-->

முன்பக்கம் , , , � அவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்!

அவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்!காவல்துறையின் தடிகளில்தான் அவர்களின் சட்டமும், ஒழுங்கும் இருக்கிறது.

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 3 நாட்கள் ஆகியும் அரசு இவர்களது கோரிக்கைகளை குறித்து அழைத்து பேசாததால்  முதல்வரை சந்திக்க புதிய தலைமை செயலகத்திற்கு பேரணியாக சென்ற தமிழக அரசு ஊழியர்கள் மீது காவல்துறை தடுத்து நிறுத்தி தடியடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. மிருகத்தனமான அந்தக் காட்சிகள்தாம் இவை.
police attack on tngemployees 4
police attack on tngemployees 2
police attack on tngemployees 9
police attack on tngemployees 5
police attack on tngemployees 8
தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதும், அவைகளை வலியுறுத்துவதும் தொழிலாளர்களின் உரிமையாக இந்தச் சட்டம் சொல்கிறது. ஜனநாயக ரீதியான போராட்ட முறைகளை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.  அதை ஏற்று, அதை நம்பி, தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இந்த அரசும், அமைப்பும் அந்தச் சட்டங்களை தாங்கள் ஒருபோதும்  மதிப்பதேயில்லை என இப்படி, மிகக் கொடூரமாக காட்டி வருகின்றனர்.

அவர்களின் சட்டம் இது! அவர்களின் ஒழுங்கு இது. அவைகளைக் காப்பாற்றும் அவர்களின் ஜனநாயகம் இது.எல்லாம் நாசமாய்ப் போக!

இனி- தொழிலாளர்களும், மக்களும் இங்கே தங்களுக்கான சட்டங்களையும், ஒழுங்கையும் திருத்திக்கொள்ளட்டும். ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும்! அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்!

அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!
Related Posts with Thumbnails

12 comments:

 1. ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும்! அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்!

  அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!

  ReplyDelete
 2. \\\ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும்! அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்!/////

  அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!

  நிச்சயம் வரவேண்டும்!!!

  ReplyDelete
 3. காட்டுமிராண்டிகளின் மொழி வேறெதுவாய் இருக்கும் மாதவராஜ்?

  படங்களே கண்களைக் கூச வைக்கிறது.அவர்களின் குரல் அந்தப் படங்களில் ஒலிக்கிறது.

  நாம்தான் மாறுதலை ஏற்படுத்தவேண்டும்.ஒரு மானசீகமான ஆதரவோடு நாமே களமிறங்குவோம்.எகிப்தை விடுங்கள்.நம்மிடமே உதாரணங்கள் நிறைய உண்டு.

  ReplyDelete
 4. இந்த அடக்குமுறையை வன்மையாக (நானும்)கண்டிக்கிறேன் தோழர்.

  ReplyDelete
 5. அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்!

  அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!
  // சிந்திக்கத் தெரிந்த சமூகம் மலரும்போது இரும்புக்கைகள் இல்லாமல் போகும்... மனிதக் கைகள் மாண்புகள் பெறும்.

  ReplyDelete
 6. ச‌ம்பாத்திய‌த்திற்கு வ‌ரி போடும் அர‌சு.
  ச‌ரீர‌த்திற்கு வ‌ரிக‌ள் போடும் காவ‌ல்துறை.
  பணம் ம‌ட்டுமே இன்று செல்லுப‌டியாகும் ஒரே கார‌ணி.
  நீதி, நேர்மை, த‌ர்ம‌ம், ம‌னிதாபிமான‌ம், த‌ன்மான‌ம்
  எல்லாம் ம‌றைந்து அழிந்து விட்ட‌ செல்லாக் காசுக‌ள்
  இந்த ப‌ணப் போய்க‌ளின் ஆட்சியில் சில்ல‌றைகளின் கூச்ச‌ல்
  தேசிய‌கீத‌மாய்.

  ReplyDelete
 7. In so-called democratic India, even a police constable is behaving like a monarch...

  ReplyDelete
 8. பேய் ஆட்சி செய்தால்... பிணம் தின்னும் சாத்திரங்கள்..

  சட்டமாவது மண்ணாங்கட்டியாவது.. அதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் தான். உலகாளும் உத்தமர்களுக்கல்ல.

  ReplyDelete
 9. அரசு ஊழியர்களை மொத்தம்மாக வீட்டுக்கு அனுப்ப முயன்ற ஜெயாவின் வீடு வாசலில் காவலுக்கு நிற்கும் தோழர்கள் கவனிக்க

  ReplyDelete
 10. ஒருநாள் விரைவில் வரும்!

  ReplyDelete
 11. //அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!


  That day depend's on how Left-Front is Working...

  We know that will come...
  But,We have to tell when?

  ReplyDelete
 12. கொலைவெறியோடு தாக்கும் போலீஸ் காரங்க மேல பிரைவேட் வழக்கு போடுங்கள் சாட்சியாக போட்டோ தான் இருக்க அப்புறம் என்ன ???
  அடி பட்டவரும் அரசாங்க வேலை பார்க்கிறவர் தானே !!
  இவர்களுக்கு தான் சங்கம் இருக்க !!!
  பிரைவேட் வழக்கு போடும் போது காவல் துறை உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் ,உதவி கண்காணிப்பாளர் , கண்காணிப்பாளர் , மற்றும் ஐ ஜி , உள்துறை செயலாளர் வரை நீதிமன்றத்துக்கு இழுத்துவிடலாம் ! அவர்கள் வேறு இடம் மாரி போனாலும்' வழக்கிற்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டோட ஆஜரகின்ற சூழல் அமைந்து விடும் !
  எந்த ஒரு மேல் அதிகாரியும் இப்படிப்பட்ட சூழல் அமைவதை விரும்ப மாட்டார்கள் !! அப்புறம் என்ன "அடித்தவன் படும் பாடு அடுத்தமுறை இந்த தவரை செய்ய
  தோன்றாது" இப்படி இந்த சம்பவத்தில அடித்து வெரட்டிய போலீஸ் காரங்க எல்லோர்மேலையும் பிரைவேட் வழக்கு போடும் போது ஒரு நல்ல முடிவு வரும் !!!
  அடி பட்டவர் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால்' வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடுங்கள்!!!

  ReplyDelete