-->

முன்பக்கம் , , , , � பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள்!

பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள்!

ambedkar film எப்படிப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு இதுவரை திரையிடப்படாத இந்தப் படமே சாட்சி. சமூகம் குறித்து அக்கறை கொண்ட யாவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி இது!

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வராமல் இருந்த ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் டிசமபர் 3ம் தேதிக்கு திரையிடப்படுகிறது. மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு இப்படியொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. படம் வெளியாகி, விருதுகளும் பெற்று பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதுகுறித்த விரிவாக ‘அம்பேத்கர் விருதுபெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா’ என்னும் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படத்திற்கு தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகளோ, விளம்பரங்களோ நிச்சயம் வரப்போவதில்லை. இந்தப் படம் ஒடுகிறதா, வசூல் செய்கிறதா என்றெல்லாம் அவ்ர்கள் கவலைப்படவும் போவதில்லை.

இந்தப் படம் கவனிப்பாரற்றுப் போவதில் அம்பேத்கருக்கு எந்த அவமானமும் இல்லை. இதையெல்லாம் விட எவ்வளவோ அவமானங்களை அவர் வாழும்போதே பார்த்தவர். இந்த தேசத்துக்குத்தான் அவமானம்.

நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்படம் குறித்த தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பரவலாக்குங்கள். சமூகத்தின் மனசாட்சியிடம் பேசுங்கள். Related Posts with Thumbnails

19 comments:

  1. நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நாங்க இதுல்லாம் பார்க்கமாட்டோம், எங்களுக்கு பிடிக்காது இதுல சூப்பர் ஸ்டார் இல்லை. ஐஸ்வர்யா ராய் இல்லை, ஆபாசம் இல்லை.

    வெட்கக்கேடு...

    ReplyDelete
  3. +1 இப்போதிலிருந்தே நன்றி.

    ReplyDelete
  4. எங்களுக்கு பணமே பிரதானம்...நாங்களெல்லாம அடிவருடிகள்தான். எங்களுக்கு இதுபற்றிய கவலையெல்லாம் இல்லை.

    கண்டிப்பாக பகிருவோம்.

    ReplyDelete
  5. தலித் இனத்தில் பிறந்து இந்தியசட்டத்தை இயற்றியர் என்பது மட்டுமே அம்பேத்கரைப்பற்றி நான் அறிந்தது.அவரைப்பற்றி மேலும் அறிய இப்படம் உதவும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  6. அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. மாதவராஜ் அண்ணா...

    பகிர்வுக்கு நன்றிகள்..! நிச்சயம் இது பற்றி பகிர்வோம் அண்ணா....!

    ReplyDelete
  8. அவர் வாழ்க்கை பல பேருக்கு வாழ்வை தந்திருக்கிறது.
    இப்படம் அரசாங்கத்தால் பகிரங்கமாக விளம்பரபடுத்தப்பட வேண்டும்

    ReplyDelete
  9. இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்த்து வெற்றிப்படமாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை.

    இதுதான் இப்படம் வெளிவராமல் தடுத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  10. நண்பர்களே, நகைச்சுவைக்காக கூட நம்மை நாம் தாழ்த்தி கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பாரதி, காமராஜ் போன்ற படங்களை பார்த்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படத்தை முடிந்த அளவு என்னுடைய பல நண்பர்களிடம் எடுத்துரைத்து அழைத்து செல்வேன், மாதவராஜ். சிறு துளி பெரு வெள்ளம் ஆகட்டும்.

    ReplyDelete
  11. \\சமூகம் குறித்து அக்கறை கொண்ட யாவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி இது! \\

    ஏன் குனிய வேண்டும்? கோபம்தான் வர வேண்டும்.

    அப்புறம் நீங்கள் வெட்கித் தலை குனிதல் என்ற சொற்றொடரைத் நிறைய விரயம் என்பது என் கருத்து. மனதில் படுவதை சொல்கிறேன். தவறாகக் கொள்ள வேண்டாம்.

