Type Here to Get Search Results !

கலைஞரின் இன்றைய வசனங்கள்

இதைப் படிக்கும்போது நாயகன் படத்தில் அந்த சேட் வீட்டின் பொருட்களையெல்லாம் கமலும் அவரைச் சேர்ந்தவர்களும் உடைத்து நொறுக்கும் காட்சி நினைவுக்கு வரவேண்டும்.

எத்தனை தமிழ்ச்சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஏழைகளுடைய குடியிருப்புப் பகுதியை பெரும் பண முதலைகளோ, தொழில் அதிபர்களோ அபகரிக்க திடமிடுவார்கள். பூதாகரமான இயந்திரங்களைக் கொண்டு வந்து சகலத்தையும் தரைமட்டமாக்கத் தயாராவார்கள். உடனே நம் நாயகன் வந்து முன்னிற்பான். தியேட்டரில் விசில் பறக்கும். ஏழைகளுக்காக பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். கைதட்டல்கள் ஆரவாரிக்கும். தொடர்ந்து சவால்கள், சண்டைக்காட்சிகள் என தூள் பறக்கும். இப்படியான காட்சிகளில் தோன்றியே எம்.ஜி.ஆரிலிருந்து, இன்றைய விஜய் வரைக்கும் தங்களை மாபெரும் மக்கள் நாயகர்களாய் உயர்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த நாயகர்களுக்காக ‘பொறுத்தது போதும், பொங்கி எழு’ என செம்மொழியாம் தமிழ்மொழியால் எவ்வளவு வசனங்களை கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார்.

ஆனாலும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர் 36 வார்டில் பல ஆண்டுகளாக, இருப்பிடம் அமைத்து வாழ்ந்து வந்த 26 தலித் குடும்பங்களையும், 10 இஸ்லாமிய குடும்பங்களையும் ரியல் எஸ்டேட்டு செய்யும் மொசைக் செல்வம், பார்த்திபன் என இருவர் அப்புறப்படுத்தியபோது, அந்த ஏழைகளுக்காக யாரும் வரவில்லை. புல்டோசர்கள் அந்த எளிய மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி விட்டன. மாவட்ட ஆட்சியரை அணுகி முறையிட்டனர். பலனில்லை.

kudiyaatham demonstration மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அவர்களுக்கு ஆதரவாக வந்தது. ஜூலை 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 12.8.2010 அன்று ‘குடியேறும் போராட்டம்’ என அறிவித்ததும்,  சி.பி.எம் எம்.எல்.ஏ லதா அவர்கள் தங்களிடம் இருபது லட்சம் கேட்டு மிரட்டியதாக அந்த இரண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்திருக்கின்றனர். பத்திரிகைகளுக்கும் தகவல் தந்திருக்கின்றனர். இந்த பித்தலாட்டங்களையெல்லாம் அம்பலப்படுத்தி சி.பி.எம் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர்.சம்பத், சட்டமன்ற உறுப்பினர் தோழர்.லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர்.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

குடியாத்தம் வட்ட தாசில்தார், தாழ்த்தப்பட்டோர் நல தாசில்தார், வருவாய்க் கோட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. காலம் காலமாய் வாழ்ந்து வந்தவர்களை அராஜகமாக அப்புறப்படுத்திய மொசைக் செல்வம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுப்பது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான மாற்று இடம் அளிப்பது என்றும், மாற்று இடம் அளிக்கப்படும் வரை குடியிருப்பதற்கு தற்காலிக இடம் ஏற்பாடு செய்வதென்றும் பேச்சுவார்த்தையில் முடிவாகி, ஒப்பந்தத்திலும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தலைவர்கள் கையெழுத்திட்டு இருக்கின்றனர். திடுமென ஒப்பந்த நகலை வருவாய் கோட்டாட்சியர் எடுத்துச் சென்று விட்டு இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் தலைவர்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதன் பின்னால் பணபலம், அதிகார பலம், அரசியல் செல்வாக்கு என பெரும் சக்திகள் இருக்கின்றன என்பதையெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதாரண மக்களுக்கான அரசு இதுவல்ல. கலைஞரின் ஆட்சியில் காவல்துறையின் அடக்குமுறைகள் எல்லை மீறுகின்றன. உத்தபுரம் என்றாலும், டாஸ்மார்க் ஊழியர்கள் என்றாலும், குடியாத்தம் என்றாலும் போராடுபவர்களைப் பார்த்து இந்த அரசு சொல்வது இதுதான்: “பொறுத்தது போதாது, பொங்கி எழாதே”

இதுதான் கலைஞரின் இன்றைய வசனம்.

கருத்துரையிடுக

10 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் அம்மா கூட தான் கூட்டணியா, முடிவு செய்தாச்சா.

  பதிலளிநீக்கு
 2. MR.MATAHVARAJ,
  VERY GOOD BLOG. NOW OUR CM'S ACTIONS ARE AGAINST HIW OLD TAMIL CINEMA SECENES. UR NEW VASANAM IS CORRECT. HE IS MUCH WORRIED ABOUT HIS FAMILY TAHN THE STATE. IN MY WORDS GOD ALONE CAN SAVE OUR STATE FROM THESE TWO LEADING DRAVIDEAN PARTIES
  K.SUBRAMANIAN

  பதிலளிநீக்கு
 3. “பொறுத்தது போதாது, பொங்கி எழாதே” மனோ(அரோ)கரா....

  அருமையான பதிவு........

  பதிலளிநீக்கு
 4. "பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக என் உயிரையும் கொடுத்துப் போராடுவேன்" - 1971ல் கலைஞர் எடுத்துக் கொண்ட சட்டமன்ற உறுதிமொழி (கலைஞரின் முரசொலி கடிதங்கள், முத்துக்குளியல் புத்தகத்திலிருந்து).

  பதிலளிநீக்கு
 5. கருணாநிதி பிறந்த ஊரில் இருந்து 5கிமீ
  தொலைவில் உள்ள கீராமத்தில் குடிநீர் இணைப்பை சரிசெய்கிரேன் என்ற பெயரில் துண்டித்து 2
  வருடம் ஆகிறது அதுவே
  சரிசெய்யல இத எங்க
  இவனுக தீர்க்கப் போறானுக ?

  பதிலளிநீக்கு
 6. Throughout the years from 1947 onwards all the rulers damaging the minorities/SC/ST's properties and driving them to the edge of "DEATH" and hopeless..Only the left movement raising their voices for the VOICELESS PEOPLE...People must realize the TRUE services of the LEFT MOVEMENT and follow them to fight these ruling arrogants...we must intensify the fights.

  பதிலளிநீக்கு
 7. கருணாநிதி இவ்வளவு அட்டூழியங்கள் செய்கிறார் என்று மாதத்திற்கு இரண்டு பதிவுகளை, அதுவும் உங்கள் கட்சியை ஆதரித்து எழுதிவிடுகிறீர்கள்.இனி வரும் தேர்தல்களில் திமுக வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற உறுதியை உங்கள் மார்க்சிய கட்சியால் தர முடியுமா? அப்படி நீங்கள் தனித்தோ, மூன்றாவது அணி அமைத்தோ நின்றால், என் வாக்கு உங்களுக்குத்தான்.

  பதிலளிநீக்கு
 8. அட அரசு தான் இப்படி இயங்குகிறது என்றால், எந்த பத்திரிகைகளின் அராஜகம் அதற்க்கு மேல்??? ஒரு பத்திரிக்கை கூட
  எந்த போராட்ட மற்றும் கைது சம்பவத்தை எழுதவில்லை. இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் தூண்கள்??? தலித் மற்றும்
  சிறுபான்மையீனருக்காக கட்சி நடத்துபவரும் இதை கண்டிக்கவில்லை. நகரமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக என்பது உண்மையா?
  திமுகவோ அதிமுகவோ யார்வந்தாலும் உழைப்பாளி மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதில் எந்த வித்தியாசமும்
  இல்லை என்பதை (சாலை பணியாளர்கள் போராட்டத்தையும் நினைவில் கொள்ளவும்) போராட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்கள்
  புரிந்து நடக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. தான் சிறந்த (என்று சொல்லிக்கொள்ளும் ) வசனகர்த்தா என்று நிரூபிக்க வேண்டாமா?? மேலும் பத்திரிகைகள், அரசு விளம்பரங்களை காட்டி மிரட்டப்படுவதால்,அவர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை!! எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் என்று பார்க்கலாம்(வசனகர்த்தா மட்டும் அல்ல எல்லாரும்தான்!! )

  பதிலளிநீக்கு
 10. My dear friend, I am expecting your Jaya favour view on Justice SIVASUBRAMANIYAM's report on "SIRUTHAVOOR PANCHAMI LAND ISSUE". Can you write it with neutral view.
  Hope you people all are felldown in front of Poes Garden gate for jaya's darshan and 5-6 MLA seats in Upcoming elections.
  Your dialogue,
  intha murai admk tholile savaari seinju eppadiyaavathu 3-4 MLA post-ai thethida vendiyathu thaan. "Maanam ketta marxists".

  பதிலளிநீக்கு