Type Here to Get Search Results !

பாட்டில் - குறும்படம்
ஒரு காலியான பாட்டில். பத்து நிமிடங்கள்தான். வசனமே இல்லை.  ஆனால் நிறைய பேசவும், ஆராயவும் முற்பட்டிருக்கிறார் இந்த விளாதிமீர் மரின் என்னும் உக்ரேனிய குறும்பட இயக்குனர்.  படம்பற்றி நாமும் பேச நிறைய இருக்கிறது. முதலில் படம் பாருங்களேன்.


கருத்துரையிடுக

6 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. இசையும் பங்கேற்றவங்களோட நடிப்பும் ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே.. இரண்டு விளிம்புநிலை மனிதர்களுக்கு நடுவே வர்ற அந்தக் காதல் அழகு.. ஆனா கடைசில அவங்கள தடுக்குறது எது? எதுவும் அவங்க நாட்டு அரசியல் சார்ந்து பேசியிருக்காரா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்..

  பதிலளிநீக்கு
 2. @கார்த்திகைப் பாண்டியன்!

  ரசித்தீர்களா தம்பி!
  எதிர்பாராமல் அவர்கள் சந்திக்கிறார்கள். எதோ ஒரு இழையில் அவர்களுக்குள் இணக்கம் ஏற்படுகிறது. விதிக்கப்பட்டிருக்கும் நியதிகள் எதோ ஒன்றை (எவ்வளவோ இருக்கிறதே...)இருவருமே உணர்கிறார்கள். இவ்விரு வகையான மனநிலைகளும் மனிதர்களுக்குள் இணைகோடுகளாக ஒடிக்கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் இயக்குனர்.

  எல்லாமே மௌனத்தில் புதைந்து கிடக்கின்றன. காலியான பாட்டிலுக்குள் வெறுமையா இருக்கிறது! இன்னும் பேச நிறையவே இருக்கிறது.....

  பதிலளிநீக்கு
 3. அண்ணா, இன்னும் - தொடக்கமும் முடிவும் ஒரு இடத்தில் தான்....

  பதிலளிநீக்கு
 4. வினோ!
  தொடக்கமும், முடிவும் ஒரே இடத்தில்தான். ஆனால் பாட்டில் உடைந்து விட்டது. :-))))

  பதிலளிநீக்கு
 5. பள்ளி விட்டு வரும்பொழுது, வேலியோரம் கிடக்கும் பாட்டில்களை (வீட்டுக்கு தெரியாமல்) எடுத்து, வண்டிக்காரனிடம் குடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்றது நினைவுக்கு வருகிறது அண்ணா.

  //விதிக்கப்பட்டிருக்கும் நியதிகள் எதோ ஒன்றை (எவ்வளவோ இருக்கிறதே...)//
  உணமைங்க.

  பதிலளிநீக்கு
 6. அற்புதம் மாதவ்...
  மகள் இந்துவையும், மனைவி தோழர் ராஜியையும் உற்சாகக் கூச்சல் போட்டு கணினி முன் உட்காரச் சொல்லி விட்டு ஒரு சேர பார்த்தோம் எல்லோரும்...
  ஃபிரேமுக்கு ஃபிரேம் அசந்து வியந்து நயந்து கிறங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

  பாட்டில் உடையும் என்பதை அதை நோக்கிய ஒரு எட்டு பத்து நடவடிக்கைகளுக்கு முன்பே தோழர் ராஜி சத்தமாகச் சொன்னார்.

  கவிதை...அந்தப் பெண்ணின் குறும்புப் பார்வை, காதல் புகைய தனது துண்டு பீடியை காவியமாய் அவனுக்குப் பகிர்ந்து கொடுப்பது, 'யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் அந்த வாலிபன் நோக்காக்கால் என்ன செய்கிறான்..' என்று பார்ப்பது, அதற்கு ஈடாக அந்தக் காதலன் நெகிழ்வது, குழைவது, தான் முந்திப்போய்ப் பறித்த பாட்டிலை பெரிய மனத்தோடு அவளுக்கு சமர்ப்பிப்பது,அந்த பூங்கா கூட்டும் மூதாட்டி, துள்ளி விளையாடும் குழந்தை, பூட்ஸ் கால்களில் அழகாக முடி போட்டிருக்கும் லேஸ்......

  எதனைச் சொல்வது, எதனை விடுப்பது...

  எண்பதுகளில் வாசித்த, காற்றுக்குத் திசை இல்லை என்ற இந்திரன் அவர்களது தொகுப்பில் இந்திய மொழிகள் பலவற்றில் வந்த சிறுகதைகள், கவிதைகளை அவர் அற்புதமாக மொழி பெயர்த்திருந்தார். அதில் ஒரு கதையில் இரண்டு பாத்திரங்கள்...கோலாப்பி என்பது அந்த விலைமாதின் பெயர். வாலிபன் பூ விற்பவன். சகிக்காத பழம்புடவையில் எங்கிருந்தோ அந்தச் சந்தடியான பகுதிக்கு வரும் கோலாப்பி ஒரு கடையின் பின்புறம் சென்று தன்னை அழகு செய்துகொண்டு, சற்று எடுப்பான சேலைக்கு மாறி வெளியே வந்து வாடிக்கையாளரை எதிர்நோக்குவாள். அவன் கடந்து போகும் கார்கள் சிக்னலுக்காக வேறெதற்கோ நிற்கும்போதெல்லாம் ஓடி ஓடிப் போய் பூ விற்க முயன்று தோற்றுத் திரும்புவான். சுடுகாட்டில் சடலங்களின் மீதிருந்து களவாடிக் கொணர்ந்த பூக்கள் தானே என்று அவள் அவனை நேரடியாகக் கேட்பாள். நிராசையான இரவு இருவருக்கும். கடைக்குப் பின்புறம் போய் பழைய உடுப்புக்குள் நுழைந்து வெளியே வரும் கொலாப்பியிடம் அவன், விற்காத பூக்களை நீட்டுவான். அவள் ஒரு மூலையில் அவற்றை எறிந்துவிட்டு எதிர்திசையில் எந்த பாதிப்புமின்றி நடப்பாள். அவன் அவனது வழியே...

  நினைவு படுத்திவிட்டீர்கள் மாதவ், வாழ்வின் துரத்தலில் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இயற்கையின் குழந்தைகள் இருவருக்கும் இடையே காதல் நுழைவது கூட அவர்களது பிழைப்பின் மேடையில், பரஸ்பர இழப்பில்....

  இதையெல்லாம் காட்டாமல் எத்தனை மயக்க உலகை நமது திரை ஜாம்பவான்கள் ஓயாமல் அர்ப்பணிப்போடு தீட்டிக் கொண்டிருக்கின்றனர்?

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு