-->

முன்பக்கம் , , , � பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்!

பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்!

வலையுலகில் பெண் என்பதாலேயே, தான் சில ஆண் பதிவர்களால் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களின் எழுத்துக்களால் காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவர் புன்னகை தேசம் அவர்கள் வினவுதளத்தில் வேதனையோடு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீண்டுமொருமுறை நம் வலையுலகில் ஆணாதிக்க மனோபாவம் தன் கோரப் பற்களைக் காட்டியிருப்பதாக, வெளிப்படையாக தன் சூழலை பொதுவெளியில் முன்வைத்து பேசி இருக்கிறார். அவரோடு நிற்பதும், இதுபோன்று மேலும் நடக்கக் கூடாது என்கிற அவரது உறுதியை வளர்ப்பதும் அவசியமாகிறது. தொடர்ந்து இவ்விஷயத்தில் சமரசமற்று  ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிற, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுகிற வினவுத் தோழர்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தகவல் சாதனங்களும் பழைய ஆதிக்கம், கட்டுப்பாடுகளை புனரமைத்துக்கொண்டு பெண்ணை பாலின ரீதியில் அடிமைப்படுத்துவதில் நவீனச் சேவை செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஓரளவுக்கு விதிவிலக்காய் பாலின பேதமின்றி கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும், மாறுபட்ட சிந்தனைகளோடு உரையாடும் வசதியும் வலையுலகின் தனித்தன்மையாய் இருக்கின்றன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு கொஞ்சம் பெண்கள் தயக்கங்களை உதறி தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முன்வருவதைப் பார்க்க முடிகிறது. இது அனைவருக்குமே பெருமைக்குரிய விஷயம். இதனை உற்சாகத்துடன் வரவேற்பதும், மேலும் மேலும் வளர்ப்பதும் முக்கியம். அதற்கு எந்த விதத்திலும் ஊறு விளைவித்தாலும் நம்மை நாமே தரந்தாழ்த்திக்கொள்வதே ஆகும்.

நமது சமூகத்தின் கட்டமைப்பு, பெண்களின் மீது மிக நுட்பமான ஆதிக்க விதிகளைக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களும் இறுதியில் ஆண்களையே பெண்களைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைக்கின்றன. பெண்களுக்கும் அதிகாரத்துக்கும் இடையில், பெண்களுக்கும் அரசுக்கும் இடையில், பெண்களுக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் வந்து வழி மறிப்பவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். ‘அப்படியெல்லாம் இல்லை’ எனச் சொல்லும் ஆண்கள் தங்களுக்கு இருக்கும் வரம்புகள், எல்லைகள் குறித்து கொஞ்சம் சுயபரிசோதனை செய்துதான் ஆக வேண்டும். மிக இழிவாக பெண்களைப் பற்றிய புரிதல்களும், கருத்தோட்டங்களும் ஆண்களின் மரபணுவிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. தங்களுக்கு எதிராக பெண்கள் நிற்கிற அல்லது பேசுகிற மறுகணமே, பெண்களை வீழ்த்தும் எந்தவித உபாயங்களையும் கைக்கொள்ளத் தயங்குவதில்லை அவர்கள். அதுதான் சட்டென ‘கேரக்டர்’ என தாங்களே உருவாக்கி, அலங்கரித்து, கொண்டாடி வைத்திருந்த ஒன்றை எல்லோர் முன்பும் போட்டு உடைத்து வெறுப்பைக் காட்டுகின்றனர். பெண் தலைகுனிந்து நிற்கிறாள். தான் நல்லவனென்றும், வெல்ல முடியாதவன் என்றும் ஆணாதிக்கத்தின் வக்கிரம் கைதட்டி சிரிக்கிறது.

இந்த சமூகப் பிழையை சரி செய்வதற்கு அல்லது சுட்டிக்காட்டுவதற்கு, பிழை செய்பவர்களை அடையாளம் காட்டவும், அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது. அதே நேரம் யாருடைய தனிப்பட்ட பிரச்சினையோவென பார்க்காமல், நம் அனைவரது பொதுப் பிரச்சினையாக வைத்து ஆராய்வதும், உரையாடுவதும் வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஒரு குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துவதும், அவர்களை தங்கள் தவறுகளை உணரச்செய்து பக்குவப்படுத்துவதும் நம்மையேச் சாரும். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மீது கடுங்கோபம் கொள்வதன் மூலம் விரோதங்களும், வீம்புமே பின்விளைவுகளாகவும், பக்க விளைவுகளாகவும் தெறிக்கின்றன என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். சமீபமாய் இணையத்தில் தொடர்ந்து வந்த சில பதிவுகளும், கூகிள் பஸ்ஸில் ஏறிய உரையாடல்களும் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று கேலி கிண்டல் செய்து வந்ததெல்லாம் அப்படித்தான். அவை சமூக மாற்றத்திற்கான கருத்தோட்டங்களை நீர்த்துப் போக வைக்கவே உதவும்.

