Type Here to Get Search Results !

பத்திரிகையாளர்கள் படுகொலை, அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம், வீடியோ காட்சிகள்!

1022_wikileaks

இந்தக் காட்சிகளிலிருந்து எப்படி மீள முடியும் எனத் தெரியவில்லை.

அந்தப் பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.

ஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.

 

 

இந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.

இன்று உலக மனித உரிமை தினம். வெட்கக்கேடு!

(முன்னர் எழுதிய கட்டுரை: விடுதலையின் பேரில்)

கருத்துரையிடுக

7 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. ஊடகங்கள் பொய்யள்ளித்தெளிக்கும் இந்த நேரத்தில் ஒரே ஆறுதல், நமது வலைப்பதிவர்கள்.

  விக்கிலீக்ஸ் உண்மைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஜூலியன் அசாங்கேயின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று ஊடகத்தின் வாழ்த்துக்கள். ! ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
 2. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு இது ஒரு வீடியோ கேம். மனநோயாளிகள்...

  பதிலளிநீக்கு
 3. I pity that kid. But that "Hopefully one day" of so many individuals were destroyed by these morons:((.

  பதிலளிநீக்கு
 4. சமீபகாலமாகத்தான் உங்கள் வலைப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்.ஆழ்ந்த சிந்தனையும்,அழகான எழுத்துநடையும் உங்களை தொடர்பவனாக என்னை மாற்றியது.இந்த மற்றும் இதற்கடுத்த உங்கள் பதிவுகளில் அமெரிக்க ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்திருப்பதும், விக்கிலீக்ஸ்ஸை வியந்திருப்பதும்,உள்ளூர் பத்திரிகைகளை சாடியிருப்பதும் சரிதான்.ஆனால் உங்கள் மிக அருகாமை நாட்டில் மிகப்பெரிய மனிதப்படுகொலைகளும்,போர்க்குற்றங்களும் நடைபெற்றிருப்பதை பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியும் உலக மனித உரிமை அமைப்புகளும் வெளிப்படுத்திவரும் இவ்வேளையில், அவற்றைப்பற்றி உங்கள் பதிவுகளில் எதுவும் எழுதியதாகத்தெரியவில்லையே?(என் கண்களுக்கு தப்பியிருந்தால் மன்னிக்கவும்)உங்களுக்கு ஏற்புடயவை மட்டுமே எழுதுகிறீர்கள்போலும்.அப்படியிருக்க நீங்கள் எப்படி உள்ளூர் பத்திரிகைகளை குற்றம்சுமத்தலாம்...?

  பதிலளிநீக்கு
 5. மாற்று!
  சேர்ந்து குரல் கொடுப்போம் தோழர்களே.


  ம.தி.சுதா!
  இந்தக் கொடுமையை பகிர்ந்து கொள்வது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்துக்களை எல்லோருக்கும் சென்றடையவே.

  ராயல்!
  இருக்கட்டுமே.விக்கிலீக்ஸ் வெளியிட்டதுதானே!


  தஞ்சாவூர்க்காரன்!
  அமெரிக்காவின் ஆட்சியாளர்கள், அப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள்.


  வானம்பாடிகள்!
  கனத்துப்போகிறோம். :-(((


  சுருதிரவி!
  இந்த வலைப்பக்கம் வருவதற்கும், வாசிப்பதற்கும் சந்தோஷங்கள்.

  இலங்கையில் நடைபெற்ற கொடுரமான இனப்படுகொலைகளை கண்டித்து பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன் நண்பரே! அந்தக் காணொளிகள் இந்த வலைப்பக்கங்களில் விட்ஜெட்களாகவும் இருந்தன. தங்களைப் போன்ற நண்பர்கள் தரும் சுட்டிகளை வைத்து விபரமறிந்து பெரும்பாலும் வினையோ, எதிர்வினையோ ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.

  அந்தப் பத்திரிகைகள் அப்படியில்லை. செய்திகளை முன்னரே அறிந்தும், தெளிவாக புரிந்தும், அவைகளுக்கு இடம் அளிப்பதில்லை.

  பதிலளிநீக்கு