-->

முன்பக்கம் , , � செருப்பில் சேகுவேரா!

செருப்பில் சேகுவேரா!

che chappal

இந்தப் படத்தைப் பார்த்ததும், சட்டென்று ஆத்திரம் வந்தது. இப்படி சிந்திக்க முடிந்தவனையும், இப்படி வியாபாரம் செய்யத் துணிந்தவனையும் இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.

உலகம் முழுமைக்கும் சுரண்டலற்ற அமைப்பைக் கனவு கண்டவரும், புரட்சிகர இயக்கங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவரும், மாற்றங்களை விரும்பும் பல கோடி இளைஞர்களின் ஆதர்ச போராளியுமான சேகுவேராப் படத்தை செருப்பில் போட்டு விற்றுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இது நடந்தது வேறு எங்குமில்லை. சென்னையில், பாரிமுனையில், கோவிந்தப்பன் தெருவில், அப்துல் அன்சன்ஸ் என்னும் கடையில்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சாந்த தோழர்கள் செருப்புக்களை அபகரித்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். செருப்பைத் தயாரித்த நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

முதலில் வந்த ஆத்திரம் அடங்கி,  யோசித்துப் பார்க்கும் போது தோன்றியவைகளை இங்கு பகிரத் தோன்றியது.

இப்படித்தான் சேகுவேரா படம் போட்ட பீர்களை தயாரித்து, பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் விற்பனை செய்தார்கள். கியூபா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தடை செய்தது. சேகுவேரா படத்திற்கு இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பை காசு பண்ணும் வியாபார முளை என்று இதைப் பார்க்க முடியவில்லை. இந்த சமூகத்தில் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியினருக்கும் பிடித்தமான தலைவர்களும், மனிதர்களும் இருக்கவேச் செய்கிறார்கள் அவர்களையெல்லாம் இப்படி யோசிக்கக் கூட முடியாது. ரஜினி என்னும் ஒரு நடிகரின் படத்தை இப்படி செருப்பில் போட்டு ஒரு நிறுவனம் தயாரித்திருந்தால், இன்னேரம் என்ன ஆகியிருக்கும்!

ஆனால், உண்மையிலேயே ஒரு உலக நாயகனான சேகுவேராப் படத்தை இப்படி பயன்படுத்தினால் யார் கேள்வி கேட்பார்கள் என்னும் தைரியமே இதற்கெல்லாம் காரணமாக இருக்க முடியும். சேகுவேராவின் அருமை தெரியாதவர்களே அவரை மிதித்தபடி நடந்துகொண்டு இருப்பர்கள். அருமை தெரிந்தவர்களின் கால்களுக்கு  சேகுவேரா செருப்பாகவும் இருப்பார் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. “இருப்பவன் தலைக்கு நெருப்பாக வா!, இல்லாதவன் காலுக்குச் செருப்பாக வா!” என்னும் கவிஞர் கந்தர்வனின் கவிதை சேகுவேராக்களுக்காகத்தான் எழுதப்பட்டது.

“இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கு பொன்னுலகம் இருக்கிறது” என்று தொழிலாளர் வர்க்கத்தை அழைத்தவர் மார்க்ஸ். “இழப்பதற்கு நிறைய இருக்கிறது, பெறுவதற்கு ஒன்றுமில்லை” என்று கியூபாவின் அமைச்சர் பதவியை விட்டு, துப்பாக்கியோடு லத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கு புறப்பட்டவர் சேகுவேரா. பொலிவியாவில், காட்டின் ஒரு மூலையில் அவரைப் பிடித்து அமெரிக்க உளவுத்துறையினர் சுட்ட போதும், ஏகாதிபத்தியத்தின் மீது வைத்த குறி அவர் கண்களில் நிலைத்திருந்தது. அதுதான் அவர் இன்னமும் ‘எல்லோருக்குமான உலகத்தை’ச் சிந்திக்கிறவர்களின் மூளையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அந்த பிம்பத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள் இப்படி.

சேகுவேராவைக் கொல்வதற்கு முன்பு, பொலிவியாவில் ஒரு பாழடைந்த பள்ளியில் சி.ஐ.ஏ கைக்கூலிகள் அடைத்து வைத்திருந்தார்களாம். அந்தப் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் ஒரு பெண் சேகுவேராவைப் பார்த்திருக்கிறார். எதோ ஒரு தீவீரவாதி என்று, “ஏன் இப்படி, உங்களுக்கு மனைவி, குழந்தைகள் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். சேகுவேரா சிரித்துக்கொண்டே, “இப்படி மோசமான நிலையில் இருக்கும் பள்ளியில் எப்படி குழந்தைகள் படிப்பார்கள். ஒருவேளை நான் உயிரோடு இருக்க முடிந்தால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கட்டித் தருவேன்” என்றாராம்.

இப்போது, சேகுவேராவின் நினைவாக அங்கு ஒரு சிறந்த பள்ளி எழுப்பப்பட்டு இருக்கிறது. சேகுவேராவின் கடைசி மூச்சு கலந்த வெளியில் குழந்தைகள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். சேகுவேரா இறந்தாலும் தன் கனவுகளை நனவாக்கிக் கொண்டு இருப்பவர். அப்பேர்ப்பட்டவரை இப்படியெல்லாம் அவமதித்துவிட முடியாது. ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியாது. அப்போதும் வைத்த குறியில் தவறாமல் தனது காரியத்தை செய்துகொண்டுதான் இருப்பார்.  ஆமாம், சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது!

Related Posts with Thumbnails

40 comments:

 1. கண்டனத்திற்குரியது.அந்த செருப்பலையேநாலு போடறதுதான.இந்துக்கடவுள்களை வெளிநாட்டுல போட்டு வாங்கி கட்டிக்கிட்டாங்க.எதைப்போட்டா காசுன்னு அலையுதுங்க நாயிங்க.

  ReplyDelete
 2. பணம் கொடுத்து வாங்கி அதாலேயே அடித்திருக்க வேண்டும். விட்டு விட்டார்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என.

  திட்டமிட்டே செய்பவனே திட்டமிடாமல்தான் தாக்க வேண்டும். திட்டமிட்டால் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பித்து விடுவான்

  ReplyDelete
 3. ஆமாம், சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது!//

  உண்மை....

  "நெகிழ வைத்த மனிதனவன்..
  என் கண் முன்னே தோன்றிடுவானோ.???
  கண்ணில் பார்திட்டால்
  கட்டிணைப்பேனே...
  தோழா என்று என்னை அழைத்திடுவானோ..???
  எங்கு செல்லவேண்டும்..
  அவனை போல விதையாகவும் தயார்
  என் தோழனை அணைக்க வழியுண்டா.??
  உன் விருப்பத்தை நிரைவேத்திட்டு
  வருகிறேன் நண்பா சே.!!!
  உன் முந்தைய வேழ்கையை
  இன்றே திருப்திபடுத்திவிட்டு வருகிறேன்..
  காத்திரு உன் வேழ்க்கைக்கும் என் வருகைக்கும்..
  உன்னைபோல் இன்றும் என்னுடன் ஆயிரம் நண்பர்கள்
  அனைவரும் உன உருவத்திலே.!!
  போராளியாக.."


  அப்படி ஒரு போராளியின் சினங்கொண்ட குரலாக இதை கருதுகிறேன்.. சே-வை இழிவுபடுத்த நினைப்பவன் இழிவு பெறுவான்..

  இழிந்தார் சொல் கேளாது துணிந்து
  இகழும் வாய் புகழ செய்திடுவோம்...!!

  ReplyDelete
 4. எலும்பு கூடு வடிவில் சேகுவேரா படம் போட்டு சென்னையில் பல கடைகளில் T - SHIRT விற்கிறது.

