-->

முன்பக்கம் , , , , � வம்பரங்கம் 10: பெட்ரோல் விலை உயர்வு!

வம்பரங்கம் 10: பெட்ரோல் விலை உயர்வு!
த்தியாவசிய பொருட்களின் விலை, எந்த அறிவிப்புகளுமற்று ஒருபுறம் எகிறிக்கொண்டு இருக்க, அறிவிப்புகளோடு பெட்ரோல்  அடிக்கடி  நள்ளிரவுகளில் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 2010 டிசம்பர் 14ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, சரியாக ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இன்னொரு விலை உயர்வு. லிட்டருக்கு ரூ.2.54 பைசா  இன்று  ‘நள்ளிரவு’  முதல் அமலுக்கு வருகிறது!
 
“உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்  நள்ளிரவில் இந்தியா விழித்துக்கொண்டது” என்று நாட்டின்  முதல் பிரதமர் நேருவின்  உலகப் புகழ்பெற்ற  இந்த வார்த்தைகள் இப்போது வேறுவிதமான அர்த்தங்களோடு நினைவுக்கு வருகின்றன.

நள்ளிரவில் விழித்துக்  கொண்டு இருப்பவர்கள் திருடர்களாகவே இருக்கிறார்கள். மக்கள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Related Posts with Thumbnails

8 comments:

 1. இந்த‌ப் பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறப்போகிறது. இனி மக்கள் வீதியில் வந்துதான் போராட வேண்டுமோ?

  ஓட்டுப்போட்டவர்களின் நிலைமை இன்று சாபக்கேடாகத்தான் மாறிப்போனது.

  ReplyDelete
 2. சார்,
  மனசு வலிக்கிறது , அரசாங்கம் எதுவும் செய்யமுடியாத கையலாகாத்தனம் , என்னும் என்ன என்ன நிலைமை வருமோ என யோசிக்க அச்சமாய் உள்ளது

  ReplyDelete
 3. //நள்ளிரவில் விழித்துக் கொண்டு இருப்பவர்கள் திருடர்களாகவே இருக்கிறார்கள். மக்கள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.//

  Correct. மனசு வலிக்கிறது.

  ReplyDelete
 4. எல்லோரும் வீட்டில் வண்டியை விட்டு விட்டு நடந்து போகலாம்..

  முன்னெல்லாம் ஐம்பது பைசா பேருந்து கட்டணம் ஏற்றினாலே போராட்டம் இருக்கும்.. ஆனால் இப்போது போராட்டங்களும் இல்லை.. நடத்தினால் அதை அரசு கண்டுகொள்வதும் இல்லை..

  ReplyDelete
 5. Nach enra pathippu. no reaction from public.

  ReplyDelete
 6. வணக்கம் நண்பரே!
  புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  நன்றி.
  - தமிழ்புக்மார்க் குழு
  http://www.tamilookmark.co.cc

  (தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

  ReplyDelete
 7. வணக்கம் நண்பரே!
  புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  நன்றி.
  - தமிழ்புக்மார்க் குழு
  http://www.tamilookmark.co.cc

  (தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

  ReplyDelete