நம் சிந்தனைகளால் நிரப்பப்பட்ட அற்புதமான வெளியாக வலையுலகம் உருப்பெறவேண்டும். புதுப்புது சிந்தனைகளும், ஆரோக்கியமான உரையாடல்களாலும் கருத்து வளம் கொண்டதாக தளைக்க வேண்டும்.  நம் வக்கிரங்களும், அழுக்குகளும் அதில் கலந்து சாக்கடையாக வேண்டாம். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, நாகரீகமானவர்கள் செய்யும் காரியமல்ல. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதர்களாகிய நாம், ஹெலன் ரெட்டியின் இந்த பாடல் வரிகளைக் கேட்போம்.

“நான் ஒரு பெண், என்னைப் போன்று
ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து கர்ஜிப்பது
உங்கள் காதுகளில் விழவில்லையா?
இதை நீங்கள் உதாசீனம் செய்ய முடியாது
நான் நிறையத் தெரிந்து கொண்டு விட்டேன்
இனி நான் பின்வாங்கிச் செல்லவோ, பாசாங்கு புரியவோ முடியாது.
லட்சியத்தைப் பற்றி நான் முன்பு நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்
நான் அடித்தட்டில் இருந்துள்ளேன்
யாரும் என்னை மீண்டும் அடித்தட்டுக்குத் தள்ள முடியாது
நான் ஒரு பெண்
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்த்து நிற்கும் என்னைப் பாருங்கள்
நிலப்பரப்பை என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன்
ஆயினும் இன்னும் நான் கருவே
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில்
இன்னும் நெடுந்தூரம் கடந்துசெல்ல வேண்டும் நான்”

புன்னகைதேசம் அவர்களே! இங்கு சகோதரர்கள் உங்களை புரிந்துகொள்ளவில்லை. ஒரு ஆணாக நானும் அவமானப்பட்டு நிற்கிறேன்.

Related Posts with Thumbnails

12 comments:

 1. //பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்!//

  அது உங்க இஷ்டம்! :-))

  ReplyDelete
 2. @madavaraj avl , eppo enge oru pen aluthukondu pathividuval enru kathu kondu irupeergala ungal atharavu porvaiyai virika ? Nijam nadanthathu enna ? Tv il adikadi kattuvangale ithu ungalai mathiri alunga kathula vilatha? Intha angle la think pannave mateengala? Mathi ketta avasarak kudukai angal silar . Theera visaripathe mei enru padithathellam maranthu pocha?

  ReplyDelete
 3. யார் பக்கம் நியாயம் என்று தெரியவில்லை எப்படியும் ஒரு
  100 பதிவாவது வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

  ஒரே ஒரு சந்தேகம் அந்தக்கா பிரச்சனைய ஏன் வினவிடம் ஒப்படைத்தது வினவு என்ன பதிவுலகில் கட்டப்பஞ்ஜாயத்து நடத்துபவரா யார் இந்த வினவு.

  வினவு அவர்களே உங்களை நீங்கள் பதிவுலகின் அமெரிக்காவாக நினைத்துவிட்டீர்களோ

  மற்றொருப்பெண்னே அவ்வளவும் பொய் என்கிறார்(மதார்)

  சம்மந்தப்பட்ட அக்கா அவர்கள் பதிவிலேயே விபரமாக எழுதி ஆதரவு கோறியிருக்கலாம்.

  எது எப்படியோ பதிவுலகத்திர்க்கு மாதம் ஒரு அவல் மெல்வதர்க்கு கிடைத்துவிடுகிறது.

  ReplyDelete
 4. aaru வருடங்கள் முன்பு யாகூ, ரீடிப், பால்டாக் சாட் அறைகளில் தான் இந்த மாதிரி தனி நபர் பிரச்னை சார்ந்தே விவாதம் நடக்கும். அதனால் தான் அவைகளால் வலைபப்திவு, முகபுதகம் அளவு முன்னேறி வர முடிய வில்லை.

  தொழில்நுட்பம் எம்மை சாட்டில் இருந்து வலைப் பதிவு, முகப் புத்தகம் என்று முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்கிறது.

  ஆனால் மனித மனமோ வலைப் பதிவில் இருந்து மீண்டும் பின்னோக்கி சாட் (கூகுளே டாக் சாட்) பக்கம் செல்லவே விருப்ப படுகிறது.


  தமிழ் வலைப்பதிவை முனோக்கி கொண்டு செல்ல எல்லா வித தடைகளையும் உருவாக்க முயலும் (இரு பக்க பதிவர்களையும்) paarkka/padikka எனக்கு அயர்ச்சியாகவும், வருத்தமாகவும் தான் இருக்கிறது.

  இந்த மாதிரி பதிவுகளில்/பதிவுலகத்தில் கலந்து கொள்ள தான் நாம் விடலை/வாலிப வயதில் உள்ள கொங்கு நாடு கல்லூரி மாணவர்களை/மாணவிகளை ஓடி ஓடி போய் அழைக்கிறோமா.

  ReplyDelete
 5. சகோதரியின் வேதனையில் பங்குகொள்கிறேன்..

