-->

முன்பக்கம் , � எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்!

எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்!

theeratha pakkangal 01

இதுபோல ஒரு செப்டம்பர் 24ம் தேதி சாயங்காலத்தில்தான் தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்றோடு சரியாக இரண்டு வருடம் முடிந்து இருக்கிறது.

614 பதிவுகள். ஐந்து லட்சங்களைத் தாண்டிய ஹிட்ஸ். 662 சகபயணிகள். இவைகளை என் எழுத்தின் மதிப்பாகப் பார்க்கவில்லை. இவை அளவுகோல்களும் இல்லை. உங்கள் அனைவரின் ஆதரவாகவேப் பார்க்கிறேன்.

என்னை விட மிக அற்புதமாகவும், அர்த்தபூர்வமாகவும், ஆழமாகவும், அடர்த்தியாகவும் எழுதுகிறவர்கள் எத்தனையோ பேர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்குரிய மரியாதையையும், ஆதரவையும் வலையுலகம்  கொடுக்கவில்லை என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

காலங்களுக்குள் எட்டிப் பார்க்கிறபோது முன்னே இருக்கிற என் கணிணித்திரை காணாமல் போகிறது. வலைப்பக்கங்களும், பதிவுகளும், பின்னூட்டங்களும் என எம்மனிதர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு, எவ்வளவு எழுத்துக்கள். அவைகளில் இருந்து எழுகிற எத்தனை எத்தனை பிம்பங்கள், காட்சிகள்.

ஏற்கனவே கொஞ்சம் அச்சில் எழுதியிருந்தாலும்,  வலையுலகம் முற்றிலும் புதிது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த எனக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி ஆரம்பகாலத்தில் கூடவந்து நின்றவர்கள் முக்கியமானவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக வலையுலகின் புதிர்கள் தெளிவாக,  கண்ணில் பட்டவர்களையெல்லாம் கவனித்தேன். என் அறிவுக்குப் பட்டதை சொல்லித் திரிந்தேன்.

என் கருத்துக்களையும் பார்வைகளையும் இங்கே முடிந்தவரை சுதந்திரமாகவே பகிர்ந்திருக்கிறேன். முரண்பட்டு எதிர்வினையாற்றி இருக்கிறேன். இது தேவையில்லை என மௌனமாயிருந்திருக்கிறேன். அருவருப்படைந்து ஒதுங்கிப் போயிருக்கிறேன். கோபம் கொண்டு வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறேன். ஏன் இத்தனை கோபம் என வருந்தி இருக்கிறேன். இன்னும் சரியாக கோபப்படவில்லையோவென ஆதங்கப்பட்டும் இருக்கிறேன். எல்லாமும் சேர்ந்துதான் நானும், தீராத பக்கங்களுமாய் இருக்கிறோம். இன்னும் பக்குவப்படவும், அழுத்தம் பெறவும் வேண்டியிருக்கிறது.

நண்பர்களை இங்கு புதிது புதிதாகப் பெறமுடிந்தது. அவர்களோடு பழகவும் முடிந்தது.  உரையாட வாய்த்தது. காலப்போக்கில் சிலரை இழக்கவும் நேரிட்டது. கருத்துக்களைத்தாண்டி, நபர் சார்ந்து சொற்கள் பிறக்கும்போது முகம் தொலைக்க வேண்டி வருகிறது. இது எனக்கும், எல்லோருக்கும்தான். எவ்வளவு இனிமையானவையாய் இருந்தாலும், கசப்பானவையாய் இருந்தாலும் இந்த அனுபவங்கள் அனைத்தும் முக்கியமானவையே. இவைகளிலிருந்துதான் ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறக்கிறது.

முகமறியாது, கருத்துக்களால் மட்டுமே பழகும் இந்தப் பெருவெளியை நான் நேசிக்கிறேன்.

எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்! Related Posts with Thumbnails

39 comments:

 1. மிகுந்த மகிழ்ச்சி

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 2. நிறைய வாழ்த்துக்கள். நிறைய எழுதணும். தொழிற்சங்கங்களின் செயலை முன்னிறுத்தி எழுதி காட்டுவிங்கனு நினைக்கிறன். விவரம் புரிந்த வயசிலேர்ந்து தொழிற்சங்கங்களின் செயல்பாட்டைப் பார்த்திருக்கேன். ஒவ்வொரு பாக்டரியிலும் அவங்கலால் தொழிலாளர்கள் அடைந்த பயனை உதாரணத்துடன் வெளியிட்டால் அதிகம் பேர் அதன் முக்கியதுவத்தை உணர்வார்கள். எழுதுவிங்களா?

  ReplyDelete
 3. ரொம்ப சந்தோஷங்க... மென்மேலும் இந்த பக்கங்கள் தீராமல் வளரவேண்டும்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. சொல்லித்தீராது காலமும், மனமும்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மாதண்ணா.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்.எங்களைப் போன்ற புதிய பதிவர்களையும் உங்கள் அனுபவ எழுத்துக்களால் முன்னேற உதவுங்கள்..

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்ண்ணே..! வலையுலகில் இன்னும் பல உயரங்களைத் தொடுவீர்கள்..!

  ReplyDelete
 10. தீராத பக்கங்கள்.. பதிவின் பெயரிலேயே எல்லாம் இருக்கிறது அண்ணே.. வாழ்வின் எழுதித் தீராத பக்கங்கள்.. தொடர்ந்து இயங்க வாழ்த்துகள்..:-)))

  ReplyDelete
 11. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் மாதவராஜ் அண்ணா!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் அண்ணா...தொடரட்டும் உங்கள் பணி...

  ReplyDelete
 14. அன்பு மாதவ்

  இரண்டாண்டு நிறைவு ஓர் அருமையான விஷயம். உளமார்ந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.

  அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் நிறைய பேசி இருக்கிறீர்கள்.
  உள்ளே எட்டிப் பார்க்கிரவரையும் பேச வைத்திருக்கிறீர்கள்.
  நல்ல திரைப் படங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
  இலக்கிய வீதியில் உலா போக உதவி இருக்கிறீர்கள்.
  தவிர்த்திருக்கக் கூடிய கோபமும், சட்டென்று இறங்கிவிடுகிற சுபாவமும், எல்லாம் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
  மீள் பதிவு போடுவதை விரும்பியோ, விரும்பாமலோ செய்து கவனத்தை ஈர்த்திருக்கிறீர்கள்.
  திருக்குறளாகவும் இசைத்திருக்கிறீர்கள்.
  தேவாரமும் இழைத்திருக்கிறீர்கள்.

  மோசிகீரனார் வந்தமர முரசு கட்டிலில் இடம் கொடுத்தாற்ப் போன்று எனது எழுத்துக்களை நீங்களாகவும், நான் அனுப்பியும் இடுகை செய்து சிறப்பித்திருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்....மாதவ்...வலைப்பூவுலகில் உங்களது பயணத்திற்கு நிச்சயம் தனியிடம் இருக்கும் என்றே நம்புகிறேன்....

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. நீண்ட நாளாக வாசிக்கிறேன் முதல் முறையாக வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் மாது.
  மிகச்சந்தோசமான நாள்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சார். மென்மேலும் தாங்கள் வானளாவ உயர கண்டிப்பாக உங்களுடைய அழகு நடை, எழுத்து வளம், சக பதிவர்களின் மனதையும் புரிந்து கொள்ளும் உயர் குணம், புதிய் பதிவர்களை அறிமுகப் படுத்தும் நல்ல உள்ளம் இப்படி......அனைத்தும் உங்களை கண்டிப்பாக மிக உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. இரண்டு ஆண்டுகளில் அறுநூறுக்கும் அதிகமான பதிவுகளா? மலைக்க வைத்து விட்டீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்! குடும்பம், பணி, தொழிற்சங்கம், வலையுலகம் எனப் பல்வேறு தளங்களில் உங்களுடைய தேவையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்! எனவே உடல்நலத்தில் போதிய கவனம் செலுத்துங்கள்! நீடுழி வாழ்ந்து நெடிதுயர நெஞ்சம் நிறை வாழ்த்துகள்..

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்!

  ReplyDelete
 22. மேன்மேலும் தொடரவேண்டும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. Well done. Keep it Up further to the greater heights. When reaching greatest, social evils would have been eradicated and so on.....

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. நண்பர் ஆதி சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். உங்கள் தெவையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.உடல் நலத்தைப் பேணிக்காத்துக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்

  ReplyDelete
 26. அன்பின் மாதவராஜ்

  தீராத பக்கங்கள் - அருமையான இடுகைகள் கொண்ட பதிவு. ஈராண்டில் 614 இடுகைகள் - 662 சக பதிவர்கள் - பயணிகள். ஐந்து இலட்சம் ஹிட்ஸ் - எத்தனை எத்தனை மறுமொழிகளோ ....

  அதிகம் படித்ததில்லை - அவ்வப்பொழுது படிப்பேன் - மறு மொழி இடுவேன் - நேரில் சந்தித்த போதும் அதிகம் பேசியதில்லை.

  மேன் மேலும் வளர, ஒளிர நல்வாழ்த்துகள் மாதவராஜ்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார் !

  ReplyDelete
 28. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 29. வாழ்த்துகள் மாதவ்

  ReplyDelete
 30. உலகைப் புரட்டும் 'நெம்புகோல்' மக்களிடமே இருக்கிறது
  என்று நீங்கள் 'நம்புகிறதால்' உங்கள் எழுத்துக்கள் சமுதாயத்தை
  உயர்த்தும் இலக்கில் சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. வாழ்த்துகள் மாதவராஜ்!!! தொடர்ந்து பயணிப்போம்!!!

  ReplyDelete
 32. Great work-great achievement-you have to write more on contemporary writings when they are alive...Always you are standing with your opinions.That is great thing ...We wish you to write more and more...

  ReplyDelete