இன்னொரு விழா. ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும் சினிமாத்தலைகள் ஆஜர். வழக்கம்போல் பிதற்றல் புகழ்ச்சிகள்/புகழ்ச்சிப் பிதற்றல்கள். அகமகிழ்ந்து திரைப்படத் தொழிலாளர்களுக்கு 96 ஏக்கர் நிலம் வழங்கியதைப் பெருமிதத்தோடு சொல்கிறார் தமிழக முதல்வர். இந்தத் தமிழ் மக்களுக்காகவே காலமெல்லாம் இதயம் துடித்துக் கிடக்கும் தன்னை(யே)ப் பார்த்து, கயவர் கூட்டம் ஒன்று, ‘சினிமாவிலும் வாரிசா’ என்று கேள்வி கேட்டு விட்டார்கள், கேலி செய்துவிட்டார்கள் என்று குமுறி இருந்தார். ‘ரஜினிகாந்தை ஏன் கேட்கவில்லை, அவரை ஏன் கேட்கவில்லை, இவரை ஏன் கேட்கவில்லை’ என்று பொங்கி இருந்தார். ‘இந்த மனித சமூகத்தில் யாருக்கேனும் துன்பம் வந்தால் கவலை கொண்டு, அத்துயர் களைய துடிப்பவன் நான்’ என்று போகிற போக்கில் சேகுவேரா வார்த்தைகளையும் உல்டா செய்திருந்தார். இந்த நகைச்சுவைகளை ஒதுக்கிவிட்டு சில கேள்விகள் கேட்க வேண்டி இருக்கிறது.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு இருக்க இடம் கொடுத்திருப்பது சரிதான். அதே நேரம் கடந்த தேர்தலின் போது 50 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழைகளுக்குத் தருவோம் என்று சொன்னது யாராம்?
விவசாயக் கூலிகள், நெசவாளர்கள், கல்லுடைப்பவர்கள், துப்புரவு செய்பவர்கள், மீனவர்கள், இன்னபிற அன்றாடங்காய்ச்சி மனிதர்கள் எல்லாம் கஷ்டப்படும் தொழிலாளிகளாய் இவர் கண்ணில் படவில்லையா?
ஏற்கனவே இருந்த இடத்தையும் பிடுங்கிக்கொண்ட பெரிய மனிதர்களை எதிர்த்து போராடுகிறவர்களுக்கும், நிலப்பட்டா கேட்டு போராடுகிறவர்களுக்கும் இவர் வழங்கியது என்ன?


என்ன ஐயா! பைத்தியக்காரத்தனமா கேள்வி கேட்கிறீங்க!நமீதா,குஷ்பு,கலா,ரம்பா இவங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு உழைப்பாளிகளா தெரியலையா? இப்பதான் தமிழ்நாட்டை பிரிச்சி அவங்க குடும்பத்து ஏழைக்கெல்லாம் கொடுத்திருக்காரு? அது போக மீதி இருக்கறததான் ஒவ்வொருத்தருக்கா குடுக்கிறாரு. அதுக்குள்ள அவசரப்படுறீங்க. இன்னும் ஒருமுறை ஆட்சிவரட்டும் 50 லட்சம் ஏக்கர் என்ன ஒரு கோடி ஏக்கர்கள பிரிச்சி கொடுக்கற திட்டம் கூட இருக்கு!போங்க போய் சமத்தா மானாட மயிலாட பாருங்க!
ReplyDeleteநானே கேள்வி, நானே பதில்! மு.ஒலி படிக்கிறதில்லையா?
ReplyDeleteஇந்தமாதிரி கேள்விக்கு, ஆபிஸ் ப்யூன் தான் பதில் செல்வான்.
அதென்ன சினிமாக்காரங்கள்என்றல் முக்கியம் மற்றவர்கள் என்றால் இளப்பம் . யார் சொன்னால் எப்படி சொன்னால் இவர்களுக்கு புரியும்.
ReplyDelete\\விவசாயக் கூலிகள், நெசவாளர்கள், கல்லுடைப்பவர்கள், துப்புரவு செய்பவர்கள், மீனவர்கள், இன்னபிற அன்றாடங்காய்ச்சி மனிதர்கள் எல்லாம் கஷ்டப்படும் தொழிலாளிகளாய் இவர் கண்ணில் படவில்லையா? \\
ReplyDeleteஇவங்களால அவ்வப்போது பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா நடத்த முடியுமா?
நமக்கு எல்லாம் சந்திர மண்டலத்தில் இடம் பார்த்து வச்சிருக்கார்...
ReplyDeleterepeatuuuuu ambika
ReplyDeleteSir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in
ReplyDeletehttp://nagarjunan.blogspot.com/
you can use the following two links
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html
and
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html