-->

முன்பக்கம் , , , , � வம்பரங்கம் 12: தமிழர்களே! தமிழர்களே!!

வம்பரங்கம் 12: தமிழர்களே! தமிழர்களே!!அவர் சொல்கிறார்: "தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்".

கவிழ்ந்துகிடக்கும் கட்டுமரங்கள் சொல்கின்றன: “எவ்வளவு நம்பிக்கை அவருக்கு தமிழர்களின் மீது! எவ்வளவு முடநம்பிக்கை தமிழர்களுக்கு அவரின் மீது!”

கடல் என்ன சொல்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்?

*

(தமிழக மீனவர்களை பாதுகாக்க எழுப்பும் குரலாக, இந்த லிங்க்கில் உள்ள பெட்டிஷனில் கையெழுத்திடுங்களேன்:
Save Tamilnadu Fishermen Petition )
Related Posts with Thumbnails

9 comments:

 1. மாது!

  தமிழன் என்ற சொல்லாடலே தமிழர்களை அல்லது தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் மக்கள் பகுதியை ஏமாற்றத்தான் என்பது எனது கருத்து. கடலோடு போராடும் மீனவர்கள் மீது அக்கறை கொண்டு கடிதம் எழுதிவிட்டால் முடிந்தது எல்லாம். அதை எழுதும் நேரத்தை விடவும் கூடுதலான நேரம் 'இளைஞன்' படத்திற்கு தேவைப்படுகிறது

  ReplyDelete
 2. "க‌ழிவுக‌ளைக் என்னில் (க‌ட‌லில்) க‌ல‌க்காதீர்க‌ள்"

  ReplyDelete
 3. திலிப் நாராயணன்!
  வருஅகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. வாசன்!
  தீராத பக்கங்களின் கேள்விக்கு பதில் வரவில்லையென என நினைத்துக்கொண்டு இருந்தேன். அடேயப்பா, என்ன ஒரு காத்திரமான, ஆத்திரமான பதில்!

  ReplyDelete
 5. Dear Madhu,
  You and Kamu were my initial inspiration to begin my Blog.
  My Blog (Erithazhal )is still missing your valued visits / comments. Appreciate your 'me the FIRST against the WRONG' attitude Mr. Madhu.

  ReplyDelete
 6. கடல் என்ன சொல்லும்.. ! கடவுளே..! என்றுதான்.. சொல்லும்..! (கடவுளே என்ற வார்த்தை தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாசிக்கவும்..)

  ReplyDelete
 7. கடல் என்ன சொல்லும் ,தமிழ் நாட்டுப்பக்கமே தண்ணி கொண்டு வரமாட்டைன்ப்பா

  ReplyDelete
 8. கடல் : "இலங்கை ராணுவத்தால் கடலுக்குள் தள்ளப்படும் தமிழக மீனவர்களை இவர் காப்பாற்றினால் போதும், மீனவ மக்களின் வியர்வையால் நித்தமும் புனிதப்படும் எனக்குள் விழுந்து இவர் என்னை அசிங்கப் படுத்த வேண்டாம், என்னை கரை படுத்த வேண்டாம்".
  இக்பால்

  ReplyDelete
 9. //"தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்".//
  நிறைவு வரிகள் மறைக்கட்டுள்ளன

  *******************************
  "கொண்டு செல்ல வேண்டிய இடத்தில் தவறாமல் விடுவேன்
  கொன்று குவிக்க தயாராக இருப்பாவர்களிடம்"
  ********************************

  ReplyDelete