-->

முன்பக்கம் , , , , , , , � விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ்

wikileaks ன்றுகூட நல்லதாய் இல்லை. மனித இரத்தம் குடித்த ஏப்பங்கள், குரோதம், வக்கிரம், சதிகள், துரோகங்கள், அநாகரீகங்கள், அற்பத்தனங்கள், பேராசைகளே சிதறின மேலிருந்து எல்லா மருங்கிலும். அதிகாரங்கள் சிருஷ்டித்த மாபெரும் பீடங்களிலிருந்து உதிர்ந்த அந்த சிந்தனைகளின் முடை நாற்றம் காற்று மண்டலத்தைச் சுருட்டியது. தலை கவிழாமல் அப்போதும் கீரீடங்களைத் தாங்கியவர்களின் முகங்களெல்லாம் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் கண்களற்றுப் போயின. மனசாட்சியை  அனுதினமும் காலைக் கடனாய்க் கழித்து வந்த அவர்களே நிலைதடுமாறத்தான் செய்தார்கள். வேறொன்றுமில்லை. சிதம்பர ரகசியங்கள் கொஞ்சம் கசிந்து விட்டிருந்தன.

சட்டென்று சுதாரித்து மீண்டும் சிரிப்பார்கள். கைகுலுக்கிக் கொள்வார்கள். ஜாக்கிரதை, சிந்திக்கவும் செய்வார்கள். அதிகாரத்தின் உயிரை இப்படியெல்லாம் பறித்து விடமுடியுமா என்ன? Related Posts with Thumbnails

6 comments:

 1. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட பதிவு . விக்கி லீக்ஸ் ஐ முடக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் நடைபெறும் இந்த வேளையில் நம் ஆதரவை தெரிவிப்பதற்கு இது போன்ற பதிவுகள் அவசியமானவை .

  அமீர்கான்

  ReplyDelete
 2. விக்கிலீக்ஸ் ஐ நிச்சயம் பாராட்டவேண்டும், ஆனால் ‘லீக்குகளில்’ பாதிக்கப்பட்ட நாடுகளில் எந்த சலனமும் தெரியவில்லை.

  ReplyDelete
 3. இவ்வளவு நாளா இவிங்க என்ன பன்னாங்கோ..!?

  ReplyDelete
 4. உங்கள் பதிவு அருமை.
  சூரியனை தொட்ட விண்மீன் !?

  ReplyDelete
 5. பிரபு!
  நன்றி.

  அமீர்!
  நன்றி.

  ஹரிஹரன்!
  ’அமெரிக்காவுடனான நட்பு முக்கியமானது.நிதானமாக கருத்து தெரிவிப்பதாக’ இந்தியா சொல்கிறது.


  தங்கம்பழனி!
  இதைத்தான் பண்ணியிருக்காங்க :-))))


  விக்கி உலகம்!
  பதிவு மாறி கருத்துச் சொல்லி இருக்கிறீர்களோ...?
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete