-->

முன்பக்கம் , , , , � “நீ யோக்கியமா?”, “நீ மட்டும் யோக்கியமா?”

“நீ யோக்கியமா?”, “நீ மட்டும் யோக்கியமா?”

bjp-vs-congress அமைச்சர் ஆ.ராசாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பா.ஜ.க சொல்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பிடிவாதமாய் மறுக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சியைப் பார்த்து “உங்கள் ஆட்சியில் இதுபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தபோது நீங்கள் பாராளுமன்றக் கூட்டுக்குழுவை அமைத்தீர்களா? என எதிர்க்கேள்வி கேட்கிறது.

மும்பையில் கார்கில் பேராளிகளுக்கான ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக வீடு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமாச் செய்ய வேண்டியிருந்தது. இப்போது மோசடியான முறையில் நிலங்களை தனது மகன்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு தந்துள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவரும் ராஜினாமாச் செய்ய வேண்டும் என காங்கிரஸ் குதிக்கிறது.

அரசின் வருமானத்திற்கு அமைச்சர் ராசாவின் முறைகேடுகளால் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது, எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். உங்கள் ஆட்சியில் மட்டும் என்னவாம், டான்சி நில விவகாரத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படவில்லையா என கருணாநிதி எதிர்க்கேள்வி கேட்கிறார்.

“போடா, திருட்டு நாயே!”
“போடாப் போடா களவாணிக் கழுத!”

“பெரிய வெண்ண”
“பெரிய பருப்பு”

“ச்சீ .....!”
“அடச்சீ.... .........  .....!”


“நீ யோக்கியமா?”
“நீ மட்டும் யோக்கியமா?”

Related Posts with Thumbnails

12 comments:

 1. தேர்தல் கமிசனுக்கு ஒரு வேண்டுகோள்

  ஒரு தொகுதியில் ஒவ்வொரு கட்சியின் சார்பாக நிற்கும்
  வேட்பாளர்கள் அனைவருமே கட்சித் தலைமையின்
  விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
  மக்கள் விருப்பத்தின் பேரில் அல்ல.

  பல நேரங்களில் தொகுதிக்கு சம்பந்தமேயில்லாமல்
  வேறொரு தொகுதியிலிக்கும் ஒருவரைக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்கள்.
  வேட்பாளருக்கு இந்த தொகுதியிலிருக்கும் ஓட்டு வங்கியைத்தவிர வேறொன்றும் தெரியாது.
  இவர் வென்றுவிட்டாலோ அவ்வளவுதான் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார்.
  தொகுதிப்பக்கம் தலைகாட்டுவதில்லை.
  அடுத்த தேர்தலில் வேறொரு தொகுதியில் நிற்போம் என்ற எண்ணம்தான்.
  இவர்களால் தொகுதிக்கு ஒரு நன்மையும் விளைவதில்லை.

  ஒரு வேட்பாளருக்கு உரிய தகுதிகளை ஆராய்ந்து அவரை வேட்பாளராக
  அறிவிக்கும் தேர்தல் கமிசனே,
  எனது தொகுதியில் நீங்கள் அறிவிக்கும் எல்லா வேட்பாளர்களையும்
  ஏதோவொரு வகையில் எனக்கு தேர்ந்தெடுக்க விருப்பமில்லையெனில்
  என்ன செய்யவேண்டும்?

  தற்போதுதான் தேர்தல்முறை எளிமைப்படுத்தப் பட்டுவிட்டதே.
  மின்னனு வாக்குப்பதிவு எந்திரம்.
  எந்திரத்தின் கடைசி பொத்தானாக
  விருப்பமில்லை
  என்ற பொத்தான் சேர்க்க வேண்டுகிறேன்.
  இது எனது உரிமையும் கூட.  மேற்கண்ட வரிகள என்னோட பஸ்ல போஸ்ட்டா போட்டிருக்கேன்.
  இந்த எண்ணம் எதாச்சும் தீர்வுக்கு உதவுமான்னு கருத்துகணிப்பு நடத்தலாமா?

