"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று திருவாய் மலர்ந்து அண்ணன் ஆட்சியைப் பிடித்தார். “ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்” என்று கடைவாய் திறந்து தம்பி ஆட்சியைத் தொடரப் பார்க்கிறார். இளிச்சவாயர்களாக இருந்தவர்கள் பிச்சைக்காரர்களானார்கள். வாய்களுக்கு ஒன்றும் குறைவில்லை.


இளிச்சவாயர்கள் நாமாய் இருக்கும் வரை. நமது நெற்றியில் நாமங்கள் தான் அய்யா
ReplyDeleteஇலவசங்களுக்கு மயங்கிக்கிடக்கும் நாம் எப்போது விழிக்கிறோமோ அதுவரை நம் தலையில் மிளகாய்தான். என்ன செய்வது செம்மறி ஆட்டுக் கூட்ட்ம் என்ற கேலிக்கு நாம் ஆளாக செம்மறி ஆடுகள் கூட மாறிவிட்டன... நாம்?
ReplyDeleteசேரியாய் இருப்பதால், அங்கு கட்சிக் கொடிகள் பறக்குதா?
ReplyDeleteகட்சிக் கொடிகள் பறப்பதால், அது சேரியானதா?
கல்வி இலவசமனதால், ஏழையும் படித்தான் அன்று.
டிவி இல்வசமானதால், வேலையை மறந்தான் இன்று.
அரச சாம்ராஜ்யம் விரிய கட்டுப்பாடான வீரர்கள் வேண்டும்.
அரசியலரின் சம்பாத்தியம் விரிய கட்டுப்பாடற்ற சமூகம் வேண்டும்.
"ராமன் ஆண்டாலெனன, ராவணன் ஆண்டாலென்ன" எனும்
அக்கறையற்ற மக்களுக்கு, கறைபடிந்தவர்கள் தான் படியளப்பர்.
பின்னூட்டம் ஒன்று
ReplyDeleteஏன் தோழர் இப்படியெல்லாம் வீர வசனம் பேசினாலாவது ஸ்பெக்ட்ரம்
ஊழல், நீரா ராடியா தொலைபேசி பதிவுகள், குடுமபத்து சகோதர சகோதரி யுத்தம் இதைப்பற்றிய மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யலாம் என்று அவர் பார்க்கிறார். இதிலேயும் மண்ணை அள்ளிப் போட பார்ப்பது நியாயமா?
பின்னூட்டம் இரண்டு
எங்களின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு புறம் அனைத்துப்
பொருட்களின் விலைகளை ஏற்றி மக்கள் கையில் உள்ள சொற்பக்
காசையும் பிடுங்கி விடும். நான் பின்னாலேயே போய் இலவசங்கள்
வழங்குவேன். இந்த சாணக்கிய தந்திரத்தை குறை கூறுபவர்கள்
யார் என்பதை உடன் பிறப்பே பார்க்க மறந்திடாதே! எல்லாமே ஆரிய
சூழ்ச்சி.
பின்னூட்டம் மூன்று
மத்தியில் உள்ள ஆட்சி ஏழை மக்களுக்கு எதுவுமே தரக்கூடாது
என்ற கொள்கை கொண்டுள்ளபோதும் அதற்கு எதிராக செயல்படும்
எனது ஆட்சியைப் போய் குறை சொல்கின்றார்களே. நீ கவலைப
படாதே தமிழா, சட்ட மன்ற தேர்தலில் நன்றாக கவனிக்கிறேன்,
ஸ்பெக்ட்ரம் பணம் கைவசம் உள்ளதை மறக்காதே.
இளிச்சவாயர்கள் நாமாய் இருக்கும் வரை. நமது நெற்றியில் நாமங்கள் தான்.என்னதான் இந்த உலகம் நாகரிகமாக அறிவியல் சக்தியோடு மாறினாலும் நாம் இன்னும் இலவசங்களை எண்ணி ஏமாரி கொண்டு தானே இருக்கிறோம்.நாமும் அப்படிதானே இருந்து கொண்டிருக்கிறோம்
ReplyDeleteஇதற்குமேல் ஏழைகளை ஒருவர் அவமானப்படுத்த முடியுமா? ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.....
ReplyDeleteஅங்கீத வர்மா!
ReplyDeleteஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் என்று ஆரம்பிக்கும் பாரதிதாசனின் கவிதையை ஞாபகத்தில் கொள்வோம்.
சே.குமார்!
இலவசமாய் கொடுக்கவேண்டிய கல்வியை இங்கு காசுக்கு விற்றுவிட்டு, எதையெதையோ கொடுக்கிறார்கள்.
வாசன்!
கவிதைக் கோபம். நெருப்பில் தோய்ந்த வார்த்தைகளால் சாடியிருக்கிறீர்கள். இந்தக் கோபம் ஒருநாள் பெருந்தீயாய் உருமாறும்.
ராமன்!
உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் கிண்டலும், கேலியுமாய் அறைகின்றன. இலவசங்கள் என்ற பேரில் மக்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போடுபவர்கள்தான் இவர்கள்.
கேசவன்!
இந்த அரசு தர வேண்டிய இலவசங்களும் நிறைய இருக்கின்றன. அதுகுறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
CLASSBIAS!
அவர்கள் மக்களை என்றைக்கு மதித்தார்கள். ஏறி மிதிக்க மட்டுமே தெரியும்.