-->

முன்பக்கம் , , , � உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் கேட்கவில்லை, பிரதமர் மன்மோகன் சிங்!

உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் கேட்கவில்லை, பிரதமர் மன்மோகன் சிங்!

Grainrotstorygrid இந்திய உணவு தானிய கிடங்குகளில், வருடக்கணக்கில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போயிருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் தங்கள் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த தேசத்தில் பல கோடி மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும் வழியின்றி அவதிப்படும்போது, இப்படி உணவுப் பொருட்கள் வீணாவதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். நல்ல சத்துணவு இன்றி எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்படுகிற ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் யாருக்கும் உபயோகமின்றி புழுங்கிப் போவதை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?

poverty கண் திறந்து பார்த்த உச்ச நீதிமன்றமும், கடைசியாக சொல்லி விட்டது. “அழுகி வீணாய்ப் போவதற்குப் பதிலாக, இந்த உணவு தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கொடுக்கலாமே” என அரசுக்கு பரிந்துரையும் செய்துவிட்டது. நீதி இன்னும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது!

இதோ, இந்தியப் பிரதமர், பொருளாதார மேதை, அப்பழுக்கற்ற அரசியல்வாதி, டாக்டர் மன்மோகன்சிங் தெளிவாகச் சொல்லிவிட்டார். “வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இந்த உணவுதானியங்களைக் கொடுக்க முடியாது”. அத்தோடு மட்டுமல்ல உச்சநீதிமன்றத்துக்கும்  சில செய்திகளை உணர்த்திவிட்டார். “அரசின் கொள்கைகளில் தலையிட வேண்டாம்” என்பதே அது.  “உச்சநீதிமன்றத்தின் செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பொருட்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்வோம்” என்று நக்கல் வேறு அவரிடமிருந்து.

manmohan_singh எப்பேர்ப்பட்ட தர்ம சிந்தனை! அழுகி வீணாகப் போகும்  உணவு தானியங்களை, இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க முடியாது என்பது எப்பேர்ப்பட்ட  பொருளாதாரக் கொள்கை!  அதற்கு என்னவெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். நெஞ்சில் ஈரத்தைத் துடைத்து விட்டு எப்படியெல்லாம் பேச முடிகிறது!
“மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறு பட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய்  போ போ போ”
என்னும் பாரதியின் கவிதை வரிகளே நம் ஆத்திரமாய் இங்கு வருகின்றன.
கொள்கை, கோட்பாடு, பொருளாதாரம், ஆட்சி, அரசு என எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.  எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை மனிதாபிமானம்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அதெல்லாம் சுத்தமாக இல்லை. முதலாளிகளின் கண்ணில் துரும்பு விழுந்தால் சதையெல்லாம் ஆட, பரிதவித்துப் போவார்கள் அவர்கள். எளிய மக்களின் வாழ்வில் இடியே விழுந்தாலும், குளிர்பதன அறையில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டே ‘அப்படியா’ என்று காலாட்டிக்கொண்டு இருப்பார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால் நடுங்கிப்போகும் இவர்களுக்கு பசியின் குரல்கள் ஒருபோதும் எட்டுவதேயில்லை. உணவு தானியங்கள் நாசமானால் என்ன, எளிய மக்கள் செத்துத் தொலைந்தால் என்ன?

மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்!  அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.

Related Posts with Thumbnails

44 comments:

 1. chaatai adi....arumaiyana pathivu thozhare...

  ReplyDelete
 2. //கண் திறந்து பார்த்த உச்ச நீதிமன்றமும், கடைசியாக சொல்லி விட்டது//

  அவங்க வெறும் பத்தே வருசத்துல கண்ணா தொரந்தாங்களே அதுவே பெரிய விஷயம்.

  ReplyDelete
 3. //மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்! அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.//

  சாட்டயடி வரிகள்...அவர்களுக்கு உறைக்கவே உரைக்காது.

  ReplyDelete
 4. //அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.//

  மிக சரியான வரிகள்.

  ReplyDelete
 5. உண்மை தாண்ணே ..இன்னிக்கு செய்தியில் பார்த்த போது எனக்கு பத்திகிட்டு வந்துச்சு .. அழுகி நாசமா போகலாமாம் .ஏழை மக்களுக்கு கொடுக்க முடியாதாம் ..என்ன கொடுமை.

