-->

முன்பக்கம் , , � புதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்…

புதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்…

 

தீராத பக்கங்கள் - 1

நீங்களும் நானும் கேள்விப்பட்ட கதையல்ல இது. அமெரிக்க எழுத்தாளர் அம்புரோஸ் பியர்ஸின் குட்டிக்கதை

ஒரு சிங்கம் ஒரு சுண்டெலியைப் பிடித்து கொல்லப் போனது. அப்போது சிங்கத்தைப் பார்த்து சுண்டெலி சொன்னது. “என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்குஒருநாள் பதிலுக்கு நானும் உதவி செய்வேன்”

சிங்கம் இரக்கப்பட்டு சுண்டெலியை விட்டுவிட்டது. கொஞ்ச காலம் கழித்து வேடர்கள் விரித்த வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டது. அந்த வழியாக வந்த சுண்டெலி, சிங்கம் நாதியில்லாமல் கிடப்பதைப் பார்த்தது. உடனே அதன் வாலைக் கடித்துத் தின்றுவிட்டது


XXX_2665_Josephine_Wall_Andromedas_Quest


வணக்கம்

 

 

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 
வலைப்பக்கத்தில் இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் போலிருந்தது.
ஒரே பதிவில் பல விஷயங்களை, பல வண்ணங்களில், விதங்களில் பகிர்ந்து கொள்ள ஒரு உத்தி. அவ்வளவுதான்.
வலைப்பக்கங்களில் ரசித்த பதிவுகள், புதிய பதிவர்கள், கூகிள் பஸ் விவாதங்கள் என சுவாரசியமாக இந்த வடிவத்தில் செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும் இருந்தால் தொடரலாம்!
நன்றி.
மாதவராஜ்

ரசித்த பதிவுகள்
நேசமித்ரனின் கவிதை:
கைக்கிளை பிரபஞ்சம்


Totoவின் கவிதை:
ஊரின் உயர்வு


முத்துலெட்சுமி அவர்களின் இயக்குனர் ஜனநாதனுடனான பேட்டி:
இயக்குனர் ஜனநாதனுடன் பேட்டி


யாத்ராவின் கவிதை:
எப்படியிருக்கீங்க


என்.விநாயகமுருகனின் கவனிக்கப்படாத ஒரு சினிமா பற்றிய குறிப்பு:
ஆடும் கூத்து – கலையின் உச்சம்


முரளிகுமார் பத்ம்நாபனின் புத்தக விமர்சனம்:
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை


வேல்கண்ணனின் கவிதை:
நிர்வாணத்தை கவனித்தல்


கருணா பகிர்ந்துகொண்ட குறும்படம்:
குழந்தைகளாக இருக்க விடுங்கள்


உமாஷக்தியின் கவிதை:
நண்பனின் பெயர்


வீணாப்போனவனின் கவிதை:
சுழல் பந்து


ஆடுமாடு அவர்களின் இந்தப் பதிவு:
ஏதாவது சொல்லிவிட்டுப் போயேன்

தொடரும்
தொடர் பதிவு


பதிவர் தீபா ‘ஆண்டுவிழா அனுபவங்கள்’ குறித்து புதிய தொடர் பதிவு ஆரம்பித்து இருக்கிறார். திரும்ப வராத அந்த காலங்களுக்குள் சென்று நடமாட வைக்கிற காரியம். இன்னும் கொஞ்சகாலத்துக்குள் பதிவுலகத்திற்குள் இது சுற்றிக்கொண்டு இருக்கும்.
 mt8

நன்றி : சொல்வனம்

புதிய பதிவர்கள்- 529.சரவணன்:

இவரது வலைப்பக்கத்தின் பெயர் மழை. ஏற்கனவே அமித்து அம்மாவின் வலைப்பக்கத்தின் பெயரும் இதுதான். சரவணன் எழுத்துக்கள் அமைதியானவை. சின்னச் சின்னதாய் தெறிப்புகளாய் இருக்கின்றன. ரசித்துக்கொண்டே இருக்கலாம். அற்புதமாக இருக்கும் அவரது எழுத்துக்களில் சுமாரானது இதுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்:

யார்
மேக விறகுகளைப்
பற்றவைத்தது?
சிறு
பொறியாய்
தூறிய
மழை
தீயாய்
பெய்கிறது.

இவரது வலைப்பக்கத்தில் புத்தக அலமாரி விட்ஜெட் ஒன்றிருக்கிறது. அருமை.

30. இளங்கோ:

இப்படிக்கு இளங்கோ என்பதுதான் இவரது வலைப்பக்கம். முக்கியமான எழுத்துக்கள் இவருடையவை. எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது. சினிமா, கவிதை, அனுபவம் என எல்லாமே இவரது பகிர்வில் அழகாகின்றன. 2008லிருந்து எழுதினாலும் சில பதிவுகளே எழுதி இருக்கிறார். கடைசியாய் எழுதியிருக்கும் சுதந்திர தினம் குறித்த கவிதையை படிக்க மறக்காதீர்கள்.