  பிடல் காஸ்ட்ரோ முகத்தை பன்றி வடிவில் ஒரு பாக்கெட் நாவல் அட்டையில் போட்டு வந்தது...(அதை அந்த கம்பெனிகாரங்க தெரிந்து தான் செய்தார்களா என்று தெரியவில்லை)

  ReplyDelete
 5. @டம்பி மேவீ: இது முற்றிலும் கண்டனத்துகுரியது... இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா.??? இதை பற்றி மேலும் விசயம் தெரிந்தால் சொல்லவும்... நடவடிக்கை எடுக்க வைக்க நான் தயார்...

  ReplyDelete
 6. கண்டனத்திற்குரியது .

  ReplyDelete
 7. கண்டிப்பாக கண்டனத்திற்குரியது.

  ReplyDelete
 8. கேவலமான செயல்..

  உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஆதர்ச சக்தியாக விளங்கும் ‘சே’வை இழிவுபடுத்துவதை அனுமதிக்கக்கூடாது

  ReplyDelete
 9. கண்டிப்பாக கண்டனத்திற்குரியது.

  ReplyDelete
 10. மாது இதில் கடைக்காரன்மேல் கோபப்பட என்ன இருக்கிறது.

  அவன் ஒரு வியாபாரி, ஆனால் சே ஒரு உலகப்புரட்சியின் நாயகன்.அதுவும் ஆயுதம் ஏந்திய புரட்சிக்காரன்.

  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.road side srones are the prolotariates weapen. எழுத்து கூர்மையான ஆயுதம்.இப்படி எல்லாம் ஆயுதமாகும் போது செருப்பு ஆயுதமாகாதா?.

  ஆக்கியிருக்க வேணாமா?

  ReplyDelete
 11. காமராஜ்!

  முழுவதும் படிக்கவில்லையா தோழா? :-)))

  ReplyDelete
 12. தமிழன்!
  வேல்முருகன்!
  தம்பி கூர்மதியன்!
  டம்பி மேவீ!
  நிம்மி!
  நண்டு@நொரண்டு!
  விடுதலை!
  பா.ரா மக்கா!
  ஹரிஹரன்!
  மூர்த்தி!

  அனைவ்ருக்கும் நன்றி.

  ReplyDelete
 13. இந்திய ஜனநாயக வாலிபர் சங்களுக்கும், ரஜினி ரசிகர் மன்றங்களுக்கும் வித்தியாசமில்லை என்று கூறுகிறீர்களா?

  உங்களுடைய கடைசி வரியிலும், இதனாலெல்லாம் சே'வின் புகழினை மறைத்து விட முடியுமா...என்பது போன்ற இயலாமையால் விளையும் ஆயாசம்தான் தெரிகிறதே தவிர 'அட! செருப்பில் போட்டும் விற்கட்டுமே' என்ற உணர்வு தெரியவில்லையே!


  சே' மனப்பான்மைக்கு அவர் இதனை ரசித்திருப்பார் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 14. This should not be encouraged.

  சேகுவேரா எ‌ன்று இ‌ல்லை. எந்த தனி மனிதனையும் இதுபோல செருப்பில் போட்டு விற்பது கண்டனத்துக்குரியது. காண்டம் படத்தில் காந்தி உருவத்தை சும்மா விடுவார்களா இவர்கள்? அந்த செருப்பு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? உற்பத்தி செய்தவர்கள் யார்?

  ReplyDelete
 15. இழிபிறவிகள்!
  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

  ReplyDelete
 16. @ தம்பி கூர்மதியன் : அந்த பாக்கெட் நாவல் அட்டை வந்து ஒரு இரண்டு மாசமாவது ஆகிருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பிடல் காஸ்ட்ரோ T SHIRT யை EXPRESS AVENUE ல ஒரு கடையில் பார்த்தேன். கேட்டதற்கு கம்பனிகாரங்க போடுற டிசைன் நாங்க என்ன பண்ண முடியும்ன்னு கடைக்காரங்க சொன்னாங்க.....

  ReplyDelete
 17. அந்த பிடல் காஸ்ட்ரோ அட்டையை ஒரு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவலில் தான் பார்த்தேன்

  ReplyDelete
 18. வியபாரத்தில் கடைபிடிக்கும் மலிவான யுத்தி.