  ReplyDelete
 6. ரமண்ணா!
  நன்றி தோழரே!

  அரைகிறுக்கன்!
  ஆமாங்க. இவ்வளவு வருஷம் கழிச்சாவது கண்ணைத் திறந்தாங்களே...!


  VAP!
  நம் மக்கள் சாட்டையைக் கையில் எடுக்கணும்!

  அன்பரசன்!
  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. ஜோ!
  எனக்கும் பத்திக்கிட்டு வந்ததாலத்தான் இந்தப் பதிவு.

  மிக்க நன்றி. பத்திக்கிட்டதுக்கு:-)))

  ReplyDelete
 8. அன்பின் மாதவராஜ்

  கோபம் புரிகிறது. உச்ச நீதி மன்றம் சொல்வதைக் கேட்டால் என்ன ....
  மத்திய அரசு மறுபரீசீலனை செய்யக் கூடும்

  நல்வாழ்த்துகள் மாதவராஜ்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 9. "அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை."
  முற்றிலும் உண்மை. ச்சே! என்ன கொடுமை இது. இப்பிடி கூட மிக நன்கு படித்த அறிவாளியான பிரதமர் அவ்வாறு கூறுவாரா! பேப்பரில் பார்த்து ஆடிப் போய்விட்டேன். படித்த படிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. அட்லீஸ்ட் அழ்கிய தானிய வகையாவது ஏழை விவசாயிக்கு உரமாக தருவாரா அல்லது அதையும் விற்பதற்கு ஏலம் பேசியாகி விட்டது. இன்னொரு பாரதி பசி பட்டினி பற்றி அறிவுறத்த வர வேண்டும்.

  ReplyDelete
 10. என்ன கொடுமை இது? இதையெல்லாம் தட்டிக் கேட்க உலகளாவிய அமைப்பு ஒன்றுமே இல்லையா? உள்நாட்டுப்பிரச்னையா இது?

  (என் பாமரத்தனத்தைப் பொறுத்துக் கொள்ளவும்.)

  ReplyDelete
 11. kindly know and write about the comments of all parties about the SC judgment also..It will reveal more and some interesting news.Will you do Madhav??

  ReplyDelete
 12. பொருளாதார மேதையாக இருந்து என்ன பயன்? பொதுமக்களைப் பற்றி கவலைப் படாமல் யாருக்கோ விசுவாசமாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத ஒருவரை இரண்டாவது முறையும் பிரதமராக்கி அழகு பார்க்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் நம்முடையது. பெருச்சாளிகளின் தேசத்தில் எலிகள் வாழ்வாங்கு வாழ்கின்றன.

  ReplyDelete
 13. ippothu naan tham
  izhil ililai. anyway xprasan f compleeeeeeeeeeeeeted.  day,,,,,,,,,,,,,,,  sorry eor qt mistakes and TAKES - SIVAA SAATHTHOOOR

  ReplyDelete
 14. நியாயமான சீற்றம். வீணாகும் உணவுப்பொருட்களை எளியவருக்கு கொடுப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது.

  ReplyDelete
 15. இவரெல்லாம் பிரதமர்.. ம்ஹூம். வேறென்னத்தைச் சொல்ல?

  ReplyDelete
 16. //அழுகி வீணாய்ப் போவதற்குப் பதிலாக, இந்த உணவு தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கொடுக்கலாமே//

  என்பது பரிந்துரை. இதில் இருக்கும் நியாயம் யாராலும் மறுக்கப்பட முடியாதது.

  //வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இந்த உணவுதானியங்களைக் கொடுக்க முடியாது//

  இப்படி மன்மோகன் சிங் சொன்னதற்கு ஏதாவது சுட்டி இருக்கிறதா? யாராலும் மறுக்கப்படாத ஒரு நியாயத்தை அவரால் மட்டும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

  அவரது காரணம் என்னவாக இருக்கும்?

  //உச்சநீதிமன்றத்தின் செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பொருட்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்வோம்//

  இது நக்கல் இல்லை. நேரடியான பதில்தான்.

