-->

முன்பக்கம் , , , � 1900000000000 ருபாய் vs 1 ராஜினாமா

1900000000000 ருபாய் vs 1 ராஜினாமா

hindu cartoon நன்றி: தி ஹிந்து

 

விஜய் டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஊழலுக்கு எதிராக பலரும் ஆவேசமாகவும், வேதனையாகவும் பேசிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த அறிவிப்பும் வந்தது. வேறு வழியில்லாமல் நேற்று இரவு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்துவிட்டார். எதிர்பார்ப்புகள் மிகுந்த, நாட்டின் மிகப்பெரிய ஊழல் தொடர்கதையில் அடுத்த பாகம் முடிந்தது. முந்தைய ஊழலையெல்லாம் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் அமைச்சர்.ஆ.ராசா.

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று 2007 இறுதியில் பேச ஆரம்பிக்கப்பட்ட ஊழல் விவகாரத்தில் தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. நாட்டிற்கு பல லட்சம் கோடி இழப்பு என்று எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் புள்ளி விபரங்களை முன்வைத்தனர். நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பரிசுத்தமானவரான பிரதமர் மன்மோகன்சிங்,  அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக பேசியதோடு எதிர்க் கட்சிகள் ‘பெரிது’ படுத்துகின்றன’ என்றார். திமுக அரசோ ‘வழக்கமான நடைமுறை’யைத்தான் தங்கள் கட்சிக்காரர் பின்பற்றியிருப்பதாக சொல்லி மௌனம் காத்து வந்தனர்.

2ஜி அலைவரிசை உரிமம் ஒதுக்கீட்டில், முதலில் வந்த நிறுவனத்திற்கு முன்னுரிமை என அமைச்சர் ஆ.ராசா முடிவு எடுத்ததும், அக்டோபர் 1ம் தேதி வரை இருந்த காலக்கெடுவை திடுமென செப்டம்பர் 25ம் தேதியோடு முடித்துக் கொண்டதும் ஊழலை வெளிக்கொண்டு வந்தது. தேவையானவருக்கு மிகக் குறைவான தொகையில் ஒதுக்கீடு செய்ய நடந்த மோசடி இது என்றும் இதன் மூலம் ஒரு லட்சத்து தொண்ணுறாயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு என்றும் கூறப்பட்டது. தான் உத்தம புத்திரன் என்றும். பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் பேசிவந்தார் அமைச்சர்.

‘விளையாட்டுத் தொடங்கிய பிறகு விதியை மாற்றுவது போல உள்ளது’ என என்று தெரிவித்த டில்லி உயர்நீதிமன்றம் தேதி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், ‘இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானது’ என மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. இதற்குப் பிறகும் காங்கிரஸும், திமுகவும் ‘எந்த முறைகேடுகளூம் நடக்கவில்லை’ என திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. சில நாட்களுக்குப் பிறகு மத்திய தொலை தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.மாத்தூர், அமைச்சர் ராசாவின் தில்லுமுல்லுகளை தேதி வாரியாக போட்டு உடைத்தார். அப்போதும் ‘ஏன் மாத்தூர் இப்படி பேசுகிறார்’ எனத் தெரியவில்லை ஆச்சரியப்பட்டுக் கொண்டார் அமைச்சர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த ஊழல் விவகாரம் குறித்துப் பேசவும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றியது. திமுக தலைவரை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். அமைச்சர் ராசா இரண்டு தடவை திமுக தலைவரை சந்தித்தார். நேற்று இரவு, “மத்திய அரசுக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்று பாராளுமன்ற அவை அமைதியாக நடக்கவும் இந்த ராஜினாமா செய்துள்ளேன், நான் குற்றமற்றவன்’ என நிரூபிப்பேன் என்றார். இது போன்ற எத்தனை வசனங்களை இந்த நாடு கேட்டிருக்கிறது! எத்தனை ஊழல் பேர்வழிகளை நாடு பார்த்திருக்கிறது. ஆனாலும் ஊழலும், ஊழல் செய்பவர்களும் நலமாக சகல சௌபாக்கியங்களோடும் இருக்கிறார்கள்.