  ReplyDelete
 19. எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்றதற்க்காகவா புரட்சியாளர்கள் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார்கள் ..
  அறியாமையினால் இந்த தவறை செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது . ஏனென்றால் அவன் ஒரு வியாபாரி .........
  கண்டனத்திற்கு உரியது ........

  ReplyDelete
 20. சே வை செருப்பில் போடுவது என்பது
  சாதாரண வியாபார நோக்கம் இல்லை.
  அவரையும் அவர் சார்ந்த கொள்கையை
  யும் அவமானப் படுத்துவதே.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோழர்களுக்கு
  மிக்க நன்றி.

  ReplyDelete
 21. நிச்சய்அமாக அறியாமல் செய்திருக்கமுடியாது.புரட்சியாளன் "சே" யின் உருவம் உலகம் முழுவதுமுள்ள இளய தலைமுறையின் இதயங்களில் புரட்சிகர சிந்தனைகளை விதைக்கிறது.இதைப்பொறுத்துக்கொள்ள முடியாத கிணற்றுத்தவளைகளின் சில்லரைத்தனம்.இதை முளையிலேயே கிள்ளியெறிய்வேண்டும்.

  ReplyDelete
 22. //மன்மதன் அம்பு படத்தில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவது போல வரிகள் இருந்ததால் பாடல் சிடிகளை இந்து மக்கள் கட்சியினர் கொளுத்தினர்//

  //உலகம் முழுமைக்கும் சுரண்டலற்ற அமைப்பைக் கனவு கண்டவரும், புரட்சிகர இயக்கங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவரும், மாற்றங்களை விரும்பும் பல கோடி இளைஞர்களின் ஆதர்ச போராளியுமான சேகுவேராப் படத்தை செருப்பில் போட்டு விற்றுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இது நடந்தது வேறு எங்குமில்லை. சென்னையில், பாரிமுனையில், கோவிந்தப்பன் தெருவில், அப்துல் அன்சன்ஸ் என்னும் கடையில்!

  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சாந்த தோழர்கள் செருப்புக்களை அபகரித்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். செருப்பைத் தயாரித்த நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.//

  இந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. உங்களுக்கு? 

  ReplyDelete
 23. முதலில் வந்த ஆத்திரம் அடங்கி, யோசித்துப் பார்க்கும் போது தோன்றியவைகளை இங்கு பகிரத் தோன்றியது.

  I am just comparing our angry with one of Hidutuvaists against MF Hussain paintings...

  Narayanan.N
  Aruppukottai

  ReplyDelete
 24. செருப்பிலே சே குவேரா பற்றி யார் கோபப்படுவது?

  அட நம்ம மாதவராஜ் ஐய்யா.

  சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சின்னமாம் அரிவாள் சுத்தியலை அம்மாவின் ஆசி பெற்ற சின்னம் என்று அவமானப்படுத்திய கட்சியை எதிர்த்து அதனை விமர்சித்து ஒற்றை எழுத்தையேனும் உதிர்க்காத மாதவராஜ் அண்ணாச்சியா சேவை இழிவுபடுத்துவது கண்டு கோபப்படுவது?

  சேவை செருப்பில் வரைந்ததை அவர் உழைக்கும் மக்களின் செருப்பாக இருந்து அவர்களின் மேன்மைக்கு போராடினார் என்று சப்பைக்கட்டு கட்டு சாத்தியமாவது உண்டு.

  ஆனால், அம்மாவின் ஆசிக்கு அரிவாள் சுத்தியலை தாழ்மைப்படுத்தி இழிவுபடுத்திய துரோகத்திற்கு சேருப்பில் சே உரைபோடக் காணுமா?

  உண்மையில் உழைக்கும் மக்களின் ஆசியில் அரிவாள் சுத்தியல் இருந்திருந்தால் லால்கரும், நந்திகிராமும் மாதவராஜ்களுக்கு கிடைத்திருக்கும். கிடைக்கும்....

  ReplyDelete
 25. /வினோத்!
  உங்களது பின்னூட்டம் நாகரீகமாகவும் இல்லை, நல்ல பார்வையாகவும் இல்லை//

  இது எனது பின்னூட்டத்திற்கு நீங்கள் இட்ட பதில். எந்த வகையில் நாகரிகமில்லை? உங்களை அம்பலப்படுத்தியது என்பதால் அப்படித்தானே? சிபிஎம்ல் இருந்து கொண்டு விமர்சனத்தை அநாகரிகம் என்று கருதும் மொன்னைத்தனம்தான் உங்களிடம் வளர்ந்திருக்கும் என்பது தெரிந்ததே.

  நீங்கள் நாகரிகமானவர் எனில் அதனைப் பிரசூரித்து பிறகு சொல்லியிருக்க வேண்டும். உங்களது புருடா அரசியலுக்கு அதுதான் ஒத்து வராதே? உண்மைகளை கண்டு அஞ்சும் கோழைதான் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 26. //இந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. உங்களுக்கு?//

  நிறைய வித்தியாசம் உள்ளது. உங்களுக்கு மானுட குல விடுதலைக்காக தியாகம் புரிந்த தோழர் சேவை பிடிக்குமா அல்லது இந்திய மக்களில் பெரும்பாலோனோரை தீண்டாதோராக்கிய மனுதர்ம கடவுளர்களைப் பிடிக்குமா என்பதில்தான் அந்த வித்தியாசம் உள்ளது.

  எனக்கு 'சே'வைப் பிடிக்கும். அவரை இழிவுபடுத்துவோரை வாதங்களாலும் - மக்களைத் திரட்டியும், தேவைப்பட்டால் தெருச் சண்டையில் ஈடுபட்டும் முறயடிப்பேன்..

  நீங்கள் எப்படி? சாதி காக்கும் கடவுளர்களுக்காக வீதியிறங்குபவரா என்ன?

  ReplyDelete
 27. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நீங்கள் குறிப்பிட்டது போல ரஜினியின் படத்தைப் போட்டிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? ரஜினியை நாளை தமிழகம் மறந்துவிடலாம் செகுவாராவை உலகம் என்றும் மறக்காது!!

  ReplyDelete
 28. yennudaya illamai kaalangalil "bruce lee" yai patri mulumaiyaga theriyamal, bruce lee padatthai potta baniyan poatu alainthavan,

  Indru seguvaravai pattri mulumaiyaga theriyavillai endralum,
  therinthavarikkum avar "ulaga nayagan" endru ennudaya mobile phone la screen saver aaga avar padatthai vaitthirukkirane.

  "செருப்பில் சேகுவேரா!"

  கண்டிப்பாக கண்டனத்திற்குரியது.

  By SWARNAVELKUMAR.P

  ReplyDelete
 29. பிரபு ராஜதுரை!

  உலகைப் பற்றிய, சமூகம் பற்றிய, மனிதர்கள் உங்கள் புரிதல்களும் பார்வைகளும் இவ்வளவுதானா?

  என்.விநாயக முருகன்!
  சரிதான். தோழர்களிடம் கேட்டிருக்கிறேன், மேற்கொண்டு தகவல்களை!


  பஷீர்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  சேக்கள் மறைவதேயில்லை.


  டம்பி மேவீ!
  இதற்கு ஒரு கூட்டமே இருக்கும் போல!


  ஜோதிஜீ!
  அப்படி மட்டும் யோசிக்கத் தோன்றவில்லை.

  சிவக்குமார்!
  தங்கள் கண்டனத்திற்கு நன்றி.


  புலியூரான் சரோஜா!
  இவை ‘முளை’ அல்ல. ‘களை’.


  முகிலன்!
  யாரை யாரோடு, எதை எதோடு ஒப்பீடுகிறீர்கள். சே கடவுளும் அல்ல, அவரை நேசிப்பவர்கள் பக்தர்களுமல்ல். சிஷ்ய கோடிகளுமல்ல. உலகத்து மனிதர்களையெல்லாம் நேசித்தவருக்கும், தன் அருகில் இருப்பவனையே வெறுப்பவர்களுக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?

  ReplyDelete
 30. நாராயணன்!

