11 வயதில் அந்தச் சிறுமிக்குத் தன் மரணம் தெரிந்துவிட்டது. புற்றுநோய் அவளைத் தின்று கொண்டு இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.
அவள் பெயர் சடகோ. 1945 ஆகஸ்ட் 6ம் நாள் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கதிர்வீச்சிலிருந்து தப்பி ஓடிய குடும்பம் அவளுடையது. அப்போது அவளுக்கு ஒரு வயது!
வேதனை மிகுந்த அந்த தருணத்திலும் சடகோவுக்கு இந்த உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டும் என்னும் ஆசை இருந்தது. அவளைப் பார்ர்க வந்த தோழி சிசுகோ “காகிதத்தில் ஆயிரம் கொக்குகள் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும்” என்கிறாள். அந்த நாட்டில் அது ஒரு நம்பிக்கை.
எந்நேரமும், காகிதத்தில் கொக்குகள் செய்தபடியே உயிருக்கு போராடுகிறாள் சடகோ. அவளால் 644 கொக்குகள் மட்டுமே செய்ய முடிந்தது. 1955ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி காலமாகிவிடுகிறாள்.
அவளோடு படித்த தோழர்கள், மருத்துவமனைக்கு சடகோவைப் பார்க்க வருகிறார்கள். கண்கள் கலங்க, மீதமுள்ள 356 கொக்குகளைச் செய்து அவளை அடக்கம் செய்கின்றனர். அவளது நினைவுகளைச் சுமந்தபடியே நிதி திரட்டி சடகோவுக்காக ஒரு நினைவாலயம் அமைக்கின்றனர். அங்கே சடகோ தன் கையில் கொக்கு ஒன்றை வைத்திருப்பது போல சிலை நிறுவி, கீழே தங்களை இப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
“இது எங்கள் கதறல்!
இது எங்கள் வழிபாடு!
உலகில் அமைதி நிலவட்டும்!”
அணுகுண்டின் பாதிப்புகளைச் சொல்லும் இந்த உருக்கமான சம்பவம், இந்த ஆண்டு அமல்படுத்திய சமச்சீர் கல்வித்திட்டத்தில், ஆறாம் வகுப்புக்கு ‘கடைசி வரை நம்பிக்கை’ என்னும் தலைப்பில் துணைப்பாடநூலில் இடம் பெற்றிருக்கிறது.
திருப்பூர் யுனிவர்சல் பள்ளியில் மாணவர்களுக்கு இந்தப் பாடத்தை உணர்வுபூர்வமாக நடத்தியிருக்கிறார் ஆ.ஈசுவரன். இவர் ஆசிரியர் பெற்றோர் கழகப் பொதுக்குழு உறுப்பினர். தமிழ்நாடு அறிவியல் இயககத்தின் சார்பாக நடந்த இந்த வகுப்பில் இருந்த 147 மாணவ மாணவியரும் கண்கலங்கி உட்கார்ந்திருக்கின்றனர். அத்துடன் ‘ஒரிகாமி’ என்னும் ஜப்பான் காகிதக் கலையில் சடகோ செய்த காகிதக் கொக்குகளையும் ஈஸ்வரன் செய்து மாணவர்களுக்கு பழக்கிவிட்டிருக்கிறார்.
வகுப்பெல்லாம் உலக அமைதி வேண்டி காகித கொக்குகள் பறந்திருக்கின்றன. பாடப் புத்தகத்தின் காகிதங்கள் மணந்திருக்கின்றன.
இது பாடம். இதுதான் வகுப்பு.
(தகவல் : தீக்கதிர்)


பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஆனால் இன்றும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் மாறவில்லை, அணுகுண்டு, அடக்குமுறைகள் போர் சார்ந்தே பொருளாதாரம் செய்கின்றன.
கல்விமுறை மாறினால், உண்மையிலேயே மணக்கலாம் காகிதங்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க
கலங்க வைக்கிறது...
ReplyDelete//“இது எங்கள் கதறல்!
ReplyDeleteஇது எங்கள் வழிபாடு!
உலகில் அமைதி நிலவட்டும்!” //
Vethanai niraintha pathivu.
NAlla Pakirvu....
gud article...
ReplyDeleteகண்களை மட்டுமல்ல, மனதையும் கலங்க வைக்கிறது. 'கடைசி வரை நம்பிக்கை' பொருத்தமான தலைப்பு. உலகில் அமைதி நிலவட்டும்!
ReplyDeleteஜப்பானிய சிறுமி சடகோ பற்றிய பதிவிற்கு நன்றிகள் மாதவராஜ் சார். ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்திலுள்ள "கடைசி வரை நம்பிக்கை"-யின் ஸ்கேன் செய்யப்பெற்ற பக்கங்களை பிடிஎஃப் கோப்பாக http://arvindguptatoys.com/arvindgupta/sadako-tamil.pdf-ல் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இந்தப் பதிவிற்குக் காரணமாக இருந்த திரு ஆ. ஈசுவரன் அவர்களுக்கும் நன்றிகள். http://arvindguptatoys.com-ல் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அறிவியல் புத்தகங்கள் கிடைக்கின்றன (பெரும்பாலும் பிடிஎஃப் வடிவில்).
ReplyDeleteநன்றி மாதவராஜ் அவர்களே!உங்கள் பிளாக்கில் இருந்துதான் தனது முக புத்தகத்தில் பதிந்ததாக கவின் மலர் கூறினார்கள்.உங்களுக்கு பாராட்டு மட்டுமே கிடைத்துள்ளது.ஆனால் கவின்மலருக்கோ பூக்களுடன் கற்களும் வருகின்றது.
ReplyDeleteஆ.ஈசுவரன்/தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,திருப்பூர்.