  ReplyDelete
 6. தங்கள் தவறுகளை உணரச்செய்து பக்குவப்படுத்துவதும் நம்மையேச் சாரும். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மீது கடுங்கோபம் கொள்வதன் மூலம் விரோதங்களும், வீம்புமே பின்விளைவுகளாகவும், பக்க விளைவுகளாகவும் தெறிக்கின்றன என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
  மிகச் சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
  நானும் தலை குனிகிறேன்.

  ReplyDelete
 7. மதார்!


  பொதுவெளியில் பகிரப்பட்டு, அதைக் கேள்விப்பட்ட பிறகும், வேடிக்கை மனிதராக என்னால் இருக்க முடியாது. அதுகுறித்து கருத்துச் சொல்வதற்கு வலையுலகம் சார்ந்த எவர்க்கும் உரிமை உண்டு.

  தவிர, இந்த விஷயத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் சென்று ஆராய்ந்து பார்ப்பதைவிட, இது போன்ற பிரச்சினைகளில் காணப்படும் பொதுத்தன்மை குறித்தும், பொதுவெளியில் கவலைப்பட வேண்டியது குறித்தும் மட்டுமே நான் பேசியிருக்கிறேன்.


  இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்திட வேண்டாமே என்ற அக்கறையில் மட்டுமே எனக்குத் தெரிந்ததை பகிர்ந்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. வணங்குகிறேன் சகோதரரே.. வேறு பேச வார்த்தையில்லை...

  நிர்வாணப்பட்டு நிற்கும்போது ஒரு மானம் காக்க உதவுகின்றீர்களே...


  வணங்குகின்றேன் அனைத்து பெண்கள் சார்பிலும் எமக்கு நம்பிக்கை தந்தமைக்கு....


  நாங்கள் தலைநிமிர்வோம் நிர்வாணத்திலும் இனி...

  எம்மை இச்சையோடு கொடி கண்கள் நோக்கட்டும்.. ஆனால் 10 கண்களாவது கண்ணீர் வடிக்குதே அது போதும் சகோதரரே....

  கண்ணீருடன்...

  ReplyDelete
 9. வணங்குகின்றேன் அனைத்து பெண்கள் சார்பிலும் எமக்கு நம்பிக்கை தந்தமைக்கு....

  வணங்குகிறேன் சகோதரரே.. வேறு பேச வார்த்தையில்லை...
  நன்றி......நன்றி......நன்றி........

  ReplyDelete
 10. I have already posted something on this before.
  1] No one should indulge in indecent and uncultured language with anyone, leave alone female bloggers.Such sort of behaviour is simply unacceptable.
  2] To female bloggers: If ever you find exchanges go below the level of dignity ,stop it forthwith. You dont have to answer each and every mail. Be firm in this. And say say so openly and loudly.Dont entertain chats with individuals whom you dont know personally. Not woth it.
  3]At a personal level.. pl dont entertain any strangers calling you akka, thangachi etc. One can interact in a dignified way even without all these superficialities. Real love and respect does not need these artificial summoning of relationships. In Tamil tradition such addressed had a good and profound meaning . But today in the electronic media when things get vulgarised it is better to avoid these artificialities and deal with each other as individuals with respect and dignity. Best , Amal

  ReplyDelete
 11. சார் வணக்கம்.
  உங்கள் எழுத்துக்கள் சிறப்பு.
  இவ்ளோ சிந்தனை பண்றீங்க.
  நீங்க அவமான படாதிங்க.இதெல்லாம் அரசியல்ல சகஜம்.இங்கே எல்லாம் முகமூடி.தனிப்பட்ட நபர்களுக்கு.பிரச்சனைகளுக்கு கவலைபட்டு அவமானப்பட்டு என்ன பயன்?
  தீர்க்கமாக பார்த்தால்..யார் இங்கே பெரிய ஆள்?இது தான் பிரச்சனையா?

  நித்யானந்தம் முதல் இன்டலி வரை....தொல்லை தாங்க முடில சாமி.யாருக்கு என்ன வேணுமோ...போங்கப்பா!!

  ReplyDelete
 12. \\பொதுவெளியில் பகிரப்பட்டு, அதைக் கேள்விப்பட்ட பிறகும், வேடிக்கை மனிதராக என்னால் இருக்க முடியாது. அதுகுறித்து கருத்துச் சொல்வதற்கு வலையுலகம் சார்ந்த எவர்க்கும் உரிமை உண்ட\\

  என்ன கொடும சார் இது?
  பகிருவதை எல்லாம் நீங்கள் படித்து ஆழம் காண முற்பட்டால்....உங்கள் வங்கி பணி?உங்கள் சிந்தனை?
  எல்லாம் படிங்க அண்ணா..ஒட்டு மொத்த சமூக பிரச்சனை பற்றி பேசுங்கள்.
  இப்படி புறப்பட்டால் பிறகு உங்களை போன்றவர்கள் இங்கு இருக்க சிந்தனை இருக்காது.
  வினவு உட்பட சோஷலிச சிந்தனை உள்ளவர்களும் இதில் குழப்பி கொள்வது தான் வேடிக்கை.
  நான் இங்கு புதியவன்.
  தவறுதல் என்றால் மன்னிக்கவும்.

  ReplyDelete