லஞ்சமெனும் நான்கெழுத்தால்
லாவணி பாடுகிறார் எனை
நாட்டிலிங்கு நாணமிலார் சிலர்!
அழகிரிக்கும் நான்கெழுத்து
ஸ்டாலினுக்கும் நான்கெழுத்து
கனிமொழிக்கும் நான்கெழுத்து
தயாநிதிக்கும் நான்கெழுத்து
நானாகிய நெருப்புக்கும் நான்கெழுத்து
இதையெழுதும் முரசொலிக்கும் நான்கெழுத்து!
உடன்பிறப்பே!
உள்ளமெல்லாம் பற்றியெரிய
உனக்கிதனை உரைத்திட்டேன்!
(வீர சந்தானம் அவர்களின் இந்த ஓவியத்திற்கு வீக்கிலீக்ஸில் வெளிவராத கவிதையை பயன்படுத்தியிருக்கிறேன்)
ஆகா அனல் பறக்கிறது.. அருமை...
ReplyDeleteகவிதை நன்னாதான் இருக்கு உங்கஃப்ரெண்டாகிய நாங்க மட்டும் படிக்கும்வரை எந்தபிரச்சினையும் இல்லை?!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteநன்றாக இருக்கிறது.ஆட்கள் ஆட்டோ லோடில் வரப்போறாங்க.பத்திரமா இருங்க.நல்லாட்சி நடக்கிறது.
ReplyDeleteவிக்கிலீக்ஸ்... ஹா ஹா...
ReplyDeleteநல்ல கவிதை...
"நான் ஒரு நெருப்பு"
ReplyDeleteஎங்கேடா என் செருப்பு?
-- கருணாநிதியின் கவிதையின் தரத்தில் ஒரு முயற்சி
'பார்த்தாயா உடன்பிறப்பே,
ReplyDeleteஒரு ஆரிய குலத்தவன் இப்பணியை செய்திருந்தால் இந்த ஊடகங்கள் அரசியலெனும் தொழிலில் இறங்கி ஆயிரக்கணக்கான கோடிகளைச்சேர்த்த அதிபுத்திசாலி என உச்சிமோந்து பாரட்டியிருக்கும்.என்ன செய்வது, நான் தலித்து(ன் சம்பந்தி) அல்லவா,அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இப்படி சாமியாடுகின்றன. யார் என்ன உரைத்தாலும் கழகம் என் குடும்பம் என்பதை மறந்துவிடாதே உடன்பிறப்பே’
nice!
ReplyDeleteநம்ம தலைவிதி க்கும் நான்கெழத்துதுதுதுதுதுதுது...ங்க
ReplyDelete’நானும் ஒரு ரெளடி தான். ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்’ என்ற வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கலைஞர் ஒரு தீப்பொறி திருமுகம்.
ReplyDeleteவணக்கம் மாது. ரொம்ப நாள் ஆச்சு, பதில் எழுதி. நெருப்பப் பார்த்தவுடனே பத்திக்கிச்சு. நான் வருடா வருடம் வரும் நம்ம பி.எப். கணக்கு வரவு செலவைப் பார்த்தவுடனே நினைத்துக் கொள்வதுண்டு. அட, நாம் கூட லட்சாதிபதி மாதிரி கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறோமே என்று. ஆனா கலஞர் தன்னோட வைப்புத் தொகை (அட பிக்ஸட் டெப்பாஸிட்டைத் தான் சொல்றார்-வைப்புன்னா பிக்ஸட் தானே)சும்மா 3 கோடி தான்னு சொல்லும் போது, நானெல்லாம் 27 வருஷம் வங்கியில் வேலை பார்த்து சேர்த்த தொகையோட மதிப்பு இவ்வளவு தானா என்று. பஸ்ஸில் போன கக்கன், டாக்சியில் விடை பெற்று போன நிருபன், அரசு குடியிருப்பில் வசிக்கும் புத்ததேவ், இன்னும் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் அவரின் மனைவி, பட்டுப் புடவை விரும்பாத மாணிக் சர்க்காரின் மனைவி..... பெரு மூச்சு தான் விட முடிகிறது மாதவ். இதுக்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா?
ReplyDeleteஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
ReplyDeleteஊழல்வினை பொறுத்திருந்து வீழ்த்தும்.
ஊழலின் ஊற்றே...! போதுமினோ பொய்வாழ்வு .....
ReplyDeleteமூதாதை யோர்என்றும் முட்டாள்கள் இல்லையென்பார்
பாதாதை நம்கண்ண தாசனும்தான் -- ஓதாத
சொல்லொன்று கண்ட்டீரோ சோம்பிச் சுகம்நாடி
வில்லென்று வாய்குவிக்கும் நீர்
பண்ணிப் பகட்டுரைத்தாய் பண்பாளர் நெஞ்சொடித்தாய்
உன்னை ஒருநாளும் ஓர்ந்துஅறியாய் -- மண்ணில்
பகுத்தறிவைக் கொன்றாய் பழுத்ததீஞ் சொல்லால்
வகுத்தாரைச் சுட்டாயே வந்து
மூளைச் சலவைகளால் மூத்த தமிழ்க்குடியின்
நாளைக் குறைக்கவந்த நாத்திகத்தை -- வாழவைக்கும்
ஆதவனாய்க் காட்டி அனுதினமும் பேசினையே
போதுமினோ பொய்வாழ்வு போஒய்!
வாழுநா ளெல்லாம் வறியநா ளாக்கிவிட்டு
வீழுநாள் எண்ணிநிற்கும் வீணவரே -- ஊழ்வினையால்
ஊர்சுற்றும் நாய்க்கன்றி உன்காலப் பேர்சொல்ல
யாருன்னால் வாழ்ந்தெழுந்தா ராம்
பொய்வேடம் தாங்கி புகழ்நாடும் உன்றனது
மெய்வேடத் தொண்டரெல்லாம் மேன்மையுற -- ஐயமுற்றே
கோயில்களை நாடிவிட்டார் கூத்தடிக்கும் நீயுனது
வாயில் கொழுக்கட்டை வை
ஊருக்கு உபதேசம் ஓங்கி முழக்கிவரும்
பேருக்கு நாத்தீயப் பேச்சழகா -- பாருக்கு
நீதந்து செல்ல நெறிஏதும் கண்டிருந்தால்
வாவந்து பாசொல்ல வா
குங்குமமும் நீறும் குழைத்தெடுத்த சந்தனமும்
அங்கமதில் கண்டால் அலறுவையே -- இங்குனது
தொண்டராய் வாய்த்தவர்கள் தும்பிக்கை யான்றன்னை
தெண்டனிட்டுக் கொள்வதனைத் தேர்
நெற்றியிலே குங்குமத்தை நேர்கண்டால் ஆகாது
வற்றிவிட்ட வார்த்தைகளால் வார்த்தெடுப்பாய் -- தொற்றுநோய்
உற்றவரைப் போல்பேசி ஊரைக் கெடுத்தீரே
மற்றவரால் வாழ்ந்திருக்கும் மண்