-->

முன்பக்கம் , , , , � இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!

இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!

 

 

ற்கனவே உங்களோடு பேசியதுதான். இந்த முக்கியமான காரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள மீண்டுமொருமுறை வேண்டுகிறேன்.

இந்த தேசத்தின் மகத்தான மனிதரின்-  காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டவரின்- வாழ்க்கை வரலாறு திரைப்படமாக டிசம்பர் 3ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.

 

ambedkar poster

 

டாக்டர் அம்பேத்கர்!

எளிய மனிதர்களின் வாழ்வில் விளக்கேற்றிட, ஒரு மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் காட்டிய போராளி அவர்.

அவர் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் விடையளிக்க முடியாமல் இந்த மண்ணின் மனசாட்சி தலைகுனிந்தே நிற்கிறது.

ஊடகங்களும், ஆதிக்க சக்திகளும் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக மதிக்காது. கூடவே ஒதுக்குவதிலும், புறக்கணிப்பதிலும் தெளிவாகவும் அக்கறையாகவும் இருக்கும்.

டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் இத்திரைப்படம் முதலில் சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. அபிராமி, சத்யம்,எஸ்கேப் திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எடிட்டர் லெனின் அவர்களின் உதவியால், இப்படத்தின் பிரிண்ட்டை வாங்கி, தமிழகம் முழுவதும் திரையிடவும் முயற்சி செய்து வருகிறது.

நாம், நம்மால் முயன்ற அளவுக்கு நண்பர்களிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் இத்திரைப்படம் குறித்துப் பேசுவோம். அவரது வாழ்க்கை கூறும் செய்திகளை தமிழகம் அறியச் செய்வோம்.

அதன் ஒரு பகுதியாக, இங்குள்ள இத்திரைப்படத்தின் போஸ்டரை தத்தம் வலைப்பக்கங்களில் ஒரு விட்ஜெட்டாக உருவாக்கி காட்சிக்கு வைப்போம். (code தேவைப்படுமானால்:  <a href="http://www.flickr.com/photos/mathavaraj/5223653195/" title="ambedkar poster by Maathavaraj, on Flickr"><img src="http://farm6.static.flickr.com/5248/5223653195_defc7f4921_m.jpg" width="176" height="240" alt="ambedkar poster" /></a> )

வாருங்கள், ஊர் கூடி இக்காரியத்தைச் செய்வோம். பெரும் வணிக ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தாலும் நம் இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்.

 

தொடர்புடைய சுட்டிகள்:

1.அம்பேத்கர் விருது பெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா?மாற்று

2.பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள்! – தீராத பக்கங்கள்

3.இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்! – தீராத பக்கங்கள்

4.அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்.. – உண்மைத்தமிழன்

5.அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..!உண்மைத்தமிழன்

6.அம்பேத்கர் படம் வெளியாகிறது – குருத்து

7.பாபாசாகேப் அம்பேத்கர்என் இனிய தமிழ் மக்களே

(இதுகுறித்து எழுதிய பதிவுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்)

Related Posts with Thumbnails

30 comments:

 1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 2. நானும் எதிர்பார்த்திருக்கிறேன்.. இப்படம் எப்ப நம்ம ஊர் வருதோ தெரியல...

  ReplyDelete
 3. ஒரு நல்லமனிதரைத்தெரிந்துகொள்ளலாம்.

  ReplyDelete
 4. நான் ஏற்கனவே இ-மெயில்கள்,நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.இதையும் அனுப்பிவிடுகிறேன்.

  ReplyDelete
 5. என் பதிவில் இணைத்திருக்கிறேன், மாதவராஜ். தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. யாரோ ஒரு நண்பர், இப்பதிவு வெளியிட்ட சில கணங்களில் followersலிருந்து விலகியிருக்கிறார். நல்லது.

  ReplyDelete
 7. ம.தி.சுதா!
  நன்றி. உங்கள் வலைப்பக்கத்தில் இச்செய்தியினை வெளியிடுங்களேன்.

  லஷ்மி!
  ரொம்ப நன்றிங்க ஆதரவுக்கு.


  தமிழன்!
  மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கள்.

  ReplyDelete
 8. சுரேஷ்கண்னன்!
  உற்சாகமாக இருக்கு. தங்களைப் போன்றவர்கள் இப்படத்திற்கு விமர்சனம் எழுதினால், இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.

  ReplyDelete
 9. Nice Advertisement.

  Nice Work.

  Keep it up.

  ReplyDelete
 10. என் பதிவில் இணைத்தாயிற்று.வாகை சூடட்டும் இவ்வொளிச் சித்திரம்

  ReplyDelete
 11. நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்... நன்றி!

  ReplyDelete
 12. என் தளத்தில் இட்டு விட்டேன். நன்றி.

  ReplyDelete
 13. சேது!
  மிக்க நன்றி. சென்னையிலிருக்கும் தங்கள் இணைய நண்பர்களுக்கு இதனைத் தெரிவித்திருப்பீர்கள்தானே!

  நேசன்!
  நன்றி. பெரும் முயற்சிக்கு தங்களின் அதரவு உற்சாகம் தரும்.


  பகுத்தறிவு!
  நன்றி நண்பரே.


  இளங்கோ!
  பார்த்தேன். மிக்க சந்தோஷம்.

  ReplyDelete
 14. நானும் பதிவில் இணைத்து விட்டேன்.

  ReplyDelete
 15. ஃஃஃஃம.தி.சுதா!
  நன்றி. உங்கள் வலைப்பக்கத்தில் இச்செய்தியினை வெளியிடுங்களேன்.ஃஃஃஃ

  ஆமாம் கட்டாயம் நல்லவைக்கு என்றும் துணை போக வேண்டும்...

  ReplyDelete
 16. நானும் இணைத்து உள்ளேன் தோழர். நன்றி

  ReplyDelete
 17. இனைப்பது எப்படி?

  ReplyDelete
 18. @ D.R.Ashok

  dashboard ---> design ---> add a gadget ----> HTML/JavaScript + copy and paste then save

  நன்றி.

  ReplyDelete
 19. இந்த மாதிரி உன்னத மனிதர்களை, சாதி, மதம் கொண்டு தனிப்படுத்துவதும், ஒரு சாதி/மதத்துக்கும் மட்டுமே சொந்தக்காரர் என்று அரசியல் செய்வதும்தான் வருத்தம் அளிக்கிறது.

  ReplyDelete
 20. @ பாலாசி

  Thank you man :)

  ReplyDelete
 21. என் வலைப்பதிவில் இணைத்துள்ளேன்.

  இப்படத்தை பள்ளியிலிருந்து மாணவர்கள் சென்று பார்க்க அரசு மானியம் அளித்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 22. தமிழ் வலைப்பதிவர்களே!
  புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
  ‍தமிழ்புக்மார்க்
  http://tamilbookmark.co.cc

  ReplyDelete
 23. நானும் என் பதிவில் இணைத்து இருக்கிறேன்.. நண்பர்களுக்கும் மெயில் அனுப்பு இருக்கிறேன்.
  இணைக்க எளிதாக code கொடுத்ததற்கு நன்றி..
  சில ஊடகங்கள் நினைத்தால் ஒரு செய்தியை இருட்டடிப்பு செய்து விட முடியும் என்ற நிலை மாற வேண்டும்..

  ReplyDelete
 24. திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 25. இத்திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  நீங்கள் சொன்னதை என் தளத்தில் இட்டுவிட்டேன்.

  www.vikkiulagam.blogspot.com/

  ReplyDelete
 26. அம்பிகா!
  மிக்க நன்றி.


  மதி சுதா!
  நன்றி தம்பி.

  வேல்கண்னன்!
  நன்றி தோழர்.


  அசோக்!
  நன்றிங்க.

  பாலாசி!
  நன்றி தம்பி.


  தஞ்சாவூர்க்காரன்!
  இதுதானே நம்மைப் பீடித்த சாபக்கேடு.


  ஹரிஹரன்!
  நன்றி தோழர்.


  உண்மைத்தமிழன்!
  நன்றி தம்பி.


  பார்வையாளன்!
  இதுபோன்ற முயற்சிகள் அந்த கருத்துப் பாராட்டங்களுக்கு சிறு உதவியாவது செய்யலாம்.

  பொன்ராஜ்!
  நன்றி.


  விக்கி உலகம்.
  நன்றிங்க.

  ReplyDelete
 27. தோழரே,
  என் வலைப்பூவில் சேர்த்துவிட்டேன், நன்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன், நாளை காலை Escape திரைஅரங்கில் பார்க்க போகிறேன், பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன்.

  தோழமையுடன்,
  மோகன்

  ReplyDelete
 28. எப்படி எனது பிளாக்கில் போடுறது..உதவுங்க மாது

  ReplyDelete
 29. இப்படத்தை பள்ளியிலிருந்து மாணவர்கள் சென்று பார்க்க அரசு மானியம் அளித்தால் நன்றாக இருக்கும். ஒரு நல்லமனிதரைத்தெரிந்துகொள்ளலாம்.


  மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய Filmics.com
  பதிவு செய்க....

  ReplyDelete