  உங்களுக்கும் சேர்த்துத்தான் முகிலனுக்கு சொல்லியிருக்கிறேன்.


  வாங்கய்யா வினோத்!
  கொஞ்ச நாளாக் காணோம்.

  இதை மட்டுமே சொல்லித் திரிவதுதான் உங்கள் வேலை போலும் சி.பி.எம்மின் நிலைபாடுகளை விமர்சியுங்கள். அம்மாவிடம் அடகுவைத்தார்கள், அய்யாவுக்குச் சொம்பு தூக்கினார்கள் என்ற அருவருப்பாகவேத்தான் உங்களுக்கு யோசிக்கவும், எழுதவும் வருமா.கஷ்டம்தான்.

  நந்திகிராம், லால்கர் குறித்து எவ்வளவோ விவாதங்கள் நடந்துவிட்டன. நாமுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.
  கொஞ்சம் மாவோயிஸ்டுகளின் தவறானப் பாதையையும், வழிமுறைகள் பற்றியும் பேசலாமே.

  கொரில்லாப் போராளி சே சொன்னதைக் கேளுங்கள். “குறைந்த பட்ச ஜனநாயகம் இருந்து,அதில் செயலாற்றுவதற்கான வழிகளும் இருக்கும் வரை, அங்கு கொரில்லாப் போர் சாத்தியமில்லை”

  நாங்கள் சேவைப் பற்றி பேச அருகதை இருக்கிறது இல்லை என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேய்ந்துபோன பயாஸ்கோப்களை தூக்கிச் சுமக்காதீர்கள்.

  ReplyDelete
 31. ஆதவா!
  தங்கள் கண்டனங்களுக்கு மிக்க நன்றி.

  குமார்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. //யாரை யாரோடு, எதை எதோடு ஒப்பீடுகிறீர்கள். சே கடவுளும் அல்ல, அவரை நேசிப்பவர்கள் பக்தர்களுமல்ல். சிஷ்ய கோடிகளுமல்ல. உலகத்து மனிதர்களையெல்லாம் நேசித்தவருக்கும், தன் அருகில் இருப்பவனையே வெறுப்பவர்களுக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?//


  தோழர் மாதவராஜ்,

  நான் இங்கே கடவுள்களையும் சே குவேராவையும் ஒப்பிடவில்லை.

  கடவுளை இழிவு படுத்திவிட்டான் என்று போராடும் மதவாதிகளின் மனநிலைக்கும், சே குவேராவை இழிவு படுத்திவிட்டான் என்று புகார் கொடுக்கும் DYFI தோழர்களின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை.

  சேவின் படத்தை செருப்பில் போட்டான், பீர் பாட்டிலில் போட்டான் என்று போராடி நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதை விட மற்ற நல்ல விசயங்களில் செலவிடலாம். சே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 33. //கொரில்லாப் போராளி சே சொன்னதைக் கேளுங்கள். “குறைந்த பட்ச ஜனநாயகம் இருந்து,அதில் செயலாற்றுவதற்கான வழிகளும் இருக்கும் வரை, அங்கு கொரில்லாப் போர் சாத்தியமில்லை”//

  கம்யூனிச நடைமுறைகளுக்கு 'சே'வைவிட லெனின் போன்ற ஆசான்களையே நான் படிக்கிறேன்.

  அந்த வகையில், முதலாளித்துவ ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றியும், முதலாளித்துவ ஜனநாயகத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது பற்றியும், புதிய ஜனநாயக புரட்சி பற்றியும், இந்த அரசை தூக்கியேறிவதன் அவசியம் பற்றி மக்களிடம் இடையறாது பிரச்சாரம் செய்வது ஒன்றுதான் பாட்டாளி வர்க்க கட்சியையும், சோசலிசத்தை சொல்லில் கொண்ட சமூக ஜனநாயகவாதிகளையும் வேறுபடுத்திக் காட்டும் மையப் புள்ளி என்று கூறிய ஏங்கெல்சை மேற்கோள் காட்டி லெனின் எழுதிய கட்டுரை பற்றியும் நீங்கள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

  உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் - அரசும், புரட்சியும் - லெனின், தேசிய இன சுயநிர்ணயம் என்றால் என்ன? - லெனின், இடதுசாரி இளம்பருவக் கோளாறு - லெனின்.

  கதிர் அரிவாளை ஜேவின் ஆசி பெற வைத்தது பற்றிய உங்களது 'சுயவிமர்சனம்' நல்ல நகைச்சுவை அனுபவம்.

  தவறுதலாக வேறொருவருக்கான உங்களது பின்னூட்டத்தை எனக்கானது என்று நினைத்து சிறிது காட்டமாக எதிர்வினை புரிந்துவிட்டேன். கவனக்குறைவாக இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

  ReplyDelete
 34. //
  நாங்கள் சேவைப் பற்றி பேச அருகதை இருக்கிறது இல்லை என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேய்ந்துபோன பயாஸ்கோப்களை தூக்கிச் சுமக்காதீர்கள்.//


  முதல் பிரச்சினை 'நாங்கள்' அல்ல 'நான்' (அதாவது 'நீங்கள்).

  சிபிஎம்ன் துரோகத்தின் மீதான கடும் சாடலையும், அதனடிப்படையில் உங்களிடம் நேர்மையானதொரு அனுகுமுறையை கோருவதையும் ஒரே நேர்கோட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?

  'சே'வுக்காக களமிறங்கிய டைபியையும்(இந்தப் பிரச்சினையை அந்தப் பகுதியளவில் மக்களிடம் பிரச்சாரம் செய்து செருப்பு விற்ற கடைக்காரர்களையே அந்தச் செருப்புகளை புறக்கணிக்க வைக்குமாறு மனமாற்றம் செய்யும் மக்கள் திரள் போராட்டத்தையும் சேர்த்து செய்திருந்தால் இன்னும் சிறப்பாக/சரியாக இருந்திருக்கும்), உங்களது கட்டுரையையும் குதர்க்கமாக கேள்வி கேட்டவரை விமர்சித்தும் பின்னூட்டமிட்டுள்ளேன் என்பதை கவனிக்க தவறிவிட்டீர்களோ?

  எனது முதல் பின்னூட்டத்தில் நான் சுட்டிகாட்டியுள்ளது சிபிஎம்ன் துரோகத்தனத்தை விமர்சிக்கத் தயங்கி/பயந்து ஓடி ஒளியும் உங்களது நடைமுறையைத்தானேயொழிய, 'சே'வுக்காக பொங்கியெழுந்த உங்களது தார்மீக அறவுணர்வையல்ல. 'சே' விசயத்தில் நான் உங்களோடோ தோள் நிற்கிறேன்.

  ReplyDelete
 35. //நாமுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.//

  ஒருமுறை கூட பேசியதில்லை. மழுப்பலாக சில பதில்கள் சொல்லியிருக்கிறீர்கள் அவ்வளவுதான்.

  ReplyDelete
 36. //சேவின் படத்தை செருப்பில் போட்டான், பீர் பாட்டிலில் போட்டான் என்று போராடி நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதை விட மற்ற நல்ல விசயங்களில் செலவிடலாம். சே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்.//

  சே இருந்திருந்தால் இன்னொன்றையும் சொல்லியிருப்பார், ஜேவுக்காகவும், கருணாநிதிக்காவும், காங்கிரசுக்காகவும் சக்தி, நேரம் மட்டுமல்ல் ஒரு வரலாற்று யுகத்தையே(era) வீணடித்த சிபிஎம்யை நினைத்து இதயம் வெடித்து இறந்து போயிருப்பேன் என்று சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 37. //சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது!//
  சரியாக சொன்னீங்க.
  சென்ற நூற்றாண்டின் மகத்தான மாவீரன் சே!
  அந்த மாதிரி ஐடியா தோனினதுக்கே அவனுங்கள அடிக்கணும்.

  ReplyDelete
 38. மாத்தி யோசி கெட்ப்பில் மாறுகிறார் மாதவராஜ் அய்யா.

  ReplyDelete