அவர் ராசா. ஆனால் ராசா இல்லை.
அவர் மந்திரியாக இருந்தார். ஆனால் மந்திரி இல்லை.
அவர் குதிரையோ, யானையோக் கூட இல்லை.
அவர் ஒரு சிப்பாயாய் அருகிலிருந்தபோது, ராசாவுக்கு செக் வைக்கப்பட்டது.
வழிமறிக்கச் செய்து வெட்டுக் கொடுக்கப்பட்டார் அவர்.
ஒருகணம் ஸ்தம்பித்த காய்கள் மீண்டும் கட்டங்களுக்குள் நகர்த்தப்பட்டு அசைகின்றன.
வெறுங்காயாய் அவர் வெளியேக் கிடக்கிறார்.
அவ்வளவுதான்.
ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ராசாக்கள் விளையாடுகிறார்கள்.


முற்றிலும் உண்மை. சதுரங்க கட்டத்தில் யார் எப்பிடி காய் நவுத்தினாலும், செயிக்கப் போவறது யாரோ ஒரு ராசா தான். மத்தவெங்க எல்லாம் வெட்டப் பட்டு வெளியே நின்னு வேடிக்கை பார்க்கத் தான் முடியும்.
ReplyDeleteஉண்மை! அரசியல் சதுரங்கத்தில் ஒரு சிப்பாய் வெட்டுப் பட்டு விட்டது, ராஜா பிழைப்பதற்காக!அருமையாகச்
ReplyDeleteசொல்லி விட்டீர்கள்!
முற்றிலும் அசிங்கமான ஆட்டம். (வெறும் ராம் தாங்க பேரு என கொஞ்ச நாளைக்கு சொல்லலாம்ன்னு தோணுது மக்கா)
ReplyDeleteஎல்லோரும் கட்டம் கட்டி ஆடுகிறார்கள். உண்மை !
ReplyDeleteராசா 'மந்திரி'யானார்
ReplyDelete'ராசா' வாக முடியவில்லை
குறைந்த பட்சம் மனிதனாக நடந்து கொண்டிருக்கலாம்.
காய் நகர்த்தியவர்கள் நிம்மதியில் திளைத்திருக்கிறார்கள் கைதெல்லாம் ஒரு தண்டனை அல்லவென்று பிதற்றிக்கொண்டு.
HAHAHAHAHA................ NICE...
ReplyDeleteஅன்பு மாதவராஜ்,
ReplyDeleteஅருமையான பதிவு மாதவராஜ்... ராம் சொல்றதும் சரிதான்னே...
அன்புடன்
ராகவன்.
குதிரை கொண்டை "ராணி", குதிரை தவிர்த்து, மற்றெல்லாரின் செயல்திறனும் கொண்ட முக்கிய சூத்ரதாரியை உங்கள் ஆட்டத்தில் காணவில்லையே? இத்தாலி, சுவிஸ், ஜெர்மன் 'திக்'விஜயம் போய்விட்டார்களா தோழர் மாது?
ReplyDeleteNice post... :)
ReplyDeleteஇது போன்ற ராசாக்கள் பல இடங்களிலும் பலியிடப்படத்தான் செய்கிறார்கள், பலி கொடுக்கப்படுகிறோம் எனத் தெரிந்தும் சில சமயங்களில் தெரியாமலும்.
ReplyDelete