-->

முன்பக்கம் , , � பதிவர் புதுவை ஞானகுமாரனுக்கு அஞ்சலி!

பதிவர் புதுவை ஞானகுமாரனுக்கு அஞ்சலி!

puthuvai njaanam புதுவையில் அவரது குடியிருப்புக்கு அருகே ஏராளம் காட்டு நத்தைகள் ஊர்ந்து செல்வது வழக்கம்.  அதிகாலை கண் விழித்து எழுந்ததும், கொல்லைப்புறம் கதவு திறந்து காலைக் கீழே வைத்தால் அவை நெரிபட்டுப் போவது நாகசுந்தரத்தை மகிவும் பாதிக்கும் விஷயம்.  மனைவி உள்பட மற்றவர் அனைவரும் சலித்தும், அருவருத்தும் எச்சரிக்கையோடு அவற்றைக் கடக்கவும் இயலாமல், மிதிக்கவும் கூடாமல் படும் அவஸ்தைக்கு அவர் அன்றாடம் அதிகாலையில் தமக்கு ஒரு சிறப்புப் பணியை  வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.  சிறு நுண்துளைகள் போட்ட பிளாஸ்டிக் உறை ஒன்றை எடுத்துக் கொண்டு பொறுமையாக ஒவ்வொரு நத்தையாகப் பக்குவமாக எடுத்து அதில் இட்டு நிரப்பிக் கொண்டுபோய், ஆற்றங்கரையில் இங்கே பத்து, அருகே பத்து, வேறிடத்தில் ஒரு பத்து என்று அவற்றை ஒரு பிஞ்சுக் குழந்தையைக் கையாளும் இதம் பதத்தோடு விட்டு விட்டு வந்து விடுவாராம்.

புதுவை ஞானகுமரன் என்னும் பெயரில் வலைப்பக்கம் எழுதிவந்த நாகசுந்தரம் அவர்களைப்பற்றி அவரது நண்பரும் தோழருமான ராம்கோபால் இப்படி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

புதுச்சேரி வில்லியனூர் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். புடுவை ஞானகுமாரன், வில்லியனூரான் என்னும் புனை பெயர்களில் 10க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியான இவர், பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள், ஜனநாயக சக்திகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தவர். சிந்தனையாளன் என்னும் பெயரில் வெகுஜன ஊடகங்களிலும் எழுதி வந்திருக்கிறார்.

நாகசுந்தரம் அவர்கள் நேற்று சனிக்கிழமை நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு காலமாகியிருக்கிறார். அவருக்கு இறுதி அஞ்சலி, இன்று காலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது.

புதுவை ஞானகுமாரன் வலைப்பக்கத்தில் மனிதநேயமும், சுற்றுப்புறச்சூழல் குறித்த அக்கறையும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான கோபமும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன.

பதிவர் புதுவை ஞானகுமாரனுக்கு அஞ்சலி செலுத்துவோம். Related Posts with Thumbnails

15 comments:

 1. பதிவர் அய்யா புதுவை ஞானகுமாரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அண்ணா.

  ReplyDelete
 2. அன்பின் மாதவராஜ்

  பதிவர் புதுவை ஞானகுமாரனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். துயருறும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அவருக்கு அவர் நினைவுக்கு அஞ்சலி ..
  RIP GNANAKUMAR SIR

  ReplyDelete
 4. அற்புதமான மனிதர் நாகசுந்தரம்.பம்பரமாக சுழன்று பணியாற்றுவார் நாகசுந்தரத்தின் மரணம் ஒரு பாடமையா! வயதை மீறி பணியாற்றுகிறோம். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதுஅவசியம்.அவருக்கு என் அஞ்சலி---காஸ்யபன்...

  ReplyDelete
 5. அன்பு மாதவ்,

  எனது மின்னஞ்சலை உங்களுக்கும் நகல் அனுப்பும் பொழுது கூட நான் யோசித்திருக்கவில்லை. ஆனால் உங்கள் வலைப்பூவில் மறைந்த தோழருக்கு உரித்தான நெகிழ்வான அஞ்சலியைச்
  செய்திருக்கிறீர்கள்.

  அந்த அஞ்சலில் நான் குறிப்பிட்டிருந்த செய்தியையும் இந்தப் பதிவில் இணைக்க வேண்டுகிறேன்:

  எல்லாம் சொல்லியும் சொல்ல வேண்டிய சிறப்புச் செய்தி ஒன்றுண்டு: தமது சொந்த விருப்பத்தில், தூண்டுதலில், புதுவை தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டலில், இந்த ஐம்பத்தெட்டு வயது மனிதர், பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் நடத்தும் IBEA பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள்
  தமிழ் பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற ஆண்டு தோறும் நேரில் சென்று இருந்து நெறிப்படுத்தி, சிக்கல்களை ஆய்ந்துணர்ந்து, புரிதலும் தெளிதலும் புகட்டி வந்து கொண்டிருந்தவர்.....

  ஊர் பெயர் தெரியாத சிற்றூரின் ஏழைக் குழந்தைகள்பால் அவர் காட்டிவந்த அந்த அன்பின் முன் எனது பணிகள் எம்மாத்திரம் என்று நெஞ்சு அதிர்ந்து போகிறேன்...


  அந்த எளிய மனிதருக்கு எனது நெஞ்சு நெகிழ்ந்த அஞ்சலி.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 6. அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுபவங்கள் :)

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. புதுவை ஞானகுமாரன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  ReplyDelete
 9. துயருறும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 10. அய்யா புதுவை ஞானகுமாரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 11. அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 12. என் ஆழ்ந்த அஞ்சலியை பகிர்ந்துகொள்கிறேன்....

  ReplyDelete
 13. அவரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்

  ReplyDelete