  அரசு கையிருப்பில் இருக்கும் தானியங்களை 'அழுகிப் போகாமல் பாதுகாக்க வேண்டும், ஆனால் உடனேயே எல்லாவற்றையும் எடுத்து வினியோகித்து விடக் கூடாது' என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

  அரசின் தானியச் சேமிப்பு சந்தையில் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்க பெரும்பங்கு வகிக்கிறது. 'நாம் அடாவடி விலைக்கு விற்க முயற்சித்தால், அரசு தன் கைவசம் இருக்கும் சரக்குகளை சந்தைக்கு அனுப்பி விலையைக் கட்டுப்படுத்தி விடும்' என்று வியாபாரிகளுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும்.

  மேலும் பொது வினியோக முறையில் வினியோகிக்க குறிப்பிட்ட மாதங்களுக்குத் தேவையான தானியங்கள் அரசின் கையில் இருக்க வேண்டும்.

  1. தானியங்கள் அழுகிப் போகக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
  2. பட்டினியில் வாடும் மக்களுக்கு இலவசமாக தானியங்களை வினியோகிக்க வேண்டும் (அழுகுவதை அல்ல, நல்ல தரமான தானியங்களை) என்பது செய்யப்பட வேண்டிய ஒன்று.

  ஆனால் இரண்டாவதைச் செய்ய அரசின் கையிருப்பு போதுமான அளவு அதிகரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும், பராமரிக்கப்படவும் வேண்டும்.

  ReplyDelete
 17. பொருளாதார மேதை என்று ஏகாதிபத்திய நாடுகளின் அதிபர்கள் புகழ்வதால் இவன்
  பெரிய மேதை என்ற செருக்குடன் அலைகிறான்.......
  உண்மையில் மன்மோகன்சிங் ஒரு மந்த புத்திக் காரன்...!
  நீதித் துறை தலையிட்டால்...உடனே அரசின் கொள்கையில் தலையிடவேண்டாம் என்று வேறு நக்கல் அடிக்கிறார்....
  அரசின் கொள்கை என்னவென்று கேட்டால் கொள்ளை அடிப்பதுதான் என்று பதில் சொல்வார்....
  போக்கத்தபயல்....இந்த தேர்தலுடன் அந்த அசட்டு கிழவன் வெளியேறி வேறு ஒரு கொஞ்சமே கொஞ்சமாக மனசாட்சி உள்ள ஏதோ ஒரு
  அறிவாளி வரட்டும் ?!

  ReplyDelete
 18. மா.சிவகுமார்!

  வருகைக்கும் பகிர்வுக்கு நன்றி.

  இந்த இடுகையின் ஆரம்பத்தில் சாய்நாத்தின் கட்டுரைக்கான சுட்டி இருக்கிறது. அதைப் படிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 19. Pl.also visit
  http://tvrk.blogspot.com/2010/09/bunch-of-jokers.html

  ReplyDelete
 20. DON'T YOU HAVE BREAD? EAT CAKE.
  POLITICIANS SHOULD REMEMBER THESE GOLDEN WORDS.

  ReplyDelete
 21. இந்த பின்னூட்டங்களில் மா.சிவக்குமாரின் பின்னூட்டம் மட்டுமே பிரச்சினையை புரிந்துக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. மற்றவையெல்லாம் பதிவு உட்பட உணர்வுபூர்வமாக மட்டுமே இந்த பிரச்சினையை பார்த்துள்ளன.

  உணவுப்பொருட்களை, அதுவும் சந்தை விலை கொடுத்து வாங்கப்பட்டவற்றை சரிவர பாதுகாக்க வேண்டாமா?

  இது நியாயமான கேள்வி. ஆனால் எந்த அதிகாரியும் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. கோடிக் கணக்கான டண் உணவு பொஎருட்களள பராமரிக்கும் பொறுப்பிலுள்ள FCI நிறுவனத்தில் இப்படி ஒருசில தவறுகள் நடப்பது மிகவும் சகஜம். ஆயினும் இத்தகைய தவறுகள் இனியும் நடக்காமல் பார்க்க வேண்டியது அரசின் கடமை. இதை ஏற்கனவே பிரதம்ர் ஒப்புக்கொண்டுள்ளார்.

  இரண்டாவது உச்ச நீதி மன்ற ஆணண.

  உச்சநீதிமன்றம் என்பதற்காகவே அவர்கள் சொல்வது எல்லாம் புத்திசாலித்தனமானது ந்டைமுறறக்கு சாத்தியமானது என்று பொருள் அல்ல. பிரதமர் கூறியுள்ளதுபோலவே இதுபோன்ற கொள்கை பற்றிய விஷயங்களில் உச்சநீதி மன்றம் தலையிடக் கூடாதுதான். ஏனெனில் பாழாய்போன தானியங்களள எத்தனை பேருக்கு இலவசமாக வழங்க முடியும்?

  இந்தியா போன்ற நாடுகளிலு அதுவும் 38% ஜனத்தொகை வறுமை கோட்டுக்கீழ் இருக்கும்போது இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை.

  ReplyDelete
 22. நல்ல காத்திரமான கட்டுரை.

  மன்மோகனின் கொழுப்பெடுத்த பேச்சை யாருமே எழுதாதா நிலையில் நீங்கள் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

  //“அரசின் கொள்கைகளில் தலையிட வேண்டாம்” //

  அது என்ன அரசின் கொள்கை? கொஞ்சம் விளக்க முடியுமா மாதவராஜ்

  ReplyDelete
 23. // மன்மோகன்சிங் அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.//

  சாட்டயடி வரிகள்...

  ReplyDelete
 24. பல ஆறுகள் ஓடுதடா
  வரலாறுகள் மாறுதடா
  பசியால் பல ஏழைகள் சாவது
  என்பது தேசியமானதடா
  இனி பால் வரும் என்பதும்
  தேன் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா
  அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது
  சூசகமானதடா !

  Song : manidhaa manidhaa ini un vizhigaL
  Music Director :Ilaiyaraaja
  Singer:K.J.Yesudoss
  Lyricist: Vairamuthu

  ReplyDelete
 25. தானும் படுக்க மாட்டானுக...தள்ளியும் படுக்கமாட்டாணுக...
  'தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' - என்றான் பாரதி
  இங்க என்னடான்னா...
  (என்ன வறுமை சார் இது...)

  ReplyDelete
 26. ம‌க்க‌ளுக்காக‌ வாழ்ந்த‌ லால் ப‌க‌தூர் சாஸ்திரி போன்ற‌ ("ஜெய் கிஸான், ஜெய் ஜ‌வான்") பிர‌த‌ம‌ர்க‌ள் அம‌ர்ந்த‌ பிர‌த‌ம‌ர் இருக்கை இன்றோ, தேவ‌ஹ‌வுடா,ம‌ன்மோக‌ன் சிங் போன்ற‌வ‌ர்க‌ளால் நிர‌ப்ப‌டுகிற‌து. ம‌க்க‌ளின் த‌ர‌ம், தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும் த‌லைவ‌ர்க‌ளின் த‌ர‌த்தால் ம‌திப்பிட‌ப்ப‌டுகிற‌து.
  இந்த‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு இவ‌ர்க‌ளே போதும் தான். ‌

  ReplyDelete
 27. //மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்! அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.//

  என்ன பிரதமரே ஒரு நாள் தேவையில்லை ஒருவேளை பட்டினியாக இருந்துப்பார் எங்களை போன்றோரின் நிலைமை உங்களுக்கு புரியும். வெளிநாடு வெளிநாடுன்னு ஜாலியா மனைவியோட ஊர் சுற்றி வருகின்ற உனக்கென்ன தெரிய போகுது எங்களின் வலி.

  ReplyDelete
 28. தலைப்பே மொத்தமும் சொல்லிவிட்டது.

  இந்த விடயம் சம்பந்தமான இன்றைய
  தினமணி தலையங்கமும் நச்சென்று இருந்தது.

  ReplyDelete
 29. சத்தியமான வார்த்தைகள். புரியுமா மர மண்டைகளுக்கு.

  ReplyDelete
 30. // ஏனெனில் பாழாய்போன தானியங்களள எத்தனை பேருக்கு இலவசமாக வழங்க முடியும்? ///

  வழங்கலாம். ஆனால் அவை தீர்ந்த பிறகு அடுத்த வருடத்திற்க்கு என்ன செய்வது ? தீடீர் பற்றாகுறை வந்தால் என்ன செய்வது ? அழுகாமல் பாதுக்க முடியாவிட்டால் மாற்று வழி என்ன என்பதை ஆராய்வதே விவேகம். மேலும் இந்த அரிசி திருடப்பட்டு கடத்தபடுவதை தடுக்க வக்கில்லை நமக்கு. பெரும் திருட்டு...

  மேலும் பார்க்க : சாய்நாத் கட்டுரை பதிவில் விரிவான பின்னூட்டம் இட்டுளேன்.

  ReplyDelete
 31. நேற்று ஒரு பொருளாதார குழுமத்திற்க்கு உணவு / உடை பற்றி நான் அனுப்பிய ஆங்கில மின்மடல் :

  Dear Sirs,

  There is a great deal of debate, reports and analysis about the
  shortage of basic needs in India,
  esp about food, healthcare and education needs.

  But so far, i have not seen anything on the second most important of the basic needs : Clothing

  there is too much data on nutriciton deficiency, malnutrition, crisis in agriculture, farmers sucides,
  food production, etc. But so far nothing about clothing.

  Clothing and textile industry has been allowed to evolve into full
  fledged capitalistic model with
  economies of scale, etc after LPG. Hence there is no supply constraints and prices too have
  faller drastically when compared to the 70s and 60s. the poorest of
  the poor are now better
  and fully clothed than ever before. I guess for those who lived thru 50s, 60s and 70s, witnessed torn and old cloths worn by poor and middle class. Clothing was a luxury and owning terlin shirt was a prestige issue. Now, a poor labourer can buy a piece of cloth (s shirt or saree) with his/ her one or two day wages. I guess it cost more than these wage rates in the olden days.

  Can we have an informed debate about this ?

  and land ceiling acts prevented Indian agricultre into evolving into full fledged large corporate farms of 1000s of acres of size (or collective farms of communist states). Only coffee and tea plantations have been exemtped because they will not be viable on tiny or small scale. But the logic behind allowing very large farms of coffee or tea equally applies to other agriculture farms like paddy, wheat, sugarcane, fruits, etc.

  Any inputs about the comparisons between these two vital needs : Food Vs Clothing in India ?
  I guess the entry of Reliance made a big difference in this field..

  --
  Regards / அன்புடன்

  K.R.Athiyaman / K.R.அதியமான்
  Chennai - 96

  ReplyDelete
 32. ///மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்! அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.///

  நன்றாக சொன்னிர்கள்!!!

  அன்று சோனியா, ஈழ தமிழர்களை அழித்தாள்!!!
  இன்று சோனியா, நம் நாட்டு மக்களை, பசி கொடுமையால் பட்டினிப் போட்டு அழிக்கிறாள்!!!

  வரும் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.....

  ReplyDelete
 33. நேற்று ஒரு பொருளாதார இணைய குழுவிற்க்கு உணவு / உடை பற்றி ஒப்பிட்டு எழுதிய ஆங்கில மின்மடல் :

  Dear Sirs,

  There is a great deal of debate, reports and analysis about the
  shortage of basic needs in India,
  esp about food, healthcare and education needs.

  But so far, i have not seen anything on the second most important of the basic needs : Clothing

  there is too much data on nutriciton deficiency, malnutrition, crisis in agriculture, farmers sucides,
  food production, etc. But so far nothing about clothing.

  Clothing and textile industry has been allowed to evolve into full
  fledged capitalistic model with
  economies of scale, etc after LPG. Hence there is no supply
  constraints and prices too have
  faller drastically when compared to the 70s and 60s. the poorest of
  the poor are now better and fully clothed than ever before. I guess for those who lived thru
  50s, 60s and 70s, witnessed
  torn and old cloths worn by poor and middle class. Clothing was a
  luxury and owning terlin shirt
  was a prestige issue. Now, a poor labourer can buy a piece of cloth (shirt or saree) with his/ her
  one or two day wages. I guess it cost more than these wage rates in
  the olden days.

  Can we have an informed debate about this ?

  and land ceiling acts prevented Indian agricultre into evolving into full fledged large corporate farms of 1000s of acres of size (or collective farms of communist states). Only coffee and tea plantations have been exemtped because they will not be viable on tiny or small scale. But the logic behind allowing very large farms of coffee or tea equally applies to other agriculture farms like paddy, wheat, sugarcane, fruits, etc.

  Any inputs about the comparisons between these two vital needs : Food Vs Clothing in India ? I guess the entry of Reliance made a big difference in this field..

  --
  Regards / அன்புடன்

  K.R.Athiyaman / K.R.அதியமான்
  Chennai - 96

  ReplyDelete
 34. அரைக்கிறுக்கர்கள் அரசாண்டால் இப்படித்தான்....

  ReplyDelete
 35. மா .சிவக்குமார் சொல்லும் எதார்த்தங்கள் புரியாமல் இங்கு யாரும் இல்லை .ஆனால் பிரச்சனை என்னவென்றால் .. தானியங்களை இப்படி வீணடிக்காத ஏற்பாடுகள் செய்ய வேண்டும் ..அட ..செய்து முடிக்கிற வரைக்குமாவது ..வீணா அழுகிப்போறதை வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு கொடுக்கலாமே என்று சொன்னால் ..இல்ல..நாங்க அழுகி நாசமாப் போக விடுவோமே தவிர அதை உபயோகப்படும் மக்களுக்கு கொடுப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதது என்று சொல்லுவது கடைந்தெடுத்த திமிர்.

  ReplyDelete
 36. பிரதமர் அவர்களே! எம்.பி.க்களுக்கு 140000 ஊதியம் கூடப் போதாது.சும்மா ஒரு பத்து லட்சம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.மந்திரிகளுக்கு சும்மா ஒரு ஐம்பது லட்சம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.பாராளுமன்ற உறுப்பினர்கள்ஒரு கேள்வி கேட்க ரூபாய் பத்து லட்சம் வரை லஞ்சம் பெறலாம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் இருநூறு ரூபாய் என்று கொள்கை முடிவு எடுங்கள்.தேர்தலில் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வாக்களர்களுக்குத் தருவது குற்றமில்லை என்று கொள்கைமுடிவு எடுங்கள்.அதிகாரிகள் கேதான் தேசாய் மாதிரி ஊழலில் ஈடுபடுவது ஒன்றும் பெரிய தவறில்லை என்று கொள்கை முடிவு எடுங்கள்.ஏழை மக்களும் பணக்காரர்களைப் போல நாளொன்றுக்கு மூன்று முறை ஏதாவது சாப்பிடவேண்டும் என்று நினைக்கவே கூடாது என்று கொள்கை முடிவு எடுங்கள்.அப்புறம் இதைப் பற்றில்லாம் ஊடகங்களோ,மக்களோ,நீதிமன்றங்களோ குறை கூறக் கூடாது என்றும் கொள்கை முடிவு எடுத்து விடுங்கள்

  ReplyDelete
 37. பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு ஐந்து லட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகை அளிக்க நம்மிடம் பணம் இருக்கு, ஆனா பசியால் வாடுகிறவனுக்கு சோறு போட மனசில்லை, அத சொல்லுவதற்கு பொருளாதார மேதை பட்டம் பெற்ற மன்மோகன் சிங். நிச்சயமாக எல்லோருக்கும் இவர் பிரதமர் கிடையாது.

  இந்தியாவில் கார்ப்பரேடுகள் தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  ReplyDelete
 38. //*
  “உச்சநீதிமன்றத்தின் செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பொருட்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்வோம்”
  *//

  முதலில் மன்மோகன் எனும் மடையன் பட்டினியில் கிடக்கும் மக்களை பார்த்த பின் நீதிமன்ற உணர்வுகளை புரிந்து கொள்வானா?

  உணவு பொருட்கள் நீண்டகாலம் வைத்திருந்த அழுகி விடும் என்பது கூட தெரியான மன்மோகனின் அழுகிய மூளை மற்றும் இதயத்தை சரி செய்ய மாற்று வழிகள் உண்டா?

  ReplyDelete
 39. “மாறு பட்ட வாதமே ஐந்நூறு
  வாயில் நீள ஓதுவாய் போ போ போ
  சேறு பட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
  சிறிய வீடு கட்டுவாய் போ போ போ” உண்மை.....அருமையாகச் சொன்னீர்கள். மனிதாபிமானமற்ற செயல்............

  ReplyDelete
 40. 3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

  http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

  ReplyDelete
 41. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.
  ///
  SERUPPAALA ADICHALUM IVANUGALUKKU PUTHTHI VARAATHU

  ReplyDelete
 42. Nutrition is a bigger problem than hunger
  http://swaminomics.org/?p=1888

  ReplyDelete
 43. If you watch the English Media and channels, you could perceive that this reply of Mr.singh has not been much talked upon , and we can very well understand as to how arm-twisting is done by this Govt through its control and how media are manacled by govt machinery.
  Sad indeed the plight of poor and middle class in this country.

  ReplyDelete
 44. வணக்கம் சரியான பதிவு. இந்திய ஆட்சியாளர்களுக்கு எப்போதும் மனிதத்தன்மை இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சம்பவம்.

  ReplyDelete