Type Here to Get Search Results !

இங்கே அரசியல் பேசலாம் - 12ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலையும்விட பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய தணிக்கைக் குழு தற்போது ‘கண்டுபிடி’த்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் விற்பதில் நடந்த முறைகேடு இது.  2005ம் ஆண்டு 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை தேவாஸ் மல்டி மீடியா என்னும் தனியார் நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்ள கட்டணமாக ரூ.1000 கோடி பெறப்பட்டு இருக்கிறது. அதே வேளையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு  20 மெகாஹெர்ட்ஸ்  பயன்படுத்திக்கொள்ளவே கட்டணமாக ரூ 12, 847 கோடி பெறப்பட்டு இருக்கிறது. தனியார்நிறுவனங்களுக்கு  சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த ஊழலால் அரசுக்கு இரண்டு லட்சம் கோடி வருமான இழப்பு  ஏற்பட்டு இருக்கலாம் என இப்போதைக்கு உத்தேசமாக சொல்லப்படுகிறது. தொகைகள் மேலும் கூட உயரலாம். அது தட்பவெப்ப நிலையை பொறுத்தது. எப்படியோ  காங்கிரஸே மீண்டும்  தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறது. 

ஒரு லட்சம் கோடி என்றும், இரண்டு லட்சம் கோடி என்றும் தேசத்தின் வளங்களையும், வருமானங்களையும் இத்தனை எளிதாக மோசடி செய்கிற இவர்கள்தான் இன்னமும் தாங்கள் யோக்கியர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்கிறார்கள். நாட்டுக்காகத் தியாகம் செய்யப் பிறந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளவும்  செய்கிறார்கள். ‘பரிசுத்த’ மன்மோகன் சிங் ராஜ்ஜியத்தில்  மண்ணிலும், நீரிலும், விண்ணிலும் ஊழல் தேவதைகள் நடனமாடுகிறார்கள். தேவரீரின் கிருபையால் கொழுத்தவன் மேலும் கொழுக்கிறான், இளைத்தவன் அதற்கு மேலும் இளைக்க முடியாமல் சாகிறான்! 

சரி, 2005ம் ஆண்டு நடந்த ஊழல் இப்போதுதான் தணிக்கைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது எனில், இத்தனை வருடங்களாக, தணிக்கைக் குழு என்ன செய்துகொண்டு இருந்தது என்று யாரிடம் கேள்வி கேட்பது?

முப்பது மாதங்களுக்கு முன்பு ‘திருப்பதி’யில் வைத்து ‘ஊழலை எதிர்த்து யுத்தம் செய்யப்போவதாக’ லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி முழங்கியவர் இப்போது ஊழலின் சொர்க்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு விட்டார். பிரஜா ராஜ்ஜியம் என்றால் மக்களின் ராஜ்ஜியம் என்றும், சீரஞ்சீவி என்றால் நீண்ட ஆயுள் கொண்டவர் என்றும் அர்த்தம்! இப்போது ஜோக் ஆகிவிட்டது. சரி, இனி சீரஞ்சீவி யாரை எதிர்த்து யுத்தம் செய்யப் போகிறார்?

ஆந்திராவில் இப்படி மலையை விழுங்கிய காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் எஸ்.வி.சேகர் என்னும் கூழாங்கல்தான் இதுவரைக் கிடைத்திருக்கிறது. காத்திருந்து கவனிப்போம்.

சுப்பிரமணியம் சுவாமி மீது கருணாநிதி வழக்குத் தொடர, கருணாநிதி மீது சு.சுவாமி மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்க,  ஒரே தமாஷாக இருக்கிறது. போயும் போயும் சு.சுவாமியோடெல்லாம் மோதுகிற அளவுக்கு தமிழக முதல்வரின் நிலைமை படு மோசமாகி இருக்கிறது என்பது மட்டும் இதனால் தெளிவாகிறது. கம்மங்கூட்டில் கேஸ்கட்டுக்களை வைத்துக்கொண்டு அலையும் இந்த  ‘அரசியல் வைத்தி’க்கும் காலம்  எப்படி கழிகிறது, பாருங்கள்!

ராசா எந்தக் குற்றமும் செய்யவில்லை”
“ராஜினாமா செய்ததால் ராஜா குற்றம் செய்தார் என்று அர்த்தமல்ல”
“கைது செய்யப்பட்டதாலேயே ராசா குற்றவாளி என்று அர்த்தமல்ல”
நெஞ்சுக்கு நீதி?

கருத்துரையிடுக

7 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. கூழாங்கல்லான தண்ணியில தூக்கிப்போட்டா கொஞ்சம் சலசலப்ப ஏற்ப்படுத்தும். இவரு என்ன செய்யமுடியும். பாவம். காங்கிரஸ் என்ன பேசிகிராங்கன்னு வேணா தி.மு.கா சொந்தங்களுக்கு தகவல் கொடுக்க முடியும். அவ்வளவு தான். பாவங்க. விட்டுருங்க.
  Sethu(S)

  பதிலளிநீக்கு
 2. இந்தியா தான் உலகின் நம்பர் ஒன் என கொண்டு வருவதே அவர்கள் ஆசை, மற்ற விசயங்களில் முடியாததால் ஊழலில் கொண்டு வர பாடுபடுகிறார்கள், இது தெரியாமல் சும்மா குறை சொல்லிகிட்டு!

  பதிலளிநீக்கு
 3. தேவஸ் மல்டிமீடியா கம்பெனியின் தலைவர் டாக்டர்.எம்.ஜி.சந்திரசேகர்.இந்திய வீன்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயலாளராகப் பணியாற்றி.யவர். விளங்குமாய்யா நாடு?---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 4. காங்கிரஸுக்கு ஓட்டு போட்டவங்களே...
  இப்பவும் நீங்கள் உணராவிட்டால் வெறும் ஜடம்தான்... உங்களுடைய ஒவ்வொரு பைசாக்களையும் காங்கிரஸ் திருடிக் கொண்டிருப்பதை இன்னுமா உணரவில்லை

  என்று கூவத் தோணுகிறது!!

  இன்னும் எத்தனை கோ(கே)டிகள் இருக்கிறதோ தெரியவில்லை....

  பதிலளிநீக்கு
 5. மக்களை நிர்வாணமாக்கி ரசிக்கிறார்கள்.. மக்களும் தாங்கள் அம்மணமாக இருப்பதை உணர்வில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே... உங்களை பலாத்காரம் செய்ய நீண்ட நேரம் ஆகிவிடாது..!!!

  பதிலளிநீக்கு
 6. அருமையான கார்ட்டூன்..

  கட்டுரையும் தான்.

  பதிலளிநீக்கு