-->

முன்பக்கம் , , , , � வம்பரங்கம் - 6

வம்பரங்கம் - 6

rahul_gandhi_farmers1

காங்கிரஸின் மீட்பராக ராகுல் காந்தி அவதாரம் எடுத்திருக்கிறார். நாடெங்கிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மக்களோடு மக்களாக தன்னை ஒருநாள், ஒருபொழுது அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் இந்த அரசகுமாரர்களுக்குத்தான் எத்தனை பேரும் புகழும்!

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா, அவுரங்கபாத், புனே ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு அவர் மக்களைக் கட்டிப்பிடிக்கவும், ஏழைச்சிறுவர்களைத் தூக்கி வைத்துக்கொள்ளவும் நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அகோலா, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள விதர்பா பகுதியில் உள்ளது. எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  அதன் ஒரு பகுதியாக, ராகுல்காந்தியைப் பார்க்க வந்த, செருப்பணிந்த இளைஞர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இளைஞர்களின் ’நாயகனுக்கு’ வந்த கதி இது!

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் தானே?

Related Posts with Thumbnails

13 comments:

 1. ஏழைப் பங்காளருக்கு
  ஏழைகளின் செருப்பும்
  பிடிக்கவில்லை போலிருக்கு.

  ReplyDelete
 2. he is carrying almost an empty plastic bucket or very little amount of stones and look at the women's slipper and his shoes. just irritable

  ReplyDelete
 3. உள்ள படியே சொன்னால் மக்கள் காங்கிரசிற்கு அளிக்கும் வாக்குகள் ராகுல், சோனியா, பிரியாங்காவின் ஷோ க்களுக்காக அல்ல.

  மக்களுக்கு பாரதிய ஜனதா, கம்ம்யுனிச்ட்களின் மீது உள்ள எதிர்ப்பால்/எரிச்சலால் மட்டுமே காங்கிரசிற்கு வாக்கு அளிக்கின்றனர்.

  இரண்டாவது வரி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாரி ஓட்டுனர் மற்றும் லாரி துடைப்பவர் கூறிய கருத்து.
  அந்த ஓட்டுனர் இன்றே taயாராகி விட்டார், காங்கிரசிர்ற்கு வாக்கு அளிக்க (அவரின் விருப்பம் , நாளையே கேரளா சட்டமன்ற தேர்தல் நடக்க வேண்டும் என்பது)

  ReplyDelete
 4. ராகுல் உட்பட எந்த அடையாளமும் காங்கிரசின் மக்கள் விரோத அணுஒப்பந்தம்,உணவுப் பொருள் பாதுகாப்பில் தொடரும் அலட்சியம்,விலைவாசியைக் கட்டுப்படுத்த விரும்பாமை,வெளிநாட்டுப் பல்கலைகளுக்கு வரவேற்பு,பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் சீரழிவு ஊழல் மந்திரிகளைத் தட்டிகேட்க இயலாத தேசப் பேரிழப்பு.,...இவற்றில் இருந்தெல்லாம் காங்கிரசை மீட்டு விட முடியாது.

  ReplyDelete
 5. அந்தம்மா கனமாக இரும்புச்சட்டி தூக்கி செல்ல, காந்தி என்ன சின்னதா பிளாஸ்டிக் குடை வச்சிருக்கார்?

  ReplyDelete
 6. அட நமது எம்.ஜி.ஆர்.


  விநாயகமுருகன் உமது தொலைநோக்கு பார்வைக்கு ஒரு அளவே இல்லையா

  ReplyDelete
 7. எல்லாமே அரசியல் விளையாட்டுத்தானே அண்ணா...
  எங்கே செருப்பை கொடுத்துவிடுவார்களோ என்று பயந்திருக்கலாம்.

  எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தானே..!

  ReplyDelete
 8. //he is carrying almost an empty plastic bucket or very little amount of stones and look at the women's slipper and his shoes. just irritable//
  :)) rombakk kevalama irukku.

  ReplyDelete
 9. நல்லாவே நடிக்கிறாய்ங்க... யார் குருன்னு தெரியலயே?

  ReplyDelete
 10. Please go through this link and read the comments too..

  http://churumuri.wordpress.com/2008/10/03/this-ladies-gentlemen-is-a-classic-photo-op/

  ReplyDelete
 11. தயவு செய்து வேறு நல்ல பதிவுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள்!!!
  இவன் யாருங்க? இவனுக்கு ஒரு பதிவா?

  pls spend your valuable time for some other good article!!!

  my small request!!

  ReplyDelete
 12. சந்தான கிருஷ்ணன்!
  தமிழ்வினை!
  ராம்ஜி யாஹூ!
  புதுவை ஞானகுமாரன்!
  விநாயக முருகன்!
  அசோக்!
  சே.குமார்!
  தீபா!
  ஹரிஹரன்!
  திரு!
  பொன்ராஜ்!

  அனைவருக்கும் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  திரு!
  அந்தப்படத்தையும், கமெண்ட்களையும் பார்த்தேன். சுவாரசியமாய் இருந்தன.

  ராம்ஜி யாஹூ!
  காங்கிரஸை இப்படிக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்களே!

  ReplyDelete
 13. இளவரசே! இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது உங்கள் அரசியல் பொழுதுபோக்கு. அரை நூற்றாண்டு காலம் உங்கள் பரம்பரையை இப்படி பார்த்து ரசிப்பது எமது தலையெழுத்து.

  ReplyDelete