  ReplyDelete
 2. யார் அடிச்சாலும் தாங்குற கைப்புள்ள மாதிரி நாம இருக்கிற வரைக்கும் இது தொடரும்.

  ReplyDelete
 3. அண்ணே! புதிய பதிவர்கள் அறிமுகங்களை தொகுத்து எதாவது ஒரு பக்கத்தில் வைத்தால், பார்க்க வசதியாக இருக்குமே? ஏற்கன்வே வைத்திருந்தாலும் தெரியப்படுத்தவும்

  ReplyDelete
 4. ஒண்ணுமே புரியலா உலகத்திலே....

  ReplyDelete
 5. ரவி!
  இது மக்களுக்கான ஜனநாயகம் அல்ல. மக்களை ஆள்வதற்கான ஜனநாயகம் மட்டுமே. அதற்குத்தான் இத்தனை ஏற்பாடுகள். எல்லாம் குறித்து நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

  சரவணன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  லதா மகன்!
  நீங்க சொல்கிற மாதிரி புதிய பதிவர்களை தொகுத்து வைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்.

  ம.தி.சுதா!
  இன்னுமா புரியலை தம்பி... :-))))

  ReplyDelete
 6. இந்த அமைப்பின் அருவருக்கத்தக்க முகத்தை அறிவதற்கான ஒரு முக்கியப் புள்ளி ஊழல். இங்கு நம்மை ஆள்பவர்களின் கோர முகங்கங்கள் தெரிகின்றன. ஒருத்தருக்கொருத்தர் குறைந்தவரில்லை தவறு செய்வதில்.ஆனாலும் இவர்களை விட்டால் நாதியோ, கதியோ இல்லையென்பதாய் மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். விரிவாக யோசிக்க வேண்டும். அது குறித்து ஒரு ஆரம்பமே இந்தப் பதிவு.

  ReplyDelete
 7. Ore kuttaiyil ooriya mattaikkal

  ReplyDelete
 8. 24.11.2011

  Dear Mathavaraj,
  I can see the idea behibd this blog. To my knowledge even todays communist people are not like Mr.PR or Mr.Nambudhripad. All politicians are mostly corrupt. But people are deprived. I pray some good able patriotic dictator should come to power and rule the cpuntry. Is it possible?. If so i am much happy. Atleast our children can have a good governance.But i want to know whether you dont seem to be publishing my posts.
  K.Subramanian
  K.Subramanian

  ReplyDelete
 9. :)))
  ஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை மனித நல் மேம்பாட்டிற்காக என்ன திட்டம்/குழு/கட்சி/மதம்/அரசியல் கொண்டு வந்தாலும் அது 'கறை' பட்டுக் கொண்டுதான் இருக்கும். இவைகளைத் திருத்துவதை விட மனிதனைத் திருத்தப் பாடுபடுவோம் மாதவ் ஜீ.

  ReplyDelete
 10. கற்பும் வாக்கும்

  கேளாய் மானிடா கேளாய்
  இந்த மானிட பதர்களை
  பார்த்து ஒரு கேள்வி கேளாய்
  உன்னை ஈன்ற தாயின் கற்பிற்கு விலை உண்டோ !
  தாய் நாட்டிற்கும் உன் தாயிற்கும் என்ன வித்தியாசம் கண்டாய்!
  உன் தாயின் கற்பை காப்பது உன் கடமை அதுபோல
  நாட்டினை காக்க பயன்படுவது உன் வாக்குரிமை!
  அந்த வாக்கினை பணத்துக்காக விற்கிறாய் ? இது
  உன் தாயின் கற்பை விற்பதற்கு சமம். இனியாவது
  உன் தாயின் கற்பை விலை கேட்கும் விலைமாதுவின்
  மகனை செருப்பால் அடித்து துரத்து! விழித்திடு தாய்
  நாட்டை காத்திடு ! - தனித்துவ தோழன், திருச்சி.

  ReplyDelete