விஜய் டி.வியில் பேசியவர்கள் பலரும் ஊழலை தனி மனிதர்களோடு சம்பந்தப்படுத்தியேப் பார்த்தார்கள். அதனாலேயே லஞ்சத்தை கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களும் லஞ்சத்தை ஒழிக்க வழிசொல்ல முடியாமல் திணறினார்கள். மாற்றவே முடியாது, புரையோடிப் போய்விட்டது எனவும் கொட்டினார்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூட இந்தக் கருத்துக்கு ஆட்பட்டு, ‘எவ்வளவு லஞ்சம் என நிர்ணயம் செய்து விடலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தது.

அரசு அலுவலகங்களில் இருக்கும் சின்னச் சின்ன லஞ்சங்களைப் பேசுபவர்கள், அதற்காக அதிகம் கோபப்படுபவர்கள், இது போன்ற பெரும் ஊழல்களுக்கு எதிராக என்ன மனோபாவம் கொண்டு இருக்கிறார்கள்? மொத்த மோசடியிலும் அமைச்சர் ஆ.ராசா என்னும் ஒரே ஒரு பெயரை மட்டும் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்களே, வேறு யாருக்கும் இதில் பங்கு இல்லையா? கட்சிகள், ஆட்சியாளர்கள், முதலாளிகள என எத்தனை பேர் இதனோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். எந்தத் தைரியம் ஒருவரை இதுபோன்ற காரியங்களைச் செய்யச் சொல்கிறது. அதைப் பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்தால்தான் ஊழல்களின், லஞ்சங்களின் ஊற்றுக்கண்கள் பிடிபடும். இந்த அமைப்பின் அவலட்சணங்கள் அம்பலமாகும். எங்கே மாற்றத்தை துவக்க வேண்டும் என்னும் மையப்புள்ளி தெரிய வரும்.

ஆனால் அதைப் பேச மாட்டார்கள். பேசவிடவும் மாட்டார்கள். ஏனென்றால் இவை சாதாரண மனிதர்களின் லஞ்சமல்ல. தேவ புருஷர்களின் திருவிளையாடல்கள்.

சும்மாவா? 1900000000000 ருபாய்! Related Posts with Thumbnails

12 comments:

 1. சரி..இராஜினாமா பண்ணிட்டார்..அதோடு இந்த பிரச்சினை சரியாகிடுமா?? இத்தனை லட்சம் கோடி ஊழலில் சம்பாதித்த பணம் எங்கே?? அது பறிமுதல் செய்யப்படுமா? சரியான பாகுபாடற்ற தீர்ப்போ தண்டனையோ ராசாவுக்கு கிடைக்குமா?? அதெல்லாம் நடந்தால் தான் நல்லது. நடக்குமா??

  ReplyDelete
 2. Oru latchatthu thonnuraayiram kodikku zerokkalin ennikkaiyai evvaru kandupiditthirkal

  ReplyDelete
 3. அன்பு மாதவராஜ்,

  எப்படி இருக்கீங்க!... நல்ல பதிவு...இது... கென்யாவில் விஜய் டிவி மட்டுமல்ல எந்த தமிழ் சேனலும் வருவதில்லை... ஒரு மலையாள சேனலும், சில பல ஹிந்தி சேனல்களும் வருகிறது... வேறு பாஷையில் நடக்கும் அதே கூத்து தான் என்றாலும்... ஹிந்தி கொஞ்சம் இன்னும் புரிய ஆரம்பிக்கிறது... ஒரு பாஷை கைகோள்வதில் ஒரு சந்தோஷமே... நானும் படித்தேன்...மனுஷ்யபுத்திரனும் கலந்து கொள்ள போவதாக அவரின் பேஸ்புக் சுவற்றில் பார்த்தேன்...
  லஞ்சம் ஒழிய என்ன செய்ய வேண்டும் என்று துக்ளக்கில் ஒரு முறை சோவை கேட்டப்போது... லஞ்சத்தை சட்டமயமாக்க வேண்டும் என்றார்... நம்ம ஊர்ல தான் ஒரு பய சட்டத்தை மதிக்க மாட்டானே.. என்று கிண்டலாய் பதில் சொல்லி யிருந்தார்... அதையே தான் நீதிமன்றம் தன்னுடைய சிபாரிசாய் சொல்லியிருக்கு...