    அம்பேத்கர் எழுதிய அனைத்து நூல்கள், ஆற்றிய உரைகள் அடங்கிய கிட்டத்தட்ட ஒரு முப்பது தொகுதிகள் உள்ளன. சென்ற முறை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். இன்னும் படித்து முடிக்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதர் அவர் என்பதைப் புரிந்து கொள்ள அவர் ஆற்றிய ஒன்றிரண்டு உரைகளைப் படித்தாலே போதும்.

    இந்தப் படம் அவசியம் பார்ப்பேன்.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    நேரமின்மையால் மற்ற சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட முடியவில்லை (குறிப்பாக வாசிப்பனுபவம் குறித்த பதிவுகள்)

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி மாது அண்ணா.

    ReplyDelete
  13. தமிழ் நாட்டை பிடித்த பீடை (என்ன செய்வது ஒரு பீடை போனால் இன்னொரு பீடை)

    இதையெல்லாம் செய்யும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா தோழரே? அதெல்லாம் திருட்டு ரயில் ஏறுவதற்க்கு முன்னாள் ஒருவேளை இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  14. @ சுருதிரவி

    நீங்கள் அறிந்ததில் நான்கில் ஓர் பங்கைக்கூட அவர்பெயர் சொல்லி உலா வருபவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் எப்படத்திர்கான நிஜ மரியாதை கிடைத்திருக்குமே.

    ReplyDelete
  15. இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட உள்ள செய்தியே உங்கள் பதிவைப்பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன்.அந்த அளவிற்க்கு இருக்கிறது படத்திற்க்கான செய்திகள்.யாருக்கும் தெரியாமல் படத்தை வெளியிட்டு உடனே பெட்டியில் போட்டு மூடிவிடுவார்களோ?.உங்கள் பதிவின் மூலம் பலருக்கு செய்தி சேர்ந்திருக்கிற்து..மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. படத்திற்க நல்ல புரமோசன்.....எக்ச்சூஸ் மீ....நீங்கதான் ப்ரொட்யூசரா?

    ReplyDelete
  17. இப்படி இந்த படம் முடக்கப்பட்டது
    இது சம்பந்தமான செய்தி இதுவரையில் எனக்கு தெரியாது இந்த இடுகையை படித்த பிறகே தெரிந்து கொண்டேன்
    சமூக சூழலை நினைத்து வேட்கி தலைகுனிகிறேன்

    ReplyDelete
  18. இந்த தேசம் இன்னும் இருட்டறையிலேதான்
    இருக்கிறது என்பதற்கு இதுதான் சாட்சி.ஒரு மகத்தான மனிதனின் வரலாறு தெரியாத
    தெரியவிடாத அதிகாரவர்க்க சமூகம் எப்படி
    வெளிச்சத்திற்கு வரும்? காந்தியை,காமராஜரை,
    நேருவை,இன்னும் நிறைய தலைவர்களின்
    பிறந்த நினைவு நாட்களில் நினைக்கும் அளவு
    அம்பேத்கரை இந்த தேசம் நினைவுகூர்வதில்லை
    என்பது வெட்க கேடு.மக்களைப்பார்க்கவைக்க
    சகல வித்தைகளையும் கையாளுவோம்.குமரியிலும்
    முயற்சி நடக்கிறது.

    ReplyDelete
  19. இந்த தேசம் இன்னும் இருட்டறையிலேதான்
    இருக்கிறது என்பதற்கு இதுதான் சாட்சி.ஒரு மகத்தான மனிதனின் வரலாறு தெரியாத
    தெரியவிடாத அதிகாரவர்க்க சமூகம் எப்படி
    வெளிச்சத்திற்கு வரும்? காந்தியை,காமராஜரை,
    நேருவை,இன்னும் நிறைய தலைவர்களின்
    பிறந்த நினைவு நாட்களில் நினைக்கும் அளவு
    அம்பேத்கரை இந்த தேசம் நினைவுகூர்வதில்லை
    என்பது வெட்க கேடு.மக்களைப்பார்க்கவைக்க
    சகல வித்தைகளையும் கையாளுவோம்.குமரியிலும்
    முயற்சி நடக்கிறது.

    ReplyDelete