31.நடனசபாபதி:

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் 35  ஆண்டுகள் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின், சென்ற ஆண்டு ஜனவரி முதல்  'நினைத்துப்பார்க்கிறேன்' என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை  தொடங்கியுள்ளார்.. இதுவரை 46 பதிவுகள் எழுதியிருக்கிறார். தலைப்புக்கேற்றது போலவே நினைவுகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் வந்த எழுத்துக்களாக பதிவுகள் இருக்கின்றன.

32. சம்பத்:

இவரது வலைப்பக்கம் உன்னால் முடியும். தினமணி தமிழ் நாளிதழில் சில கட்டுரைகள் தலையங்கத்தை ஒட்டிய நடுப்பக்க கட்டுரை பகுதியில் வெளியாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையிலிருந்து வெளியாகும் சட்டக்கதிர் என்ற மாத (நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான) இதழில் தொடர்ந்து மத்திய தகவல் ஆணைய தீர்வுகளிலிருந்து சிலவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். ஆறு பதிவுகளே எழுதி இருக்கிறார். கவிதைகளும் எழுதுகிறார்.

33. ரவி உதயன்:

ரவி உதயன் என்றே வலைப்பக்கம் வைத்திருக்கிறார். பழகிக்கிடந்த  நதி  என்ற கவிதை தொகுப்பு வெளி வந்துள்ளது. உயிர்மை ,ஆனந்த் விகடன் ,     யுகமாயினி ,கீற்று ,தடாகம் ,   இதழ்களில் இவரது கவிதைகள்   வெளி வருகின்றன. இந்த வருடம்தான் வலைப்பக்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

34.இரா.சிந்தன்:

பொருளாதாரம், அறிவியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் மார்க்சிய அடிப்படையிலான கட்டுரைகள் மற்றும் விவாதங்களுக்காக இவரது சிந்தன்  தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பக்கமாகவும், பேஸ்புக் தளத்தில் விவாதப் பக்கமாகவும் இயங்கி வருகிறது. பக்கத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருபவர் இரா.சிந்தன். தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவரது தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தப் புதிய பதிவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களைச் சொல்வோம். ஆதரவு செய்வோம்.

நண்பர்களே!

தீராத பக்கங்கள் –2 அடுத்த சனிக்கிழமை!

Related Posts with Thumbnails

14 comments:

 1. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 2. நேரமிருந்தால் நம்ம வலைப்பூ பக்கம் வந்துட்டுப் போங்க . நன்றி

  ReplyDelete
 3. மிகுந்த நன்றியும் அன்பும்
  //வேல் முருகன்// அல்ல வேல்கண்ணன்

  ReplyDelete
 4. திரு மாதவராஜ் அவர்களே, புதிய பதிவர்கள் பகுதியில் என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. மாதவராஜ் அண்ணா,
  தீராத பக்கங்களில் என் வலைத் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. எனது எழுத்து நடை தங்களுக்கு பிடித்திருக்கிறது எனத் தாங்கள் கூறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. மன்னிக்கவும் வேல்கண்ணன்!
  சரி செய்துவிட்டேன்.

  ReplyDelete
 7. ரொம்ப நன்றிண்ணா.
  இந்த வடிவமைப்பு ரொம்ப நல்லா இருக்குண்ணா. இணைய இதழ் தோற்றத்தை உணர்வைத் தருகிறது.

  ReplyDelete
 8. வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

  sindhan.info பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். தொடர்ந்து வாசிக்க அன்புடன் கேட்கிறேன்.

  ReplyDelete
 9. its colourfully and cheerfull sir..

  ReplyDelete
 10. ஆஹா!

  வாடாத பக்கங்கள், தீராத பக்கங்களுக்கு வந்தது போல் இருக்கிறது மாது. verygood!

  அவ்வளவும் அருமையான பக்கங்கள்! பகிர்விற்கு நன்றி மக்கா!

  ReplyDelete
 11. மிக நல்ல முயற்சி .
  நன்றாக உள்ளது .
  தொடருங்கள் .
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 12. வழமை போல் இன்றும் உங்களின் புதிய பதிவர்களின் அறிமுகம் மிகவும் சிறப்பு . ஒவ்வொரு பதிவருக்கும் பொருத்தி இருக்கும் புகைப்படங்கள் மிகவும் ரசனையுடன் தேர்வு செய்திருகிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது . அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. ரசனைக்குரிய வடிவமைப்பு...

  புதிய பதிவர்கள் பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 14. தீராத பக்கங்களில் என் வலைத் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்- ரவிஉதயன்

  ReplyDelete