  எல்லோருக்கும் இதில் பங்கு இருக்குதானே... நான் கொடுத்திருக்கிறேன்... லஞ்சம்... நானாய் கொடுப்பதில்லை... ஆனால் கேட்கப்படும்போது பேரம் பேசி கொடுக்கிறேன்... கென்யாவில் இன்னும் அதிகமாய் இருக்கிறது.... நான் இமிகிரேஷன் ல இறங்கும் போதே...லஞ்சம் கொடுத்தேன்... இமிகிரெஷ்ன் ஆபிஸருக்கு... அதுவும். எனக்கு எல்லாவகையிலும் சரியான பேப்பர்கள் இருந்தும் மாதவராஜ்...
  ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சி...லஞ்சம் கொடுப்பதிலும் வாங்குவதிலும்... இரண்டும் வேறு வேறு நாகரீகங்கள் என்பது தெளிவு இப்போது. நல்ல பகிர்வு...

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 4. கழகம் என்றால் குடும்பம் என்று எப்போதோ டிக்ளேர் செய்தாகி விட்டது சார், சற்றும் சொரணையற்று வெட்கமறியாது ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு இலவசங்களை வாங்கிக் கொள்ளும் மக்கள் இருக்கும் வரை இதுபோன்ற எத்தனை சைபர் களில் ஊழல் செய்தாலும், கிஞ்சித்தும் வெட்கமின்றி திரிவார்கள். அதை விட நேற்று இளங்கோவன் அடித்த கமெண்ட் ராஜா போனால் ராணி வருவர் என்றர், அதாவது ராஜா போனால் கனிமொழி மந்திரியாவார் என்று இப்போதே ஹேஸ்யங்கள் வெளிவரதுவங்கி விட்டன, வாழ்க ஜனநாயகம்,வாழ்க மிஸ்டர் கிளீன் மன்மோகன்ஜி அவர்களின் புகழ்

  ReplyDelete
 5. //சரி..இராஜினாமா பண்ணிட்டார்..அதோடு இந்த பிரச்சினை சரியாகிடுமா?? //

  வழிமொழிகிறேன்..

  ReplyDelete
 6. Rasa's regingation not enough...

  How to get back the public money? from the culprits.

  Anti-national are termed like speak against govt policies /burning national flags.

  Real Anti-national are those who cheat the public money?

  But we don't have any history of punished corrupted politicians / buruacrats.

  ReplyDelete
 7. eppadi entha 19000000000000 ena kanakidappattathu?

  ReplyDelete
 8. மொதல்ல லஞ்சம் ங்குற வார்த்தைக்கு பதிலா .. பெருந்திருட்டு , நாட்டை மோசம் செய்தல் , ... போன்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும். பாமரனுக்கு ஊழல் ங்குற வார்த்தை ஓரைக்க மாட்டேங்குது.
  "ராசா ஊழல் செய்தார் " இதுக்கு பதிலா
  "ராசா பெருந்திருட்டு செய்தார்"
  "ராசா நாட்டை மோசம் செய்தார்"
  ங்குறது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு.

  ReplyDelete
 9. MR.MATHAVARAJ,

  tHIS IS A VERY HUGE VOLUME SCANDAL. NO BODY IS WORRIED AS RAGAVN SAYS PEOPLE GET MONEY FOR VOTE INCLUDING WHITECOLORS.AS FAR I AM CONCERNED WE SHOULD SUPPORT PAST INDIAN PRESIDENT MR.KALAM TO HAVE A GOOD GOVERNANCE.WE SHOULD THIS STATE AND CENTRAL GOVERNMENT OUT OF RULE FOR MIN 15 YEARS. THENONLY OUR COUNTRY CAN DEVELOP. MR.MANMOHANSINGH IS ONLY A TOY TO TOSS HEAD AS PER MRS.SONIAGANDHIJI'S WORDS.
  K.SUBRAMANIAN

  ReplyDelete
 10. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு ஒரு வசனம் வருமே.. அதுமாதிரி ராஜினாமா பண்ணிட்டார்... இனிமே யாரும் வாயத்தெறக்கப்போறதில்ல... எவனெவன் எவ்ளோ அடிச்சான்னு ஒருயெழவும் தெரியாது.. என்னைக்கு அங்காடியில இலவசபொங்கல் சாமான் கொடுப்பாங்கன்னு நானும் பாத்துகிட்டிருக்கேன்...

  ReplyDelete
 11. அருமை... தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete