருள‌ வேண்டும்.

  நம‌க்கு தெரியாதாத‌ அவ‌ர் சாணக்கிய‌த்த‌ன‌ம்?
  அவர் விர‌லில் மின்னும் மோதிர‌த்தில் மின்னலில்,
  1967 ல், அண்ணாவின் ஆயிர‌ம்விள‌க்கு எம்பி தொகுதியை
  மாறனுக்கு மாற்றி, ராஜாஜியை கையெழுத்திட‌ வைத்த‌தில்,
  என அன்று தொட‌ங்கி இன்று, மூன்றாவ‌துக்காக,
  மூன்று சீட்டு ஆடித் தோற்ற‌தை, தியாக‌மாக்கிய‌தில் வ‌ரை
  (எந்த‌ லாப‌மும் இன்றி க‌ட்சிக்காக வாழ்க்கையையே
  தொலைத்து வாடும் சில‌ க‌டைக் கோடி திமுக‌ தொண்ட‌ர்க‌ள்)
  இன்னும் இவ‌ரை சாணக்கிய‌ராய் நினைப்ப‌தால்,
  அப்ப‌டி அழைத்தால் அவ‌ர்க‌ளுக்கு இந்த‌
  அற்ப‌ சந்தோச‌மாவ‌து கிடைக்க‌ட்டுமே என்றுதான்.

  ReplyDelete